பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Isaiah ஏசாயா יְשַׁעְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
ஏசாயா 38 | Isaiah 38
Hezekiah’s Illness and Recovery (2 Kings 20:1–11; 2 Chronicles 32:24–31)
1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1 In those days Hezekiah became mortally ill. The prophet Isaiah son of Amoz came to him and said, “This is what the LORD says: ‘Put your house in order, for you are about to die; you will not recover.’”
1 அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்" என்றார்.
2 அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
2 Then Hezekiah turned his face to the wall and prayed to the LORD,
2 எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,
3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
3 saying, “Please, O LORD, remember how I have walked before You faithfully and with wholehearted devotion; I have done what was good in Your sight.” And Hezekiah wept bitterly.
3 "ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்" என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார்.
4 அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
4 And the word of the LORD came to Isaiah, saying,
4 அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது:
5 நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
5 “Go and tell Hezekiah that this is what the LORD, the God of your father David, says: ‘I have heard your prayer; I have seen your tears. Behold, I will add fifteen years to your life.
5 "நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது; உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
6 நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.
6 And I will deliver you and this city from the hand of the king of Assyria. I will defend this city.a
6 உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.
7 இதோ, ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
7 This will be a sign to you from the LORD that He will do what He has promised:
7 தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்:
8 தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.
8 I will make the sun’s shadow that falls on the stairway of Ahaz go back ten steps.’” So the sunlight went back the ten steps it had descended.
8 இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்." அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.
Hezekiah’s Song of Thanksgiving
9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:
9 This is a writing by Hezekiah king of Judah after his illness and recovery:
9 யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:
10 நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
10 I said, “In the primeb of my life I must go through the gates of Sheol and be deprived of the remainder of my years.”
10 'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன்.
11 கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.
11 I said, “I will never again see the LORD, even the LORD, in the land of the living; I will no longer look on mankind with those who dwell in this world.
11 'வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன்.
12 என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
12 My dwelling has been picked up and removed from me like a shepherd’s tent. I have rolled up my life like a weaver; He cuts me off from the loom; from day until night You make an end of me.
12 என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,
13 விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
13 I composed myselfc until the morning. Like a lion He breaks all my bones; from day until night You make an end of me.
13 துணை வேண்டிக் காலைவரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.
14 நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
14 I chirp like a swallow or crane; I moan like a dove. My eyes grow weak as I look upward. O Lord, I am oppressed; be my security.”
14 சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல் விம்முகிறேன்; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன; என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்; எனக்குத் துணையாய் இரும்.
15 நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
15 What can I say? He has spoken to me, and He Himself has done this. I will walk slowly all my years because of the anguish of my soul.
15 நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்; மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.
16 ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
16 O Lord, by such things men live, and in all of them my spirit finds life. You have restored me to health and have let me live.
16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.
17 இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
17 Surely for my own welfare I had such great anguish; but Your love has delivered me from the pit of oblivion, for You have cast all my sins behind Your back.
17 இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்; மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்; என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.
18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
18 For Sheol cannot thank You; Death cannot praise You. Those who descend to the Pit cannot hope for Your faithfulness.
18 பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது; சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது; பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!
19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
19 The living, only the living, can thank You, as I do today; fathers will tell their children about Your faithfulness.
19 நான் இன்று உம்மைப் புகழ்வது போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.
20 கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
20 The LORD will save me; we will play songs on stringed instruments all the days of our lives in the house of the LORD.
20 ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்; ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.
21 அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான்.
21 Now Isaiah had said, “Prepare a lump of pressed figs and apply it to the boil, and he will recover.”
21 "எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்" என்று எசாயா பதில் கூறியிருந்தார்.
22 அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
22 And Hezekiah had asked, “What will be the sign that I will go up to the house of the LORD?”
22 ஏனெனில், "ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?" என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a MT and LXX; DSS includes for My sake and for the sake of My servant David ; see 2 Kings 20:6.
10 b Or In the quiet or In the middle
13 c Or I cried out ; see Targum Yonaton.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.