பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Isaiah  ஏசாயா  יְשַׁעְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52   53   54   55   56   57   58   59   60   61   62   63   64   65   66

ஏசாயா 20 | Isaiah 20

A Sign against Egypt and Cush

1בִּשְׁנַ֨ת בֹּ֤א תַרְתָּן֙ אַשְׁדּ֔וֹדָה בִּשְׁלֹ֣ח אֹת֔וֹ סַֽרְג֖וֹן מֶ֣לֶךְ אַשּׁ֑וּר וַיִּלָּ֥חֶם בְּאַשְׁדּ֖וֹד וַֽיִּלְכְּדָֽהּ׃

1 தர்த்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
1 Before the year that the chief commander, sent by Sargon king of Assyria, came to Ashdod and attacked and captured it,
1 அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,

2בָּעֵ֣ת הַהִ֗יא דִּבֶּ֣ר יְהוָה֮ בְּיַ֣ד יְשַׁעְיָ֣הוּ בֶן־אָמוֹץ֮ לֵאמֹר֒ לֵ֗ךְ וּפִתַּחְתָּ֤ הַשַּׂק֙ מֵעַ֣ל מָתְנֶ֔יךָ וְנַעַלְךָ֥ תַחֲלֹ֖ץ מֵעַ֣ל רַגְלֶ֑יךָ וַיַּ֣עַשׂ כֵּ֔ן הָלֹ֖ךְ עָר֥וֹם וְיָחֵֽף׃

2 கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
2 the LORD had already spoken through Isaiah son of Amoz, saying, “Go, remove the sackcloth from your waist and the sandals from your feet.” And Isaiah did so, walking around naked and barefoot.
2 அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது: ‟நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு; உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு." அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்டிருந்தார்.

3וַיֹּ֣אמֶר יְהוָ֔ה כַּאֲשֶׁ֥ר הָלַ֛ךְ עַבְדִּ֥י יְשַׁעְיָ֖הוּ עָר֣וֹם וְיָחֵ֑ף שָׁלֹ֤שׁ שָׁנִים֙ א֣וֹת וּמוֹפֵ֔ת עַל־מִצְרַ֖יִם וְעַל־כּֽוּשׁ׃

3 அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,
3 Then the LORD said, “Just as My servant Isaiah has gone naked and barefoot for three years as a sign and omen against Egypt and Cush,a
3 ஆண்டவர் கூறினார்: என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும்.

4כֵּ֣ן יִנְהַ֣ג מֶֽלֶךְ־אַ֠שּׁוּר אֶת־שְׁבִ֨י מִצְרַ֜יִם וְאֶת־גָּל֥וּת כּ֛וּשׁ נְעָרִ֥ים וּזְקֵנִ֖ים עָר֣וֹם וְיָחֵ֑ף וַחֲשׂוּפַ֥י שֵׁ֖ת עֶרְוַ֥ת מִצְרָֽיִם׃

4 அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
4 so the king of Assyria will lead away the captives of Egypt and the exiles of Cush, young and old alike, naked and barefoot, with bared buttocks—to Egypt’s shame.
4 அசீரிய மன்னன் எகிப்தியரைச் சிறைப்பிடித்து, எத்தியோப்பியரை நாடு கடத்துவான். அவன் எகிப்தியருக்கு மானக்கேடு உண்டாகும்படி இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங் காலோடும் இருப்பிடம் மூடப்படாமலும் இழுத்து வருவான்.

5וְחַתּ֖וּ וָבֹ֑שׁוּ מִכּוּשׁ֙ מַבָּטָ֔ם וּמִן־מִצְרַ֖יִם תִּפְאַרְתָּֽם׃

5 அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
5 Those who made Cush their hope and Egypt their boast will be dismayed and ashamed.
5 அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர்.

6וְ֠אָמַר יֹשֵׁ֨ב הָאִ֣י הַזֶּה֮ בַּיּ֣וֹם הַהוּא֒ הִנֵּה־כֹ֣ה מַבָּטֵ֗נוּ אֲשֶׁר־נַ֤סְנוּ שָׁם֙ לְעֶזְרָ֔ה לְהִ֨נָּצֵ֔ל מִפְּנֵ֖י מֶ֣לֶךְ אַשּׁ֑וּר וְאֵ֖יךְ נִמָּלֵ֥ט אֲנָֽחְנוּ׃

6 இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.
6 And on that day the dwellers of this coastland will say, ‘See what has happened to our source of hope, those to whom we fled for help and deliverance from the king of Assyria! How then can we escape?’”
6 அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், ‟இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டி யாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?" என்பார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Isaiah Chapter 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52   53   54   55   56   57   58   59   60   61   62   63   64   65   66

Footnotes:
3 a That is, the upper Nile region; similarly in verses 4 and 5

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.