பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Genesis ஆதியாகமம் בְּרֵאשִׁית
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
ஆதியாகமம் 30 | Genesis 30
Dan and Naphtali
1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
1 When Rachel saw that she was not bearing any children for Jacob, she envied her sister. “Give me children, or I will die!” she said to Jacob.
1 தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, "நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன்" என்றார்.
2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.
2 Jacob became angry with Rachel and said, “Am I in the place of God, who has withheld children from you?”
2 யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, "நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்" என்றார்.
3 அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
3 Then she said, “Here is my maidservant Bilhah. Sleep with her, that she may bear children for me,a so that through her I too can build a family.”
3 அப்பொழுது ராகேல் "இதோ என் பணிப்பெண் பில்கா. நீர் அவளோடு கூடி வாழ்வீர். அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க, நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன்" என்றார்.
4 அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
4 So Rachel gave Jacob her servant Bilhah as a wife, and he slept with her,
4 பின்பு, அவர் அவருக்குத் தம் பணிப்பெண் பில்காவை மனைவியாகக் கொடுக்க, அவரும் அவளுடன் கூடி வாழ்ந்தார்.
5 பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
5 and Bilhah conceived and bore him a son.
5 பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
6 அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.
6 Then Rachel said, “God has vindicated me; He has heard my plea and given me a son.” So she named him Dan.b
6 ராகேல், 'ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார்' என்று சொல்லி அவனுக்குத் 'தாண்'* என்னும் பெயரிட்டார்.1
1 எபிரேயத்தில், 'நீதி வழங்கினார்' என்பது பொருள்.
7 மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
7 And Rachel’s servant Bilhah conceived again and bore Jacob a second son.
7 பில்கா மீண்டும் கருவுற்று மற்றொரு மகனைப் பெற்றாள்.
8 அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
8 Then Rachel said, “In my great struggles, I have wrestled with my sister and won.” So she named him Naphtali.c
8 ராகேல் 'நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றிகொண்டேன்' என்று கூறி அவனுக்கு 'நப்தலி'* என்று பெயரிட்டார்.2
2 எபிரேயத்தில், 'போராடினேன்' என்பது பொருள்.
Gad and Asher
9 லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
9 When Leah saw that she had stopped having children, she gave her servant Zilpah to Jacob as a wife.
9 லேயா தமக்குப் பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டு, தம் பணிப்பெண் சில்பாவை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தார்.
10 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
10 And Leah’s servant Zilpah bore Jacob a son.
10 லேயாவின் பணிப்பெண் சில்பா யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
11 அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
11 Then Leah said, “How fortunate!”d So she named him Gad.e
11 லேயா, 'நான் நற்பேறு பெற்றுள்ளேன்' என்று சொல்லி அவனுக்குக் 'காத்து'* என்று பெயரிட்டார்.3
3 எபிரேயத்தில், 'நற்பேறு' என்பது பொருள்.
12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
12 When Leah’s servant Zilpah bore Jacob a second son,
12 லேயாவின் பணிப்பெண் சில்பா மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
13 அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
13 Leah said, “How happy I am! For the women call me happy.” So she named him Asher.f
13 லேயா 'எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர்' என்று சொல்லி, அவனுக்கு 'ஆசேர்'* என்று பெயரிட்டார்.4
4 எபிரேயத்தில், 'மகிழ்ச்சி' என்பது பொருள்.
14 கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.
14 Now during the wheat harvest, Reuben went out and found some mandrakes in the field. When he brought them to his mother, Rachel begged Leah, “Please give me some of your son’s mandrakes.”
14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளியில் தூதாயிம் கனிகளைக் கண்டு, அவற்றைத் தன்தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான். ராகேல் அவரிடம், உன் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில் எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டார்.
15 அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.
15 But Leah replied, “Is it not enough that you have taken away my husband? Now you want to take my son’s mandrakes as well?” “Very well,” said Rachel, “he may sleep with you tonight in exchange for your son’s mandrakes.”
15 அதற்கு அவர், "என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ?" என்றார். அப்பொழுது ராகேல், "சரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்" என்றார்.
16 சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.
16 When Jacob came in from the field that evening, Leah went out to meet him and said, “You must come with me, for I have hired you with my son’s mandrakes.” So he slept with her that night.
16 மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே, லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய், "நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும். ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து உம்மை நான் வாங்கிக்கொண்டேன்" என்றார். அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.
Issachar, Zebulun, and Dinah
17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
17 And God listened to Leah, and she conceived and bore a fifth son to Jacob.
17 கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார். அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.
18 அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
18 Then Leah said, “God has rewarded me for giving my maidservant to my husband.” So she named him Issachar.g
18 'நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக் கடவுள் எனக்கு ஈடுசெய்துள்ளார்' என்று சொல்லி அவனுக்கு 'இசக்கார்'* என்று பெயரிட்டார்.5
5 எபிரேயத்தில், 'ஈடு' என்பது பொருள்.
19 அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
19 Again Leah conceived and bore a sixth son to Jacob.
19 மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார்.
20 அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
20 “God has given me a good gift,” she said. “This time my husband will honor me, because I have borne him six sons.” And she named him Zebulun.h
20 லேயா 'கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன்' என்று கூறி அவனுக்குச் 'செபுலோன்'* என்று பெயரிட்டார்.6
6 எபிரேயத்தில், 'பெருமை' என்பது பொருள்.
21 பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.
21 After that, Leah gave birth to a daughter and named her Dinah.
21 பிறகு, அவர் ஒரு பெண்மகவைப் பெற்று, அவளுக்குத் 'தீனா' என்று பெயரிட்டார்.
Joseph
22 தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
22 Then God remembered Rachel. He listened to her and opened her womb,
22 பின்பு, கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.
23 அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
23 and she conceived and gave birth to a son. “God has taken away my shame,” she said.
23 அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து 'கடவுள் என் இழிவைப் போக்கினார்' என்றார்.
24 இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
24 She named him Joseph,i and said, “May the LORD add to me another son.”
24 மேலும், அவர் 'ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக' என்று கூறி, அவனுக்கு 'யோசேப்பு'* என்று பெயரிட்டார்.7
7 எபிரேயத்தில், 'சேர்த்துத் தருகிறார்' என்பது பொருள்.
Jacob Prospers
25 ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.
25 Now after Rachel had given birth to Joseph, Jacob said to Laban, “Send me on my way so I can return to my homeland.
25 ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்த பின் யாக்கோபு லாபானை நோக்கி, "என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக என்னை அனுப்பி வைப்பீராக!
26 நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.
26 Give me my wives and children for whom I have served you, that I may go on my way. You know how hard I have worked for you.”
26 என் மனைவியரையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தந்து என்னைப் போகவிடும். அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன். நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்" என்றார்.
27 அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
27 But Laban replied, “If I have found favor in your eyes, please stay. I have learned by divination that the LORD has blessed me because of you.”
27 லாபான் அவரை நோக்கி, "உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும். 'உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார்' என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.
28 உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
28 And he added, “Name your wages, and I will pay them.”
28 உமக்குரிய கூலியைக் குறிப்பிடும். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்" என்றான்.
29 அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.
29 Then Jacob answered, “You know how I have served you and how your livestock have thrived under my care.
29 அதற்கு அவர், "நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும் உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.
30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
30 Indeed, you had very little before my arrival, but now your wealth has increased many times over. The LORD has blessed you wherever I set foot. But now, when may I also provide for my own household?”
30 நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே; இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?" என்றார்.
31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
31 “What can I give you?” Laban asked. “You do not need to give me anything,” Jacob replied. “If you do this one thing for me, I will keep on shepherding and keeping your flocks.
31 அதற்கு லாபான், "நான் உமக்கு என்ன தரவேண்டும்?" என, யாக்கோபு "எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.
32 நான் இன்றைக்குப் போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
32 Let me go through all your flocks today and remove from them every speckled or spotted sheep, every dark-colored lamb, and every spotted or speckled goat. These will be my wages.
32 உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன். அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும் கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும் புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும் தனியாகப் பிரித்துக் கொள்வேன். இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.
33 அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.
33 So my honesty will testify for me when you come to check on my wages in the future. If I have any goats that are not speckled or spotted, or any lambs that are not dark-colored, they will be considered stolen.”
33 எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக! கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ, கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால், அது திருடப்பட்டதாக எண்ணப்படும்" என்றார்.
34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி,
34 “Agreed,” said Laban. “Let it be as you have said.”
34 அதற்கு லாபான், "நீர் சொன்னபடியே ஆகட்டும்" என்றான்.
35 அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,
35 That very day Laban removed all the streaked or spotted male goats and every speckled or spotted female goat—every one that had any white on it—and every dark-colored lamb, and he placed them under the care of his sons.
35 ஆனால் அன்றே அவன் வரியோ புள்ளியோ உடைய வெள்ளாட்டுக் கிடாய்களையும், கலப்பு நிறமோ புள்ளியோ உடைய வெள்ளாடுகள் அனைத்தையும் வெள்ளைப் புள்ளி கொண்ட எல்லாவற்றையும், கறுப்பாய் இருந்த எல்லா ஆட்டுக்குட்டிகளையும் பிரித்துத் தம் புதல்வரிடம் ஒப்படைத்து,
36 தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்று நாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
36 Then he put a three-day journey between himself and Jacob, while Jacob was shepherding the rest of Laban’s flocks.
36 தனக்கும் மீதமுள்ள தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில் மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.
37 பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
37 Jacob, however, took fresh branches of poplar, almond, and plane trees, and peeled the bark, exposing the white inner wood of the branches.
37 அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி, அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.
38 தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு.
38 Then he set the peeled branches in the watering troughs in front of the flocks coming in to drink. So when the flocks were in heat and came to drink,
38 மேலும், தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.
39 ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
39 they mated in front of the branches. And they bore young that were streaked or speckled or spotted.
39 பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.
40 அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.
40 Jacob set apart the young, but made the rest face the streaked dark-colored sheep in Laban’s flocks. Then he set his own stock apart and did not put them with Laban’s animals.
40 மேலும், யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார். லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி மந்தையை நிற்கச் செய்தார். தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.
41 பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களின் முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
41 Whenever the stronger females of the flock were in heat, Jacob would place the branches in the troughs, in full view of the animals, so that they would breed in front of the branches.
41 மந்தையின் வலிமையுள்ள ஆடுகள் பொலியும்போது, மந்தைக்கு எதிரேயிருந்த நீர்த்தொட்டியில் அக்கொப்புகளைப் போட்டார்; அக்கொப்புகளிடையே அவை பொலிந்தன.
42 பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
42 But if the animals were weak, he did not set out the branches. So the weaker animals went to Laban and the stronger ones to Jacob.
42 வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை. எனவே, லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும் யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.
43 இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
43 Thus Jacob became exceedingly prosperous. He owned large flocks, maidservants and menservants, and camels and donkeys.
43 இவ்வாறு, யாக்கோபு பெரும் செல்வரானார். மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Literally bear children on my knees
6 b Dan means He has judged or He has vindicated .
8 c Naphtali sounds like the Hebrew for wrestling .
11 d Alternate MT reading (see also LXX); the other alternate reads “A troop is coming!”
11 e Gad sounds like the Hebrew for good fortune , or alternately for band of raiders .
13 f Asher means happy .
18 g Issachar sounds like the Hebrew for wages or reward .
20 h Zebulun sounds like the Hebrew for honor .
24 i Joseph means may He add .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.