பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Isaiah ஏசாயா יְשַׁעְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
ஏசாயா 39 | Isaiah 39
Hezekiah Shows His Treasures (2 Kings 20:12–19)
1 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
1 At that time Merodach-baladan son of Baladan king of Babylon sent letters and a gift to Hezekiah, for he had heard about Hezekiah’s illness and recovery.
1 அக்காலத்தில், பாபிலோன் மன்னன் பலாதானின் மகன் மெரோதாக்கு பலாதான், எசேக்கியா நோய்வாய்ப்பட்டதையும் அவர் குணமடைந்ததையும் கேள்வியுற்று அவரிடம் மடலையும் அன்பளிப்பையும் அனுப்பி வைத்தான்.
2 எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.
2 And Hezekiah welcomed the envoys gladly and showed them what was in his treasure house—the silver, the gold, the spices, and the precious oil, as well as his entire armory—all that was found in his storehouses. There was nothing in his palace or in all his dominion that Hezekiah did not show them.
2 இதுபற்றி மகிழ்ந்த எசேக்கியா தூதர்க்குத் தம் கருவூல அறை, நறுமணப் பொருள்கள், பரிமளத்தைலம், பொன், வெள்ளி ஆகியவற்றையும் தம் படைக்கலன் இருந்த அறை முழுவதையும், தம் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்தையும் காண்பித்தார். எசேக்கியா தம் அரண்மனையிலோ தம் ஆட்சி எல்லைக்குள்ளோ அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் இல்லை.
3 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
3 Then the prophet Isaiah went to King Hezekiah and asked, “Where did those men come from, and what did they say to you?” “They came to me from a distant land,” Hezekiah replied, “from Babylon.”
3 அப்போது, எசாயா இறைவாக்கினர் எசேக்கியா அரசரிடம் வந்து, "அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உம்மிடம் வந்தார்கள்?" என்று வினவ, "அவர்கள் தொலை நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்" என்றார்.
4 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
4 “What have they seen in your palace?” Isaiah asked. “They have seen everything in my palace,” answered Hezekiah. “There is nothing among my treasures that I did not show them.”
4 "உம் அரண்மனையில் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் வினவ, "என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தார்கள், நான் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் என் சேமிப்புக் கிடங்கில் இல்லை" என்றார் எசேக்கியா.
5 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்.
5 Then Isaiah said to Hezekiah, “Hear the word of the LORD of Hosts:
5 அப்போது எசாயா எசேக்கியாவிடம், "படைகளின் ஆண்டவரின் வாக்கைக் கேளும்:
6 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
6 The time will surely come when everything in your palace and all that your fathers have stored up until this day will be carried off to Babylon. Nothing will be left, says the LORD.
6 இதோ, நாள்கள் வருகின்றன, அப்போது உம் அரண்மனையில் இருப்பவையும் இந்நாள்வரை உம் மூதாதையர் சேமித்து வைத்திருப்பவையும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; எதுவும் விடப்படாது, என்கிறார் ஆண்டவர்.
7 நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
7 And some of your descendants, your own flesh and blood, will be taken away to be eunuchs in the palace of the king of Babylon.”
7 உமக்குப் பிறக்கும் புதல்வர் சிலர் கைதுசெய்யப்படுவர்; பாபிலோன் மன்னர் அரண்மனையில் அவர்கள் அண்ணகராய் இருப்பர்" என்றார்.*
8 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
8 But Hezekiah said to Isaiah, “The word of the LORD that you have spoken is good.” For he thought, “At least there will be peace and security in my lifetime.”
8 தம் ஆட்சிக்காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருக்கும் என்றுணர்ந்த எசேக்கியா எசாயாவை நோக்கி, "நீர்கூறிய ஆண்டவரின் வாக்கு நல்லதே" என்றார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.