பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 26 | Genesis 26
God’s Promise to Isaac (Genesis 12:1–9)
1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
1 Now there was another famine in the land, subsequent to the one that had occurred in Abraham’s time. And Isaac went to Abimelech king of the Philistines at Gerar.
1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
2 கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
2 The LORD appeared to Isaac and said, “Do not go down to Egypt. Settle in the land where I tell you.
2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.
3 இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
3 Stay in this land as a foreigner, and I will be with you and bless you. For I will give all these lands to you and your offspring, and I will confirm the oath that I swore to your father Abraham.
3 அந்நாட்டில் நீ அந்நியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
4 I will make your descendants as numerous as the stars in the sky, and I will give them all these lands, and through your offspring all nations of the earth will be blessed,
4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.
5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
5 because Abraham listened to My voice and kept My charge, My commandments, My statutes, and My laws.”
5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்" என்றார்.
Isaac Deceives Abimelech
6 ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
6 So Isaac settled in Gerar.
6 எனவே, ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.
7 அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
7 But when the men of that place asked about his wife, he said, “She is my sister.” For he was afraid to say, “She is my wife,” since he thought to himself, “The men of this place will kill me on account of Rebekah, because she is so beautiful.”
7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, "அவள் என் சகோதரி" என்றார். ஏனெனில், ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, 'அவள் என் மனைவி' என்று சொல்ல அஞ்சினார்.1
1 தொநூ 12:13; 30:2.
8 அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.
8 When Isaac had been there a long time, Abimelech king of the Philistines looked down from the window and was surprised to see Isaac caressing his wife Rebekah.
8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
9 அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
9 Abimelech sent for Isaac and said, “So she is really your wife! How could you say, ‘She is my sister’?” Isaac replied, “Because I thought I might die on account of her.”
9 உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, "அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்" என்று அவனுக்குப் பதில் அளித்தார்.
10 அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
10 “What is this you have done to us?” asked Abimelech. “One of the people could easily have slept with your wife, and you would have brought guilt upon us.”
10 அபிமெலக்கு, "நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?" என்றான்.
11 பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.
11 So Abimelech warned all the people, saying, “Whoever harms this man or his wife will surely be put to death.”
11 மேலும், "இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி" என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.
Isaac’s Prosperity
12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
12 Now Isaac sowed seed in the land, and that very year he reaped a hundredfold. And the LORD blessed him,
12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.
13 அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
13 and he became richer and richer, until he was exceedingly wealthy.
13 அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.
14 அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,
14 He owned so many flocks and herds and servants that the Philistines envied him.
14 மேலும், அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன. வேலைக்காரர் பலர் இருந்தனர். எனவே, பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.
15 அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
15 So the Philistines took dirt and stopped up all the wells that his father’s servants had dug in the days of his father Abraham.
15 அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.
16 அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
16 Then Abimelech said to Isaac, “Depart from us, for you are much too powerful for us.”
16 மேலும், அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, "நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ" என்றான்.
17 அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து
17 So Isaac left that place and encamped in the Valley of Gerar and settled there.
17 எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.
18 தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
18 Isaac reopened the wells that had been dug in the days of his father Abraham, which the Philistines had stopped up after Abraham died. And he gave these wells the same names his father had given them.
18 அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்; தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.
19 ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.
19 Then Isaac’s servants dug in the valley and found a well of fresh watera there.
19 பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.
20 கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.
20 But the herdsmen of Gerar quarreled with Isaac’s herdsmen and said, “The water is ours!” So he named the well Esek, because they contended with him.
20 ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, "இந்தத் தண்ணீர் எங்களதே" என்று வாதாடினர். இவ்வாறு, அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர் 'ஏசேக்கு' என்று பெயரிட்டார்.
21 வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
21 Then they dug another well and quarreled over that one also; so he named it Sitnah.c
21 மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர். முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அதற்குச் 'சித்னா' என்று அவர் பெயரிட்டார்.
22 பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
22 He moved on from there and dug another well, and they did not quarrel over it. He named it Rehobothd and said, “At last the LORD has made room for us, and we will be fruitful in the land.”
22 அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதன் பொருட்டு, "ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்" என்று சொல்லி, அதற்கு 'இரகபோத்து' என்று பெயரிட்டார்.
23 அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
23 From there Isaac went up to Beersheba,
23 பின்னர், அவர் அவ்விடத்திலிருந்து பெயேர்செபாவுக்குப் போனார்.
24 அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
24 and that night the LORD appeared to him and said, “I am the God of your father Abraham. Do not be afraid, for I am with you. I will bless you and multiply your descendants for the sake of My servant Abraham.”
24 அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்" என்றார்.
25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
25 So Isaac built an altar there and called on the name of the LORD, and he pitched his tent there. His servants also dug a well there.
25 எனவே, ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்; அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார்.ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.
Isaac’s Covenant with Abimelech
26 அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.
26 Later, Abimelech came to Isaac from Gerar, with Ahuzzath his adviser and Phicol the commander of his army.
26 அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.2
2 தொநூ 21:22.
27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.
27 “Why have you come to me?” Isaac asked them. “You hated me and sent me away.”
27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, "நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு, இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?" என்றார்.
28 அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
28 “We can plainly see that the LORD has been with you,” they replied. “We recommend that there should now be an oath between us and you. Let us make a covenant with you
28 அவர்கள் மறுமொழியாக, "ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று தெளிவாகக் கண்டோம். ஆதலால் நமக்குள், எங்களுக்கும் உமக்குமிடையே, ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நாங்கள் உம்மோடு உடன்படிக்கை செய்துகொள்வோம்.
29 நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
29 that you will not harm us, just as we have not harmed you but have done only good to you, sending you on your way in peace. And now you are blessed by the LORD.”
29 நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம். அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்" என்றனர்.
30 அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
30 So Isaac prepared a feast for them, and they ate and drank.
30 ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். அவர்களும் உண்டு குடித்தனர்.
31 அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
31 And they got up early the next morning and swore an oath to each other. Then Isaac sent them on their way, and they left him in peace.
31 அதிகாலையில் அவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர். பின் ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் அவரிடமிருந்து சமாதானமாய்ப் பிரிந்து சென்றனர்.
32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
32 On that same day, Isaac’s servants came and told him about the well they had dug. “We have found water!” they told him.
32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து "தண்ணீர் கண்டோம்" என்றனர்.
33 அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
33 So he called it Shibah,e and to this day the name of the city is Beersheba.f
33 ஆதலால், அவர் அதற்குச் 'சிபா' என்று பெயரிட்டார். எனவே, அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.
Esau’s Wives
34 ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
34 When Esau was forty years old, he took as his wives Judith daughter of Beeri the Hittite and Basemath daughter of Elon the Hittite.
34 ஏசா நாற்பது வயதானபோது, இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும் இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.
35 அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
35 And they brought grief to Isaac and Rebekah.
35 இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
19 a Or flowing water or living water
20 b Esek means contention .
21 c Sitnah means enmity or hostility .
22 d Rehoboth means broad places or open spaces .
33 e Shibah can mean oath or seven .
33 f Beersheba means well of seven or well of the oath .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.