பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Hosea ஓசியா הוֹשֵׁעַ
ஓசியா 7 | Hosea 7
Ephraim’s Iniquity
1 நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
1 When I heal Israel, the iniquity of Ephraima will be exposed, as well as the crimes of Samaria. For they practice deceit and thieves break in; bandits raid in the streets.
1 நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்; சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்; அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்; திருடன் உள்ளே நுழைகின்றான்; கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
2 அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.
2 But they fail to consider in their hearts that I remember all their evil. Now their deeds are all around them; they are before My face.
2 அவர்களுடைய தீவினைகளையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன. அவை என் கண்முன் இருக்கின்றன.
3 ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களிலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
3 They delight the king with their evil, and the princes with their lies.
3 தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.
4 அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
4 They are all adulterers, like an oven heated by a baker who needs not stoke the fire from the kneading to the rising of the dough.
4 அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்; எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்; அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.
5 நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.
5 The princes are inflamed with wine on the day of our king; so he joins hands with those who mock him.
5 "நம் அரசனின் திருநாள்!" என்று சொல்லித் தலைவர்கள் திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்; அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான்.
6 அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல், ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்.
6 For they prepare their heart like an oven while they lie in wait; all night their anger smolders;b in the morning it blazes like a flaming fire.
6 அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது; அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்; அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.
7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
7 All of them are hot as an oven, and they devour their rulers. All their kings fall; not one of them calls upon Me.
7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாய் இருக்கின்றார்கள்; தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்; அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்; அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
8 எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிபோடாத அப்பம்.
8 Ephraim mixes with the nations; Ephraim is an unturned cake.
8 எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்; எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்;
9 அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான்.
9 Foreigners consume his strength, but he does not notice. Even his hair is streaked with gray, but he does not know.
9 அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்; அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது; அதையும் அவன் அறியவில்லை.
10 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
10 Israel’s arrogance testifies against them, yet they do not return to the LORD their God; despite all this, they do not seek Him.
10 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது; ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை; இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை.
11 எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள்.
11 So Ephraim has become like a silly, senseless dove—calling out to Egypt, then turning to Assyria.
11 எப்ராயிம், அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்; அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.
12 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன், அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.
12 As they go, I will spread My net over them; I will bring them down like birds of the air. I will chastise them when I hear them flocking together.c
12 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்; வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்; அவர்கள் தீச்செயல்களுக்காக* அவர்களைத் தண்டிப்பேன்.1
1 - "சபையில் கேட்டவற்றிற்காக" எனவும் பொருள்படும்.
13 அவர்கள் என்னைவிட்டு அலைந்துதிரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம் பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
13 Woe to them, for they have strayed from Me! Destruction to them, for they have rebelled against Me! Though I would redeem them, they speak lies against Me.
13 அவர்களுக்கு ஐயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; நான் அவர்களை மீட்டு வந்தேன்; ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.
14 அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
14 They do not cry out to Me from their hearts when they wail upon their beds. They slash themselvesd for grain and new wine, but turn away from Me.
14 தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்; கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கின்றார்கள்;
15 நான் அவர்களை தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.
15 Although I trained and strengthened their arms, they plot evil against Me.
15 நானே அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும் எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள்.
16 திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.
16 They turn, but not to the Most High; they are like a faulty bow. Their leaders will fall by the sword for the cursing of their tongue; for this they will be ridiculed in the land of Egypt.
16 பாகாலை நோக்கியே* திரும்புகின்றார்கள்; நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்; அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்; இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.2
2 - எபிரேயத்தில் "மேல் நோக்கியல்ல" எனவும் பொருள்படும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a That is, the northern kingdom of Israel; also in verses 8 and 11
6 b Literally their baker sleeps
12 c Or I will chastise them according to what was reported against them in the assembly.
14 d Some Hebrew manuscripts and LXX; see 1 Kings 18:28. Most Hebrew manuscripts They gather together
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.