பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Hosea ஓசியா הוֹשֵׁעַ
ஓசியா 13 | Hosea 13
God’s Anger against Israel
1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
1 When Ephraima spoke, there was trembling; he was exalted in Israel. But he incurred guilt through Baal, and he died.
1 எப்ராயிம் பேசியபோது ஏனையோர் நடுங்கினர்; இஸ்ரயேலில் அவன் மிக உயர்ந்திருந்தான்; ஆனால், பாகாலை வழிபட்ட குற்றத்திற்காய் மடிந்தான்.
2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளைத் முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.
2 Now they sin more and more and make for themselves cast images, idols skillfully made from their silver, all of them the work of craftsmen. People say of them, “They offer human sacrifice and kiss the calves!”b
2 இப்போதும், அவர்கள் பாவத்தின்மேல் பாவம் செய்கிறார்கள்; சிலைகளைத் தங்களுக்கென வார்த்துக் கொள்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை; அவை யாவும் தட்டானின் கைவேலைகளே; "இவற்றுக்குப் பலியிடுங்கள்"* என்கிறார்கள் அவர்கள்; மனிதர் கன்றுக்குட்டிகளை முத்தமிடுகின்றார்கள்.1
1 - "பலிகளுடைய" என்பது எபிரேய பாடம்.
3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
3 Therefore they will be like the morning mist, like the early dew that vanishes, like chaff blown from a threshing floor, like smoke through an open window.
3 ஆதலால் அவர்கள் காலையில் காணும் மேகம்போலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், சுழற்காற்றில் சிக்கிய களத்துத் துரும்பு போலும் பலகணி வழியாய் வெளிப்பட்ட புகைபோலும் ஆவார்கள்.
4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
4 Yet I am the LORD your God ever since the land of Egypt; you know no God but Me, for there is no Savior besides Me.
4 எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத்தவிர வேறு கடவுளை நீ அறியாய்; என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.
5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.
5 I knew you in the wilderness, in the land of drought.
5 வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே;
6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.
6 When they had pasture, they became satisfied; when they were satisfied, their hearts became proud, and as a result they forgot Me.
6 வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால் அவர்கள் மனநிறைவுற்றார்கள்; மன நிறைவடைந்ததும் செருக்குற்று என்னை மறந்து போனார்கள்.2
2 இச 8:11-17.
7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.
7 So like a lion I will pounce on them; like a leopard I will lurk by the path.
7 ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கம்போலிருப்பேன்; வேங்கைபோலப் பாயுமாறு வழியோரத்தில் மறைந்திருப்பேன்.
8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
8 Like a bear robbed of her cubs I will attack them, and I will tear open their chests. There I will devour them like a lion, like a wild beast would tear them apart.
8 குட்டியைப் பறிகொடுத்த பெண் கரடிபோல் அவர்கள்மேல் பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்பேன்; காட்டுவிலங்கு அவர்களைக் கிழித்தெறியும்.
Death and Resurrection (1 Corinthians 15:50–58)
9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
9 You are destroyed, O Israel, because you are against Me—against your helper.
9 இஸ்ரயேலே, உன்னை நான் அழிக்கப் போகின்றேன்; *உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?*3
3 - 'உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?" என்பதற்கு "என்னில் உனக்கு உண்டு" என்பது எபிரேய பாடம்.
10 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
10 Where is your king nowc to save you in all your cities, and the rulers to whom you said, “Give me a king and princes”?
10 'எனக்கு அரசன் வேண்டும், தலைவர்கள் வேண்டும்' என்று என்னிடம் கேட்டாய். உன்னை மீட்கும் அரசன் எங்கே? உன் நகர் அனைத்திலும் உள்ள தலைவர்கள் எங்கே?*45
4 "எங்கே?" என்பதற்கு "நானே" என்பது எபிரேய பாடம்.
5 1 சாமு 8:5-6.
11 நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
11 So in My anger I gave you a king, and in My wrath I took him away.
11 வேண்டா வெறுப்போடு உனக்கு நான் ஓர் அரசனைத் தந்தேன்; என் சினத்தில் நான் அவனை அகற்றிவிட்டேன்.6
6 1 சாமு 10:17-24; 15:26.
12 எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
12 The iniquity of Ephraim is bound up; his sin is stored up.
12 எப்ராயிமின் தீச்செயல் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது; அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
13 பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.
13 Labor pains come upon him, but he is an unwise son. When the time arrives, he fails to present himself at the opening of the womb.
13 அவனுக்கான பேறுகால வேதனை வந்தாயிற்று; ஆனால், அவன் ஓர் அறிவற்ற பிள்ளை; பிறக்கும் நேரம் வந்து விட்டது; ஆனால், கருப்பையை விட்டு வெளியேற மறுக்கிறான்.
14 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.
14 I will ransom them from the power of Sheol; I will redeem them from Death. Where, O Death,d are your plagues? Where, O Sheol, is your sting?e Compassion is hidden from My eyes.
14 பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்பேனோ? சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ? சாவே! உன் கொள்ளை நோய்கள் எங்கே? பாதாளமே! உன் அழிவு வேலை எங்கே? தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.7
7 1 கொரி 15:55.
Judgment on Samaria
15 இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.
15 Although he flourishes among his brothers, an east wind will come—a wind from the LORD rising up from the desert. His fountain will fail, and his spring will run dry. The wind will plunder his treasury of every precious article.
15 எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்; ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக் காற்று பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்; வந்து அவனுடைய நீரோடைகளையும், நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும். அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.
16 சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.
16 Samaria will bear her guilt because she has rebelled against her God. They will fall by the sword; their little ones will be dashed to pieces, and their pregnant women ripped open.
16 சமாரியா தன் கடவுளை எதிர்த்துக் கலகமூட்டிற்று; அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்; அதன் குடிமக்கள் வாளால் மடிவார்கள், அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படுவார்கள்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப் படுவார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a That is, the northern kingdom of Israel; also in verse 12
2 b Or “The men who sacrifice kiss the calves!” See 1 Kings 19:18.
10 c Or Shall I be your King now
14 d Or Shall I ransom them from the power of Sheol? Shall I redeem them from Death?
14 e LXX Where, O Death, is your penalty? Where, O Hades, is your sting? Cited in 1 Corinthians 15:55
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.