பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Hosea  ஓசியா  הוֹשֵׁעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

ஓசியா 9 | Hosea 9

Israel’s Punishment

1אַל־תִּשְׂמַ֨ח יִשְׂרָאֵ֤ל ׀ אֶל־גִּיל֙ כָּֽעַמִּ֔ים כִּ֥י זָנִ֖יתָ מֵעַ֣ל אֱלֹהֶ֑יךָ אָהַ֣בְתָּ אֶתְנָ֔ן עַ֖ל כָּל־גָּרְנ֥וֹת דָּגָֽן׃

1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.
1 Do not rejoice, O Israel, with exultation like the nations, for you have played the harlot against your God; you have made love for hire on every threshing floor.
1 இஸ்ரயேலே! நீ களிப்புறாதே; மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே. உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்; கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.

2גֹּ֥רֶן וָיֶ֖קֶב לֹ֣א יִרְעֵ֑ם וְתִיר֖וֹשׁ יְכַ֥חֶשׁ בָּֽהּ׃

2 தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.
2 The threshing floor and winepress will not feed them, and the new wine will fail them.
2 கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா; புதிய திராட்சை இரசமும் இல்லாமல் போகும்.

3לֹ֥א יֵשְׁב֖וּ בְּאֶ֣רֶץ יְהוָ֑ה וְשָׁ֤ב אֶפְרַ֙יִם֙ מִצְרַ֔יִם וּבְאַשּׁ֖וּר טָמֵ֥א יֹאכֵֽלוּ׃

3 அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
3 They will not remain in the land of the LORD; Ephraima will return to Egypt and eat unclean food in Assyria.
3 ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்; அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.

4לֹא־יִסְּכ֨וּ לַיהוָ֥ה ׀ יַיִן֮ וְלֹ֣א יֶֽעֶרְבוּ־לוֹ֒ זִבְחֵיהֶ֗ם כְּלֶ֤חֶם אוֹנִים֙ לָהֶ֔ם כָּל־אֹכְלָ֖יו יִטַמָּ֑אוּ כִּֽי־לַחְמָ֣ם לְנַפְשָׁ֔ם לֹ֥א יָב֖וֹא בֵּ֥ית יְהוָֽה׃

4 அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
4 They will not pour out wine offerings to the LORD, and their sacrifices will not please Him, but will be to them like the bread of mourners; all who eat will be defiled. For their bread will be for themselves; it will not enter the house of the LORD.
4 திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்; அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா; அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்; அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்; ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.

5מַֽה־תַּעֲשׂ֖וּ לְי֣וֹם מוֹעֵ֑ד וּלְי֖וֹם חַג־יְהוָֽה׃

5 ஆசரிப்புநாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்னசெய்வீர்கள்?
5 What will you do on the appointed day, on the day of the LORD’s feast?
5 விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?

6כִּֽי־הִנֵּ֤ה הָֽלְכוּ֙ מִשֹּׁ֔ד מִצְרַ֥יִם תְּקַבְּצֵ֖ם מֹ֣ף תְּקַבְּרֵ֑ם מַחְמַ֣ד לְכַסְפָּ֗ם קִמּוֹשׂ֙ יִֽירָשֵׁ֔ם ח֖וֹחַ בְּאָהֳלֵיהֶֽם׃

6 இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
6 For even if they flee destruction, Egypt will gather them and Memphis will bury them. Their precious silver will be taken over by thistles, and thorns will overrun their tents.
6 அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்; மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும். அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.

7בָּ֣אוּ ׀ יְמֵ֣י הַפְּקֻדָּ֗ה בָּ֚אוּ יְמֵ֣י הַשִׁלֻּ֔ם יֵדְע֖וּ יִשְׂרָאֵ֑ל אֱוִ֣יל הַנָּבִ֗יא מְשֻׁגָּע֙ אִ֣ישׁ הָר֔וּחַ עַ֚ל רֹ֣ב עֲוֺנְךָ֔ וְרַבָּ֖ה מַשְׂטֵמָֽה׃

7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
7 The days of punishment have come; the days of retribution have arrived—let Israel know it. The prophet is called a fool, and the inspired man insane, because of the greatness of your iniquity and hostility.
7 தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன; பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன; இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் 'இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்; இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான்,' என்கின்றாய்.1

8צֹפֶ֥ה אֶפְרַ֖יִם עִם־אֱלֹהָ֑י נָבִ֞יא פַּ֤ח יָקוֹשׁ֙ עַל־כָּל־דְּרָכָ֔יו מַשְׂטֵמָ֖ה בְּבֵ֥ית אֱלֹהָֽיו׃

8 எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவி பிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
8 The prophet is Ephraim’s watchman, along with my God,b yet the snare of the fowler lies on all his paths. Hostility is in the house of his God!
8 என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்; ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது; அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.

9הֶעְמִֽיקוּ־שִׁחֵ֖תוּ כִּימֵ֣י הַגִּבְעָ֑ה יִזְכּ֣וֹר עֲוֺנָ֔ם יִפְק֖וֹד חַטֹּאותָֽם׃

9 கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
9 They have deeply corrupted themselves as in the days of Gibeah; He will remember their guilt; He will punish their sins.
9 கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே, அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்; அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.2

10כַּעֲנָבִ֣ים בַּמִּדְבָּ֗ר מָצָ֙אתִי֙ יִשְׂרָאֵ֔ל כְּבִכּוּרָ֤ה בִתְאֵנָה֙ בְּרֵ֣אשִׁיתָ֔הּ רָאִ֖יתִי אֲבֽוֹתֵיכֶ֑ם הֵ֜מָּה בָּ֣אוּ בַֽעַל־פְּע֗וֹר וַיִּנָּֽזְרוּ֙ לַבֹּ֔שֶׁת וַיִּהְי֥וּ שִׁקּוּצִ֖ים כְּאָהֳבָֽם׃

10 வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
10 I found Israel like grapes in the wilderness. I saw your fathers as the firstfruits of the fig tree in its first season. But they went to Baal-peor, and consecrated themselves to Shame; so they became as detestable as the thing they loved.
10 பாலைநிலத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டது போல் நான் இஸ்ரயேலைக் கண்டுபிடித்தேன். பருவகாலத் தொடக்கத்தின் முதல் அத்திப் பழங்களைப்போல் உங்கள் தந்தையரைக் கண்டு பிடித்தேன். அவர்களோ பாகால் பெயோருக்கு வந்து, மானக்கேடானவற்றுக்குத் தங்களையே நேர்ந்து கொண்டார்கள்.3

11אֶפְרַ֕יִם כָּע֖וֹף יִתְעוֹפֵ֣ף כְּבוֹדָ֑ם מִלֵּדָ֥ה וּמִבֶּ֖טֶן וּמֵהֵרָיֽוֹן׃

11 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை.
11 Ephraim’s glory will fly away like a bird, with no birth, no pregnancy, and no conception.
11 எப்ராயிமின், மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்; அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ, கருத்தரிப்பதோ எதுவுமே இராது.

12כִּ֤י אִם־יְגַדְּלוּ֙ אֶת־בְּנֵיהֶ֔ם וְשִׁכַּלְתִּ֖ים מֵֽאָדָ֑ם כִּֽי־גַם־א֥וֹי לָהֶ֖ם בְּשׂוּרִ֥י מֵהֶֽם׃

12 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!
12 Even if they raise their children, I will bereave them of each one. Yes, woe be to them when I turn away from them!
12 அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும், ஒருவனும் எஞ்சியிராமல் அப்பிள்ளைகளை இழக்கச் செய்வேன்; நான் அவர்களைவிட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!

13אֶפְרַ֛יִם כַּאֲשֶׁר־רָאִ֥יתִי לְצ֖וֹר שְׁתוּלָ֣ה בְנָוֶ֑ה וְאֶפְרַ֕יִם לְהוֹצִ֥יא אֶל־הֹרֵ֖ג בָּנָֽיו׃

13 நான் எப்பிராயீமைத் தீருவின்திரைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலைசெய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய் விடுவார்கள்.
13 I have seen Ephraim, like Tyre, planted in a meadow. But Ephraim will bring out his children for slaughter.
13 நான் பார்த்ததற்கிணங்க, எப்ராயிம் தம் மக்களைக் கொள்ளைப் பொருளாய் ஆக்கியிருக்கின்றான்; எப்ராயிம் தம் மக்களையெல்லாம் கொலைக் களத்திற்குக் கூட்டிச் செல்வான்.

14תֵּן־לָהֶ֥ם יְהוָ֖ה מַה־תִּתֵּ֑ן תֵּן־לָהֶם֙ רֶ֣חֶם מַשְׁכִּ֔יל וְשָׁדַ֖יִם צֹמְקִֽים׃

14 கர்த்தாவே, நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்றமுலைகளையும் கொடும்.
14 Give them, O LORD—what will You give? Give them wombs that miscarry and breasts that dry up!
14 ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவையும் கருப்பையையும் பால் சுரவா முலைகளையும் கொடுத்தருளும்.

15כָּל־רָעָתָ֤ם בַּגִּלְגָּל֙ כִּֽי־שָׁ֣ם שְׂנֵאתִ֔ים עַ֚ל רֹ֣עַ מַֽעַלְלֵיהֶ֔ם מִבֵּיתִ֖י אֲגָרְשֵׁ֑ם לֹ֤א אוֹסֵף֙ אַהֲבָתָ֔ם כָּל־שָׂרֵיהֶ֖ם סֹרְרִֽים׃

15 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.
15 All their evil appears at Gilgal, for there I hated them. I will drive them from My house for the wickedness of their deeds. I will no longer love them; all their leaders are rebellious.
15 அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின; அங்கேதான் நான் அவர்களைப் § பகைக்கத் தொடங்கினேன்; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்; இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.

16הֻכָּ֣ה אֶפְרַ֔יִם שָׁרְשָׁ֥ם יָבֵ֖שׁ פְּרִ֣י בלי־יַעֲשׂ֑וּן גַּ֚ם כִּ֣י יֵֽלֵד֔וּן וְהֵמַתִּ֖י מַחֲמַדֵּ֥י בִטְנָֽם׃

16 எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.
16 Ephraim is struck down; their root is withered; they cannot bear fruit. Even if they bear children, I will slay the darlings of their wombs.
16 எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்; அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.

17יִמְאָסֵ֣ם אֱלֹהַ֔י כִּ֛י לֹ֥א שָׁמְע֖וּ ל֑וֹ וְיִהְי֥וּ נֹדְדִ֖ים בַּגּוֹיִֽם׃

17 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் உன் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நியஜாதிக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
17 My God will reject them because they have not obeyed Him; and they shall be wanderers among the nations.
17 என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்; ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Hosea Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
3 a That is, the northern kingdom of Israel; similarly in verses 8, 11, 13, and 16
8 b Or The prophet is the watchman over Ephraim, the people of my God

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.