பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 26 | Ezekiel 26
A Prophecy against Tyre (Isaiah 23:1–18)
1 பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 In the eleventh month of the twelfth year,a on the first day of the month, the word of the LORD came to me, saying,
1 பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:1
1 :19 = எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.
2 மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக, எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
2 “Son of man, because Tyre has said of Jerusalem, ‘Aha! The gate to the nations is broken; it has swung open to me; now that she lies in ruins I will be filled,’
2 மானிடா! எருசலேமைக் குறித்து தீர் நகரம் கூறியது: 'ஆகா! நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது அழிவில் வீழ்ந்துகிடப்பதால் நான் வளமடைவேன்.'
3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிற வண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக, எழும்பி வரப்பண்ணுவேன்.
3 therefore this is what the Lord GOD says: ‘Behold, O Tyre, I am against you, and I will raise up many nations against you, as the sea brings up its waves.
3 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; தீர் நகரே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; கடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப் பல மக்களினங்கள் எழும்பும்படிச் செய்வேன்.
4 அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
4 They will destroy the walls of Tyre and demolish her towers. I will scrape the soil from her and make her a bare rock.
4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்; அதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்; இடிபாடுகளும் அதில் இராதபடி வெறும் கற்பாறையாகத் தோன்றச் செய்வேன்.
5 அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும்.
5 She will become a place to spread nets in the sea, for I have spoken, declares the Lord GOD. She will become plunder for the nations,
5 கடல் நடுவே வலைகாயும் திட்டாய் அது மாறும்; ஏனெனில் நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எல்லா மக்களினங்களுக்கும் கொள்ளைப் பொருளாகும் அந்நகர்.
6 வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
6 and the villages on her mainland will be slain by the sword. Then they will know that I am the LORD.’
6 உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள் வாளால் அழிக்கப்படும்; அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
7 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
7 For this is what the Lord GOD says: ‘Behold, I will bring against Tyre from the north Nebuchadnezzarb king of Babylon, king of kings, with horses and chariots, with cavalry and a great company of troops.
7 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ வடக்கிலுள்ள மன்னரின் மன்னனாம் பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரைக் குதிரைகளோடும் தேர்களோடும் குதிரை வீரர்களோடும் பெரிய படைகளோடும் தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன்.
8 அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால்கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,
8 He will slaughter the villages of your mainland with the sword; he will set up siege works against you, build a ramp to your walls, and raise his shields against you.
8 உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை அவன் வாளால் வீழ்த்துவான்; உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி உன் மதில்களுக்கு எதிராய் முற்றுகை அரண் அமைத்து உனக்கெதிராய்த் தன் கேடயங்களை உயர்த்துவான்.
9 உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.
9 He will direct the blows of his battering rams against your walls and tear down your towers with his axes.
9 அரண்தகர் பொறிகளை உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி, உன் காவல் மாடங்களைப் படைக் கலன்களால் நொறுக்குவான்.
10 அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில்களும் இரதங்களும் இரைகிற சத்தத்திலே உன் மதில்கள் அதிரும்.
10 His multitude of horses will cover you in their dust. When he enters your gates as an army entering a breached city, your walls will shake from the noise of cavalry, wagons, and chariots.
10 அவனுடைய குதிரைகள் மிகுதியானவை; எனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல் அவன் உன் நகரில் நுழைகையில், குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் எழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும்.
11 தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
11 The hooves of his horses will trample all your streets. He will slaughter your people with the sword, and your mighty pillars will fall to the ground.
11 குதிரைகள் குளம்புகளால் உன் தெருக்களை அவன் மிதிப்பான்; வாளால் உன் மக்களைக் கொல்வான்; வலிமையான உன் தூண்கள் தரையில் வீழும்.
12 அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
12 They will plunder your wealth and pillage your merchandise. They will demolish your walls, tear down your beautiful homes, and throw your stones and timber and soil into the water.
12 அவர்கள் உன் செல்வத்தைக் கொள்ளையடித்து உன் வாணிபச் சரக்கைப் பறித்துக் கொண்டுபோவர்; உன் மதில்களை இடிப்பர்; உன் அழகிய வீடுகளை அழிப்பர்; உன் கற்களையும் மரங்களையும் இடிபாடுகளையும் கடலில் எறிவர்.
13 உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
13 So I will silence the sound of your songs, and the music of your lyres will no longer be heard.
13 உன் பாடலின் ஒலியை நிறுத்திவிடுவேன்; இனிமேல் உன் யாழோசை கேட்காது.2
2 திவெ 18:22.
14 உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
14 I will make you a bare rock, and you will become a place to spread the fishing nets. You will never be rebuilt, for I, the LORD, have spoken, declares the Lord GOD.’
14 உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன்; நீயோ வலைகாயும் திட்டாவாய்; ஒருபோதும் நீ திரும்பக் கட்டியெழுப்பப்பட மாட்டாய்; ஏனெனில், ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15 தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
15 This is what the Lord GOD says to Tyre: ‘Will not the coastlands quake at the sound of your downfall, when the wounded groan at the slaughter in your midst?
15 தலைவராகிய ஆண்டவர் தீர்நகருக்குக் கூறுவது இதுவே; நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில், உன் மக்கள் காயமுற்று ஓலமிடுகையில், அவர்கள் உன் நடுவே கொல்லப்படுகையில், கடற்கரை நகர்கள் அதிராவோ?
16 கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையாலடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.
16 All the princes of the sea will descend from their thrones, remove their robes, and strip off their embroidered garments. Clothed with terror, they will sit on the ground, trembling every moment, appalled over you.
16 அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்; திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்; ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர்.
17 அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக் குறித்து; கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்ப்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!
17 Then they will lament for you, saying, “How you have perished, O city of renown inhabited by seafaring men—she who was powerful on the sea, along with her people, who imposed terror on all peoples!c
17 அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்; சீர்மிகு மாநகரே! நெய்தல்நில மாந்தரால் நிறைந்தவளே! மாகடலில் வலிமையோடு விளங்கினையே! நீயும் உன்னில் வாழ் மக்களும் அடுத்திருந்த அனைவர்க்கும் பேரச்சம் விளைவித்தீர்! அந்தோ! என்னே உன் வீழ்ச்சி!
18 நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
18 Now the coastlands tremble on the day of your downfall; the islands in the sea are dismayed by your demise.”’
18 இப்போது, உன் வீழ்ச்சியில் கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன; உன் அழிவில் தீவுகள் திகிலுறுகின்றன.3
3 திவெ 18:9-10.
19 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத, நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,
19 For this is what the Lord GOD says: ‘When I make you a desolate city like other deserted cities, and when I raise up the deep against you so that the mighty waters cover you,
19 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில்,
20 பூர்வகாலத்து ஜனத்தண்டக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச் செய்வேன்.
20 then I will bring you down with those who descend to the Pit, to the people of antiquity. I will make you dwell in the earth below like the ancient ruins, with those who descend to the Pit, so that you will no longer be inhabited or set in splendord in the land of the living.
20 நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்; வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய்.
21 உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
21 I will make you an object of horror, and you will be no more. You will be sought, but will never be found,’ declares the Lord GOD.”
21 உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்; நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.4
4 திவெ 18:21.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Likely reading of the original Hebrew text; MT In the eleventh year
7 b Hebrew Nebuchadrezzar , a variant of Nebuchadnezzar (king of Babylon). The latter spelling is used throughout Ezekiel for consistency.
17 c Or on all her inhabitants
20 d LXX or take your place
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.