பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 38 | Genesis 38
Judah and Tamar (1 Chronicles 2:3–4)
1 அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.
1 About that time, Judah left his brothers and settled near a man named Hirah, an Adullamite.
1 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.
2 அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
2 There Judah saw the daughter of a Canaanite man named Shua, and he took her as a wife and slept with her.
2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.
3 அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
3 So she conceived and gave birth to a son, and Judah named him Er.
3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
4 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
4 Again she conceived and gave birth to a son, and she named him Onan.
4 அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.
5 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
5 Then she gave birth to another son and named him Shelah; it was at Chezib that she gave birth to him.
5 கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.
6 யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
6 Now Judah acquired a wife for Er, his firstborn, and her name was Tamar.
6 யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
7 யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.
7 But Er, Judah’s firstborn, was wicked in the sight of the LORD; so the LORD put him to death.
7 யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.
8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
8 Then Judah said to Onan, “Sleep with your brother’s wife. Perform your duty as her brother-in-law and raise up offspring for your brother.”
8 அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, "நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார்.
9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
9 But Onan knew that the offspring would not belong to him; so whenever he would sleep with his brother’s wife, he would spill his seed on the ground so that he would not produce offspring for his brother.
9 அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.
10 அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
10 What he did was wicked in the sight of the LORD, so He put Onan to death as well.
10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
11 அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.
11 Then Judah said to his daughter-in-law Tamar, “Live as a widow in your father’s house until my son Shelah grows up.” For he thought, “He may die too, like his brothers.” So Tamar went to live in her father’s house.
11 ஆதலால், யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, "என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு" என்றார். ஏனெனில், அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.
12 அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
12 After a long time Judah’s wife, the daughter of Shua, died. When Judah had finished mourning, he and his friend Hirah the Adullamite went up to his sheepshearers at Timnah.
12 பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
13 அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
13 When Tamar was told, “Your father-in-law is going up to Timnah to shear his sheep,”
13 அப்போது "உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்" என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
14 she removed her widow’s garments, covered her face with a veil to disguise herself, and sat at the entrance to Enaim, which is on the way to Timnah. For she saw that although Shelah had grown up, she had not been given to him as a wife.
14 சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
15 When Judah saw her, he thought she was a prostitute because she had covered her face.
15 யூதா அவரைக் கண்டபோது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.
16 அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
16 Not realizing that she was his daughter-in-law, he went over to her and said, “Come now, let me sleep with you.” “What will you give me for sleeping with you?” she inquired.
16 அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், "என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?" என்று கேட்டார்.
17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
17 “I will send you a young goat from my flock,” Judah answered. But she replied, “Only if you leave me something as a pledge until you send it.”
17 அவர், "என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்" என்றார். அதற்கு அவர், "நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?" என்று கேட்டார்.
18 அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
18 “What pledge should I give you?” he asked. She answered, “Your seal and your cord, and the staff in your hand.” So he gave them to her and slept with her, and she became pregnant by him.
18 "அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?" என்று அவர் கேட்க, அவர் "உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்" என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.
19 எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.
19 Then Tamar got up and departed. And she removed her veil and put on her widow’s garments again.
19 பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.
20 யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
20 Now when Judah sent his friend Hirah the Adullamite with the young goat to collect the items he had left with the woman, he could not find her.
20 அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.
21 அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
21 He asked the men of that place, “Where is the shrine prostitute who was beside the road at Enaim?” “No shrine prostitute has been here,” they answered.
21 அங்கிருந்த ஆள்களை நோக்கி, "ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?" என்று கேட்க, அவர்கள், "இங்கே விலைமாது எவளுமில்லை" என்றனர்.
22 அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
22 So Hirah returned to Judah and said, “I could not find her, and furthermore, the men of that place said, ‘No shrine prostitute has been here.’”
22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து, "நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், 'இங்கு விலைமாது எவளுமில்லை' என்றனர்" என்று சொன்னான்.
23 அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.
23 “Let her keep the items,” Judah replied. “Otherwise we will become a laughingstock.a After all, I did send her this young goat, but you could not find her.”
23 யூதா, "அவளே வைத்துக்கொள்ளட்டும்; இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
24 ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
24 About three months later, Judah was told, “Your daughter-in-law Tamar has prostituted herself, and now she is pregnant.” “Bring her out!” Judah replied. “Let her be burned to death!”
24 மூன்று மாதம் சென்றபின்னர், "உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்" என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், "அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்; அவள் எரிக்கப்பட வேண்டும்" என்றார்.
25 அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
25 As she was being brought out, Tamar sent a message to her father-in-law: “I am pregnant by the man to whom these items belong.” And she added, “Please examine them. Whose seal and cord and staff are these?”
25 அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, "இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்" என்று சொல்லியனுப்பினர்.
26 யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
26 Judah recognized the items and said, “She is more righteous than I, since I did not give her to my son Shelah.” And he did not have relations with her again.
26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து, "அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!" என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.
The Birth of Perez and Zerah
27 அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
27 When the time came for Tamar to give birth, there were twins in her womb.
27 தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28 அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
28 And as she was giving birth, one of them put out his hand; so the midwife took a scarlet thread and tied it around his wrist. “This one came out first,” she announced.
28 அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி "இதுவே முதலில் வந்தது" என்றாள்.
29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
29 But when he pulled his hand back and his brother came out, she said, “You have broken out first!” So he was named Perez.b
29 ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் 'நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!' என்று சொன்னாள். எனவே அவனுக்குப் 'பெரேட்சு'* என்று பெயரிடப்பட்டது.1
1 எபிரேயத்தில், 'கிழித்தல்' என்பது பொருள்.
30 பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
30 Then his brother came out with the scarlet thread around his wrist, and he was named Zerah.c
30 பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு 'செராகு'* என்று பெயரிடப்பட்டது.2
2 எபிரேயத்தில், 'கருஞ்சிவப்பு' என்பது பொருள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
23 a Or we will become despised
29 b Perez means breaking out .
30 c Zerah can mean scarlet or brightness .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.