பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Isaiah ஏசாயா יְשַׁעְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
ஏசாயா 9 | Isaiah 9
Unto Us a Child Is Born (Matthew 4:12–17; Mark 1:14–15; Luke 4:14–15)
1 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
1 Nevertheless, there will be no more gloom for those in distress. In the past He humbled the land of Zebulun and the land of Naphtali, but in the future He will honor the Way of the Sea, beyond the Jordan, Galilee of the nations:
1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.1
1 மத் 4:15.
2 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
2 The people walking in darkness have seen a great light; on those living in the land of the shadow of death, a light has dawned.a
2 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.2
3 அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.
3 You have enlarged the nation and increased its joy. The people rejoice before You as they rejoice at harvest time, as men rejoice in dividing the plunder.
3 ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
4 மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
4 For as in the day of Midian You have shattered the yoke of their burden, the bar across their shoulders, and the rod of their oppressor.
4 மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.
5 அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.
5 For every trampling boot of battle and every garment rolled in blood will be burned as fuel for the fire.
5 அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
6 For unto us a child is born, unto us a son is given, and the government will be upon His shoulders. And He will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.
6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும்.
7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
7 Of the increase of His government and peace there will be no end. He will reign on the throne of David and over his kingdom, to establish and sustain it with justice and righteousness from that time and forevermore. The zeal of the LORD of Hosts will accomplish this.
7 அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.3
3 லூக் 1:32-33.
Judgment against Israel’s Pride
8 ஆண்டவர் யாக்கோபுக்கு ஒருவார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று.
8 The Lord has sent a message against Jacob, and it has fallen upon Israel.
8 யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்; அது இஸ்ரயேல்மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும்.
9 செங்கல்கட்டு இடிந்துபோயிற்று, பொளிந்த கல்லாலே திரும்பக்கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று,
9 All the people will know it—Ephraimb and the dwellers of Samaria. With pride and arrogance of heart they will say:
9 எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள் ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள்.
10 அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.
10 “The bricks have fallen, but we will rebuild with finished stone; the sycamores have been felled, but we will replace them with cedars.”
10 செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது: "செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன; எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்".
11 ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.
11 The LORD has raised up the foes of Rezin against him and joined his enemies together.
11 ஆதலால் ஆண்டவர் இரட்சீனின் அதிகாரிகளை அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்; அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.
12 முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது,
12 Aram from the east and Philistia from the west have devoured Israel with open mouths. Despite all this, His anger is not turned away; His hand is still upraised.
12 கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்; தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்; இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
Judgment against Israel’s Hypocrisy
13 ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
13 But the people did not return to Him who struck them; they did not seek the LORD of Hosts.
13 தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை; படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை.
14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
14 So the LORD will cut off Israel’s head and tail, both palm branch and reed in a single day.
14 ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;
15 மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.
15 The head is the elder and honorable man, and the tail is the prophet who teaches lies.
15 முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்; பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.
16 இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
16 For those who guide this people mislead them, and those they mislead are swallowed up.
16 இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்; அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.
17 ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
17 Therefore the Lord takes no pleasure in their young men; He has no compassion on their fatherless and widows. For every one of them is godless and wicked, and every mouth speaks folly. Despite all this, His anger is not turned away; His hand is still upraised.
17 ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை; அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை; அவர்கள் அனைவரும் இறைப்பற்று இல்லாதவர்கள்; தீச்செயல் புரிபவர்கள்; எல்லாரும் மதிகேட்டையே பேசினர்; இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.
Judgment against Israel’s Unrepentance
18 ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.
18 For wickedness burns like a fire that consumes the thorns and briers and kindles the forest thickets which roll upward in billows of smoke.
18 கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது; அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது; காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்திவிட்டது; அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.
19 சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.
19 By the wrath of the LORD of Hosts the land is scorched, and the people are fuel for the fire. No man even spares his brother.
19 படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது; மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்; ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.
20 வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
20 They carve out what is on the right, but they are still hungry; they eat what is on the left, but they are still not satisfied. Each one devours the flesh of his own offspring.d
20 அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை; இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை; ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்;
21 மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
21 Manasseh devours Ephraim, and Ephraim Manasseh; together they turn against Judah. Despite all this, His anger is not turned away; His hand is still upraised.
21 மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்; இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்; இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை; ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை;
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Cited in Matthew 4:15–16
9 b That is, the northern kingdom of Israel
12 c That is, Syria
20 d Literally of his own arm
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.