பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 14 | Luke 14

Jesus Heals a Man with Dropsy

1 Καὶ ἐγένετο σαββάτῳ ἐν αὐτὸν τῷ ἐλθεῖν φαγεῖν ἄρτον εἰς οἶκόν τινος τῶν ἀρχόντων τῶν Φαρισαίων καὶ αὐτοὶ ἦσαν παρατηρούμενοι αὐτόν

1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
1 One Sabbath, Jesus went to eat in the home of a leading Pharisee, and those in attendance were watching Him closely.
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

2 καὶ ἰδοὺ ἔμπροσθεν αὐτοῦ ἦν τις ἄνθρωπός ὑδρωπικὸς

2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.
2 Right there before Him was a man with dropsy.
2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

3 καὶ ὁ Ἰησοῦς ἀποκριθεὶς εἶπεν πρὸς τοὺς νομικοὺς καὶ Φαρισαίους λέγων Ἔξεστιν θεραπεῦσαι τῷ σαββάτῳ ἢ οὔ

3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
3 So Jesus asked the experts in the law and the Pharisees, “Is it lawful to heal on the Sabbath or not?”
3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, "ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?" என்று கேட்டார்.

4 δὲ Οἱ ἡσύχασαν Καὶ ἐπιλαβόμενος ἰάσατο αὐτὸν καὶ ἀπέλυσεν

4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
4 But they remained silent. Then Jesus took hold of the man, healed him, and sent him on his way.
4 அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

5 καὶ εἶπεν πρὸς αὐτοὺς Τίνος ὑμῶν υἱὸς ἢ βοῦς πεσεῖται εἰς φρέαρ ἐν τοῦ σαββάτου ἡμέρᾳ καὶ οὐκ εὐθέως ἀνασπάσει αὐτὸν

5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
5 And He asked them, “Which of you whose sona or ox falls into a pit on the Sabbath day will not immediately pull him out?”
5 பிறகு, அவர்களை நோக்கி, "உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?" என்று கேட்டார்.1

6 Καὶ οὐκ ἴσχυσαν ἀνταποκριθῆναι πρὸς ταῦτα

6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
6 And they were unable to answer these questions.
6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

The Parable of the Guests

7 ἐπέχων πῶς τοὺς κεκλημένους ἐξελέγοντο τὰς πρωτοκλισίας δὲ Ἔλεγεν πρὸς λέγων πρὸς αὐτούς παραβολήν

7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
7 When Jesus noticed how the guests chose the places of honor, He told them a parable:
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:

8 Ὅταν κληθῇς ὑπό τινος εἰς γάμους μὴ κατακλιθῇς εἰς τὴν πρωτοκλισίαν μή‿ ποτε ἐντιμότερός σου ᾖ κεκλημένος ὑπ’ αὐτοῦ

8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
8 “When you are invited to a wedding banquet, do not sit in the place of honor, in case someone more distinguished than you has been invited.
8 "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.

9 καὶ ὁ καλέσας σὲ καὶ αὐτὸν ἐλθὼν ἐρεῖ σοι Δὸς τούτῳ τόπον καὶ τότε μετὰ αἰσχύνης ἄρξῃ κατέχειν τὸν ἔσχατον τόπον

9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
9 Then the host who invited both of you will come and tell you, ‘Give this man your seat.’ And in humiliation, you will have to take the last place.
9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.

10 Ἀλλ’ ὅταν κληθῇς πορευθεὶς ἀνάπεσε εἰς τὸν ἔσχατον τόπον ἵνα ὅταν ὁ κεκληκώς σε ἔλθῃ ἐρεῖ σοι Φίλε προσανάβηθι ἀνώτερον τότε σοι ἔσται δόξα ἐνώπιον πάντων τῶν συνανακειμένων σοι

10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
10 But when you are invited, go and sit in the last place, so that your host will come and tell you, ‘Friend, move up to a better place.’b Then you will be honored in front of everyone at the table with you.
10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.2

11 ὅτι πᾶς ὁ ὑψῶν ἑαυτὸν ταπεινωθήσεται καὶ ὁ ταπεινῶν ἑαυτὸν ὑψωθήσεται

11 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
11 For everyone who exalts himself will be humbled, and the one who humbles himself will be exalted.”
11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்."3

12 δὲ καὶ Ἔλεγεν τῷ κεκληκότι αὐτόν Ὅταν ποιῇς ἄριστον ἢ δεῖπνον μὴ φώνει σου τοὺς φίλους μηδὲ σου τοὺς ἀδελφούς μηδὲ σου τοὺς συγγενεῖς μηδὲ πλουσίους γείτονας μή‿ ποτε καὶ αὐτοὶ ἀντικαλέσωσίν σε καὶ σοι γένηται ἀνταπόδομά

12 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
12 Then Jesus said to the man who had invited Him, “When you host a dinner or a banquet, do not invite your friends or brothers or relatives or rich neighbors. Otherwise, they may invite you in return, and you will be repaid.
12 பிறகு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

13 ἀλλ’ ὅταν ποιῇς δοχὴν κάλει πτωχούς ἀναπείρους χωλούς τυφλούς

13 நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
13 But when you host a banquet, invite the poor, the crippled, the lame, and the blind,
13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.4

14 καὶ ἔσῃ μακάριος ὅτι οὐκ ἔχουσιν ἀνταποδοῦναί σοι γάρ σοι ἀνταποδοθήσεται ἐν τῇ ἀναστάσει τῶν δικαίων

14 அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
14 and you will be blessed. Since they cannot repay you, you will be repaid at the resurrection of the righteous.”
14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால், உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார்.

The Parable of the Banquet (Matthew 22:1–14)

15 δέ τις τῶν συνανακειμένων Ἀκούσας ταῦτα εἶπεν αὐτῷ Μακάριος ὅστις φάγεται ἄρτον ἐν τῇ βασιλείᾳ τοῦ Θεοῦ

15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றார்.
15 When one of those reclining with Him heard this, he said to Jesus, “Blessed is everyone who will eat at the feastc in the kingdom of God.”
15 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார்.5

16 δὲ Ὁ εἶπεν αὐτῷ τις Ἄνθρωπός ἐποίει μέγα δεῖπνον καὶ ἐκάλεσεν πολλούς

16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
16 But Jesus replied, “A certain man prepared a great banquet and invited many guests.
16 இயேசு அவரிடம் கூறியது: "ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்.

17 καὶ τῇ ὥρᾳ τοῦ δείπνου ἀπέστειλεν αὐτοῦ τὸν δοῦλον εἰπεῖν τοῖς κεκλημένοις Ἔρχεσθε ὅτι ἐστιν ἤδη ἕτοιμά

17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
17 When it was time for the banquet, he sent his servant to tell those who had been invited, ‘Come, for everything is now ready.’
17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, 'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார்.

18 Καὶ ἀπὸ μιᾶς πάντες ἤρξαντο παραιτεῖσθαι ὁ πρῶτος εἶπεν αὐτῷ ἠγόρασα Ἀγρὸν καὶ ἔχω ἀνάγκην ἐξελθὼν ἰδεῖν αὐτόν ἐρωτῶ σε ἔχε παρῃτημένον με

18 அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
18 But one after another they all began to make excuses. The first one said, ‘I have bought a field, and I need to go see it. Please excuse me.’
18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், 'வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார்.

19 Καὶ ἕτερος εἶπεν ἠγόρασα πέντε Ζεύγη βοῶν καὶ πορεύομαι δοκιμάσαι αὐτά ἐρωτῶ σε ἔχε παρῃτημένον με

19 வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கும்படி போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19 Another said, ‘I have bought five yoke of oxen, and I am going to try them out. Please excuse me.’
19 'நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர்.

20 Καὶ ἕτερος εἶπεν ἔγημα Γυναῖκα καὶ διὰ τοῦτο οὐ δύναμαι ἐλθεῖν

20 வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
20 Still another said, ‘I have married a wife, so I cannot come.’
20 'எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர்.

21 Καὶ ὁ δοῦλος παραγενόμενος ἀπήγγειλεν ταῦτα τῷ αὐτοῦ κυρίῳ τότε ὁ οἰκοδεσπότης ὀργισθεὶς εἶπεν τῷ αὐτοῦ δούλῳ Ἔξελθε ταχέως εἰς τὰς πλατείας καὶ ῥύμας τῆς πόλεως καὶ εἰσάγαγε ὧδε τοὺς πτωχοὺς καὶ ἀναπείρους καὶ τυφλοὺς καὶ χωλοὺς

21 அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
21 The servant returned and reported all this to his master. Then the owner of the house became angry and said to his servant, ‘Go out quickly into the streets and alleys of the city, and bring in the poor, the crippled, the blind, and the lame.’
21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், 'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்', என்றார்.

22 Κύριε Καὶ ὁ δοῦλος εἶπεν ὃ ἐπέταξας γέγονεν καὶ ἐστίν ἔτι τόπος

22 ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
22 ‘Sir,’ the servant replied, ‘what you ordered has been done, and there is still room.’
22 பின்பு பணியாளர், 'தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார்.

23 Καὶ ὁ κύριος εἶπεν πρὸς τὸν δοῦλον Ἔξελθε εἰς τὰς ὁδοὺς καὶ φραγμοὺς καὶ ἀνάγκασον εἰσελθεῖν ἵνα μου ὁ οἶκος γεμισθῇ

23 அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
23 So the master told his servant, ‘Go out to the highways and hedges and compel them to come in, so that my house will be full.
23 தலைவர் தம் பணியாளரை நோக்கி, 'நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.

24 γὰρ λέγω ὑμῖν ὅτι οὐδεὶς ἐκείνων τῶν ἀνδρῶν τῶν κεκλημένων γεύσεταί μου τοῦ δείπνου

24 அழைக்கப்ட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
24 For I tell you, not one of those men who were invited will taste my banquet.’”
24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' என்றார்."

The Cost of Discipleship (Matthew 8:18–22; Luke 9:57–62; John 6:59–66)

25 πολλοί ὄχλοι δὲ Συνεπορεύοντο αὐτῷ καὶ στραφεὶς εἶπεν πρὸς αὐτούς

25 பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
25 Large crowds were now traveling with Jesus, and He turned and said to them,
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:

26 Εἴ τις ἔρχεται πρός με καὶ οὐ μισεῖ ἑαυτοῦ* τὸν πατέρα καὶ τὴν μητέρα καὶ τὴν γυναῖκα καὶ τὰ τέκνα καὶ τοὺς ἀδελφοὺς καὶ τὰς ἀδελφάς ἔτι τε καὶ ἑαυτοῦ τὴν ψυχὴν οὐ δύναται εἶναί μου μαθητής

26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
26 “If anyone comes to Me and does not hate his father and mother and wife and children and brothers and sisters—yes, even his own life—he cannot be My disciple.
26 "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.6

27 ὅστις οὐ βαστάζει ἑαυτοῦ τὸν σταυρὸν καὶ ἔρχεται ὀπίσω μου οὐ δύναται εἶναί μου μαθητής

27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27 And whoever does not carry his cross and follow Me cannot be My disciple.
27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.7

28 γὰρ Τίς ἐξ ὑμῶν θέλων οἰκοδομῆσαι πύργον οὐχὶ πρῶτον καθίσας ψηφίζει τὴν δαπάνην εἰ ἔχει εἰς ἀπαρτισμόν

28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
28 Which of you, wishing to build a tower, does not first sit down and count the cost to see if he has the resources to complete it?
28 "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?

29 ἵνα μή ποτε θέντος αὐτοῦ θεμέλιον καὶ μὴ ἰσχύοντος ἐκτελέσαι πάντες οἱ θεωροῦντες ἄρξωνται ἐμπαίζειν αὐτῷ

29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
29 Otherwise, if he lays the foundation and is unable to finish the work, everyone who sees it will ridicule him,
29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,

30 λέγοντες ὅτι Οὗτος ὁ ἄνθρωπος καὶ ἴσχυσεν οὐκ ἐκτελέσαι ἤρξατο οἰκοδομεῖν

30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
30 saying, ‘This man could not finish what he started to build.’
30 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை' என்பார்களே!

31 Ἢ τίς βασιλεὺς πορευόμενος συμβαλεῖν εἰς πόλεμον ἑτέρῳ βασιλεῖ οὐχὶ καθίσας πρῶτον βουλεύσεται εἰ ἐστιν δυνατός ὑπαντῆσαι ἐν δέκα χιλιάσιν τῷ ἐρχομένῳ ἐπ’ αὐτόν μετὰ εἴκοσι χιλιάδων

31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
31 Or what king on his way to war with another king will not first sit down and consider whether he can engage with ten thousand men the one coming against him with twenty thousand?
31 "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?

32 δὲ εἰ μή¦γε ἀποστείλας πρεσβείαν αὐτοῦ ὄντος ἔτι πόρρω ἐρωτᾷ τὰ πρὸς εἰρήνην

32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
32 And if he is unable, he will send a delegation while the other king is still far off, to ask for terms of peace.
32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

33 Οὕτως οὖν πᾶς ἐξ ὑμῶν ὃς οὐκ ἀποτάσσεται πᾶσιν τοῖς ἑαυτοῦ ὑπάρχουσιν οὐ δύναται εἶναί μου μαθητής

33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
33 In the same way, any one of you who does not give up everything he has cannot be My disciple.
33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

Good Salt (Matthew 5:13–16; Mark 9:49–50)

34 οὖν τὸ ἅλας Καλὸν δὲ ἐὰν τὸ ἅλας καὶ μωρανθῇ ἐν τίνι ἀρτυθήσεται

34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
34 Salt is good, but if the salt loses its savor, with what will it be seasoned?
34 "உப்பு நல்லது; ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?

35 ἐστιν εὔθετόν οὔτε εἰς γῆν οὔτε εἰς κοπρίαν αὐτό βάλλουσιν ἔξω Ὁ ἔχων ὦτα ἀκούειν ἀκουέτω

35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
35 It is fit neither for the soil nor for the manure pile, and it is thrown out. He who has ears to hear, let him hear.”
35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்"


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
5 a TR donkey 
10 b See Proverbs 25:7.
15 c Literally who will eat bread 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.