பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 25 | Genesis 25
Abraham and Keturah (1 Chronicles 1:32–33)
1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
1 Now Abraham had taken another wife, named Keturah,
1 ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.
2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
2 and she bore him Zimran, Jokshan, Medan, Midian, Ishbak, and Shuah.
2 அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.
3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்
3 Jokshan was the father of Sheba and Dedan. And the sons of Dedan were the Asshurites, the Letushites, and the Leummites.
3 யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.
4 மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
4 The sons of Midian were Ephah, Epher, Hanoch, Abida, and Eldaah. All these were descendants of Keturah.
4 மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.
5 ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
5 Abraham left everything he owned to Isaac.
5 ஆபிரகாம் தம்மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.
6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
6 But while he was still alive, Abraham gave gifts to the sons of his concubines and sent them away from his son Isaac to the land of the east.
6 ஆனால், அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.
The Death of Abraham
7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
7 Abraham lived a total of 175 years.
7 ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.
8 பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
8 And at a ripe old age he breathed his last and died, old and contented, and was gathered to his people.
8 அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து, நல்ல நரைவயதில் இறந்து, தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
9 அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
9 His sons Isaac and Ishmael buried him in the cave of Machpelah near Mamre, in the field of Ephron son of Zohar the Hittite.
9 அவர் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
10 அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
10 This was the field that Abraham had bought from the Hittites. Abraham was buried there with his wife Sarah.
10 அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.1
1 தொநூ 23:3-16.
11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
11 After Abraham’s death, God blessed his son Isaac, who lived near Beer-lahai-roi.
11 ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார். பெயேர்லகாய்ரோயி என்ற இடத்தில் ஈசாக்கு வாழ்ந்து வந்தார்.
The Descendants of Ishmael (1 Chronicles 1:28–31)
12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:
12 This is the account of Abraham’s son Ishmael, whom Hagar the Egyptian, Sarah’s maidservant, bore to Abraham.
12 சாராவின் பணிப்பெண்ணும் எகிப்தியளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்:
13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
13 These are the names of the sons of Ishmael in the order of their birth: Nebaioth the firstborn of Ishmael, then Kedar, Adbeel, Mibsam,
13 பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்; இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,
14 மிஷ்மா, தூமா, மாசா,
14 Mishma, Dumah, Massa,
14 மிசுமா, தூமா, மாசா,
15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
15 Hadad, Tema, Jetur, Naphish, and Kedemah.
15 அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.
16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
16 These were the sons of Ishmael, and these were their names by their villages and encampments—twelve princes of their tribes.
16 இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள். பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள் தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.
17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
17 Ishmael lived a total of 137 years. Then he breathed his last and died, and was gathered to his people.
17 இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்; அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
18 அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
18 Ishmael’s descendants settled from Havilah to Shur, which is near the border of Egypt as you go toward Asshur.a And they lived in hostility toward all their brothers.
18 அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது. இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.
Jacob and Esau (Malachi 1:1–5; Romans 9:6–29)
19 ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.
19 This is the account of Abraham’s son Isaac. Abraham became the father of Isaac,
19 ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.
20 and Isaac was forty years old when he married Rebekah, the daughter of Bethuel the Aramean from Paddan-aramb and the sister of Laban the Aramean.
20 ஈசாக்கிற்கு நாற்பது வயதான போது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.
21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
21 Later, Isaac prayed to the LORD on behalf of his wife, because she was barren. And the LORD heard his prayer, and his wife Rebekah conceived.
21 ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.
22 அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
22 But the children inside her struggled with each other, and she said, “Why is this happening to me?” So Rebekah went to inquire of the LORD,
22 ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் "எனக்கு இப்படி நடப்பது ஏன்?" என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.
23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
23 and He declared to her: “Two nations are in your womb, and two peoples from within you will be separated; one people will be stronger than the other, and the older will serve the younger.”c
23 ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான் என்றார்.2
2 உரோ 9:12.
24 பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.
24 When her time came to give birth, there were indeed twins in her womb.
24 அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.
25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.
25 The first one came out red, covered with hair like a fur coat; so they named him Esau.d
25 முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே, அவனுக்கு 'ஏசா' என்று பெயர் இட்டனர்.
26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.
26 After this, his brother came out grasping Esau’s heel; so he was named Jacob.e And Isaac was sixty years old when the twins were born.
26 இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே, அவனுக்கு 'யாக்கோபு' என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.
27 இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
27 When the boys grew up, Esau became a skillful hunter, a man of the field, while Jacob was a quiet man who stayed at home.
27 இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால், யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
28 ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
28 Because Isaac had a taste for wild game, he loved Esau; but Rebekah loved Jacob.
28 ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
Esau Sells His Birthright
29 ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
29 One day, while Jacob was cooking some stew, Esau came in from the field and was famished.
29 ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.
30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
30 He said to Jacob, “Let me eat some of that red stew, for I am famished.” (That is why he was also called Edom.f)
30 அவன் யாக்கோபிடம், "நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு," என்றான். அவனுக்கு 'ஏதோம்' என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.
31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
31 “First sell me your birthright,” Jacob replied.
31 யாக்கோபு அவனை நோக்கி, "உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.
32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
32 “Look,” said Esau, “I am about to die, so what good is a birthright to me?”
32 அவன், "நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?" என்றான்.
33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
33 “Swear to me first,” Jacob said. So Esau swore to Jacob and sold him the birthright.
33 யாக்கோபு, "இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு" என்றான். எனவே, ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.3
3 எபி 12:16.
34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.
34 Then Jacob gave some bread and lentil stew to Esau, who ate and drank and then got up and went away. Thus Esau despised his birthright.
34 யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான். இவ்வாறு, ஏசா தன் தலைமகனுரிமையை அவமதித்தான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
18 a Or Assyria
20 b That is, northwest Mesopotamia
23 c Cited in Romans 9:12
25 d Esau sounds like a Hebrew term that means hairy .
26 e Jacob means he grasps the heel or he deceives .
30 f Edom means red .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.