பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Hosea ஓசியா הוֹשֵׁעַ
ஓசியா 5 | Hosea 5
Judgment on Israel and Judah
1 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
1 “Hear this, O priests! Take heed, O house of Israel! Give ear, O royal house! For this judgment is against you because you have been a snare at Mizpah, a net spread out on Tabor.
1 குருக்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்; அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது; நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்; தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.
2 நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன்.
2 The rebels are deep in slaughter; but I will chastise them all.
2 வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்; அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன்.
3 எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
3 I know all about Ephraim, and Israel is not hidden from Me. For now, O Ephraim,a you have turned to prostitution; Israel is defiled.
3 எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்; இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று; எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்; இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;
4 அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.
4 Their deeds do not permit them to return to their God, for a spirit of prostitution is within them, and they do not know the LORD.
4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர அவர்களின் செயல்கள் விடுவதில்லை; ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது; ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
5 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
5 Israel’s arrogance testifies against them; Israel and Ephraim stumble in their iniquity; even Judah stumbles with them.
5 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்; இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிழுவார்கள்; யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான்.
6 அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
6 They go with their flocks and herds to seek the LORD, but they do not find Him; He has withdrawn Himself from them.
6 தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்; ஆனால் அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.
7 கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
7 They have been unfaithful to the LORD; for they have borne illegitimate children. Now the New Moonb will devour them along with their land.
7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்; ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது.
8 கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
8 Blow the ram’s horn in Gibeah, the trumpet in Ramah; raise the battle cry in Beth-aven:c Lead on, O Benjamin!
8 கிபயாவில் கொம்பு ஊதுங்கள்; இராமாவில் எக்காளம் முழக்குங்கள்; பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்; பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.
9 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
9 Ephraim will be laid waste on the day of rebuke. Among the tribes of Israel I proclaim what is certain.
9 தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்; இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின்றேன்.
10 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
10 The princes of Judah are like those who move boundary stones;d I will pour out My fury upon them like water.
10 யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்; அவர்கள் மேல் என் கோபத்தை வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன்.
11 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
11 Ephraim is oppressed, crushed in judgment, for he is determined to follow worthless idols.e
11 எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்; தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்; அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.
12 நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
12 So I am like a moth to Ephraim, and like decay to the house of Judah.
12 ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்; யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.
13 எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
13 When Ephraim saw his sickness and Judah his wound, then Ephraim turned to Assyria and sent to the great king.f But he cannot cure you or heal your wound.
13 எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14 நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.
14 For I am like a lion to Ephraim and like a young lion to the house of Judah. I, even I, will tear them to pieces and then go away. I will carry them off where no one can rescue them.
14 ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்.
15 அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
15 Then I will return to My place until they admit their guilt and seek My face; in their affliction they will earnestly seek Me.”
15 தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a That is, the northern kingdom of Israel; also in verses 5, 9, 11, 12, 13, and 14
7 b Or their New Moon feast or the coming month
8 c Beth-aven means house of wickedness . This is a derogatory term for Bethel, which means house of God ; see 1 Kings 12:28–29.
10 d See Proverbs 22:28 and Proverbs 23:10.
11 e Or to follow human precepts
13 f Or to King Jareb
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.