பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 6 | Luke 6

The Lord of the Sabbath (1 Samuel 21:1–7; Matthew 12:1–8; Mark 2:23–28)

1 ἐν σαββάτῳ δὲ Ἐγένετο αὐτὸν διαπορεύεσθαι διὰ σπορίμων καὶ αὐτοῦ οἱ μαθηταὶ ἔτιλλον τοὺς στάχυας ψώχοντες ταῖς χερσίν καὶ ἤσθιον

1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.
1 One Sabbatha Jesus was passing through the grainfields, and His disciples began to pick the heads of grain, rub them in their hands, and eat them.
1 ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்1

2 δὲ τινὲς τῶν Φαρισαίων εἶπαν Τί ποιεῖτε ὃ οὐκ ἔξεστιν τοῖς σάββασιν

2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
2 But some of the Pharisees asked, “Why are you doing what is unlawful on the Sabbath?”
2 பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.

3 Καὶ ὁ Ἰησοῦς ἀποκριθεὶς εἶπεν πρὸς αὐτοὺς Οὐδὲ ἀνέγνωτε τοῦτο ὃ Δαυὶδ ἐποίησεν ὁπότε αὐτὸς καὶ οἱ ὄντες μετ’ αὐτοῦ ἐπείνασεν

3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,
3 Jesus replied, “Have you not read what David did when he and his companions were hungry?
3 அதற்கு இயேசு மறுமொழியாக, "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?

4 ὡς εἰσῆλθεν εἰς τὸν οἶκον τοῦ Θεοῦ καὶ λαβὼν τοὺς ἄρτους τῆς προθέσεως καὶ ἔδωκεν τοῖς μετ’ αὐτοῦ ἔφαγεν οὓς οὐκ ἔξεστιν εἰ μὴ μόνους τοὺς ἱερεῖς φαγεῖν

4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
4 He entered the house of God, took the consecrated breadb and gave it to his companions, and ate what is lawful only for the priests to eat.”
4 அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார்.23

5 καὶ ἔλεγεν αὐτοῖς ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐστιν Κύριός τοῦ σαββάτου

5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
5 Then Jesus declared, “The Son of Man is Lord of the Sabbath.”
5 மேலும் அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

Jesus Heals on the Sabbath (Matthew 12:9–14; Mark 3:1–6)

6 ἐν ἑτέρῳ σαββάτῳ δὲ Ἐγένετο αὐτὸν εἰσελθεῖν εἰς τὴν συναγωγὴν καὶ διδάσκειν καὶ ἄνθρωπος ἦν ἐκεῖ καὶ αὐτοῦ ἡ δεξιὰ ἡ χεὶρ ἦν ξηρά

6 வேறொரு ஓய்வு நாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
6 On another Sabbath Jesus entered the synagogue and was teaching, and a man was there whose right hand was withered.
6 மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.

7 ἵνα εὕρωσιν κατηγορεῖν αὐτοῦ δὲ οἱ γραμματεῖς καὶ οἱ Φαρισαῖοι παρετηροῦντο αὐτὸν εἰ θεραπεύει ἐν τῷ σαββάτῳ

7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
7 Looking for a reason to accuse Jesus, the scribes and Pharisees were watching Him closely to see if He would heal on the Sabbath.
7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.

8 δὲ Αὐτὸς ᾔδει αὐτῶν τοὺς διαλογισμοὺς δὲ εἶπεν τῷ ἀνδρὶ τῷ ἔχοντι τὴν ξηρὰν χεῖρα Ἔγειρε καὶ στῆθι εἰς τὸ μέσον καὶ ἀναστὰς ἔστη

8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
8 But Jesus knew their thoughts and said to the man with the withered hand, “Get up and stand among us.” So he got up and stood there.
8 இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து நடுவே நில்லும்!" என்றார். அவர் எழுந்து நின்றார்.

9 δὲ ὁ Ἰησοῦς εἶπεν πρὸς αὐτούς Ἐπερωτῶ ὑμᾶς εἰ ἔξεστιν τῷ σαββάτῳ ἀγαθοποιῆσαι ἢ κακοποιῆσαι σῶσαι ψυχὴν ἢ ἀπολέσαι

9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு,
9 Then Jesus said to them, “I ask you, which is lawful on the Sabbath: to do good or to do evil, to save life or to destroy it?”
9 இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்.

10 Καὶ περιβλεψάμενος πάντας αὐτοὺς εἶπεν αὐτῷ Ἔκτεινον σου τὴν χεῖρά δὲ ὁ ἐποίησεν καὶ αὐτοῦ ἡ χεὶρ ἀπεκατεστάθη

10 அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
10 And after looking around at all of them, He said to the man, “Stretch out your hand.” He did so, and it was restored.
10 பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.

11 δὲ αὐτοὶ ἐπλήσθησαν ἀνοίας καὶ διελάλουν πρὸς ἀλλήλους τί ἂν ποιήσαιεν τῷ Ἰησοῦ

11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
11 But the scribes and Pharisees were filled with rage and began to discuss with one another what they might do to Jesus.
11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

The Twelve Apostles (Matthew 10:1–4; Mark 3:13–19)

12 δὲ Ἐγένετο ἐν ταύταις ταῖς ἡμέραις αὐτὸν ἐξελθεῖν εἰς τὸ ὄρος προσεύξασθαι καὶ ἦν διανυκτερεύων ἐν τῇ προσευχῇ τοῦ Θεοῦ

12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
12 In those days Jesus went out to the mountain to pray, and He spent the night in prayer to God.
12 அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

13 καὶ ὅτε ἡμέρα ἐγένετο προσεφώνησεν αὐτοῦ τοὺς μαθητὰς καὶ ἐκλεξάμενος δώδεκα ἀπ’ αὐτῶν οὓς καὶ ὠνόμασεν ἀποστόλους

13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
13 When daylight came, He called His disciples to Him and chose twelve of them, whom He also designated as apostles:
13 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

14 Σίμωνα ὃν καὶ ὠνόμασεν Πέτρον καὶ αὐτοῦ τὸν ἀδελφὸν Ἀνδρέαν καὶ Ἰάκωβον καὶ Ἰωάννην καὶ Φίλιππον καὶ Βαρθολομαῖον

14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,
14 Simon, whom He named Peter, and his brother Andrew; James and John; Philip and Bartholomew;
14 அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,

15 καὶ Μαθθαῖον καὶ Θωμᾶν καὶ Ἰάκωβον Ἁλφαίου καὶ Σίμωνα τὸν καλούμενον Ζηλωτὴν

15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
15 Matthew and Thomas; James son of Alphaeus and Simon called the Zealot;
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,

16 καὶ Ἰούδαν Ἰακώβου καὶ Ἰούδαν Ἰσκαριὼθ ὃς ἐγένετο προδότης

16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
16 Judas son of James, and Judas Iscariot, who became a traitor.
16 யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

Jesus Heals the Multitudes (Matthew 4:23–25; Mark 3:7–12)

17 Καὶ καταβὰς μετ’ αὐτῶν ἔστη ἐπὶ πεδινοῦ τόπου καὶ πολὺς ὄχλος αὐτοῦ μαθητῶν καὶ πολὺ πλῆθος τοῦ λαοῦ ἀπὸ πάσης τῆς Ἰουδαίας καὶ Ἰερουσαλὴμ καὶ τῆς παραλίου Τύρου καὶ Σιδῶνος

17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
17 Then Jesus came down with them and stood on a level place. A large crowd of His disciples was there, along with a great number of people from all over Judea, Jerusalem, and the sea coast of Tyre and Sidon.
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

18 οἳ ἦλθον ἀκοῦσαι αὐτοῦ καὶ ἰαθῆναι ἀπὸ αὐτῶν τῶν νόσων καὶ οἱ ἐνοχλούμενοι ἀπὸ ἀκαθάρτων πνευμάτων ἐθεραπεύοντο

18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
18 They had come to hear Him and to be healed of their diseases, and those troubled by unclean spirits were healed.
18 அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.

19 καὶ ὁ πᾶς ὄχλος ἐζήτουν ἅπτεσθαι αὐτοῦ ὅτι δύναμις ἐξήρχετο παρ’ αὐτοῦ καὶ ἰᾶτο πάντας

19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரைையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
19 The entire crowd was trying to touch Him, because power was coming from Him and healing them all.
19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.4

The Beatitudes (Psalm 1:1–6; Matthew 5:3–12)

20 Καὶ ἐπάρας αὐτοῦ τοὺς ὀφθαλμοὺς εἰς αὐτοῦ τοὺς μαθητὰς αὐτὸς ἔλεγεν Μακάριοι οἱ πτωχοί Ὅτι ὑμετέρα ἐστὶν ἡ βασιλεία τοῦ Θεοῦ

20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
20 Looking up at His disciples, Jesus said: “Blessed are you who are poor, for yours is the kingdom of God.
20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே.

21 Μακάριοι οἱ πεινῶντες νῦν Ὅτι χορτασθήσεσθε Μακάριοι οἱ κλαίοντες νῦν Ὅτι γελάσετε

21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
21 Blessed are you who hunger now, for you will be filled. Blessed are you who weep now, for you will laugh.
21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.5

22 Μακάριοί ἐστε ὅταν οἱ ἄνθρωποι μισήσωσιν ὑμᾶς καὶ ὅταν ἀφορίσωσιν καὶ ὀνειδίσωσιν ὑμᾶς καὶ ἐκβάλωσιν ὑμῶν τὸ ὄνομα ὡς πονηρὸν ἕνεκα τοῦ Υἱοῦ τοῦ ἀνθρώπου

22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
22 Blessed are you when people hate you, and when they exclude you and insult you and reject your name as evil because of the Son of Man.
22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.6

23 χάρητε ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ καὶ σκιρτήσατε γὰρ ἰδοὺ πολὺς ὑμῶν ὁ μισθὸς ἐν τῷ οὐρανῷ γὰρ αὐτὰ οἱ πατέρες ἐποίουν τοῖς προφήταις κατὰ τὰ αὐτῶν

23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
23 Rejoice in that day and leap for joy, because great is your reward in heaven. For their fathers treated the prophets in the same way.
23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.7

Woes to the Satisfied (Amos 6:1–7)

24 Πλὴν οὐαὶ ὑμῖν τοῖς πλουσίοις Ὅτι ἀπέχετε ὑμῶν τὴν παράκλησιν

24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
24 But woe to you who are rich, for you have already received your comfort.
24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.8

25 Οὐαὶ ὑμῖν οἱ ἐμπεπλησμένοι νῦν Ὅτι πεινάσετε Οὐαί οἱ γελῶντες νῦν Ὅτι πενθήσετε καὶ κλαύσετε

25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
25 Woe to you who are well fed now, for you will hunger. Woe to you who laugh now, for you will mourn and weep.
25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் , பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.

26 Οὐαὶ ὅταν πάντες οἱ ἄνθρωποι εἴπωσιν καλῶς ὑμᾶς γὰρ αὐτὰ οἱ πατέρες ἐποίουν τοῖς ψευδοπροφήταις Κατὰ τὰ αὐτῶν

26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
26 Woe to you when all men speak well of you, for their fathers treated the false prophets in the same way.
26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் ,அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

Love Your Enemies (Matthew 5:38–48)

27 Ἀλλὰ ὑμῖν τοῖς ἀκούουσιν λέγω Ἀγαπᾶτε ὑμῶν τοὺς ἐχθροὺς ποιεῖτε καλῶς τοῖς μισοῦσιν ὑμᾶς

27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
27 But to those of you who will listen, I say: Love your enemies, do good to those who hate you,
27 "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

28 εὐλογεῖτε τοὺς καταρωμένους ὑμᾶς προσεύχεσθε περὶ τῶν ἐπηρεαζόντων ὑμᾶς

28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
28 bless those who curse you, pray for those who mistreat you.
28 உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.9

29 τύπτοντί σε ἐπὶ τὴν σιαγόνα πάρεχε τῷ τὴν ἄλλην καὶ καὶ ἀπὸ τοῦ αἴροντός σου τὸ ἱμάτιον μὴ κωλύσῃς τὸν χιτῶνα καὶ

29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
29 If someone strikes you on one cheek, turn to him the other also. And if someone takes your cloak, do not withhold your tunic as well.
29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;

30 δίδου παντὶ αἰτοῦντί σε καὶ ἀπὸ τοῦ αἴροντος τὰ σὰ μὴ ἀπαίτει

30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
30 Give to everyone who asks you, and if anyone takes what is yours, do not demand it back.
30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்."

31 καὶ ποιεῖτε αὐτοῖς ὁμοίως καθὼς θέλετε ἵνα οἱ ἄνθρωποι ποιῶσιν ὑμῖν

31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
31 Do to others as you would have them do to you.
31 "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

32 Καὶ εἰ ἀγαπᾶτε τοὺς ἀγαπῶντας ὑμᾶς ποία χάρις ἐστίν ὑμῖν γὰρ καὶ οἱ ἁμαρτωλοὶ ἀγαπῶσιν τοὺς ἀγαπῶντας αὐτοὺς

32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
32 If you love those who love you, what credit is that to you? Even sinners love those who love them.
32 உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.

33 καὶ γὰρ ἐὰν ἀγαθοποιῆτε τοὺς ἀγαθοποιοῦντας ὑμᾶς ποία χάρις ἐστίν ὑμῖν καὶ οἱ ἁμαρτωλοὶ ποιοῦσιν τὸ αὐτὸ

33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
33 If you do good to those who do good to you, what credit is that to you? Even sinners do the same.
33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.10

34 καὶ ἐὰν δανίσητε παρ’ ὧν ἐλπίζετε λαβεῖν ποία χάρις ἐστίν ὑμῖν καὶ ἁμαρτωλοὶ δανίζουσιν ἁμαρτωλοῖς ἵνα ἀπολάβωσιν τὰ ἴσα

34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
34 And if you lend to those from whom you expect repayment, what credit is that to you? Even sinners lend to sinners, expecting to be repaid in full.
34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

35 Πλὴν ἀγαπᾶτε ὑμῶν τοὺς ἐχθροὺς καὶ ἀγαθοποιεῖτε καὶ δανίζετε ἀπελπίζοντες μηδὲν καὶ ὑμῶν ὁ μισθὸς ἔσται πολύς καὶ ἔσεσθε υἱοὶ Ὑψίστου ὅτι αὐτὸς ἐστιν χρηστός ἐπὶ τοὺς ἀχαρίστους καὶ πονηρούς

35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
35 But love your enemies, do good to them, and lend to them, expecting nothing in return. Then your reward will be great, and you will be sons of the Most High; for He is kind to the ungrateful and wicked.
35 நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில், அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

36 Γίνεσθε οἰκτίρμονες [καὶ] καθὼς ὑμῶν ὁ Πατὴρ ἐστίν οἰκτίρμων

36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
36 Be merciful, just as your Father is merciful.
36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

Judging Others (Matthew 7:1–6; Romans 14:1–12)

37 Καὶ μὴ κρίνετε καὶ οὐ μὴ κριθῆτε καὶ μὴ καταδικάζετε καὶ οὐ μὴ καταδικασθῆτε ἀπολύετε καὶ ἀπολυθήσεσθε

37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
37 Do not judge, and you will not be judged. Do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven.
37 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38 δίδοτε καὶ δοθήσεται ὑμῖν καλὸν μέτρον πεπιεσμένον σεσαλευμένον ὑπερεκχυννόμενον δώσουσιν εἰς ὑμῶν τὸν κόλπον γὰρ ᾧ μέτρῳ μετρεῖτε ἀντιμετρηθήσεται ὑμῖν

38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
38 Give, and it will be given to you. A good measure, pressed down, shaken together, and running over will be poured into your lap. For with the measure you use, it will be measured back to you.”
38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

39 δὲ Εἶπεν καὶ αὐτοῖς παραβολὴν δύναται τυφλὸς Μήτι ὁδηγεῖν τυφλὸν οὐχὶ ἀμφότεροι ἐμπεσοῦνται εἰς βόθυνον

39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா
39 Jesus also told them a parable: “Can a blind man lead a blind man? Will they not both fall into a pit?
39 மேலும், இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?11

40 μαθητὴς ἔστιν οὐκ ὑπὲρ τὸν διδάσκαλον δὲ πᾶς κατηρτισμένος ἔσται ὡς ὁ αὐτοῦ διδάσκαλος

40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
40 A disciple is not above his teacher, but everyone who is fully trained will be like his teacher.
40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால், தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.12

41 δὲ Τί βλέπεις τὸ κάρφος τὸ ἐν τῷ σου ἀδελφοῦ τοῦ ὀφθαλμῷ τὴν δὲ οὐ κατανοεῖς δοκὸν τὴν ἐν τῷ ἰδίῳ ὀφθαλμῷ

41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
41 Why do you look at the speck in your brother’s eye, but fail to notice the beam in your own eye?
41 "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

42 πῶς δύνασαι λέγειν τῷ σου ἀδελφῷ Ἀδελφέ ἄφες ἐκβάλω τὸ κάρφος τὸ ἐν τῷ σου ὀφθαλμῷ αὐτὸς οὐ βλέπων δοκὸν τὴν ἐν τῷ σοῦ ὀφθαλμῷ ὑποκριτά πρῶτον ἔκβαλε τὴν δοκὸν ἐκ σοῦ τοῦ ὀφθαλμοῦ καὶ τότε διαβλέψεις ἐκβαλεῖν τὸ κάρφος τὸ ἐν τῷ τοῦ σου ἀδελφοῦ ὀφθαλμῷ

42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
42 How can you say, ‘Brother,c let me take the speck out of your eye,’ while you yourself fail to see the beam in your own eye? You hypocrite! First take the beam out of your own eye, and then you will see clearly to remove the speck from your brother’s eye.
42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், 'உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

A Tree and Its Fruit (Matthew 7:15–23; Matthew 12:33–37)

43 γάρ ἐστιν Οὐ καλὸν δένδρον ποιοῦν σαπρόν καρπὸν οὐδὲ πάλιν σαπρὸν δένδρον ποιοῦν καλόν καρπὸν

43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
43 No good tree bears bad fruit, nor does a bad tree bear good fruit.
43 "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.

44 γὰρ ἕκαστον δένδρον γινώσκεται ἐκ τοῦ ἰδίου καρποῦ γὰρ οὐ σῦκα συλλέγουσιν ἐξ ἀκανθῶν οὐδὲ τρυγῶσιν σταφυλὴν ἐκ βάτου

44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
44 For each tree is known by its own fruit. Indeed, figs are not gathered from thornbushes, nor grapes from brambles.
44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

45 ὁ ἀγαθὸς ἄνθρωπος προφέρει ἀγαθόν τὸ ἐκ τοῦ ἀγαθοῦ θησαυροῦ τῆς ‹αὐτοῦ› καρδίας καὶ ὁ πονηρὸς προφέρει τὸ πονηρόν ἐκ τοῦ πονηροῦ γὰρ ἐκ περισσεύματος καρδίας αὐτοῦ τὸ στόμα λαλεῖ

45 நல்ல மனுஷன் தன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
45 The good man brings good things out of the good treasure of his heart, and the evil man brings evil things out of the evil treasure of his heart. For out of the overflow of the heart, the mouth speaks.
45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

The House on the Rock (Matthew 7:24–27)

46 δέ Τί καλεῖτε με Κύριε κύριε καὶ οὐ ποιεῖτε ἃ λέγω

46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
46 Why do you call Me ‘Lord, Lord,’ but not do what I say?
46 "நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்?13

47 ὑποδείξω ὑμῖν τίνι ἐστὶν ὅμοιος Πᾶς ὁ ἐρχόμενος πρός με καὶ ἀκούων μου τῶν λόγων καὶ ποιῶν αὐτούς

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
47 I will show you what he is like who comes to Me and hears My words and acts on them:
47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;

48 ἐστιν ὅμοιός ἀνθρώπῳ οἰκοδομοῦντι οἰκίαν ὃς ἔσκαψεν καὶ ἐβάθυνεν καὶ ἔθηκεν θεμέλιον ἐπὶ τὴν πέτραν δὲ πλημμύρης γενομένης ὁ ποταμὸς προσέρηξεν ἐκείνῃ τῇ οἰκίᾳ καὶ ἴσχυσεν οὐκ σαλεῦσαι αὐτὴν διὰ αὐτήν τὸ οἰκοδομῆσθαι καλῶς

48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
48 He is like a man building a house, who dug down deep and laid his foundation on the rock. When the flood came, the torrent crashed against that house but could not shake it, because it was well built.d
48 அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால், அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

49 δὲ ὁ ἀκούσας καὶ μὴ ποιήσας ἐστιν ὅμοιός ἀνθρώπῳ οἰκοδομήσαντι οἰκίαν ἐπὶ τὴν γῆν χωρὶς θεμελίου ὁ ποταμός προσέρηξεν ᾗ καὶ εὐθὺς συνέπεσεν καὶ μέγα ἐγένετο τὸ τῆς οἰκίας ἐκείνης ῥῆγμα

49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.
49 But the one who hears My words and does not act on them is like a man who built his house on ground without a foundation. The torrent crashed against that house, and immediately it fell—and great was its destruction!”
49 நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a BYZ and TR On the second Sabbath after the first 
4 b Or the Bread of the Presence 
42 c Literally How can you say to your brother, ‘Brother 
48 d BYZ and TR because its foundation was on the rock ; see Matthew 7:25.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.