பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Hosea  ஓசியா  הוֹשֵׁעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

ஓசியா 12 | Hosea 12

A Reproof of Ephraim, Judah, and Jacob

1אֶפְרַ֜יִם רֹעֶ֥ה ר֙וּחַ֙ וְרֹדֵ֣ף קָדִ֔ים כָּל־הַיּ֕וֹם כָּזָ֥ב וָשֹׁ֖ד יַרְבֶּ֑ה וּבְרִית֙ עִם־אַשּׁ֣וּר יִכְרֹ֔תוּ וְשֶׁ֖מֶן לְמִצְרַ֥יִם יוּבָֽל׃

1 எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.
1 Ephraima chases the wind and pursues the east wind all day long; he multiplies lies and violence; he makes a covenant with Assyria and sends olive oil to Egypt.
1 எப்ராயிம் காற்றை உண்டு,நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்; பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன; அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்; எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.

2וְרִ֥יב לַֽיהוָ֖ה עִם־יְהוּדָ֑ה וְלִפְקֹ֤ד עַֽל־יַעֲקֹב֙ כִּדְרָכָ֔יו כְּמַעֲלָלָ֖יו יָשִׁ֥יב לֽוֹ׃

2 எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
2 The LORD also brings a charge against Judah. He will punish Jacobb according to his ways and repay him according to his deeds.
2 ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு; யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்; அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.

3בַּבֶּ֖טֶן עָקַ֣ב אֶת־אָחִ֑יו וּבְאוֹנ֖וֹ שָׂרָ֥ה אֶת־אֱלֹהִֽים׃

3 யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.
3 In the womb he grasped his brother’s heel, and in his vigor he wrestled with God.
3 யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்; பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான்.1

4וַיָּ֤שַׂר אֶל־מַלְאָךְ֙ וַיֻּכָ֔ל בָּכָ֖ה וַיִּתְחַנֶּן־ל֑וֹ בֵּֽית־אֵל֙ יִמְצָאֶ֔נּוּ וְשָׁ֖ם יְדַבֵּ֥ר עִמָּֽנוּ׃

4 அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
4 Yes, he struggled with the angel and prevailed; he wept and sought His favor; he found Him at Bethel and spoke with Him thered
4 வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்; கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்; பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்; அவரும் அங்கே அவனுடன் பேசினார்.23

5וַֽיהוָ֖ה אֱלֹהֵ֣י הַצְּבָא֑וֹת יְהוָ֖ה זִכְרֽוֹ׃

5 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
5 the LORD is the God of Hosts—the LORD is His name of renown.
5 அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்; ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.

6וְאַתָּ֖ה בֵּאלֹהֶ֣יךָ תָשׁ֑וּב חֶ֤סֶד וּמִשְׁפָּט֙ שְׁמֹ֔ר וְקַוֵּ֥ה אֶל־אֱלֹהֶ֖יךָ תָּמִֽיד׃

6 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.
6 But you must return to your God, maintaining love and justice, and always waiting on your God.
6 ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா; இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி; எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.

7כְּנַ֗עַן בְּיָד֛וֹ מֹאזְנֵ֥י מִרְמָ֖ה לַעֲשֹׁ֥ק אָהֵֽב׃

7 இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
7 A merchant loves to defraud with dishonest scales in his hands.
7 ஆனால், இஸ்ரயேல் கள்ளத் தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்; அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.

8וַיֹּ֣אמֶר אֶפְרַ֔יִם אַ֣ךְ עָשַׁ֔רְתִּי מָצָ֥אתִי א֖וֹן לִ֑י כָּל־יְגִיעַ֕י לֹ֥א יִמְצְאוּ־לִ֖י עָוֺ֥ן אֲשֶׁר־חֵֽטְא׃

8 அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
8 And Ephraim boasts: “How rich I have become! I have found wealth for myself. In all my labors, they can find in me no iniquity that is sinful.”
8 எப்ராயிம், 'நான் பணக்காரனாகிவிட்டேன், எனக் கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன்' என்கிறான். ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!

9וְאָנֹכִ֛י יְהוָ֥ה אֱלֹהֶ֖יךָ מֵאֶ֣רֶץ מִצְרָ֑יִם עֹ֛ד אוֹשִֽׁיבְךָ֥ בָאֳהָלִ֖ים כִּימֵ֥י מוֹעֵֽד׃

9 எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.
9 But I am the LORD your God ever since the land of Egypt. I will again make you dwell in tents, as in the days of the appointed feast.
9 எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த நாள் முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; விழா நாள்களில் போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன்.4

10וְדִבַּ֙רְתִּי֙ עַל־הַנְּבִיאִ֔ים וְאָנֹכִ֖י חָז֣וֹן הִרְבֵּ֑יתִי וּבְיַ֥ד הַנְּבִיאִ֖ים אֲדַמֶּֽה׃

10 உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன்.
10 I spoke through the prophets and multiplied their visions; I gave parables through the prophets.
10 இறைவாக்கினர்களிடம் பேசினேன்; நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்; இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.

11אִם־גִּלְעָ֥ד אָ֙וֶן֙ אַךְ־שָׁ֣וְא הָי֔וּ בַּגִּלְגָּ֖ל שְׁוָרִ֣ים זִבֵּ֑חוּ גַּ֤ם מִזְבְּחוֹתָם֙ כְּגַלִּ֔ים עַ֖ל תַּלְמֵ֥י שָׂדָֽי׃

11 அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக்கொண்டு உவமைகளால் பேசினேன்.
11 Is there iniquity in Gilead? They will surely come to nothing. Do they sacrifice bulls in Gilgal? Indeed, their altars will be heaps of stones in the furrows of the field.
11 கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால் அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்; கில்காலில் காளைகளைப் பலியிடுவதால் உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல் போல் அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.

12וַיִּבְרַ֥ח יַעֲקֹ֖ב שְׂדֵ֣ה אֲרָ֑ם וַיַּעֲבֹ֤ד יִשְׂרָאֵל֙ בְּאִשָּׁ֔ה וּבְאִשָּׁ֖ה שָׁמָֽר׃

12 கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளிலிருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.
12 Jacob fled to the land of Arame and Israel worked for a wife—for a wife he tended sheep.
12 யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்; இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்; அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.5

13וּבְנָבִ֕יא הֶעֱלָ֧ה יְהוָ֛ה אֶת־יִשְׂרָאֵ֖ל מִמִּצְרָ֑יִם וּבְנָבִ֖יא נִשְׁמָֽר׃

13 யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
13 But by a prophet the LORD brought Israel out of Egypt, and by a prophet he was preserved.
13 இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான்.6

14הִכְעִ֥יס אֶפְרַ֖יִם תַּמְרוּרִ֑ים וְדָמָיו֙ עָלָ֣יו יִטּ֔וֹשׁ וְחֶ֨רְפָּת֔וֹ יָשִׁ֥יב ל֖וֹ אֲדֹנָֽיו׃

14 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.
14 Ephraim has provoked bitter anger, so his Lord will leave his bloodguilt upon him and repay him for his contempt.
14 எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்; அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்; அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Hosea Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
1 a That is, the northern kingdom of Israel; also in verses 8 and 14
2 b Jacob  means he grasps the heel  or he deceives .
4 c Or Angel
4 d LXX and Syriac; MT and there He spoke with us
12 e That is, northwest Mesopotamia

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.