பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Hosea ஓசியா הוֹשֵׁעַ
ஓசியா 3 | Hosea 3
Hosea Redeems His Wife (Zechariah 2:6–13)
1 பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் என்று சொன்னார்.
1 Then the LORD said to me, “Go show love to your wife again, though she is loved by anothera and is an adulteress. Love her as the LORD loves the Israelites, though they turn to other gods and offer raisin cakes to idols.b”
1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை* § விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும் § விபசாரியுமான ஒரு பெண்ணின்மேல் காதல் கொள்."1
1 - இவை பாகால் வழிபாட்டில் படைக்கப்பட்டவை.
2 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
2 So I bought her for fifteen shekels of silverc and a homer and a lethech of barley.d
2 அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும்* ஒன்றரை கலம்** அளவுள்ள வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக்கொண்டேன்.23
2 - "பதினைந்து செக்கேல் நிறையுள்ள வெள்ளி" என்பது எபிரேய பாடம்.
3 - "ஒன்றரை கோமர்" என்பது எபிரேய பாடம்.
3 அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும், அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
3 Then I said to her, “You must live with me for many days; you must not be promiscuous or belong to another, and I will do the same for you.”
3 பின்பு நான் அவளை நோக்கி, 'நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்' என்றேன்.
4 இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
4 For the Israelites must live many days without king or prince, without sacrifice or sacred pillar, and without ephod or idol.
4 இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குலதெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.
5 பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
5 Afterward, the people of Israel will return and seek the LORD their God and David their king. They will come trembling to the LORD and to His goodness in the last days.
5 அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்; இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி § நடுக்கத்தோடு வருவார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or Go show love to a woman who is loved by another
1 b Literally and love raisin cakes
2 c 15 shekels is approximately 6 ounces or 171 grams of silver.
2 d Or a homer and a half of barley ; that is, a total of approximately 9.36 bushels or 330 liters (probably about 436 pounds or 198 kilograms of barley); LXX a homer of barley and a wineskin full of wine
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.