பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 21 | Luke 21

The Poor Widow’s Offering (Mark 12:41–44)

1δὲ Ἀναβλέψας εἶδεν τοὺς πλουσίους βάλλοντας τὰ αὐτῶν δῶρα εἰς τὸ γαζοφυλάκιον

1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
1 Then Jesus looked up and saw the rich putting their gifts into the treasury,
1 இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

2δέ εἶδεν τινα πενιχρὰν χήραν βάλλουσαν ἐκεῖ δύο λεπτὰ

2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
2 and He saw a poor widow put in two small copper coins.a
2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை1 அதில் போடுவதைக் கண்டார்.

1 இங்குக் "காசு" என்பது ஒரு தெனாரியத்தில் 1/128 பகுதி மதிப்புடைய "லெப்டான்" ஆகும்.

3Ἀληθῶς λέγω ὑμῖν Καὶ εἶπεν ὅτι αὕτη «ἡ πτωχὴ» ἡ χήρα ἔβαλεν πλεῖον πάντων

3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3 “Truly I tell you,” He said, “this poor widow has put in more than all the others.
3 அவர் "இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

4γὰρ πάντες οὗτοι ἔβαλον εἰς τὰ δῶρα ἐκ αὐτοῖς τοῦ περισσεύοντος δὲ αὕτη ἐκ αὐτῆς τοῦ ὑστερήματος ἔβαλεν πάντα τὸν ὃν εἶχεν βίον

4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
4 For they all contributed out of their surplus, but she out of her poverty has put in all she had to live on.”
4 ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்றார்.

Temple Destruction and Other Signs (Matthew 24:1–8; Mark 13:1–8)

5Καί τινων λεγόντων περὶ ὅτι τοῦ ἱεροῦ κεκόσμηται καλοῖς λίθοις καὶ ἀναθήμασιν εἶπεν

5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,
5 As some of the disciples were remarking how the temple was adorned with beautiful stones and consecrated gifts, Jesus said,
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

6Ταῦτα ἃ θεωρεῖτε ἡμέραι ἐλεύσονται ἐν αἷς οὐκ λίθος ἀφεθήσεται ἐπὶ λίθῳ ὃς οὐ καταλυθήσεται

6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
6 “As for what you see here, the time will come when not one stone will be left on another; every one will be thrown down.”
6 இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார்.

7Διδάσκαλε δὲ Ἐπηρώτησαν αὐτὸν λέγοντες πότε οὖν ταῦτα ἔσται καὶ τί τὸ σημεῖον ὅταν ταῦτα μέλλῃ γίνεσθαι

7 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
7 “Teacher,” they asked, “when will these things happen? And what will be the sign that they are about to take place?”
7 அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?" என்று கேட்டார்கள்.

8δὲ Ὁ εἶπεν Βλέπετε μὴ πλανηθῆτε γὰρ πολλοὶ ἐλεύσονται ἐπὶ μου τῷ ὀνόματί λέγοντες Ἐγώ εἰμι καί Ὁ καιρὸς ἤγγικεν μὴ πορευθῆτε ὀπίσω αὐτῶν

8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
8 Jesus answered, “See to it that you are not deceived. For many will come in My name, claiming, ‘I am He,’ and, ‘The time is near.’ Do not follow them.
8 அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, 'நானே அவர்' என்றும், 'காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.

9δὲ ὅταν ἀκούσητε πολέμους καὶ ἀκαταστασίας μὴ πτοηθῆτε γὰρ ταῦτα δεῖ γενέσθαι πρῶτον ἀλλ’ τὸ τέλος οὐκ εὐθέως

9 யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
9 When you hear of wars and rebellions, do not be alarmed. These things must happen first, but the end is not imminent.”
9 ஆனால், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது" என்றார்.

Witnessing to All Nations (Matthew 24:9–14; Mark 13:9–13)

10Τότε ἔλεγεν αὐτοῖς ἔθνος Ἐγερθήσεται ἐπ’ ἔθνος καὶ βασιλεία ἐπὶ βασιλείαν

10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
10 Then He told them, “Nation will rise against nation, and kingdom against kingdom.
10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.2

11ἔσονται τε μεγάλοι σεισμοί καὶ λιμοὶ* καὶ λοιμοὶ* κατὰ τόπους τε ἔσται φόβητρά καὶ μεγάλα σημεῖα «ἀπ’ οὐρανοῦ»

11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
11 There will be great earthquakes, famines, and pestilences in various places, along with fearful sights and great signs from heaven.
11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

12δὲ Πρὸ πάντων τούτων ἐπιβαλοῦσιν αὐτῶν τὰς χεῖρας ἐφ’ ὑμᾶς καὶ διώξουσιν ἕνεκεν μου τοῦ ὀνόματός παραδιδόντες εἰς τὰς συναγωγὰς καὶ φυλακάς ἀπαγομένους ἐπὶ βασιλεῖς καὶ ἡγεμόνας

12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
12 But before all this, they will seize you and persecute you. On account of My name they will deliver you to the synagogues and prisons, and they will bring you before kings and governors.
12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.

13ἀποβήσεται ὑμῖν εἰς μαρτύριον

13 ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
13 This will be your opportunity to serve as witnesses.
13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

14οὖν θέτε ἐν ὑμῶν ταῖς καρδίαις μὴ προμελετᾶν ἀπολογηθῆναι

14 ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
14 So make up your mind not to worry beforehand how to defend yourselves.
14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

15γὰρ ἐγὼ δώσω ὑμῖν στόμα καὶ σοφίαν ᾗ οὐ ἅπαντες οἱ ἀντικείμενοι ὑμῖν δυνήσονται ἀντιστῆναι ἢ ἀντειπεῖν

15 உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
15 For I will give you speech and wisdom that none of your adversaries will be able to resist or contradict.
15 ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.3

16δὲ Παραδοθήσεσθε καὶ ὑπὸ γονέων καὶ ἀδελφῶν καὶ συγγενῶν καὶ φίλων καὶ ἐξ ὑμῶν θανατώσουσιν

16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
16 You will be betrayed even by parents and brothers and relatives and friends, and some of you will be put to death.
16 ஆனால், உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.

17καὶ ἔσεσθε μισούμενοι ὑπὸ πάντων διὰ μου τὸ ὄνομά

17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
17 And you will be hated by everyone because of My name.
17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.

18καὶ οὐ μὴ θρὶξ ἐκ ὑμῶν τῆς κεφαλῆς ἀπόληται

18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
18 Yet not even a hair of your head will perish.
18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

19ἐν ὑμῶν τῇ ὑπομονῇ κτήσασθε* ὑμῶν τὰς ψυχὰς

19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
19 By your patient endurance you will gain your souls.
19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

The Destruction of Jerusalem (Matthew 24:15–25; Mark 13:14–23)

20δὲ Ὅταν ἴδητε Ἰερουσαλήμ κυκλουμένην ὑπὸ στρατοπέδων τότε γνῶτε ὅτι αὐτῆς ἡ ἐρήμωσις ἤγγικεν

20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
20 But when you see Jerusalem surrounded by armies, you will know that her desolation is near.
20 "எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.

21τότε οἱ ἐν τῇ Ἰουδαίᾳ φευγέτωσαν εἰς τὰ ὄρη καὶ οἱ ἐν αὐτῆς μέσῳ ἐκχωρείτωσαν καὶ οἱ ἐν ταῖς χώραις μὴ εἰσερχέσθωσαν εἰς αὐτήν

21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
21 Then let those who are in Judea flee to the mountains, let those in the city get out, and let those in the country stay out of the city.
21 அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.

22ὅτι αὗταί εἰσιν ἡμέραι ἐκδικήσεως τοῦ πλησθῆναι τὰ πάντα γεγραμμένα

22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
22 For these are the days of vengeance, to fulfill all that is written.
22 ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.4

23Οὐαὶ ἐν ἐκείναις ταῖς ἡμέραις ταῖς ἐχούσαις ἐν γαστρὶ καὶ ταῖς θηλαζούσαις γὰρ ἔσται μεγάλη ἀνάγκη ἐπὶ τῆς γῆς καὶ ὀργὴ τῷ τούτῳ λαῷ

23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
23 How miserable those days will be for pregnant and nursing mothers! For there will be great distress upon the land and wrath against this people.
23 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.

24καὶ πεσοῦνται στόματι μαχαίρης καὶ αἰχμαλωτισθήσονται εἰς πάντα τὰ ἔθνη καὶ Ἰερουσαλὴμ ἔσται πατουμένη ὑπὸ ἐθνῶν ἄχρι οὗ καιροὶ ἐθνῶν πληρωθῶσιν

24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
24 They will fall by the edge of the sword and be led captive into all the nations. And Jerusalem will be trodden down by the Gentiles, until the times of the Gentiles are fulfilled.
24 அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

The Return of the Son of Man (Matthew 24:26–31; Mark 13:24–27)

25Καὶ ἔσονται σημεῖα ἐν ἡλίῳ καὶ σελήνῃ καὶ ἄστροις καὶ ἐπὶ τῆς γῆς συνοχὴ ἐθνῶν ἀπορίᾳ ἐν ἤχους θαλάσσης καὶ σάλου

25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
25 There will be signs in the sun and moon and stars, and on the earth dismay among the nations, bewildered by the roaring of the sea and the surging of the waves.
25 "மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.5

26ἀνθρώπων ἀποψυχόντων ἀπὸ φόβου καὶ προσδοκίας τῶν ἐπερχομένων τῇ οἰκουμένῃ γὰρ αἱ δυνάμεις τῶν οὐρανῶν σαλευθήσονται

26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
26 Men will faint from fear and anxiety over what is coming upon the earth, for the powers of the heavens will be shaken.
26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

27καὶ τότε ὄψονται τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου ἐρχόμενον ἐν νεφέλῃ μετὰ δυνάμεως καὶ πολλῆς δόξης

27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27 At that time they will see the Son of Man coming in a cloud with power and great glory.b
27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.6

28δὲ τούτων ἀρχομένων γίνεσθαι ἀνακύψατε καὶ ἐπάρατε ὑμῶν τὰς κεφαλὰς διότι ὑμῶν ἡ ἀπολύτρωσις ἐγγίζει

28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
28 When these things begin to happen, stand up and lift up your heads, because your redemption is drawing near.”
28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."

The Lesson of the Fig Tree (Matthew 24:32–35; Mark 13:28–31)

29Καὶ εἶπεν αὐτοῖς παραβολὴν Ἴδετε τὴν συκῆν καὶ πάντα τὰ δένδρα

29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
29 Then Jesus told them a parable: “Look at the fig tree and all the trees.
29 இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.

30ὅταν προβάλωσιν ἤδη βλέποντες ἀφ’ ἑαυτῶν γινώσκετε ὅτι τὸ θέρος ἐστίν ἤδη ἐγγὺς

30 அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
30 When they sprout leaves, you can see for yourselves and know that summer is near.
30 அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

31οὕτως καὶ ὅταν ἴδητε ταῦτα γινόμενα ὑμεῖς γινώσκετε ὅτι ἡ βασιλεία τοῦ Θεοῦ ἐστιν ἐγγύς

31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
31 So also, when you see these things happening, know that the kingdom of God is near.
31 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

32ἀμὴν λέγω ὑμῖν ὅτι αὕτη ἡ γενεὰ οὐ μὴ παρέλθῃ ἕως ἂν πάντα γένηται

32 இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32 Truly I tell you, this generation will not pass away until all these things have happened.
32 அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

33ὁ οὐρανὸς καὶ ἡ γῆ παρελεύσονται δὲ μου οἱ λόγοι οὐ μὴ παρελεύσονται

33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
33 Heaven and earth will pass away, but My words will never pass away.
33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா."

Be Watchful for the Day

34δὲ Προσέχετε ἑαυτοῖς μή‿ αἱ ὑμῶν καρδίαι ποτε βαρηθῶσιν ἐν κραιπάλῃ καὶ μέθῃ καὶ μερίμναις βιωτικαῖς καὶ ἐκείνη ἡ ἡμέρα ἐπιστῇ ἐφ’ ὑμᾶς αἰφνίδιος ὡς παγίς

34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
34 But watch yourselves, or your hearts will be weighed down by dissipation, drunkenness, and the worries of life—and that day will spring upon you suddenly like a snare.
34 ❮34-35❯மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.

35γὰρ ἐπεισελεύσεται ἐπὶ πάντας τοὺς καθημένους ἐπὶ πρόσωπον πάσης τῆς γῆς

35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
35 For it will come upon all who dwell on the face of all the earth.

36δὲ ἀγρυπνεῖτε ἐν παντὶ καιρῷ δεόμενοι ἵνα κατισχύσητε ἐκφυγεῖν πάντα ταῦτα τὰ μέλλοντα γίνεσθαι καὶ σταθῆναι ἔμπροσθεν τοῦ Υἱοῦ τοῦ ἀνθρώπου

36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
36 So keep watch at all times, and pray that you may have the strength to escape all that is about to happen and to stand before the Son of Man.”
36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.

37δὲ τὰς ἡμέρας Ἦν διδάσκων ἐν τῷ ἱερῷ δὲ τὰς νύκτας ἐξερχόμενος ηὐλίζετο εἰς τὸ ὄρος τὸ καλούμενον Ἐλαιῶν

37 அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
37 Every day Jesus taught at the temple, but every evening He went out to spend the night on the Mount of Olives.
37 இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார்.7

38καὶ ὤρθριζεν πρὸς αὐτὸν πᾶς ὁ λαὸς ἀκούειν αὐτοῦ ἐν τῷ ἱερῷ

38 ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.
38 And early in the morning all the people would come to hear Him at the temple.
38 எல்லா மக்களும் கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே அவரிடம் வருவார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
2 a Greek two lepta ; a lepton was a Jewish coin of bronze or copper worth about 1-128 of a denarius.
27 b See Daniel 7:13–14.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.