பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 23 | Luke 23

Jesus before Pilate (Matthew 27:11–14; John 18:28–40)

1Καὶ τὸ ἅπαν πλῆθος αὐτῶν ἀναστὰν ἤγαγον αὐτὸν ἐπὶ τὸν Πιλᾶτον

1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்,
1 Then the whole council rose and led Jesus away to Pilate.
1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.

2δὲ ἤρξαντο κατηγορεῖν αὐτοῦ λέγοντες εὕραμεν Τοῦτον διαστρέφοντα ἡμῶν τὸ ἔθνος καὶ κωλύοντα φόρους διδόναι Καίσαρι καὶ λέγοντα ἑαυτὸν εἶναι Χριστὸν βασιλέα

2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்கவேண்டுவதில்லையென்றும் சொல்லி ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத்தொடங்கினார்கள்.
2 And they began to accuse Him, saying, “We found this man subverting our nation, forbidding payment of taxes to Caesar, and proclaiming Himself to be Christ, a King.”
2 "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.

3δὲ Ὁ Πιλᾶτος ἠρώτησεν αὐτὸν λέγων εἶ Σὺ ὁ Βασιλεὺς τῶν Ἰουδαίων Σὺ λέγεις δὲ Ὁ ἀποκριθεὶς αὐτῷ ἔφη

3 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3 So Pilate asked Him, “Are You the King of the Jews?” “You have said so,” Jesus replied.
3 பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.

4δὲ Ὁ Πιλᾶτος εἶπεν πρὸς τοὺς ἀρχιερεῖς καὶ τοὺς ὄχλους εὑρίσκω Οὐδὲν αἴτιον ἐν τούτῳ τῷ ἀνθρώπῳ

4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
4 Then Pilate said to the chief priests and the crowds, “I find no basis for a charge against this man.”
4 பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறினான்.

5δὲ Οἱ ἐπίσχυον λέγοντες ὅτι Ἀνασείει τὸν λαὸν ὅλης καθ’ τῆς Ἰουδαίας διδάσκων καὶ ἀρξάμενος ἀπὸ τῆς Γαλιλαίας ἕως ὧδε

5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.
5 But they kept insisting, “He stirs up the people all over Judea with His teaching. He began in Galilee and has come all the way here.”
5 ஆனால், அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

Jesus before Herod

6δὲ Πιλᾶτος ἀκούσας ἐπηρώτησεν εἰ ὁ ἄνθρωπος ἐστιν Γαλιλαῖός

6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
6 When Pilate heard this, he asked if the man was a Galilean.
6 இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்;

7καὶ ἐπιγνοὺς ὅτι ἐστὶν ἐκ Ἡρῴδου τῆς ἐξουσίας ἀνέπεμψεν αὐτὸν πρὸς Ἡρῴδην αὐτὸν καὶ ὄντα ἐν Ἱεροσολύμοις ἐν ταύταις ταῖς ἡμέραις

7 அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
7 And learning that Jesus was under Herod’s jurisdiction, he sent Him to Herod, who himself was in Jerusalem at that time.
7 அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.

8δὲ Ὁ Ἡρῴδης ἰδὼν τὸν Ἰησοῦν ἦν λίαν ἐχάρη γὰρ θέλων ἰδεῖν αὐτὸν ἐξ ἱκανῶν χρόνων διὰ τὸ ἀκούειν περὶ αὐτοῦ καὶ ἤλπιζέν ἰδεῖν ὑπ’ αὐτοῦ γινόμενον τι σημεῖον

8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
8 When Herod saw Jesus, he was greatly pleased. He had wanted to see Him for a long time, because he had heard about Him and was hoping to see Him perform a miracle.
8 இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.

9δὲ ἐπηρώτα αὐτὸν ἐν ἱκανοῖς λόγοις δὲ αὐτὸς ἀπεκρίνατο αὐτῷ οὐδὲν

9 அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
9 Herod questioned Jesus at great length, but He gave no answer.
9 அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால், அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

10δὲ οἱ ἀρχιερεῖς καὶ οἱ γραμματεῖς Εἱστήκεισαν εὐτόνως κατηγοροῦντες αὐτοῦ

10 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
10 Meanwhile, the chief priests and scribes stood there, vehemently accusing Him.
10 அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.

11δὲ ‹καὶ› Ἡρῴδης σὺν τοῖς αὐτοῦ στρατεύμασιν ἐξουθενήσας αὐτὸν ὁ καὶ ἐμπαίξας περιβαλὼν λαμπρὰν ἐσθῆτα ἀνέπεμψεν αὐτὸν τῷ Πιλάτῳ

11 அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
11 And even Herod and his soldiers ridiculed and mocked Him. Dressing Him in a fine robe, they sent Him back to Pilate.
11 ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.

12ἐν τῇ αὐτῇ ἡμέρᾳ δὲ τε ὅ Ἡρῴδης καὶ ὁ Πιλᾶτος Ἐγένοντο φίλοι μετ’ ἀλλήλων γὰρ προϋπῆρχον ὄντες ἐν ἔχθρᾳ πρὸς αὑτούς

12 முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
12 That day Herod and Pilate became friends; before this time they had been enemies.
12 அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.

The Crowd Chooses Barabbas (Matthew 27:15–23; Mark 15:6–11)

13δὲ Πιλᾶτος συνκαλεσάμενος τοὺς ἀρχιερεῖς καὶ τοὺς ἄρχοντας καὶ τὸν λαὸν

13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
13 Then Pilate called together the chief priests, the rulers, and the people,
13 பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.

14εἶπεν πρὸς αὐτούς Προσηνέγκατέ μοι τοῦτον τὸν ἄνθρωπον ὡς ἀποστρέφοντα τὸν λαόν καὶ ἐγὼ ἀνακρίνας ἰδοὺ ἐνώπιον ὑμῶν εὗρον ἐν τούτῳ τῷ ἀνθρώπῳ οὐθὲν αἴτιον ὧν κατηγορεῖτε κατ’ αὐτοῦ

14 அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
14 and said to them, “You brought me this man as one who was inciting the people to rebellion. I have examined Him here in your presence and found Him not guilty of your charges against Him.
14 அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.

15ἀλλ’ οὐδὲ Ἡρῴδης γὰρ ἀνέπεμψεν αὐτὸν πρὸς ἡμᾶς καὶ ἰδοὺ αὐτῷ ἐστὶν πεπραγμένον οὐδὲν ἄξιον θανάτου

15 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே,
15 Neither has Herod, for he sent Him back to us. As you can see, He has done nothing deserving of death.
15 ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.

16οὖν παιδεύσας αὐτὸν ἀπολύσω

16 ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
16 Therefore I will punish Him and release Him.”a
16 எனவே, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.

17 பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
17
17 [விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.]1

1 அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனம் பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.

18δὲ Ἀνέκραγον παμπληθεὶ* λέγοντες Αἶρε τοῦτον δὲ ἀπόλυσον τὸν Βαραββᾶν ἡμῖν

18 ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
18 But they all cried out in unison: “Away with this man! Release Barabbas to us!”
18 திரண்டிருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்" என்று கத்தினர்.

19ὅστις ἦν βληθεὶς ἐν τῇ φυλακῇ διὰ τινὰ στάσιν γενομένην ἐν τῇ πόλει καὶ φόνον

19 அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
19 (Barabbas had been imprisoned for an insurrection in the city, and for murder.)
19 பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.

20δὲ θέλων ἀπολῦσαι τὸν Ἰησοῦν ὁ Πιλᾶτος προσεφώνησεν αὐτοῖς Πάλιν

20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
20 Wanting to release Jesus, Pilate addressed them again,
20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.

21δὲ οἱ ἐπεφώνουν λέγοντες Σταύρου σταύρου αὐτόν

21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
21 but they kept shouting, “Crucify Him! Crucify Him!”
21 ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.

22δὲ Ὁ τρίτον εἶπεν πρὸς αὐτούς γὰρ Τί κακὸν οὗτος ἐποίησεν εὗρον ἐν αὐτῷ οὐδὲν αἴτιον θανάτου οὖν παιδεύσας αὐτὸν ἀπολύσω

22 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
22 A third time he said to them, “What evil has this man done? I have found in Him no offense worthy of death. So after I punish Him, I will release Him.”
22 மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.

23δὲ Οἱ ἐπέκειντο αἰτούμενοι φωναῖς μεγάλαις αὐτὸν σταυρωθῆναι καὶ αὐτῶν αἱ φωναὶ κατίσχυον

23 அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
23 But they were insistent, demanding with loud voices for Jesus to be crucified. And their clamorb prevailed.
23 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.

24καὶ Πιλᾶτος ἐπέκρινεν αὐτῶν τὸ αἴτημα γενέσθαι

24 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
24 So Pilate sentenced that their demand be met.
24 அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.

25δὲ ὃν ᾐτοῦντο ἀπέλυσεν τὸν βεβλημένον εἰς φυλακὴν διὰ στάσιν καὶ φόνον δὲ παρέδωκεν τὸν Ἰησοῦν τῷ αὐτῶν θελήματι

25 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
25 As they had requested, he released the one imprisoned for insurrection and murder, and handed Jesus over to their will.
25 கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

The Crucifixion (Psalm 22:1–31; Matthew 27:32–44; Mark 15:21–32; John 19:16–27)

26Καὶ ὡς ἀπήγαγον αὐτόν ἐπιλαβόμενοι Σίμωνά τινα Κυρηναῖον ἐρχόμενον ἀπ’ ἀγροῦ ἐπέθηκαν τὸν σταυρὸν αὐτῷ φέρειν ὄπισθεν τοῦ Ἰησοῦ

26 அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
26 As the soldiers led Him away, they seized Simon of Cyrene on his way in from the country, and put the cross on him to carry behind Jesus.
26 அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.

27δὲ πολὺ πλῆθος τοῦ λαοῦ Ἠκολούθει αὐτῷ καὶ γυναικῶν αἳ ἐκόπτοντο καὶ ἐθρήνουν αὐτόν

27 திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
27 A great number of people followed Him, including women who kept mourning and wailing for Him.
27 பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.

28δὲ ‹ὁ› Ἰησοῦς στραφεὶς πρὸς αὐτὰς εἶπεν Θυγατέρες Ἰερουσαλήμ μὴ κλαίετε ἐπ’ ἐμέ πλὴν κλαίετε ἐφ’ ἑαυτὰς καὶ ἐπὶ ὑμῶν τὰ τέκνα

28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
28 But Jesus turned to them and said, “Daughters of Jerusalem, do not weep for Me, but weep for yourselves and for your children.
28 இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.

29ὅτι ἰδοὺ ἡμέραι ἔρχονται ἐν αἷς ἐροῦσιν Μακάριαι αἱ στεῖραι καὶ αἱ κοιλίαι αἳ οὐκ ἐγέννησαν καὶ μαστοὶ οἳ οὐκ ἔθρεψαν

29 இதோ மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
29 Look, the days are coming when people will say, ‘Blessed are the barren women, the wombs that never bore, and breasts that never nursed!’
29 ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது 'மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் 'பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்' என்றும் சொல்வார்கள்.

30τότε Ἄρξονται λέγειν τοῖς ὄρεσιν Πέσετε* ἐφ’ ἡμᾶς Καὶ τοῖς βουνοῖς Καλύψατε ἡμᾶς

30 அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
30 At that time ‘they will say to the mountains, “Fall on us!” and to the hills, “Cover us!”’c
30 அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்கள் மேல் விழுங்கள்' எனவும்§ குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள்.2

31Ὅτι εἰ ποιοῦσιν ταῦτα ἐν ‹τῷ› ξύλῳ ὑγρῷ τί γένηται ἐν τῷ ξηρῷ

31 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
31 For if men do these things while the tree is green, what will happen when it is dry?”
31 பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார்.

32δὲ δύο ἕτεροι κακοῦργοι καὶ Ἤγοντο ἀναιρεθῆναι σὺν αὐτῷ

32 குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
32 Two others, who were criminals, were also led away to be executed with Jesus.
32 வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.

33Καὶ ὅτε ἦλθον ἐπὶ τὸν τόπον τὸν καλούμενον Κρανίον ἐσταύρωσαν αὐτὸν ἐκεῖ καὶ τοὺς κακούργους ὃν μὲν ἐκ δεξιῶν δὲ ὃν ἐξ ἀριστερῶν

33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
33 When they came to the place called The Skull, they crucified Him there, along with the criminals, one on His right and the other on His left.
33 மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.

34δὲ Ὁ Ἰησοῦς ἔλεγεν Πάτερ ἄφες αὐτοῖς γὰρ οὐ οἴδασιν τί ποιοῦσιν δὲ διαμεριζόμενοι αὐτοῦ τὰ ἱμάτια ἔβαλον κλήρους

34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
34 Then Jesus said, “Father, forgive them, for they do not know what they are doing.”e And they divided up His garments by casting lots.f
34 அப்போது [இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.]3 அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.4

3 அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர் பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.

4 திபா 22:18.

35Καὶ ὁ λαὸς εἱστήκει θεωρῶν δὲ οἱ ἄρχοντες καὶ ἐξεμυκτήριζον λέγοντες ἔσωσεν Ἄλλους σωσάτω ἑαυτόν εἰ οὗτός ἐστιν ὁ Χριστὸς τοῦ Θεοῦ ὁ ἐκλεκτός

35 ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
35 The people stood watching, and the rulers sneered at Him,g saying, “He saved others; let Him save Himself if He is the Christ of God, the Chosen One.”
35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள்.

36δὲ οἱ στρατιῶται καὶ Ἐνέπαιξαν αὐτῷ προσερχόμενοι προσφέροντες αὐτῷ ὄξος

36 போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
36 The soldiers also mocked Him and came up to offer Him sour wine.h
36 ❮36-37❯படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.

37Εἰ σὺ εἶ ὁ Βασιλεὺς τῶν Ἰουδαίων καὶ λέγοντες σῶσον σεαυτόν

37 நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்னினார்கள்.
37 “If You are the King of the Jews,” they said, “save Yourself!”

38δὲ ἐπ’ αὐτῷ Ἦν καὶ ἐπιγραφὴ ΟΥΤΟΣ* Ο* ΒΑΣΙΛΕΥΣ ΤΩΝ ΙΟΥΔΑΙΩΝ

38 இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
38 Above Him was posted an inscription:i THIS IS THE KING OF THE JEWS.
38 "இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

39δὲ Εἷς τῶν κακούργων κρεμασθέντων ἐβλασφήμει αὐτόν εἶ σὺ Οὐχὶ ὁ Χριστός ‹λέγων› σῶσον σεαυτὸν καὶ ἡμᾶς

39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
39 One of the criminals who hung there heaped abuse on Him. “Are You not the Christ?” he said. “Save Yourself and us!”
39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று அவரைப் பழித்துரைத்தான்.

40δὲ ὁ ἕτερος Ἀποκριθεὶς ἐπιτιμῶν αὐτῷ ἔφη σὺ Οὐδὲ φοβῇ τὸν Θεόν ὅτι εἶ ἐν τῷ αὐτῷ κρίματι

40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
40 But the other one rebuked him, saying, “Do you not even fear God, since you are under the same judgment?
40 ஆனால், மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.

41καὶ ἡμεῖς μὲν δικαίως γὰρ ἀπολαμβάνομεν ὧν ἐπράξαμεν ἄξια δὲ οὗτος ἔπραξεν οὐδὲν ἄτοπον

41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
41 We are punished justly, for we are receiving what our actions deserve. But this man has done nothing wrong.”
41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான்.

42καὶ ἔλεγεν Ἰησοῦ μνήσθητί μου ὅταν ἔλθῃς εἰς σου τὴν βασιλείαν

42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
42 Then he said, “Jesus, remember mej when You come into Your kingdom!”
42 பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.

43Καὶ εἶπεν αὐτῷ Ἀμήν λέγω σοι σήμερον ἔσῃ μετ’ ἐμοῦ ἐν τῷ Παραδείσῳ

43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
43 And Jesus said to him, “Truly I tell you, today you will be with Me in Paradise.”
43 அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.

The Death of Jesus (Psalm 31:1–24; Matthew 27:45–56; Mark 15:33–41; John 19:28–30)

44Καὶ ἤδη ἦν ὡσεὶ ἕκτη ὥρα καὶ σκότος ἐγένετο ἐφ’ ὅλην τὴν γῆν ἕως ἐνάτης ὥρας

44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
44 It was now about the sixth hour, and darkness came over all the land until the ninth hour.k
44 ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.

45τοῦ ἡλίου ἐκλιπόντος δὲ τὸ καταπέτασμα τοῦ ναοῦ ἐσχίσθη μέσον

45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
45 The sun was darkened, and the veil of the temple was torn down the middle.
45 கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.

46Καὶ ὁ Ἰησοῦς φωνήσας μεγάλῃ φωνῇ εἶπεν Πάτερ εἰς σου χεῖράς παρατίθεμαι μου τὸ πνεῦμά δὲ εἰπὼν τοῦτο ἐξέπνευσεν

46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
46 Then Jesus called out in a loud voice, “Father, into Your hands I commit My Spirit.”m And when He had said this, He breathed His last.
46 "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.5

47δὲ ὁ ἑκατοντάρχης Ἰδὼν τὸ γενόμενον ἐδόξαζεν τὸν Θεὸν λέγων Ὄντως οὗτος ἦν δίκαιος ὁ ἄνθρωπος

47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
47 When the centurion saw what had happened, he gave glory to God, saying, “Surely this was a righteous man.”n
47 இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

48καὶ πάντες οἱ ὄχλοι συμπαραγενόμενοι ἐπὶ ταύτην τὴν θεωρίαν θεωρήσαντες τὰ γενόμενα ὑπέστρεφον τύπτοντες τὰ στήθη

48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
48 And when all the people who had gathered for this spectacle saw what had happened, they returned home beating their breasts.
48 இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.

49δὲ πάντες ἀπὸ οἱ γνωστοὶ αὐτῷ καὶ γυναῖκες αἱ συνακολουθοῦσαι αὐτῷ ἀπὸ τῆς Γαλιλαίας εἱστήκεισαν μακρόθεν ὁρῶσαι ταῦτα

49 அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
49 But all those who knew Jesus, including the women who had followed Him from Galilee, stood at a distance watching these things.
49 அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.6

The Burial of Jesus (Isaiah 53:9–12; Matthew 27:57–61; Mark 15:42–47; John 19:38–42)

50Καὶ ἰδοὺ ἀνὴρ ὑπάρχων [καὶ] βουλευτὴς ὀνόματι Ἰωσὴφ ἀγαθὸς καὶ δίκαιος ἀνὴρ

50 யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
50 Now there was a Council member named Joseph, a good and righteous man,
50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.

51οὗτος ἦν οὐκ συνκατατεθειμένος τῇ αὐτῶν βουλῇ καὶ τῇ πράξει ἀπὸ πόλεως τῶν Ἰουδαίων Ἁριμαθαίας ὃς προσεδέχετο τὴν βασιλείαν τοῦ Θεοῦ

51 அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
51 who had not consented to their decision or action. He was from the Judean town of Arimathea, and was waiting for the kingdom of God.
51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.

52οὗτος προσελθὼν τῷ Πιλάτῳ ᾐτήσατο τὸ σῶμα τοῦ Ἰησοῦ

52 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
52 He went to Pilate to ask for the body of Jesus.
52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.

53καὶ καθελὼν ἐνετύλιξεν αὐτὸ σινδόνι καὶ ἔθηκεν αὐτὸν ἐν μνήματι λαξευτῷ οὗ οὐδεὶς οὐκ οὔπω ἦν κείμενος

53 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
53 Then he took it down, wrapped it in a linen cloth, and placed it in a tomb cut into the rock, where no one had yet been laid.
53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.

54καὶ ἦν Παρασκευῆς ἡμέρα καὶ σάββατον ἐπέφωσκεν

54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஒய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
54 It was Preparation Day, and the Sabbath was beginning.o
54 அன்று ஆயத்த நாள்;7 ஓய்வுநாளின் தொடக்கம்.

7 "ஆயத்த நாள்" என்பது ஓய்வுநாளுக்கு முந்திய நாளைக் குறிக்கிறது.

55δὲ αἱ γυναῖκες αἵτινες ἦσαν συνεληλυθυῖαι αὐτῷ ἐκ τῆς Γαλιλαίας Κατακολουθήσασαι ἐθεάσαντο τὸ μνημεῖον καὶ ὡς αὐτοῦ τὸ σῶμα ἐτέθη

55 கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
55 The women who had come with Jesus from Galilee followed, and they saw the tomb and how His body was placed.
55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,

56δὲ ὑποστρέψασαι ἡτοίμασαν ἀρώματα καὶ μύρα Καὶ ἡσύχασαν μὲν τὸ σάββατον κατὰ τὴν ἐντολήν

56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
56 Then they returned to prepare spices and perfumes. And they rested on the Sabbath, according to the commandment.
56 திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

Footnotes:
16 a BYZ and TR include 17 Now Pilate was obligated to release to the people one prisoner at the feast ; see Matthew 27:15 and Mark 15:6.
23 b BYZ and TR include and that of the chief priests .
30 c Hosea 10:8
33 d Greek Kranion ; Vulgate Calvariae , rendered in some translations as Calvary
34 e Some manuscripts do not include Then Jesus said, “Father… what they are doing.”
34 f See Psalm 22:18.
35 g See Psalm 22:7.
36 h Or to offer Him wine vinegar
38 i BYZ and TR include written in Greek, Latin, and Hebrew ; see John 19:20.
42 j BYZ and TR said to Jesus, “Remember me, Lord,
44 k That is, from noon until three in the afternoon
45 l Or failed  or was obscured ; BYZ and TR became dark
46 m Psalm 31:5
47 n Or an innocent man
54 o Or was about to begin

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.