பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 31 | Genesis 31
Jacob Flees from Laban
1 பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
1 Now Jacob heard that Laban’s sons were saying, “Jacob has taken away all that belonged to our father and built all this wealth at our father’s expense.”
1 லாபானின் புதல்வர், "நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
2 லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
2 And Jacob saw from the countenance of Laban that his attitude toward him had changed.
2 லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.
3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.
3 Then the LORD said to Jacob, “Go back to the land of your fathers and to your kindred, and I will be with you.”
3 ஆண்டவர் யாக்கோபை நோக்கி, "உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னோடு இருப்பேன்" என்றார்.
4 அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,
4 So Jacob sent word and called Rachel and Leah to the field where his flocks were,
4 எனவே, யாக்கோபு ராகேலையும் லேயாவையும் தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.
5 அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
5 and he told them, “I can see from your father’s countenance that his attitude toward me has changed; but the God of my father has been with me.
5 பிறகு அவர் அவர்களை நோக்கி, "உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.
6 என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
6 You know that I have served your father with all my strength.
6 உங்கள் தந்தைக்காக முழு வலிமையுடன் உழைத்தேன் என்று உங்களுக்குத் தெரியும்.
7 உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.
7 And although he has cheated me and changed my wages ten times, God has not allowed him to harm me.
7 உங்கள் தந்தையோ என்னை ஏமாற்றி, என் கூலியைப் பத்து முறை மாற்றினார். அவர் வழியாக எனக்கு எவ்விதத்தீங்கும் நேரிடக் கடவுள் விடவில்லை
8 புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது.
8 If he said, ‘The speckled will be your wages,’ then the whole flock bore speckled offspring. If he said, ‘The streaked will be your wages,’ then the whole flock bore streaked offspring.
8 ஏனெனில், 'கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம்' என்றபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன. 'வரியுள்ளவை உனக்குரிய ஊதியம்' என்றபோதோ ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.
9 இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
9 Thus God has taken away your father’s livestock and given them to me.
9 இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.
10 ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாகக் கண்டேன்.
10 When the flocks were breeding, I saw in a dream that the streaked, spotted, and speckled males were mating with the females.
10 ஆடுகள் சினையுறும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளியும் உடையனவாய் இருந்தன.
11 அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
11 In that dream the angela of God said to me, ‘Jacob!’ And I replied, ‘Here I am.’
11 அக்கனவில் கடவுளுடைய தூதர், 'யாக்கோபு!' என்று என்னை அழைக்க, நான், 'இதோ! அடியேன்' என்றேன்.
12 அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.
12 ‘Look up,’ he said, ‘and see that all the males that are mating with the flock are streaked, spotted, or speckled; for I have seen all that Laban has done to you.
12 அவர், 'உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும் வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார். ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.
13 நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
13 I am the God of Bethel, where you anointed the pillar and made a solemn vow to Me. Now get up and leave this land at once, and return to your native land.’”
13 நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே. நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்' என்று கூறினார்" என்றார்.1
14 அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டில் இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?
14 And Rachel and Leah replied, “Do we have any portion or inheritance left in our father’s house?
14 அதற்கு ராகேலும், லேயாவும், "எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?
15 அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.
15 Are we not regarded by him as outsiders? Not only has he sold us, but he has certainly squandered what was paid for us.
15 அவர் எங்களை அந்நியப் பெண்களைப் போல் விலைக்கு விற்று, எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?
16 ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
16 Surely all the wealth that God has taken away from our father belongs to us and to our children. So do whatever God has told you.”
16 ஆனால், செல்வத்தையெல்லாம் எங்கள் தந்தையிடமிருந்து கடவுள் பிடுங்கி, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரிமையாக்கினார். ஆகையால், கடவுள் உங்களுக்குச் சொன்னதையெல்லாம் செய்யுங்கள்" என்றனர்.
17 அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,
17 Then Jacob got up and put his children and his wives on camels,
17 அப்போது யாக்கோபு, தம் மக்களையும், மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
18 தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
18 and he drove all his livestock before him, along with all the possessions he had acquired in Paddan-aram,b to go to his father Isaac in the land in Canaan.
18 பதான் அராமில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு, மந்தைகள் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டு, கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கிப் பயணமானார்.
19 லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
19 Now while Laban was out shearing his sheep, Rachel stole her father’s household idols.
19 லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.
20 யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
20 Moreover, Jacob deceivedc Laban the Aramean by not telling him that he was running away.
20 மேலும், யாக்கோபு, தாம் ஓடிப்போகிற செய்தியை அரமேயனான லாபானுக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்.
21 இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
21 So he fled with all his possessions, crossed the Euphrates,d and headed for the hill country of Gilead.
21 அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நதியைக் கடந்து கிலயாது மலைநாட்டை நோக்கித் தப்பியோடினார்.
Laban Pursues Jacob
22 யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.
22 On the third day Laban was informed that Jacob had fled.
22 யாக்கோபு தப்பியோடிய செய்தி லாபானுக்கு மூன்றாம் நாள் தெரிவிக்கப்பட்டது.
23 அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
23 So he took his relatives with him, pursued Jacob for seven days, and overtook him in the hill country of Gilead.
23 உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.
24 அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.
24 But that night God came to Laban the Aramean in a dream and warned him, “Be careful not to say anything to Jacob, either good or bad.”
24 அன்றிரவு கனவில் அரமேயனான லாபானுக்குக் கடவுள் தோன்றி அவனை நோக்கி, "நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்" என எச்சரித்தார்.
25 லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.
25 Now Jacob had pitched his tent in the hill country of Gilead when Laban overtook him, and Laban and his relatives camped there as well.
25 லாபான் யாக்கோபை நெருங்கியபொழுது, யாக்கோபு கிலயாது மலைப்பகுதியில் கூடாரம் அடித்திருந்தார். அம்மலைப் பகுதியில் லாபானும் அவன் உறவினரும் கூடாரமடித்துத் தங்கினர்.
26 அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
26 Then Laban said to Jacob, “What have you done? You have deceived me and carried off my daughters like captives of war!
26 அவன் யாக்கோபை நோக்கி: "நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?
27 நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
27 Why did you run away secretly and deceive me, without even telling me? I would have sent you away with joy and singing, with tambourines and harps.
27 எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு, ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? நான் மேளதாள வாத்தியங்களுடன் மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!
28 என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.
28 But you did not even let me kiss my grandchildren and my daughters goodbye. Now you have done a foolish thing.
28 என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்? நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டீர்.
29 உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமையுண்டு; ஆகிலும் உங்கள் தகப்பனுடைய தேவன் நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.
29 I have power to do you great harm, but last night the God of your father said to me, ‘Be careful not to say anything to Jacob, either good or bad.’
29 இப்போதோ, உமக்குத் தீங்கிழைக்க என்னால் முடியும். ஆனால், நேற்றிரவு உம் தந்தையின் கடவுள் என்னை நோக்கி, "நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்" என்று எச்சரித்தார்.
30 இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.
30 Now you have gone off because you long for your father’s house. But why have you stolen my gods?”
30 உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால், என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?" என்றான்.
31 யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.
31 “I was afraid,” Jacob answered, “for I thought you would take your daughters from me by force.
31 யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, "நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.
32 ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.
32 If you find your gods with anyone here, he shall not live! In the presence of our relatives, see for yourself if anything is yours, and take it back.” For Jacob did not know that Rachel had stolen the idols.
32 ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால், அவன் உயிரோடு இருக்க வேண்டாம். உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்" என்றார். அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
33 So Laban went into Jacob’s tent, then Leah’s tent, and then the tents of the two maidservants, but he found nothing. Then he left Leah’s tent and entered Rachel’s tent.
33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாவின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து, ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.
34 ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
34 Now Rachel had taken Laban’s household idols, put them in the saddlebag of her camel, and was sitting on them. And Laban searched everything in the tent but found nothing.
34 இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டார். லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.
35 அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.
35 Rachel said to her father, “Sir, do not be angry that I cannot stand up before you; for I am having my period.” So Laban searched, but could not find the household idols.
35 அவர் தன் தந்தையை நோக்கி, "என் தலைவராகிய உம் முன்னிலையில் என்னால் நிற்க முடியவில்லை என்று சினம்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் மாதவிலக்காய் இருக்கிறேன்" என்றார். எனவே, அவன் எவ்வளவு தேடிப்பார்த்தும் குலதெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36 அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?
36 Then Jacob became incensed and challenged Laban. “What is my crime?” he said. “For what sin of mine have you so hotly pursued me?
36 அப்பொழுது யாக்கோபு சினமுற்று லாபானுடன் வாதிட்டு மறுமொழியாகக் கூறியது: "நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?
37 என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.
37 You have searched all my goods! Have you found anything that belongs to you? Put it here before my brothers and yours, that they may judge between the two of us.
37 என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா? அப்படியானால், அதை என் உறவினர், உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும். இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்
38 இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.
38 I have been with you for twenty years now. Your sheep and goats have not miscarried, nor have I eaten the rams of your flock.
38 இதற்காகத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே! உம்முடைய மந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!
39 பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.
39 I did not bring you anything torn by wild beasts; I bore the loss myself. And you demanded payment from me for what was stolen by day or night.
39 கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன். ஆனால், இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!
40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.
40 As it was, the heat consumed me by day and the frost by night, and sleep fled from my eyes.
40 பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின. அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.
41 இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
41 Thus for twenty years I have served in your household—fourteen years for your two daughters and six years for your flocks—and you have changed my wages ten times!
41 இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப் பதினான்கு ஆண்டுகளும் உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன். நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.
42 என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
42 If the God of my father, the God of Abraham and the Fear of Isaac, had not been with me, surely by now you would have sent me away empty-handed. But God has seen my affliction and the toil of my hands, and last night He rendered judgment.”
42 ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின் கடவுள் என்னோடு இருந்திராவிடில் உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர். ஆனால், கடவுள் என் துன்பத்தையும் கடின உழைப்பையும் கண்டு நேற்றிரவு உம்மை எச்சரித்திருக்கிறார்" என்றார்.
Jacob’s Covenant with Laban
43 அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
43 But Laban answered Jacob, “These daughters are my daughters, these sons are my sons, and these flocks are my flocks! Everything you see is mine! Yet what can I do today about these daughters of mine or the children they have borne?
43 அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, "இப்புதல்வியர் என் புதல்வியர்; இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?
44 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும் பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.
44 Come now, let us make a covenant, you and I, and let it serve as a witness between you and me.”
44 வாரும்; நானும் நீரும் இப்பொழுது உடன்படிக்கை செய்துகொள்வோம். அது உமக்கும் எனக்குமிடையே சான்றாக இருக்கட்டும்" என்றான்.
45 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
45 So Jacob picked out a stone and set it up as a pillar,
45 எனவே, யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார்.
46 பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்.
46 and he said to his relatives, “Gather some stones.” So they took stones and made a mound, and there by the mound they ate.
46 யாக்கோபு தம் உறவினரை நோக்கி, "கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்" என்றார். அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி, அக்குவியல் அருகே உணவருந்தினர்.
47 லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
47 Laban called it Jegar-sahadutha, and Jacob called it Galeed.e
47 அதற்கு லாபான் 'எகர்சகதுத்தா'* என்றும் யாக்கோபு 'கலயேது'† என்றும் பெயரிட்டனர்.23
2 அரமேயத்தில், 'சாட்சியக் குவியல்' என்பது பொருள்.
3 எபிரேயத்தில், 'சாட்சியக் குவியல்' என்பது பொருள்.
48 இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.
48 Then Laban declared, “This mound is a witness between you and me this day.” Therefore the place was called Galeed.
48 பின்னர், லாபான், "இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக" என்றான். ஆகவே, அதற்கு அவன் 'கலயேது' என்று பெயரிட்டான்.
49 அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
49 It was also called Mizpah,f because Laban said, “May the LORD keep watch between you and me when we are absent from each other.
49 மீண்டும் அவன், "நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண் காணிப்பாராக!" என்று சொல்லி அதற்கு 'மிஸ்பா'* என்றும் பெயரிட்டான்.4
4 எபிரேயத்தில், 'கண்காணித்தல்' என்பது பொருள்.
50 நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.
50 If you mistreat my daughters or take other wives, although no one is with us, remember that God is a witness between you and me.”
50 மேலும், அவன், "நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ, அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ, நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும், உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்" என்றான்.
51 பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.
51 Laban also said to Jacob, “Here is the mound, and here is the pillar I have set up between you and me.
51 மீண்டும் லாபான் யாக்கோபை நோக்கி, "இதோ இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் பாரும். இவற்றை எனக்கும் உமக்கும் இடையே நிறுத்தி வைத்துள்ளேன்.
52 தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
52 This mound is a witness, and this pillar is a witness, that I will not go past this mound to harm you, and you will not go past this mound and pillar to harm me.
52 நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று; இந்த நினைவுத் தூண் சான்று.
53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
53 May the God of Abraham and the God of Nahor, the God of their father, judge between us.” So Jacob swore by the Fear of his father Isaac.
53 ஆபிரகாமின் கடவுள், நாகோரின் கடவுள், அவர்களின் தந்தையின் கடவுள், நம்மிடையே நீதி வழங்குவாராக" என்றான். பின்னர், யாக்கோபு ஈசாக்கின் அச்சம் என்ற தம் தந்தையின் கடவுள் பெயரால் ஆணையிட்டு வாக்களித்தார்.
54 பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
54 Then Jacob offered a sacrifice on the mountain and invited his relatives to eat a meal. And after they had eaten, they spent the night on the mountain.
54 பின்பு, அவர் மலையின் மேல் பலி செலுத்தி உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார். அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.
55 லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.
55 Early the next morning, Laban got up and kissed his grandchildren and daughters and blessed them. Then he left to return home.
55 அதிகாலையில் லாபான் எழுந்து, தன் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினான். பின்னர், அவன் அவர்களை விட்டுப்பிரிந்து தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a Or Angel
18 b That is, northwest Mesopotamia
20 c Or stole the heart of ; also in verses 26 and 27
21 d Hebrew the River
47 e The Aramaic Jegar-sahadutha and the Hebrew Galeed both mean heap of witnesses .
49 f Mizpah means watchtower .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.