பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 12 | John 12

Mary Anoints Jesus (Matthew 26:6–13; Mark 14:3–9; Luke 7:36–50)

1 οὖν ἓξ ἡμερῶν πρὸ τοῦ πάσχα Ὁ Ἰησοῦς ἦλθεν εἰς Βηθανίαν ὅπου ἦν Λάζαρος ὃν Ἰησοῦς ἤγειρεν ἐκ νεκρῶν

1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
1 Six days before the Passover, Jesus came to Bethany, the hometown of Lazarus, whom He had raised from the dead.
1 பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.

2 οὖν ἐποίησαν δεῖπνον αὐτῷ ἐκεῖ καὶ ἡ Μάρθα διηκόνει δὲ ὁ Λάζαρος ἦν εἷς ἐκ τῶν ἀνακειμένων σὺν αὐτῷ

2 அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
2 So they hosted a dinner for Jesus there. Martha served, and Lazarus was among those reclining at the table with Him.
2 அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.

3 οὖν ἡ Μαριὰμ λαβοῦσα λίτραν πολυτίμου μύρου πιστικῆς νάρδου ἤλειψεν τοῦ Ἰησοῦ τοὺς πόδας καὶ ἐξέμαξεν αὐτοῦ πόδας τοὺς αὐτῆς ταῖς θριξὶν δὲ ἡ οἰκία ἐπληρώθη ἐκ τῆς ὀσμῆς τοῦ μύρου

3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
3 Then Mary took about a pinta of expensive perfume, made of pure nard, and she anointed Jesus’ feet and wiped them with her hair. And the house was filled with the fragrance of the perfume.
3 மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம்1 கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.2

1 ஒரு லித்ரா என்பது கிரேக்க பாடம்.

2 லூக் 7:37,38.

4 δὲ εἷς [ἐκ] αὐτοῦ τῶν μαθητῶν Ἰούδας ὁ Ἰσκαριώτης ὁ μέλλων παραδιδόναι αὐτὸν Λέγει

4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
4 But one of His disciples, Judas Iscariot, who was going to betray Him, asked,
4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,

5 Διὰ τί οὐκ τοῦτο τὸ μύρον ἐπράθη τριακοσίων δηναρίων καὶ ἐδόθη πτωχοῖς

5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
5 “Why wasn’t this perfume sold for three hundred denariib and the money given to the poor?”
5 "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டான்.

6 δὲ εἶπεν οὐχ τοῦτο ὅτι αὐτῷ ἔμελεν περὶ τῶν πτωχῶν ἀλλ’ ὅτι ἦν κλέπτης καὶ ἔχων τὸ γλωσσόκομον ἐβάσταζεν τὰ βαλλόμενα

6 அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
6 Judas did not say this because he cared about the poor, but because he was a thief. As keeper of the money bag, he used to take from what was put into it.
6 ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.

7 Ἄφες αὐτήν οὖν ὁ Ἰησοῦς Εἶπεν τηρήσῃ αὐτό ἵνα εἰς τὴν ἡμέραν τοῦ μου ἐνταφιασμοῦ

7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
7 “Leave her alone,” Jesus replied. “She has kept this perfume in preparation for the day of My burial.
7 அப்போது இயேசு, "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.

8 γὰρ τοὺς πτωχοὺς ἔχετε πάντοτε μεθ’ ἑαυτῶν δὲ οὐ πάντοτε ἔχετε ἐμὲ

8 தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
8 The poor you will always have with you,c but you will not always have Me.”
8 ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார்.3

The Plot to Kill Lazarus

9 οὖν ὁ πολὺς ὄχλος ἐκ τῶν Ἰουδαίων Ἔγνω ὅτι ἐστιν ἐκεῖ καὶ ἦλθον οὐ μόνον διὰ τὸν Ἰησοῦν ἀλλ’ καὶ ἵνα ἴδωσιν τὸν Λάζαρον ὃν ἤγειρεν ἐκ νεκρῶν

9 அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
9 Meanwhile a large crowd of Jews learned that Jesus was there. And they came not only because of Him, but also to see Lazarus, whom He had raised from the dead.
9 இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.

10 δὲ οἱ ἀρχιερεῖς ἐβουλεύσαντο ἵνα ἀποκτείνωσιν τὸν Λάζαρον καὶ

10 லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால்,
10 So the chief priests made plans to kill Lazarus as well,
10 ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.

11 ὅτι δι’ αὐτὸν πολλοὶ τῶν Ἰουδαίων ὑπῆγον καὶ ἐπίστευον εἰς τὸν Ἰησοῦν

11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
11 for on account of him many of the Jews were deserting them and believing in Jesus.
11 ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

The Triumphal Entry (Zechariah 9:9–13; Matthew 21:1–11; Mark 11:1–11; Luke 19:28–40)

12 Τῇ ἐπαύριον ὁ πολὺς ὄχλος ὁ ἐλθὼν εἰς τὴν ἑορτήν ἀκούσαντες ὅτι ‹ὁ› Ἰησοῦς ἔρχεται εἰς Ἱεροσόλυμα

12 மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
12 The next day the great crowd that had come to the feast heard that Jesus was coming to Jerusalem.
12 மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,

13 ἔλαβον τὰ τῶν φοινίκων βαΐα καὶ ἐξῆλθον εἰς ὑπάντησιν αὐτῷ καὶ ἐκραύγαζον Ὡσαννά Εὐλογημένος ὁ ἐρχόμενος ἐν ὀνόματι Κυρίου Καὶ ὁ Βασιλεὺς τοῦ Ἰσραήλ

13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
13 They took palm branches and went out to meet Him, shouting: “Hosanna!”d “Blessed is He who comes in the name of the Lord!” “Blessed is the King of Israel!”
13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், "ஓசன்னா!4 ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.5

4 "ஓசன்னா" என்னும் எபிரேயச் சொல்லுக்கு "விடுவித்தருளும்" என்பது பொருள். ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைகிறது.

5 திபா 118:26; திவெ 7:9.

14 δὲ ὁ Εὑρὼν ὀνάριον Ἰησοῦς ἐκάθισεν ἐπ’ αὐτό καθώς ἐστιν γεγραμμένον

14 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,
14 Finding a young donkey, Jesus sat on it, as it is written:
14 ❮14-15❯இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். "மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்" என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.6

15 φοβοῦ Μὴ θυγάτηρ Σιών ἰδοὺ σου ὁ Βασιλεύς ἔρχεται καθήμενος ἐπὶ πῶλον ὄνου

15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
15 “Do not be afraid, O Daughter of Zion. See, your King is coming, seated on the colt of a donkey.”f

16 τὸ πρῶτον αὐτοῦ οἱ μαθηταὶ οὐκ ἔγνωσαν Ταῦτα ἀλλ’ ὅτε Ἰησοῦς ἐδοξάσθη τότε ἐμνήσθησαν ἐποίησαν ταῦτα αὐτῷ ὅτι ταῦτα ἦν καὶ γεγραμμένα ἐπ’ αὐτῷ

16 இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
16 At first His disciples did not understand these things, but after Jesus was glorified they remembered what had been done to Him, and they realized that these very things had also been written about Him.
16 அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.

17 οὖν ὁ ὄχλος Ἐμαρτύρει ὁ ὢν μετ’ αὐτοῦ ὅτε ἐφώνησεν τὸν Λάζαρον ἐκ τοῦ μνημείου καὶ ἤγειρεν αὐτὸν ἐκ νεκρῶν

17 அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சிகொடுத்தார்கள்.
17 Meanwhile, many people continued to testify that they had been with Jesus when He called Lazarus from the tomb and raised him from the dead.
17 இறந்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசாரை இயேசு கூப்பிட்டு உயிர்த்தெழச் செய்தபோது அவரோடு இருந்த மக்கள் நடந்ததைக் குறித்துச் சான்று பகர்ந்தனர்.

18 διὰ τοῦτο καὶ ὁ ὄχλος ὑπήντησεν αὐτῷ ὅτι ἤκουσαν αὐτὸν πεποιηκέναι τοῦτο τὸ σημεῖον

18 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
18 That is also why the crowd went out to meet Him, because they heard that He had performed this sign.
18 இயேசு இந்த அரும் அடையாளத்தைச் செய்தார் என்று கேள்வியுற்றதால் மக்கள் திரளாய் அவரை எதிர்கொண்டு சென்றார்கள்.

19 οὖν Οἱ Φαρισαῖοι εἶπαν πρὸς ἑαυτούς Θεωρεῖτε ὅτι ὠφελεῖτε οὐκ οὐδέν ἴδε ὁ κόσμος ἀπῆλθεν ὀπίσω αὐτοῦ

19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
19 Then the Pharisees said to one another, “You can see that this is doing you no good. Look how the whole world has gone after Him!”
19 இதைக் கண்ட பரிசேயர், "பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன் பின்னே போய்விட்டது" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.7

Jesus Predicts His Death

20 δὲ Ἦσαν τινες Ἕλληνές ἐκ τῶν ἀναβαινόντων ἵνα προσκυνήσωσιν ἐν τῇ ἑορτῇ

20 பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
20 Now there were some Greeks among those who went up to worship at the feast.
20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.

21 οὖν οὗτοι προσῆλθον Φιλίππῳ τῷ ἀπὸ Βηθσαϊδὰ τῆς Γαλιλαίας καὶ ἠρώτων αὐτὸν λέγοντες Κύριε θέλομεν ἰδεῖν τὸν Ἰησοῦν

21 அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
21 They came to Philip, who was from Bethsaida in Galilee, and requested of him, “Sir, we want to see Jesus.”
21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

22 ὁ Φίλιππος ἔρχεται καὶ λέγει τῷ Ἀνδρέᾳ Ἀνδρέας καὶ Φίλιππος ἔρχεται καὶ λέγουσιν τῷ Ἰησοῦ

22 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
22 Philip relayed this appeal to Andrew, and both of them went and told Jesus.
22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

23 δὲ Ὁ Ἰησοῦς ἀποκρίνεται αὐτοῖς λέγων ἡ ὥρα Ἐλήλυθεν ἵνα ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου δοξασθῇ

23 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
23 But Jesus replied, “The hour has come for the Son of Man to be glorified.
23 இயேசு அவர்களைப் பார்த்து, "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

24 ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ἐὰν μὴ ὁ κόκκος τοῦ σίτου πεσὼν εἰς τὴν γῆν ἀποθάνῃ αὐτὸς μένει μόνος δὲ ἐὰν ἀποθάνῃ φέρει πολὺν καρπὸν

24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
24 Truly, truly, I tell you, unless a kernel of wheat falls to the ground and dies, it remains only a seed; but if it dies, it bears much fruit.
24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.8

25 ὁ φιλῶν αὐτοῦ τὴν ψυχὴν ἀπολλύει αὐτήν καὶ ὁ μισῶν αὐτοῦ τὴν ψυχὴν ἐν τούτῳ τῷ κόσμῳ φυλάξει αὐτήν εἰς αἰώνιον ζωὴν

25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
25 Whoever loves his life will lose it, but whoever hates his life in this world will keep it for eternal life.
25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.9

26 ἐὰν τις διακονῇ ἐμοί ἀκολουθείτω ἐμοὶ καὶ ὅπου ἐγὼ εἰμὶ ἐκεῖ ὁ ἐμὸς ὁ διάκονος ἔσται καὶ ἐάν τις διακονῇ ἐμοὶ ὁ Πατήρ τιμήσει αὐτὸν

26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
26 If anyone serves Me, he must follow Me; and where I am, My servant will be as well. If anyone serves Me, the Father will honor him.
26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்றார்.

27 Νῦν μου ἡ ψυχή τετάρακται καὶ τί εἴπω Πάτερ σῶσόν με ἐκ ταύτης τῆς ὥρας ἀλλὰ διὰ τοῦτο ἦλθον εἰς ταύτην τὴν ὥραν

27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
27 Now My soul is troubled, and what shall I say? ‘Father, save Me from this hour’? No, it is for this purpose that I have come to this hour.
27 மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.10

28 Πάτερ δόξασόν σου τὸ ὄνομα οὖν φωνὴ Ἦλθεν ἐκ τοῦ οὐρανοῦ Καὶ ἐδόξασα καὶ δοξάσω πάλιν

28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
28 Father, glorify Your name!” Then a voice came from heaven: “I have glorified it, and I will glorify it again.”
28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று ஒலித்தது.

29 οὖν Ὁ ὄχλος ὁ ἑστὼς καὶ ἀκούσας ἔλεγεν γεγονέναι Βροντὴν ἄλλοι ἔλεγον Ἄγγελος λελάληκεν αὐτῷ

29 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
29 The crowd standing there heard it and said that it had thundered. Others said that an angel had spoken to Him.
29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்" என்றனர். வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு" என்றனர்.

30 Ἀπεκρίθη καὶ Ἰησοῦς εἶπεν αὕτη ἡ φωνὴ γέγονεν Οὐ δι’ ἐμὲ ἀλλὰ δι’ ὑμᾶς

30 இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
30 In response, Jesus said, “This voice was not for My benefit, but yours.
30 இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.

31 νῦν κρίσις ἐστὶν τούτου τοῦ κόσμου νῦν ὁ ἄρχων τούτου τοῦ κόσμου ἐκβληθήσεται ἔξω

31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
31 Now judgment is upon this world; now the prince of this world will be cast out.
31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.11

32 κἀγὼ ἐὰν ὑψωθῶ ἐκ τῆς γῆς ἑλκύσω πάντας πρὸς ἐμαυτόν

32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
32 And I, when I am lifted up from the earth, will draw everyone to Myself.”
32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார்.

33 δὲ ἔλεγεν τοῦτο σημαίνων ποίῳ θανάτῳ ἤμελλεν ἀποθνήσκειν

33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
33 He said this to indicate the kind of death He was going to die.
33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

34 οὖν ὁ ὄχλος Ἀπεκρίθη αὐτῷ Ἡμεῖς ἠκούσαμεν ἐκ τοῦ νόμου ὅτι ὁ Χριστὸς μένει εἰς τὸν αἰῶνα καὶ πῶς σὺ λέγεις ὅτι τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου δεῖ ὑψωθῆναι τίς ἐστιν οὗτος ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου

34 ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
34 The crowd replied, “We have heard from the Law that the Christ will remain forever. So how can You say that the Son of Man must be lifted up? Who is this Son of Man?”
34 மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து, "மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத் திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மானிடமகன்?" என்று கேட்டனர்.12

35 οὖν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Ἔτι μικρὸν χρόνον τὸ φῶς ἐστιν ἐν ὑμῖν περιπατεῖτε ὡς ἔχετε τὸ φῶς ἵνα σκοτία μὴ καταλάβῃ ὑμᾶς καὶ ὁ περιπατῶν ἐν τῇ σκοτίᾳ οὐκ οἶδεν ποῦ ὑπάγει

35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
35 Then Jesus told them, “For a little while longer, the Light will be among you. Walk while you have the Light, so that darkness will not overtake you. The one who walks in the darkness does not know where he is going.
35 இயேசு அவர்களிடம், "இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.

36 ὡς ἔχετε τὸ φῶς πιστεύετε εἰς τὸ φῶς ἵνα γένησθε υἱοὶ φωτὸς Ἰησοῦς ἐλάλησεν Ταῦτα καὶ ἀπελθὼν ἐκρύβη ἀπ’ αὐτῶν

36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.
36 While you have the Light, believe in the Light, so that you may become sons of light.” After Jesus had spoken these things, He went away and was hidden from them.
36 ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்" என்றார். இப்படிச் சொன்னபின் இயேசு அவர்களிடமிருந்து மறைவாகப் போய்விட்டார்.

Belief and Unbelief

37 δὲ αὐτοῦ πεποιηκότος Τοσαῦτα σημεῖα ἔμπροσθεν αὐτῶν οὐκ ἐπίστευον εἰς αὐτόν

37 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
37 Although Jesus had performed so many signs in their presence, they still did not believe in Him.
37 அவர்கள் முன் இயேசு இத்தனை அரும் அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

38 ἵνα πληρωθῇ ὁ λόγος Ἠσαΐου τοῦ προφήτου ὃν εἶπεν Κύριε τίς ἐπίστευσεν ἡμῶν τῇ ἀκοῇ καὶ τίνι ὁ βραχίων Κυρίου ἀπεκαλύφθη

38 கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
38 This was to fulfill the word of Isaiah the prophet: “Lord, who has believed our message? And to whom has the arm of the Lord been revealed?”g
38 "ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?" என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது.13

39 Διὰ τοῦτο ἠδύναντο οὐκ πιστεύειν ὅτι πάλιν Ἠσαΐας εἶπεν

39 ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
39 For this reason they were unable to believe. For again, Isaiah says:
39 ❮39-40❯"அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணை மூடச்செய்தார். உள்ளத்தை மழுங்கச் செய்தார்" என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று.14

40 Τετύφλωκεν αὐτῶν τοὺς ὀφθαλμοὺς καὶ ἐπώρωσεν αὐτῶν τὴν καρδίαν ἵνα μὴ ἴδωσιν τοῖς ὀφθαλμοῖς καὶ νοήσωσιν τῇ καρδίᾳ καὶ στραφῶσιν καὶ ἰάσομαι αὐτούς

40 அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
40 “He has blinded their eyes and hardened their hearts, so that they cannot see with their eyes, and understand with their hearts, and turn, and I would heal them.”h

41 Ἠσαΐας εἶπεν Ταῦτα ὅτι εἶδεν αὐτοῦ τὴν δόξαν καὶ ἐλάλησεν περὶ αὐτοῦ

41 ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
41 Isaiah said these things because he saw Jesus’ glory and spoke about Him.
41 எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.

42 ὅμως μέντοι καὶ πολλοὶ ἐκ τῶν ἀρχόντων ἐπίστευσαν εἰς αὐτόν ἀλλὰ διὰ τοὺς Φαρισαίους οὐχ ὡμολόγουν ἵνα μὴ γένωνται ἀποσυνάγωγοι

42 ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
42 Nevertheless, many of the leaders believed in Him; but because of the Pharisees they did not confess Him, for fear that they would be put out of the synagogue.
42 எனினும் தலைவர்களில்கூடப் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். ஆனால், பரிசேயருக்கு அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒப்புகொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.

43 γὰρ ἠγάπησαν τὴν δόξαν τῶν ἀνθρώπων μᾶλλον ἤπερ τὴν δόξαν τοῦ Θεοῦ

43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
43 For they loved praise from men more than praise from God.
43 அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்.

44 δὲ Ἰησοῦς ἔκραξεν καὶ εἶπεν Ὁ πιστεύων εἰς ἐμὲ οὐ πιστεύει εἰς ἐμὲ ἀλλὰ εἰς τὸν πέμψαντά με

44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
44 Then Jesus cried out, “Whoever believes in Me does not believe in Me alone, but in the One who sent Me.
44 இயேசு உரத்த குரலில் கூறியது: "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.

45 καὶ ὁ θεωρῶν ἐμὲ θεωρεῖ τὸν πέμψαντά με

45 என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
45 And whoever sees Me sees the One who sent Me.
45 என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

46 ἐγὼ ἐλήλυθα εἰς τὸν κόσμον φῶς ἵνα πᾶς μὴ ὁ πιστεύων εἰς ἐμὲ μείνῃ ἐν τῇ σκοτίᾳ

46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
46 I have come into the world as a light, so that no one who believes in Me should remain in darkness.
46 என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.

47 Καὶ ἐάν τίς ἀκούσῃ μου τῶν ῥημάτων καὶ μὴ φυλάξῃ ἐγὼ οὐ κρίνω αὐτόν γὰρ οὐ ἦλθον ἵνα κρίνω τὸν κόσμον ἀλλ’ ἵνα σώσω τὸν κόσμον

47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
47 As for anyone who hears My words and does not keep them, I do not judge him. For I have not come to judge the world, but to save the world.
47 நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

48 ἔχει τὸν κρίνοντα αὐτόν ὁ ἀθετῶν ἐμὲ καὶ μὴ λαμβάνων μου τὰ ῥήματά ὁ λόγος ὃν ἐλάλησα ἐκεῖνος κρινεῖ αὐτὸν ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
48 There is a judge for the one who rejects Me and does not receive My words: The word that I have spoken will judge him on the last day.
48 என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

49 Ὅτι ἐγὼ οὐκ ἐλάλησα ἐξ ἐμαυτοῦ ἀλλ’ ὁ Πατὴρ αὐτός πέμψας με δέδωκεν μοι ἐντολὴν τί εἴπω καὶ τί λαλήσω

49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
49 I have not spoken on My own, but the Father who sent Me has commanded Me what to say and how to say it.
49 ஏனெனில், நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.15

50 καὶ οἶδα ὅτι αὐτοῦ ἡ ἐντολὴ ἐστιν αἰώνιός ζωὴ οὖν ἐγὼ λαλῶ καθὼς ἃ ὁ Πατήρ εἴρηκέν μοι οὕτως λαλῶ

50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
50 And I know that His command leads to eternal life. So I speak exactly what the Father has told Me to say.”
50 அவருடைய கட்டளை நிலை வாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்".


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
3 a Greek a litra ; that is, approximately 12 ounces or 340 grams
5 b A denarius was customarily a day’s wage for a laborer; see Matthew 20:2.
8 c See Deuteronomy 15:11.
13 d Hosanna  is a transliteration of the Hebrew Hosia-na , meaning Save, we pray  or Save now , which became a shout of praise; see Psalm 118:25.
13 e Psalm 118:26
15 f Zechariah 9:9
38 g Isaiah 53:1
40 h Isaiah 6:10

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.