பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Isaiah  ஏசாயா  יְשַׁעְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52   53   54   55   56   57   58   59   60   61   62   63   64   65   66

ஏசாயா 27 | Isaiah 27

The LORD’s Vineyard (John 15:1–8)

1בַּיּ֣וֹם הַה֡וּא יִפְקֹ֣ד יְהוָה֩ בְּחַרְב֨וֹ הַקָּשָׁ֜ה וְהַגְּדוֹלָ֣ה וְהֽ͏ַחֲזָקָ֗ה עַ֤ל לִוְיָתָן֙ נָחָ֣שׁ בָּרִ֔חַ וְעַל֙ לִוְיָתָ֔ן נָחָ֖שׁ עֲקַלָּת֑וֹן וְהָרַ֥ג אֶת־הַתַּנִּ֖ין אֲשֶׁ֥ר בַּיָּֽם׃

1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
1 In that day the LORD will take His sharp, great, and mighty sword, and bring judgment on Leviathan the fleeing serpenta—Leviathan the coiling serpent—and He will slay the dragon of the sea.
1 அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை — லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை — தண்டிப்பார்; கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.*

2בַּיּ֖וֹם הַה֑וּא כֶּ֥רֶם חֶ֖מֶד עַנּוּ־לָֽהּ׃

2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமுண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள்.
2 In that day: “Sing about a fruitful vineyard.
2 அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத் தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.

3אֲנִ֤י יְהוָה֙ נֹֽצְרָ֔הּ לִרְגָעִ֖ים אַשְׁקֶ֑נָּה פֶּ֚ן יִפְקֹ֣ד עָלֶ֔יהָ לַ֥יְלָה וָי֖וֹם אֶצֳּרֶֽנָּה׃

3 கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
3 I, the LORD, am its keeper; I water it continually. I guard it night and day so no one can disturb it;
3 ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்; இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்; எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.

4חֵמָ֖ה אֵ֣ין לִ֑י מִֽי־יִתְּנֵ֜נִי שָׁמִ֥יר שַׁ֙יִת֙ בַּמִּלְחָמָ֔ה אֶפְשְׂעָ֥ה בָ֖הּ אֲצִיתֶ֥נָּה יָּֽחַד׃

4 உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
4 I am not angry. If only thorns and briers confronted Me, I would march and trample them, I would burn them to the ground.
4 சினம் என்னிடம் இல்லை; நெருஞ்சியையும் முட்புதரையும் என்னோடு போரிடச் செய்தவன் எவன்? நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று, அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.

5א֚וֹ יַחֲזֵ֣ק בְּמָעוּזִּ֔י יַעֲשֶׂ֥ה שָׁל֖וֹם לִ֑י שָׁל֖וֹם יֽ͏ַעֲשֶׂה־לִּֽי׃

5 இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும், அவன் என்னோடே ஒப்புரவாவான்.
5 Or let them lay claim to My protection; let them make peace with Me—yes, let them make peace with Me.”
5 அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்; என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.

6הַבָּאִים֙ יַשְׁרֵ֣שׁ יַֽעֲקֹ֔ב יָצִ֥יץ וּפָרַ֖ח יִשְׂרָאֵ֑ל וּמָלְא֥וּ פְנֵי־תֵבֵ֖ל תְּנוּבָֽה׃

6 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
6 In the days to come, Jacob will take root. Israel will bud and blossom and fill the whole world with fruit.
6 வருங்காலத்தில் யாக்கோபு வேரூன்றி நிற்பான்; இஸ்ரயேல் பூத்து மலருவான்; உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான்.

7הַכְּמַכַּ֥ת מַכֵּ֖הוּ הִכָּ֑הוּ אִם־כְּהֶ֥רֶג הֲרֻגָ֖יו הֹרָֽג׃

7 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?
7 Has the LORD struck Israel as He struck her oppressors? Was she killed like those who slayed her?
7 அவனை அடித்து நொறுக்கியோரை ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல், அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ? அவனை வெட்டி வீழ்த்தியோரை அவர் வெட்டி வீழ்த்தியதுபோல், அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ?

8בְּסַּאסְּאָ֖ה בְּשַׁלְחָ֣הּ תְּרִיבֶ֑נָּה הָגָ֛ה בְּרוּח֥וֹ הַקָּשָׁ֖ה בְּי֥וֹם קָדִֽים׃

8 தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
8 By warfare and exileb You contended with her and removed her with a fierce wind, as on the day the east wind blows.
8 துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்; கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் தூக்கி எறிந்தார்.

9לָכֵ֗ן בְּזֹאת֙ יְכֻפַּ֣ר עֲוֺֽן־יַעֲקֹ֔ב וְזֶ֕ה כָּל־פְּרִ֖י הָסִ֣ר חַטָּאת֑וֹ בְּשׂוּמ֣וֹ ׀ כָּל־אַבְנֵ֣י מִזְבֵּ֗חַ כְּאַבְנֵי־גִר֙ מְנֻפָּצ֔וֹת לֹֽא־יָקֻ֥מוּ אֲשֵׁרִ֖ים וְחַמָּנִֽים׃

9 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
9 Therefore Jacob’s guilt will be atoned for, and the full fruit of the removal of his sin will be this:c When he makes all the altar stones like crushed bits of chalk, no Asherah poles or incense altars will remain standing.
9 ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும். அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே: சுண்ணாம்புக் கற்களை உடைத்துத் தூள் தூளாக்குவது போல அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்; அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும் நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.

10כִּ֣י עִ֤יר בְּצוּרָה֙ בָּדָ֔ד נָוֶ֕ה מְשֻׁלָּ֥ח וְנֶעֱזָ֖ב כַּמִּדְבָּ֑ר שָׁ֣ם יִרְעֶ֥ה עֵ֛גֶל וְשָׁ֥ם יִרְבָּ֖ץ וְכִלָּ֥ה סְעִפֶֽיהָ׃

10 அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
10 For the fortified city lies deserted—a homestead abandoned, a wilderness forsaken. There the calves graze, and there they lie down; they strip its branches bare.
10 அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது; குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது; ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது; அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.

11בִּיבֹ֤שׁ קְצִירָהּ֙ תִּשָּׁבַ֔רְנָה נָשִׁ֕ים בָּא֖וֹת מְאִיר֣וֹת אוֹתָ֑הּ כִּ֣י לֹ֤א עַם־בִּינוֹת֙ ה֔וּא עַל־כֵּן֙ לֹֽא־יְרַחֲמֶ֣נּוּ עֹשֵׂ֔הוּ וְיֹצְר֖וֹ לֹ֥א יְחֻנֶּֽנּוּ׃

11 அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
11 When its limbs are dry, they are broken off. Women come and use them for kindling; for this is a people without understanding. Therefore their Maker has no compassion on them, and their Creator shows them no favor.
11 உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன; பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்; ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது; ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்; அவர்களை உருவாக்கியவர் அவர்களுக்கு ஆதரவு அருளார்.

12וְהָיָה֙ בַּיּ֣וֹם הַה֔וּא יַחְבֹּ֧ט יְהוָ֛ה מִשִּׁבֹּ֥לֶת הַנָּהָ֖ר עַד־נַ֣חַל מִצְרָ֑יִם וְאַתֶּ֧ם תְּלֻקְּט֛וּ לְאַחַ֥ד אֶחָ֖ד בְּנֵ֥י יִשְׂרָאֵֽל׃

12 அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
12 In that day the LORD will thresh from the flowing Euphratesd to the Wadi of Egypt, and you, O Israelites, will be gathered one by one.
12 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்; இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.

13וְהָיָ֣ה ׀ בַּיּ֣וֹם הַה֗וּא יִתָּקַע֮ בְּשׁוֹפָ֣ר גָּדוֹל֒ וּבָ֗אוּ הָאֹֽבְדִים֙ בְּאֶ֣רֶץ אַשּׁ֔וּר וְהַנִדָּחִ֖ים בְּאֶ֣רֶץ מִצְרָ֑יִם וְהִשְׁתַּחֲו֧וּ לַיהוָ֛ה בְּהַ֥ר הַקֹּ֖דֶשׁ בִּירוּשָׁלָֽ͏ִם׃

13 அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
13 And in that day a great ram’s horn will sound, and those who were perishing in Assyria will come forth with those who were exiles in Egypt. And they will worship the LORD on the holy mountain in Jerusalem.
13 அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Isaiah Chapter 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52   53   54   55   56   57   58   59   60   61   62   63   64   65   66

Footnotes:
1 a Hebrew nachash ; translated in most cases as snake ; twice in this verse
b Or By driving her away into exile  or Measure by measure, by exile
9 c LXX Therefore the guilt of Jacob will be taken away, and this is his blessing when I take away his sin ; cited in Romans 11:27
12 d Hebrew River

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.