பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Psalms சங்கீதம் תְהִלִּים
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 அடுத்தது >
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தருடைய தாசனாகிய தாவீது இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது)
சங்கீதம் 18 | Psalms 18
The LORD Is My Rock (2 Samuel 22:1–51)
For the choirmaster. Of David the servant of the LORD, who sang this song to the LORD on the day the LORD had delivered him from the hand of all his enemies and from the hand of Saul. He said:
1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
1 For the choirmaster. Of David the servant of the LORD, who sang this song to the LORD on the day the LORD had delivered him from the hand of all his enemies and from the hand of Saul. He said: I love You, O LORD, my strength.
1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
2 The LORD is my rock, my fortress, and my deliverer. My God is my rock, in whom I take refuge, my shield, and the horn of my salvation, my stronghold.
2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3 துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.
3 I will call upon the LORD, who is worthy to be praised; so shall I be saved from my enemies.
3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
4 The cords of death encompassed me; the torrents of chaos overwhelmed me.
4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
5 The cords of Sheol entangled me; the snares of death confronted me.
5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
6 In my distress I called upon the LORD; I cried to my God for help. From His temple He heard my voice, and my cry for His help reached His ears.
6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.
7 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
7 Then the earth shook and quaked, and the foundations of the mountains trembled; they were shaken because He burned with anger.
7 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.
8 அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
8 Smoke rose from His nostrils, and consuming fire came from His mouth; glowing coals blazed forth.
8 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்பக்கனல் § வெளிப்பட்டது.
9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
9 He parted the heavens and came down with dark clouds beneath His feet.
9 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது.
10 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
10 He mounted a cherub and flew; He soared on the wings of the wind.
10 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
11 He made darkness His hiding place, and storm clouds a canopy around Him.
11 காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்; நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.
12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
12 From the brightness of His presence His clouds advanced—hailstones and coals of fire.a
12 அவர்தம் திருமுன்னின் பேரொளியில், மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன.
13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
13 The LORD thundered from heaven; the voice of the Most High resounded—hailstones and coals of fire.b
13 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும் § பொழிந்தார்.
14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
14 He shot His arrows and scattered the foes; He hurled lightning and routed them.
14 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார்.
15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
15 The channels of the sea appeared, and the foundations of the world were exposed, at Your rebuke, O LORD, at the blast of the breath of Your nostrils.
15 ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
16 He reached down from on high and took hold of me; He drew me out of deep waters.
16 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.
17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
17 He rescued me from my powerful enemy, from foes too mighty for me.
17 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவிடுத்தார்; என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்;
18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார்.
18 They confronted me in my day of calamity, but the LORD was my support.
18 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார்.
19 அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
19 He brought me out into the open; He rescued me because He delighted in me.
19 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால், அவர் என்னை விடுவித்தார்.
20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
20 The LORD has rewarded me according to my righteousness; He has repaid me according to the cleanness of my hands.
20 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.
21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
21 For I have kept the ways of the LORD and have not wickedly departed from my God.
21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
22 For all His ordinances are before me; I have not disregarded His statutes.
22 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
23 அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
23 And I have been blameless before Him and kept myself from iniquity.
23 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.
24 ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
24 So the LORD has repaid me according to my righteousness, according to the cleanness of my hands in His sight.
24 ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.
25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
25 To the faithful You show Yourself faithful, to the blameless You show Yourself blameless;
25 ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.
26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
26 to the pure You show Yourself pure, but to the crooked You show Yourself shrewd.
26 தூயோருக்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
27 தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
27 For You save an afflicted people, but You humble those with haughty eyes.
27 எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் § நீர் பார்க்கின்றீர்.
28 தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
28 For You, O LORD, light my lamp; my God lights up my darkness.
28 ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
29 For in You I can charge an army, and with my God I can scale a wall.
29 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
30 தேவனுடைய வழி உத்தமமானது: கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
30 As for God, His way is perfect; the word of the LORD is flawless. He is a shield to all who take refuge in Him.
30 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
31 கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
31 For who is God besides the LORD? And who is the Rock except our God?
31 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?
32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
32 It is God who arms me with strength and makes my way clear.
32 வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
33 He makes my feet like those of a deer and stations me upon the heights.
33 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.1
1 அப 3:19.
34 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
34 He trains my hands for battle; my arms can bend a bow of bronze.
34 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும் § என் புயங்கள் வளைக்கும்.
35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
35 You have given me Your shield of salvation; Your right hand upholds me, and Your gentleness exalts me.c
35 ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.
36 என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
36 You broaden the path beneath me so that my ankles do not give way.
36 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என்கால்கள் தடுமாறவில்லை.
37 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
37 I pursued my enemies and overtook them; I did not turn back until they were consumed.
37 என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை.
38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
38 I crushed them so they could not rise; they have fallen under my feet.
38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்; அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.
39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
39 You have armed me with strength for battle; You have subdued my foes beneath me.
39 போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
40 You have made my enemies retreat before me; I put an end to those who hated me.
40 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
41 They cried for help, but there was no one to save them—to the LORD, but He did not answer.
41 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
42 நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
42 I ground them as dust in the face of the wind; I trampled themd like mud in the streets.
42 எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்; தெருச் சேறென அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.
43 ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
43 You have delivered me from the strife of the people; You have made me the head of nations; a people I had not known shall serve me.
43 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்; நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.
44 அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
44 When they hear me, they obey me; foreigners cower before me.
44 அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்; வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர்.
45 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
45 Foreigners lose heart and come trembling from their strongholds.
45 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
46 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
46 The LORD lives, and blessed be my Rock! And may the God of my salvation be exalted—
46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் § போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!
47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
47 the God who avenges me and subdues nations beneath me,
47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் § கீழ்ப்படுத்தியவரும் அவரே!
48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
48 who delivers me from my enemies. You exalt me above my foes; You rescue me from violent men.
48 என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே! ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தயவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!
49 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
49 Therefore I will praise You, O LORD, among the nations; I will sing praises to Your name.e
49 ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.2
2 உரோ 15:9.
50 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
50 Great salvation He brings to His king. He shows loving devotion to His anointed, to David and his descendants forever.
50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
12 a Or bolts of lightning ; also in verse 13
13 b Most Hebrew manuscripts; some Hebrew manuscripts and LXX do not include —hailstones and coals of fire ; see 2 Samuel 22:14.
35 c Or and Your help exalts me or and You stoop down to make me great
42 d Some Hebrew manuscripts, LXX, and Syriac (see also 2 Samuel 22:43); MT I poured them out
49 e Cited in Romans 15:9
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.