ஓராண்டு தமிழ் வேதாகமம்

ஓராண்டு தமிழ் வேதாகமம் புத்தகத்திற்கு முன் பதிவு செய்துவிட்டீர்களா?

Tamil Research Publishers – Pastor C. Davis அவர்களின் பெரு முயற்சியால்
கொண்டு வரப்பட்டுள்ளது  ஓராண்டு தமிழ் வேதாகமம் – மேம்படுத்தப்பட்ட தமிழ் பதிப்பு

இணையத்தில் சிக்கிய இளைய தலைமுறைகள் திருமறைக்குத் திரும்பட்டும்.
ஒரு வருடத்திற்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி : நான் ஏன் இந்த ஓராண்டு வேதாகமத்தை வாங்க வேண்டும்?

பதில் : லேவியராகமம் 19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:
உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான்(பரிபூரண) பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

எப்படி பரிபூரணம் என்ற வார்த்தையை இணைத்தீர்கள் என்று கேட்கலாம். பரிசுத்தம் என்பதற்கான எபிரெய வார்த்தை *கடோஷ்-QaDoWSH* என்பதாகும். *QaDoWSH.* இதில் *W* சேர்க்கப்பட்டுள்ளது. *QADOSH* *காடோஷ்* இதில் *W* இல்லை. ஆகவே *Defective Word* என்பர்.

*W* சேர்க்கப்பட்ட *காடோஷ்* *Perfect Word*.

*QaDoWSH* பூரண பரிசுத்தம், *QADOSH* பரிபூரண பரிசுத்தம் என்று சொல்ல முடியாது.
லேவி. 19:2 – QaDoWSH(கடோஷ்) ‘aNiY YHWH your God – உன் தேவனாகிய கர்த்தர் (பரிபூரண)பரிசுத்தர்
‘aLeHeYM QeDoSHIYM(கடோஷீம்) – பரிசுத்தராக இருங்கள்.

முதலில் வந்த கடோஷீமில் *W* இருக்கும். இரண்டாவது வந்த கடோஷீமில் *W* இருக்காது. *W* என்பதற்கான எபிரெய எழுத்து *வாவ்* என்பதாகும். வாவ் என்றால் *ஆணி* என்று பொருள். இது மேசியாவையும் காண்பிக்கும். இதை மையமாக வைத்து லேவி. 19:2-இல் அடைப்புக்குறிக்குள் தேவனுடைய பரிசுத்தத்தை மேன்மையாக காண்பிக்க மூல மொழியின் ஆழத்தில் சென்று இலக்கண அமைப்பினூடே எழும் அர்த்தத்தை காண்பிக்க *(பரிபூரண)* என்ற வார்த்தையை இணைத்துள்ளேன்.

சில வேத வல்லுனர்கள் என் கருத்தை ஏற்காமல் போகலாம் அதற்காக என் தேவனின் பரிசுத்தத்தை நானோ மில்லி அளவு கூட குறைக்க நம்மால் முடியாது. ஆகவே தான் அவரின் பரிசுத்தத்தைக் குறித்து *(பரிபூரண) பரிசுத்தம்* என குறிப்பிட்டுள்ளேன்.

ஓராண்டு தமிழ் வேதாகமத்தின் சிறப்பம்சங்கள்:

  1. பழைய ஏற்பாட்டிற்கான புதிய ஏற்பாட்டு ஒத்த வசனங்கள்.
  2. புதிய ஏற்பாட்டிற்கான பழைய ஏற்பாட்டு ஒத்த வசனங்கள்.
  3. மூல மொழிகளான எபிரெய & கிரேக்க வார்த்தைக்கான விளக்கங்கள்
  4. கடினமான, புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கம்.
  5. சங்கீதம் இரண்டு முறை வாசிக்கும் படியாக தொகுக்கப்பட்டுள்ளது.
  6. வரைபடங்கள்
  7. நல்ல தரமான பேப்பரில், தெளிவான எழுத்துக்களில் (அச்சுப்புள்ளி 12 Point) அச்சிடப்பட்டுள்ளது.
  8. “ஜாதி” என்ற வார்த்தை முற்றிலும் நீக்கப்பட்டு, மூல மொழியான எபிரெயம்,
    கிரேக்கத்திலுள்ளபடி “தேசங்கள், மக்கள்” என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

Pages / பக்கங்கள் : 1848

Price / விலை : ரூ. 1,300/- மட்டும்

ஓராண்டு தமிழ் வேதாகம பக்கங்கள் சில