பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Genesis  ஆதியாகமம்  בְּרֵאשִׁית

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14  15  16  17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50

ஆதியாகமம் 43 | Genesis 43

The Return to Egypt with Benjamin

1וְהָרָעָ֖ב כָּבֵ֥ד בָּאָֽרֶץ׃

1 தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
1 Now the famine was still severe in the land.
1 நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.

2וַיְהִ֗י כַּאֲשֶׁ֤ר כִּלּוּ֙ לֶאֱכֹ֣ל אֶת־הַשֶּׁ֔בֶר אֲשֶׁ֥ר הֵבִ֖יאוּ מִמִּצְרָ֑יִם וַיֹּ֤אמֶר אֲלֵיהֶם֙ אֲבִיהֶ֔ם שֻׁ֖בוּ שִׁבְרוּ־לָ֥נוּ מְעַט־אֹֽכֶל׃

2 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
2 So when Jacob’s sons had eaten all the grain they had brought from Egypt, their father said to them, “Go back and buy us a little more food.”
2 எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, "நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்றார்.

3וַיֹּ֧אמֶר אֵלָ֛יו יְהוּדָ֖ה לֵאמֹ֑ר הָעֵ֣ד הֵעִד֩ בָּ֨נוּ הָאִ֤ישׁ לֵאמֹר֙ לֹֽא־תִרְא֣וּ פָנַ֔י בִּלְתִּ֖י אֲחִיכֶ֥ם אִתְּכֶֽם׃

3 அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.
3 But Judah replied, “The man solemnly warned us, ‘You will not see my face again unless your brother is with you.’
3 அதற்கு யூதா, "அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.

4אִם־יֶשְׁךָ֛ מְשַׁלֵּ֥חַ אֶת־אָחִ֖ינוּ אִתָּ֑נוּ נֵרְדָ֕ה וְנִשְׁבְּרָ֥ה לְךָ֖ אֹֽכֶל׃

4 எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
4 If you will send our brother with us, we will go down and buy food for you.
4 ஆதலால், நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.

5וְאִם־אֵינְךָ֥ מְשַׁלֵּ֖חַ לֹ֣א נֵרֵ֑ד כִּֽי־הָאִ֞ישׁ אָמַ֤ר אֵלֵ֙ינוּ֙ לֹֽא־תִרְא֣וּ פָנַ֔י בִּלְתִּ֖י אֲחִיכֶ֥ם אִתְּכֶֽם׃

5 அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்.
5 But if you will not send him, we will not go; for the man told us, ‘You will not see my face again unless your brother is with you.’”
5 நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம். ஏனெனில், அந்த ஆள் 'உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில், நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம்' என்று சொல்லிவிட்டார்" என்று சொன்னார்.

6וַיֹּ֙אמֶר֙ יִשְׂרָאֵ֔ל לָמָ֥ה הֲרֵעֹתֶ֖ם לִ֑י לְהַגִּ֣יד לָאִ֔ישׁ הַע֥וֹד לָכֶ֖ם אָֽח׃

6 அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.
6 “Why did you bring this trouble upon me?” Israel asked. “Why did you tell the man you had another brother?”
6 இஸ்ரயேல் அவர்களை நோக்கி, "உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்" என்று முறையிட்டார்.

7וַיֹּאמְר֡וּ שָׁא֣וֹל שָֽׁאַל־הָ֠אִישׁ לָ֣נוּ וּלְמֽוֹלַדְתֵּ֜נוּ לֵאמֹ֗ר הַע֨וֹד אֲבִיכֶ֥ם חַי֙ הֲיֵ֣שׁ לָכֶ֣ם אָ֔ח וַנַ֨גֶּד־ל֔וֹ עַל־פִּ֖י הַדְּבָרִ֣ים הָאֵ֑לֶּה הֲיָד֣וֹעַ נֵדַ֔ע כִּ֣י יֹאמַ֔ר הוֹרִ֖ידוּ אֶת־אֲחִיכֶֽם׃

7 அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.
7 They replied, “The man questioned us in detail about ourselves and our family: ‘Is your father still alive? Do you have another brother?’ And we answered him accordingly. How could we possibly know that he would say, ‘Bring your brother here’?”
7 அவர்கள், "அந்த ஆள் நம்மைப்பற்றியும் நம் உறவினரைப்பற்றியும் துருவித் துருவிக் கேட்டார். 'உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா?' என்று வினவினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம். 'உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள்' என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?" என்று மறுமொழி கூறினர்.

8וַיֹּ֨אמֶר יְהוּדָ֜ה אֶל־יִשְׂרָאֵ֣ל אָבִ֗יו שִׁלְחָ֥ה הַנַּ֛עַר אִתִּ֖י וְנָק֣וּמָה וְנֵלֵ֑כָה וְנִֽחְיֶה֙ וְלֹ֣א נָמ֔וּת גַּם־אֲנַ֥חְנוּ גַם־אַתָּ֖ה גַּם־טַפֵּֽנוּ׃

8 பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.
8 And Judah said to his father Israel, “Send the boy with me, and we will go at once, so that we may live and not die—neither we, nor you, nor our children.
8 மேலும், யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி, "எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும் சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால், இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள். நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.

9אָֽנֹכִי֙ אֽ͏ֶעֶרְבֶ֔נּוּ מִיָּדִ֖י תְּבַקְשֶׁ֑נּוּ אִם־לֹ֨א הֲבִיאֹתִ֤יו אֵלֶ֙יךָ֙ וְהִצַּגְתִּ֣יו לְפָנֶ֔יךָ וְחָטָ֥אתִֽי לְךָ֖ כָּל־הַיָּמִֽים׃

9 அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
9 I will guarantee his safety. You may hold me personally responsible. If I do not bring him back and set him before you, then may I bear the guilt before you all my life.
9 அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில், உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்.

10כִּ֖י לוּלֵ֣א הִתְמַהְמָ֑הְנוּ כִּֽי־עַתָּ֥ה שַׁ֖בְנוּ זֶ֥ה פַעֲמָֽיִם׃

10 நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம்போய்த் திரும்பிவந்திருப்போமே என்றான்.
10 If we had not delayed, we could have come and gone twice by now.”
10 இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால், இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்" என்றார்.

11וַיֹּ֨אמֶר אֲלֵהֶ֜ם יִשְׂרָאֵ֣ל אֲבִיהֶ֗ם אִם־כֵּ֣ן ׀ אֵפוֹא֮ זֹ֣את עֲשׂוּ֒ קְח֞וּ מִזִּמְרַ֤ת הָאָ֙רֶץ֙ בִּכְלֵיכֶ֔ם וְהוֹרִ֥ידוּ לָאִ֖ישׁ מִנְחָ֑ה מְעַ֤ט צֳרִי֙ וּמְעַ֣ט דְּבַ֔שׁ נְכֹ֣את וָלֹ֔ט בָּטְנִ֖ים וּשְׁקֵדִֽים׃

11 அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
11 Then their father Israel said to them, “If it must be so, then do this: Put some of the best products of the land in your packs and carry them down as a gift for the man—a little balm and a little honey, spices and myrrh, pistachios and almonds.
11 அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி, "அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.

12וְכֶ֥סֶף מִשְׁנֶ֖ה קְח֣וּ בְיֶדְכֶ֑ם וְאֶת־הַכֶּ֜סֶף הַמּוּשָׁ֨ב בְּפִ֤י אַמְתְּחֹֽתֵיכֶם֙ תָּשִׁ֣יבוּ בְיֶדְכֶ֔ם אוּלַ֥י מִשְׁגֶּ֖ה הֽוּא׃

12 பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.
12 Take double the silver with you so that you may return the silver that was put back into the mouths of your sacks. Perhaps it was a mistake.
12 மேலும், இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.

13וְאֶת־אֲחִיכֶ֖ם קָ֑חוּ וְק֖וּמוּ שׁ֥וּבוּ אֶל־הָאִֽישׁ׃

13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்தில் மறுபடியும் போங்கள்.
13 Take your brother as well, and return to the man at once.
13 உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.

14וְאֵ֣ל שַׁדַּ֗י יִתֵּ֨ן לָכֶ֤ם רַחֲמִים֙ לִפְנֵ֣י הָאִ֔ישׁ וְשִׁלַּ֥ח לָכֶ֛ם אֶת־אֲחִיכֶ֥ם אַחֵ֖ר וְאֶת־בִּנְיָמִ֑ין וַאֲנִ֕י כַּאֲשֶׁ֥ר שָׁכֹ֖לְתִּי שָׁכָֽלְתִּי׃

14 அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
14 May God Almightya grant you mercy before the man, that he may release your other brother along with Benjamin. As for me, if I am bereaved, I am bereaved.”
14 அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்" என்றார்.

15וַיִּקְח֤וּ הָֽאֲנָשִׁים֙ אֶת־הַמִּנְחָ֣ה הַזֹּ֔את וּמִשְׁנֶה־כֶּ֛סֶף לָקְח֥וּ בְיָדָ֖ם וְאֶת־בִּנְיָמִ֑ן וַיָּקֻ֙מוּ֙ וַיֵּרְד֣וּ מִצְרַ֔יִם וַיַּֽעַמְד֖וּ לִפְנֵ֥י יוֹסֵֽף׃

15 அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
15 So the men took these gifts, along with double the amount of silver, and Benjamin as well. Then they hurried down to Egypt and stood before Joseph.
15 அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.

Joseph’s Hospitality to His Brothers

16וַיַּ֨רְא יוֹסֵ֣ף אִתָּם֮ אֶת־בִּנְיָמִין֒ וַיֹּ֙אמֶר֙ לַֽאֲשֶׁ֣ר עַל־בֵּית֔וֹ הָבֵ֥א אֶת־הָאֲנָשִׁ֖ים הַבָּ֑יְתָה וּטְבֹ֤חַ טֶ֙בַח֙ וְהָכֵ֔ן כִּ֥י אִתִּ֛י יֹאכְל֥וּ הָאֲנָשִׁ֖ים בַּֽצָּהֳרָֽיִם׃

16 பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.
16 When Joseph saw Benjamin with his brothers, he said to the steward of his house, “Take these men to my house. Slaughter an animal and prepare it, for they shall dine with me at noon.”
16 யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்" என்றார்.

17וַיַּ֣עַשׂ הָאִ֔ישׁ כַּֽאֲשֶׁ֖ר אָמַ֣ר יוֹסֵ֑ף וַיָּבֵ֥א הָאִ֛ישׁ אֶת־הָאֲנָשִׁ֖ים בֵּ֥יתָה יוֹסֵֽף׃

17 அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.
17 The man did as Joseph had commanded and took the brothers to Joseph’s house.
17 அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.

18וַיִּֽירְא֣וּ הָֽאֲנָשִׁ֗ים כִּ֣י הֽוּבְאוּ֮ בֵּ֣ית יוֹסֵף֒ וַיֹּאמְר֗וּ עַל־דְּבַ֤ר הַכֶּ֙סֶף֙ הַשָּׁ֤ב בְּאַמְתְּחֹתֵ֙ינוּ֙ בַּתְּחִלָּ֔ה אֲנַ֖חְנוּ מֽוּבָאִ֑ים לְהִתְגֹּלֵ֤ל עָלֵ֙ינוּ֙ וּלְהִתְנַפֵּ֣ל עָלֵ֔ינוּ וְלָקַ֧חַת אֹתָ֛נוּ לַעֲבָדִ֖ים וְאֶת־חֲמֹרֵֽינוּ׃

18 தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,
18 But the brothers were frightened that they had been taken to Joseph’s house. “We have been brought here because of the silver that was returned in our bags the first time,” they said. “They intend to overpower us and take us as slaves, along with our donkeys.”
18 யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், 'முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ?' என்று நினைத்துக்கொண்டனர்.

19וַֽיִּגְּשׁוּ֙ אֶל־הָאִ֔ישׁ אֲשֶׁ֖ר עַל־בֵּ֣ית יוֹסֵ֑ף וַיְדַבְּר֥וּ אֵלָ֖יו פֶּ֥תַח הַבָּֽיִת׃

19 யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:
19 So they approached Joseph’s steward and spoke to him at the entrance to the house.
19 எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:

20וַיֹּאמְר֖וּ בִּ֣י אֲדֹנִ֑י יָרֹ֥ד יָרַ֛דְנוּ בַּתְּחִלָּ֖ה לִשְׁבָּר־אֹֽכֶל׃

20 ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்து போனோமே;
20 “Please, sir,” they said, “we really did come down here the first time to buy food.
20 "ஐயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கும் இங்கு வந்திருந்தது உண்மையே.

21וַֽיְהִ֞י כִּי־בָ֣אנוּ אֶל־הַמָּל֗וֹן וַֽנִּפְתְּחָה֙ אֶת־אַמְתְּחֹתֵ֔ינוּ וְהִנֵּ֤ה כֶֽסֶף־אִישׁ֙ בְּפִ֣י אַמְתַּחְתּ֔וֹ כַּסְפֵּ֖נוּ בְּמִשְׁקָל֑וֹ וַנָּ֥שֶׁב אֹת֖וֹ בְּיָדֵֽנוּ׃

21 நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.
21 But when we came to the place we lodged for the night, we opened our sacks and, behold, each of us found his silver in the mouth of his sack! It was the full amount of our silver, and we have brought it back with us.
21 திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.

22וְכֶ֧סֶף אַחֵ֛ר הוֹרַ֥דְנוּ בְיָדֵ֖נוּ לִשְׁבָּר־אֹ֑כֶל לֹ֣א יָדַ֔עְנוּ מִי־שָׂ֥ם כַּסְפֵּ֖נוּ בְּאַמְתְּחֹתֵֽינוּ׃

22 மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.
22 We have brought additional silver with us to buy food. We do not know who put our silver in our sacks.”
22 மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்" என்றனர்.

23וַיֹּאמֶר֩ שָׁל֨וֹם לָכֶ֜ם אַל־תִּירָ֗אוּ אֱלֹ֨הֵיכֶ֜ם וֽ͏ֵאלֹהֵ֤י אֲבִיכֶם֙ נָתַ֨ן לָכֶ֤ם מַטְמוֹן֙ בְּאַמְתְּחֹ֣תֵיכֶ֔ם כַּסְפְּכֶ֖ם בָּ֣א אֵלָ֑י וַיּוֹצֵ֥א אֲלֵהֶ֖ם אֶת־שִׁמְעֽוֹן׃

23 அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
23 “It is fine,” said the steward. “Do not be afraid. Your God, the God of your father, gave you the treasure that was in your sacks. I received your silver.” Then he brought Simeon out to them.
23 அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.

24וַיָּבֵ֥א הָאִ֛ישׁ אֶת־הָאֲנָשִׁ֖ים בֵּ֣יתָה יוֹסֵ֑ף וַיִּתֶּן־מַ֙יִם֙ וַיִּרְחֲצ֣וּ רַגְלֵיהֶ֔ם וַיִּתֵּ֥ן מִסְפּ֖וֹא לַחֲמֹֽרֵיהֶֽם׃

24 மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.
24 And the steward took the men into Joseph’s house, gave them water to wash their feet, and provided food for their donkeys.
24 மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர். பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.

25וַיָּכִ֙ינוּ֙ אֶת־הַמִּנְחָ֔ה עַד־בּ֥וֹא יוֹסֵ֖ף בַּֽצָּהֳרָ֑יִם כִּ֣י שָֽׁמְע֔וּ כִּי־שָׁ֖ם יֹ֥אכְלוּ לָֽחֶם׃

25 தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
25 Since the brothers had been told that they were going to eat a meal there, they prepared their gift for Joseph’s arrival at noon.
25 நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில், அவருக்குத் தருவதற்காக அவர்கள் தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.

26וַיָּבֹ֤א יוֹסֵף֙ הַבַּ֔יְתָה וַיָּבִ֥יאּוּ ל֛וֹ אֶת־הַמִּנְחָ֥ה אֲשֶׁר־בְּיָדָ֖ם הַבָּ֑יְתָה וַיִּשְׁתַּחֲווּ־ל֖וֹ אָֽרְצָה׃

26 யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
26 When Joseph came home, they presented him with the gifts they had brought, and they bowed to the ground before him.
26 யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.

27וַיִּשְׁאַ֤ל לָהֶם֙ לְשָׁל֔וֹם וַיֹּ֗אמֶר הֲשָׁל֛וֹם אֲבִיכֶ֥ם הַזָּקֵ֖ן אֲשֶׁ֣ר אֲמַרְתֶּ֑ם הַעוֹדֶ֖נּוּ חָֽי׃

27 அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
27 He asked if they were well, and then he asked, “How is your elderly father you told me about? Is he still alive?”
27 அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங்கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று விசாரித்தார்.

28וַיֹּאמְר֗וּ שָׁל֛וֹם לְעַבְדְּךָ֥ לְאָבִ֖ינוּ עוֹדֶ֣נּוּ חָ֑י וַֽיִּקְּד֖וּ וישתחו

28 அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.
28 “Your servant our father is well,” they answered. “He is still alive.” And they bowed down to honor him.
28 அவர்கள், "உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார். இன்னும் உயிரோடிருக்கிறார்" என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.

29וַיִּשָּׂ֣א עֵינָ֗יו וַיַּ֞רְא אֶת־בִּנְיָמִ֣ין אָחִיו֮ בֶּן־אִמּוֹ֒ וַיֹּ֗אמֶר הֲזֶה֙ אֲחִיכֶ֣ם הַקָּטֹ֔ן אֲשֶׁ֥ר אֲמַרְתֶּ֖ם אֵלָ֑י וַיֹּאמַ֕ר אֱלֹהִ֥ים יָחְנְךָ֖ בְּנִֽי׃

29 அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
29 When Joseph looked up and saw his brother Benjamin, his own mother’s son, he asked, “Is this your youngest brother, the one you told me about?” Then he declared, “May God be gracious to you, my son.”
29 யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின், "மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.

30וַיְמַהֵ֣ר יוֹסֵ֗ף כִּֽי־נִכְמְר֤וּ רַחֲמָיו֙ אֶל־אָחִ֔יו וַיְבַקֵּ֖שׁ לִבְכּ֑וֹת וַיָּבֹ֥א הַחַ֖דְרָה וַיֵּ֥בְךְּ שָֽׁמָּה׃

30 யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
30 Joseph hurried out because he was moved to tears for his brother, and he went to a private room to weep.
30 யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.

31וַיִּרְחַ֥ץ פָּנָ֖יו וַיֵּצֵ֑א וַיִּ֨תְאַפַּ֔ק וַיֹּ֖אמֶר שִׂ֥ימוּ לָֽחֶם׃

31 பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.
31 Then he washed his face and came back out. Regaining his composure, he said, “Serve the meal.”
31 பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, "உணவு பரிமாறுங்கள்" என்றார்.

32וַיָּשִׂ֥ימוּ ל֛וֹ לְבַדּ֖וֹ וְלָהֶ֣ם לְבַדָּ֑ם וְלַמִּצְרִ֞ים הָאֹכְלִ֤ים אִתּוֹ֙ לְבַדָּ֔ם כִּי֩ לֹ֨א יוּכְל֜וּן הַמִּצְרִ֗ים לֶאֱכֹ֤ל אֶת־הָֽעִבְרִים֙ לֶ֔חֶם כִּי־תוֹעֵבָ֥ה הִ֖וא לְמִצְרָֽיִם׃

32 எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும், ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.
32 They separately served Joseph, his brothers, and the Egyptians. They ate separately because the Egyptians would not eat with the Hebrews, since that was detestable to them.
32 யோசேப்பிற்குத் தனியாகவும் சகோதரர்களுக்குத் தனியாகவும் அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. ஏனென்றால், எகிப்தியர் எபிரேயரோடு உண்பதில்லை. அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.

33וַיֵּשְׁב֣וּ לְפָנָ֔יו הַבְּכֹר֙ כִּבְכֹ֣רָת֔וֹ וְהַצָּעִ֖יר כִּצְעִרָת֑וֹ וַיִּתְמְה֥וּ הָאֲנָשִׁ֖ים אִ֥ישׁ אֶל־רֵעֵֽהוּ׃

33 அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
33 They were seated before Joseph in order by age, from the firstborn to the youngest, and the men looked at one another in astonishment.
33 மேலும், அவருக்கு முன் அவர்களில் மூத்தவன் தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும், இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால் ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.

34וַיִּשָּׂ֨א מַשְׂאֹ֜ת מֵאֵ֣ת פָּנָיו֮ אֲלֵהֶם֒ וַתֵּ֜רֶב מַשְׂאַ֧ת בִּנְיָמִ֛ן מִמַּשְׂאֹ֥ת כֻּלָּ֖ם חָמֵ֣שׁ יָד֑וֹת וַיִּשְׁתּ֥וּ וַֽיִּשְׁכְּר֖וּ עִמּֽוֹ׃

34 அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.
34 When the portions were served to them from Joseph’s table, Benjamin’s portion was five times larger than any of the others. So they feasted and drank freely with Joseph.
34 யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஐந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Genesis Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14  15  16  17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
14 a Hebrew El-Shaddai

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.