பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Hosea  ஓசியா  הוֹשֵׁעַ

அதிகாரம்    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

ஓசியா 4 | Hosea 4

God’s Case against His People

1שִׁמְע֥וּ דְבַר־יְהוָ֖ה בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל כִּ֣י רִ֤יב לַֽיהוָה֙ עִם־יוֹשְׁבֵ֣י הָאָ֔רֶץ כִּ֠י אֵין־אֱמֶ֧ת וְֽאֵין־חֶ֛סֶד וְאֵֽין־דַּ֥עַת אֱלֹהִ֖ים בָּאָֽרֶץ׃

1 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
1 Hear the word of the LORD, O children of Israel, for the LORD has a case against the people of the land: “There is no truth, no loving devotion, and no knowledge of God in the land!
1 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு; நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; கடவுளை அறியும் அறிவும் இல்லை.

2אָלֹ֣ה וְכַחֵ֔שׁ וְרָצֹ֥חַ וְגָנֹ֖ב וְנָאֹ֑ף פָּרָ֕צוּ וְדָמִ֥ים בְּדָמִ֖ים נָגָֽעוּ׃

2 பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
2 Cursing and lying, murder and stealing, and adultery are rampant; one act of bloodshed follows another.
2 பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.

3עַל־כֵּ֣ן ׀ תֶּאֱבַ֣ל הָאָ֗רֶץ וְאֻמְלַל֙ כָּל־יוֹשֵׁ֣ב בָּ֔הּ בְּחַיַּ֥ת הַשָּׂדֶ֖ה וּבְע֣וֹף הַשָּׁמָ֑יִם וְגַם־דְּגֵ֥י הַיָּ֖ם יֵאָסֵֽפוּ׃

3 இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
3 Therefore the land mourns, and all who dwell in it will waste away with the beasts of the field and the birds of the air; even the fish of the sea disappear.
3 ஆதலால் நாடு புலம்புகின்றது; அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன; காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.

4אַ֥ךְ אִ֛ישׁ אַל־יָרֵ֖ב וְאַל־יוֹכַ֣ח אִ֑ישׁ וְעַמְּךָ֖ כִּמְרִיבֵ֥י כֹהֵֽן׃

4 ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக்காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.
4 But let no man contend; let no man offer reproof; for your people are like those who contend with a priest.a
4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்; எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்; *உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.**

* - "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடுதான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.

5וְכָשַׁלְתָּ֣ הַיּ֔וֹם וְכָשַׁ֧ל גַּם־נָבִ֛יא עִמְּךָ֖ לָ֑יְלָה וְדָמִ֖יתִי אִמֶּֽךָ׃

5 ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; உன் தாயை நான் சங்காரம்பண்ணுவேன்.
5 You will stumble by day, and the prophet will stumble with you by night; so I will destroy your mother—
5 பகலிலே நீ இடறி விழுவாய்; இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்; உன் தாயை நான் அழித்துவிடுவேன்.

6נִדְמ֥וּ עַמִּ֖י מִבְּלִ֣י הַדָּ֑עַת כִּֽי־אַתָּ֞ה הַדַּ֣עַת מָאַ֗סְתָּ וְאֶמְאָֽסְאךָ֙ מִכַּהֵ֣ן לִ֔י וַתִּשְׁכַּח֙ תּוֹרַ֣ת אֱלֹהֶ֔יךָ אֶשְׁכַּ֥ח בָּנֶ֖יךָ גַּם־אָֽנִי׃

6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
6 My people are destroyed for lack of knowledge. Because you have rejected knowledge, I will also reject you as My priests. Since you have forgotten the law of your God, I will also forget your children.
6 அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தாய்; நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்; நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.

7כְּרֻבָּ֖ם כֵּ֣ן חָֽטְאוּ־לִ֑י כְּבוֹדָ֖ם בְּקָל֥וֹן אָמִֽיר׃

7 அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்.
7 The more they multiplied, the more they sinned against Me; they exchanged their Gloryb for a thing of disgrace.
7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்; அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.

8חַטַּ֥את עַמִּ֖י יֹאכֵ֑לוּ וְאֶל־עֲוֺנָ֖ם יִשְׂא֥וּ נַפְשֽׁוֹ׃

8 அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.
8 They feed on the sinsc of My people and set their hearts on iniquity.
8 என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்; அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.

9וְהָיָ֥ה כָעָ֖ם כַּכֹּהֵ֑ן וּפָקַדְתִּ֤י עָלָיו֙ דְּרָכָ֔יו וּמַעֲלָלָ֖יו אָשִׁ֥יב לֽוֹ׃

9 ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
9 And it shall be like people, like priest. I will punish both of them for their ways and repay them for their deeds.
9 குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்; அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்; அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.

10וְאָֽכְלוּ֙ וְלֹ֣א יִשְׂבָּ֔עוּ הִזְנ֖וּ וְלֹ֣א יִפְרֹ֑צוּ כִּֽי־אֶת־יְהוָ֥ה עָזְב֖וּ לִשְׁמֹֽר׃

10 அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள்.
10 They will eat but not be satisfied; they will be promiscuous but not multiply. For they have stopped obeying the LORD.
10 அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்; வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில், வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள்.

11זְנ֛וּת וְיַ֥יִן וְתִיר֖וֹשׁ יִֽקַּֽח־לֵֽב׃

11 வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
11 Promiscuity, wine, and new wine take away understanding.
11 மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.

12עַמִּי֙ בְּעֵצ֣וֹ יִשְׁאָ֔ל וּמַקְל֖וֹ יַגִּ֣יד ל֑וֹ כִּ֣י ר֤וּחַ זְנוּנִים֙ הִתְעָ֔ה וַיִּזְנ֖וּ מִתַּ֥חַת אֱלֹהֵיהֶֽם׃

12 என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.
12 My people consult their wooden idols, and their divining rods inform them. For a spirit of prostitution leads them astray and they have played the harlot against their God.
12 என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்; அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.

13עַל־רָאשֵׁ֨י הֶהָרִ֜ים יְזַבֵּ֗חוּ וְעַל־הַגְּבָעוֹת֙ יְקַטֵּ֔רוּ תַּ֣חַת אַלּ֧וֹן וְלִבְנֶ֛ה וְאֵלָ֖ה כִּ֣י ט֣וֹב צִלָּ֑הּ עַל־כֵּ֗ן תִּזְנֶ֙ינָה֙ בְּנ֣וֹתֵיכֶ֔ם וְכַלּוֹתֵיכֶ֖ם תְּנָאַֽפְנָה׃

13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
13 They sacrifice on the mountaintops and burn offerings on the hills, under oak, poplar, and terebinth, because their shade is pleasant. And so your daughters turn to prostitution and your daughters-in-law to adultery.
13 மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்; குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்; ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்; உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.

14לֹֽא־אֶפְק֨וֹד עַל־בְּנוֹתֵיכֶ֜ם כִּ֣י תִזְנֶ֗ינָה וְעַל־כַּלּֽוֹתֵיכֶם֙ כִּ֣י תְנָאַ֔פְנָה כִּי־הֵם֙ עִם־הַזֹּנ֣וֹת יְפָרֵ֔דוּ וְעִם־הַקְּדֵשׁ֖וֹת יְזַבֵּ֑חוּ וְעָ֥ם לֹֽא־יָבִ֖ין יִלָּבֵֽט׃

14 உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.
14 I will not punish your daughters when they prostitute themselves, nor your daughters-in-law when they commit adultery. For the men themselves go off with prostitutes and offer sacrifices with shrine prostitutes. So a people without understanding will come to ruin.
14 உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்; ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்; அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.

15אִם־זֹנֶ֤ה אַתָּה֙ יִשְׂרָאֵ֔ל אַל־יֶאְשַׁ֖ם יְהוּדָ֑ה וְאַל־תָּבֹ֣אוּ הַגִּלְגָּ֗ל וְאַֽל־תַּעֲלוּ֙ בֵּ֣ית אָ֔וֶן וְאַל־תִּשָּׁבְע֖וּ חַי־יְהוָֽה׃

15 இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
15 Though you prostitute yourself, O Israel, may Judah avoid such guilt! Do not journey to Gilgal, do not go up to Beth-aven, and do not swear on oath, ‘As surely as the LORD lives!’
15 இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்; கில்காலுக்குள் நுழையாதீர்கள்; பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்; "ஆண்டவர்மேல் ஆணை" என்று ஆணையிடாதீர்கள்.

16כִּ֚י כְּפָרָ֣ה סֹֽרֵרָ֔ה סָרַ֖ר יִשְׂרָאֵ֑ל עַתָּה֙ יִרְעֵ֣ם יְהוָ֔ה כְּכֶ֖בֶשׂ בַּמֶּרְחָֽב׃

16 இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார்.
16 For Israel is as obstinate as a stubborn heifer. Can the LORD now shepherd them like lambs in an open meadow?
16 கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்; ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?

17חֲב֧וּר עֲצַבִּ֛ים אֶפְרָ֖יִם הַֽנַּֽח־לֽוֹ׃

17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
17 Ephraime is joined to idols; leave him alone!
17 எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.

18סָ֖ר סָבְאָ֑ם הַזְנֵ֣ה הִזְנ֔וּ אָהֲב֥וּ הֵב֛וּ קָל֖וֹן מָגִנֶּֽיהָ׃

18 அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள், அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.
18 When their liquor is gone, they turn to prostitution; their rulersf dearly love disgrace.
18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள்.

19צָרַ֥ר ר֛וּחַ אוֹתָ֖הּ בִּכְנָפֶ֑יהָ וְיֵבֹ֖שׁוּ מִזִּבְחוֹתָֽם

19 காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப் பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.
19 The whirlwind has wrappedg them in its wings, and their sacrifices will bring them shame.
19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்; அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Hosea Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
4 a Or for My case is against you, O priests
7 b Or they exchanged their glorious God  (Syriac); MT I will exchange their glory
c Or the sin offerings
15 d Beth-aven  means house of wickedness . This is a derogatory term for Bethel, which means house of God ; see 1 Kings 12:28–29.
17 e That is, the northern kingdom of Israel
18 f Hebrew her shields
19 g Hebrew has wrapped her

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.