பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 34 | Genesis 34
The Defiling of Dinah
1 லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
1 Now Dinah, the daughter Leah had borne to Jacob, went out to visit the daughters of the land.
1 யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.
2 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
2 When Shechem son of Hamor the Hivite, the prince of the region, saw her, he took her and lay with her by force.
2 இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம் அவளைக் கண்டு தூக்கிச்சென்று அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான்.
3 அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.
3 And his soul was drawn to Dinah, the daughter of Jacob. He loved the young girl and spoke to her tenderly.
3 யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப்பெற, அவன் அப்பெண்ணின்மேல் காதல் கொண்டு அவளது மனத்தைக் கவரும் முறையில் பேசினான்.
4 சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
4 So Shechem told his father Hamor, “Get me this girl as a wife.”
4 எனவே, செக்கேம் தன் தந்தை ஆமோரிடம், "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்று கூறினார்.
5 தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது , அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
5 Jacob heard that Shechem had defiled his daughter Dinah, but since his sons were with his livestock in the field, he remained silent about it until they returned.
5 தம் மகள் தீனா தீட்டுப்படுத்தப்பட்டாள் என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவருடைய புதல்வர் புல்வெளியில் மந்தைகளோடு இருந்தனர். எனவே, அவர்கள் திரும்பி வரும்வரை யாக்கோபு அமைதியாய் இருந்தார்.
6 அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான்.
6 Meanwhile, Shechem’s father Hamor came to speak with Jacob.
6 செக்கேமின் தந்தை ஆமோர் யாக்கோபோடு பேச வந்தார்.
7 யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
7 When Jacob’s sons heard what had happened, they returned from the field. They were filled with grief and fury, because Shechem had committed an outrage in Israela by lying with Jacob’s daughter—a thing that should not be done.
7 யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் புல்வெளியிலிருந்து வந்தனர். அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர். ஏனெனில், யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால் செய்யத் தகாததைச் செய்து செக்கேம் இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.
8 ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
8 But Hamor said to them, “My son Shechem longs for your daughter. Please give her to him as his wife.
8 அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, "என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது. அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.
9 நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,
9 Intermarry with us; give us your daughters, and take our daughters for yourselves.
9 நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
10 எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
10 You may settle among us, and the land will be open to you. Live here, move about freely, and acquire your own property.”
10 நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம். அதில் குடியிருந்து, வணிகம் செய்து, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
11 சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களின் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;
11 Then Shechem said to Dinah’s father and brothers, “Grant me this favor, and I will give you whatever you ask.
11 அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும், சகோதரர்களையும் நோக்கி, "உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும். நீங்கள் கேட்பதைத் தருவேன்.
12 பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
12 Demand a high dowry and an expensive gift, and I will give you whatever you ask. Only give me the girl as my wife!”
12 பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவேன். பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள்" என்றான்.
The Revenge of Dinah’s Brothers
13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:
13 But because Shechem had defiled their sister Dinah, Jacob’s sons answered him and his father Hamor deceitfully.
13 யாக்கோபின் புதல்வர் தங்கள் சகோதரியைச் செக்கேம் தீட்டுப்படுத்தியதால், அவனையும் அவன் தந்தை ஆமோரையும் நோக்கிக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது;
14 விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.
14 “We cannot do such a thing,” they said. “To give our sister to an uncircumcised man would be a disgrace to us.
14 "நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. ஏனெனில், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுப்பது அவமானமாகும்.
15 நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
15 We will consent to this on one condition, that you become circumcised like us—every one of your males.
15 ஆனால், நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்
16 உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
16 Then we will give you our daughters and take your daughters for ourselves. We will dwell among you and become one people.
16 எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்கள் பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களிடையே வாழ்ந்து ஓரினமாக ஆவோம்.
17 விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
17 But if you will not agree to be circumcised, then we will take our sister and go.”
17 எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்" என்றனர்.
18 அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.
18 Their offer seemed good to Hamor and his son Shechem.
18 அவர்கள் சொன்னது ஆமோருக்கும் அவன் மகன் செக்கேமுக்கும் நலமாகத் தோன்றியது.
19 அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.
19 The young man, who was the most respected of all his father’s household, did not hesitate to fulfill this request, because he was delighted with Jacob’s daughter.
19 அந்த இளைஞன் யாக்கோபின் மகள்மீது கொண்ட காதலினால் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தவில்லை. மேலும், அவன் தன் தந்தை வீட்டார் அனைவரிடையிலும் பெருமதிப்புக்குரியவனாய் இருந்தான்.
20 ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்தின் வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி:
20 So Hamor and his son Shechem went to the gate of their city and addressed the men of their city:
20 எனவே, ஆமோரும் அவன் மகன் செக்கேமும் தம் நகரவாயிலுக்கு வந்து மக்களை நோக்கி,
21 இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம்.
21 “These men are at peace with us. Let them live and trade in our land; indeed, it is large enough for them. Let us take their daughters in marriage and give our daughters to them.
21 "இந்த மனிதர்கள் நம்முடன் நட்புறவு கொள்பவர்கள். ஆகவே, நம் நாட்டில் குடியிருந்து வணிகம் செய்யட்டும். அவர்கள் வாழ்வதற்கு நம் நாட்டில் நிறைய நிலம் இருக்கிறது. அவர்களிடம் பெண் எடுத்து, அவர்களுக்குப் பெண் கொடுப்போம்.
22 அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.
22 But only on this condition will the men agree to dwell with us and be one people: if all our men are circumcised as they are.
22 ஆனால், இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல, நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும் நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.
23 அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.
23 Will not their livestock, their possessions, and all their animals become ours? Only let us consent to them, and they will dwell among us.”
23 அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே, நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்" என்றார்கள்.
24 அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
24 All the men who went out of the city gate listened to Hamor and his son Shechem, and every male of the city was circumcised.
24 ஆகவே, நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும் ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர். நகரிலிருந்த அனைத்து ஆண்களும் செய்து கொண்டனர்.
25 மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
25 Three days later, while they were still in pain, two of Jacob’s sons (Dinah’s brothers Simeon and Levi) took their swords, went into the unsuspecting city, and slaughtered every male.
25 மூன்றாம் நாளன்று அவர்கள் அனைவரும் வலியால் வருந்தியபோது, யாக்கோபின் புதல்வர்களும் தீனாவின் சகோதரர்களுமான சிமியோன், லேவி என்னும் இருவரும் அவரவர் வாளை எடுத்துக் கொண்டு, சந்தேகம் எழாதபடி நகருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.
26 ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
26 They killed Hamor and his son Shechem with their swords, took Dinah out of Shechem’s house, and went away.
26 அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தியபின் தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
27 மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
27 Jacob’s other sons came upon the slaughter and looted the city, because their sister had been defiled.
27 அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.
28 அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,
28 They took their flocks and herds and donkeys, and everything else in the city or in the field.
28 நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.
29 அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
29 They carried off all their possessions and women and children, and they plundered everything in their houses.
29 அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
30 அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.
30 Then Jacob said to Simeon and Levi, “You have brought trouble upon me by making me a stench to the Canaanites and Perizzites, the people of this land. We are few in number; if they unite against me and attack me, I and my household will be destroyed.”
30 யாக்கோபு சிமியோனையும் லேவியையும் நோக்கி, "நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என்னை இழிவுப்படுத்திவிட்டீர்கள். என்னிடமோ சில ஆள்களே உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்" என்றார்.
31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.
31 But they replied, “Should he have treated our sister like a prostitute?”
31 அதற்கு, "அவன் மட்டும் எங்கள் சகோதரியை ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?" என்று அவர்கள் மறுமொழி கூறினர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
7 a Or against Israel
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.