பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Zechariah  சகரியா  זְכַרְיָה

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

சகரியா 9 | Zechariah 9

The Burden against Israel’s Enemies

1מַשָּׂ֤א דְבַר־יְהוָה֙ בְּאֶ֣רֶץ חַדְרָ֔ךְ וְדַמֶּ֖שֶׂק מְנֻחָת֑וֹ כִּ֤י לַֽיהוָה֙ עֵ֣ין אָדָ֔ם וְכֹ֖ל שִׁבְטֵ֥י יִשְׂרָאֵֽל׃

1 ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.
1 This is the burden of the word of the LORD against the land of Hadrach and Damascus its resting place—for the eyes of men and of all the tribes of Israel are upon the LORDa
1 ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.1

2וְגַם־חֲמָ֖ת תִּגְבָּל־בָּ֑הּ צֹ֣ר וְצִיד֔וֹן כִּ֥י חָֽכְמָ֖ה מְאֹֽד׃

2 ஆமாத்தும் மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.
2 and also against Hamath, which borders it, as well as Tyre and Sidon, though they are very shrewd.
2 அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.

3וַתִּ֥בֶן צֹ֛ר מָצ֖וֹר לָ֑הּ וַתִּצְבָּר־כֶּ֙סֶף֙ כֶּֽעָפָ֔ר וְחָר֖וּץ כְּטִ֥יט חוּצֽוֹת׃

3 தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
3 Tyre has built herself a fortress; she has heaped up silver like dust, and gold like the dirt of the streets.
3 தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

4הִנֵּ֤ה אֲדֹנָי֙ יֽוֹרִשֶׁ֔נָּה וְהִכָּ֥ה בַיָּ֖ם חֵילָ֑הּ וְהִ֖יא בָּאֵ֥שׁ תֵּאָכֵֽל׃

4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின்பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
4 Behold, the Lord will impoverish her and cast her wealth into the sea,b and she will be consumed by fire.
4 இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.2

5תֵּרֶ֨א אַשְׁקְל֜וֹן וְתִירָ֗א וְעַזָּה֙ וְתָחִ֣יל מְאֹ֔ד וְעֶקְר֖וֹן כִּֽי־הֹבִ֣ישׁ מֶבָּטָ֑הּ וְאָ֤בַד מֶ֙לֶךְ֙ מֵֽעַזָּ֔ה וְאַשְׁקְל֖וֹן לֹ֥א תֵשֵֽׁב׃

5 அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.
5 Ashkelon will see and fear; Gaza will writhe in agony, as will Ekron, for her hope will wither. There will cease to be a king in Gaza, and Ashkelon will be uninhabited.
5 அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும்.

6וְיָשַׁ֥ב מַמְזֵ֖ר בְּאַשְׁדּ֑וֹד וְהִכְרַתִּ֖י גְּא֥וֹן פְּלִשְׁתִּֽים׃

6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
6 A mixed race will occupy Ashdod, and I will cut off the pride of the Philistines.
6 அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.

7וַהֲסִרֹתִ֨י דָמָ֜יו מִפִּ֗יו וְשִׁקֻּצָיו֙ מִבֵּ֣ין שִׁנָּ֔יו וְנִשְׁאַ֥ר גַּם־ה֖וּא לֵֽאלֹהֵ֑ינוּ וְהָיָה֙ כְּאַלֻּ֣ף בִּֽיהוּדָ֔ה וְעֶקְר֖וֹן כִּיבוּסִֽי׃

7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும் அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கைப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
7 I will remove the blood from their mouths and the abominations from between their teeth. Then they too will become a remnant for our God; they will become like a clanc in Judah, and Ekron will be like the Jebusites.
7 இரத்தம் வடியும் இறைச்சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்; அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்; அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்; அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்;3

8וְחָנִ֨יתִי לְבֵיתִ֤י מִצָּבָה֙ מֵעֹבֵ֣ר וּמִשָּׁ֔ב וְלֹֽא־יַעֲבֹ֧ר עֲלֵיהֶ֛ם ע֖וֹד נֹגֵ֑שׂ כִּ֥י עַתָּ֖ה רָאִ֥יתִי בְעֵינָֽי׃

8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
8 But I will camp around My house because of an army, because of those who march to and fro, and never again will an oppressor overrun My people, for now I keep watch with My own eyes.
8 அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் இறங்குவேன்; ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்; ஏனெனில், என் கண்களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Zion’s Coming King (Matthew 21:1–11; Mark 11:1–11; Luke 19:28–40; John 12:12–19)

9גִּילִ֨י מְאֹ֜ד בַּת־צִיּ֗וֹן הָרִ֙יעִי֙ בַּ֣ת יְרוּשָׁלִַ֔ם הִנֵּ֤ה מַלְכֵּךְ֙ יָ֣בוֹא לָ֔ךְ צַדִּ֥יק וְנוֹשָׁ֖ע ה֑וּא עָנִי֙ וְרֹכֵ֣ב עַל־חֲמ֔וֹר וְעַל־עַ֖יִר בֶּן־אֲתֹנֽוֹת׃

9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
9 Rejoice greatly, O Daughter of Zion! Shout in triumph, O Daughter of Jerusalem! See, your King comes to you, righteous and victorious,d humble and riding on a donkey, on a colt, the foal of a donkey.e
9 மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.4

10וְהִכְרַתִּי־רֶ֣כֶב מֵאֶפְרַ֗יִם וְסוּס֙ מִיר֣וּשָׁלִַ֔ם וְנִכְרְתָה֙ קֶ֣שֶׁת מִלְחָמָ֔ה וְדִבֶּ֥ר שָׁל֖וֹם לַגּוֹיִ֑ם וּמָשְׁלוֹ֙ מִיָּ֣ם עַד־יָ֔ם וּמִנָּהָ֖ר עַד־אַפְסֵי־אָֽרֶץ׃

10 எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
10 And I will cut off the chariot from Ephraimf and the horse from Jerusalem, and the bow of war will be broken. Then He will proclaim peace to the nations. His dominion will extend from sea to sea, and from the Euphratesg to the ends of the earth.
10 அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்;* எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்;* போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.567

5 "செய்வேன்...விடுவேன்" என்பது எபிரேய பாடம்.

6 "செய்வேன்...விடுவேன்" என்பது எபிரேய பாடம்.

7 திபா 72:8.

11גַּם־אַ֣תְּ בְּדַם־בְּרִיתֵ֗ךְ שִׁלַּ֤חְתִּי אֲסִירַ֙יִךְ֙ מִבּ֔וֹר אֵ֥ין מַ֖יִם בּֽוֹ׃

11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்
11 As for you, because of the blood of My covenant, I will release your prisoners from the waterless pit.
11 உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.8

12שׁ֚וּבוּ לְבִצָּר֔וֹן אֲסִירֵ֖י הַתִּקְוָ֑ה גַּם־הַיּ֕וֹם מַגִּ֥יד מִשְׁנֶ֖ה אָשִׁ֥יב לָֽךְ׃

12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
12 Return to your stronghold, O prisoners of hope; even today I declare that I will restore to you double.
12 நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

13כִּֽי־דָרַ֨כְתִּי לִ֜י יְהוּדָ֗ה קֶ֚שֶׁת מִלֵּ֣אתִי אֶפְרַ֔יִם וְעוֹרַרְתִּ֤י בָנַ֙יִךְ֙ צִיּ֔וֹן עַל־בָּנַ֖יִךְ יָוָ֑ן וְשַׂמְתִּ֖יךְ כְּחֶ֥רֶב גִּבּֽוֹר׃

13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
13 For I will bend Judah as My bow and fit it with Ephraim. I will rouse your sons, O Zion, against the sons of Greece.h I will make you like the sword of a mighty man.
13 நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்; எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்; சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன்.

The LORD Will Save His People

14וַֽיהוָה֙ עֲלֵיהֶ֣ם יֵֽרָאֶ֔ה וְיָצָ֥א כַבָּרָ֖ק חִצּ֑וֹ וַֽאדֹנָ֤י יְהֹוִה֙ בַּשּׁוֹפָ֣ר יִתְקָ֔ע וְהָלַ֖ךְ בְּסַעֲר֥וֹת תֵּימָֽן׃

14 அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
14 Then the LORD will appear over them, and His arrow will go forth like lightning. The Lord GOD will sound the ram’s horn and advance in the whirlwinds of the south.
14 அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்; தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்; அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.

15יְהוָ֣ה צְבָאוֹת֮ יָגֵ֣ן עֲלֵיהֶם֒ וְאָכְל֗וּ וְכָֽבְשׁוּ֙ אַבְנֵי־קֶ֔לַע וְשָׁת֥וּ הָמ֖וּ כְּמוֹ־יָ֑יִן וּמָֽלְאוּ֙ כַּמִּזְרָ֔ק כְּזָוִיּ֖וֹת מִזְבֵּֽחַ׃

15 சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும் பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
15 The LORD of Hosts will shield them. They will destroy and conquer with slingstones; they will drink and roar as with wine. And they will be filled like sprinkling bowls, drenched like the corners of the altar.
15 படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்; அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்; திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்; கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.

16וְֽהוֹשִׁיעָ֞ם יְהוָ֧ה אֱלֹהֵיהֶ֛ם בַּיּ֥וֹם הַה֖וּא כְּצֹ֣אן עַמּ֑וֹ כִּ֚י אַבְנֵי־נֵ֔זֶר מִֽתְנוֹסְס֖וֹת עַל־אַדְמָתֽוֹ׃

16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
16 On that day the LORD their God will save them as the flock of His people; for like jewels in a crown they will sparkle over His land.
16 அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்; அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.

17כִּ֥י מַה־טּוּב֖וֹ וּמַה־יָפְי֑וֹ דָּגָן֙ בַּֽחוּרִ֔ים וְתִיר֖וֹשׁ יְנוֹבֵ֥ב בְּתֻלֽוֹת׃

17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
17 How lovely they will be, and how beautiful! Grain will make the young men flourish, and new wine, the young women.
17 ஆம், அக்காட்சி எத்துணை இனியது; எத்துணை அழகியது; கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Zechariah Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
1 a Or for the eye of the LORD is on all men and all the tribes of Israel
4 b Or strike down her power on the sea
c Or like a leader
9 d Or righteous and endowed with salvation
9 e Cited in Matthew 21:5 and John 12:15
10 f That is, the northern kingdom of Israel
10 g Hebrew the River
13 h Hebrew the sons of Javan

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.