பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 8 | Luke 8

Women Minister to Jesus

1Καὶ ἐγένετο τῷ καθεξῆς ἐν καὶ αὐτὸς διώδευεν κατὰ πόλιν καὶ κώμην κηρύσσων καὶ εὐαγγελιζόμενος τὴν βασιλείαν τοῦ Θεοῦ καὶ οἱ δώδεκα σὺν αὐτῷ

1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
1 Soon afterward, Jesus traveled from one town and village to another, preaching and proclaiming the good news of the kingdom of God. The Twelve were with Him,
1 அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.

2καὶ τινες γυναῖκές αἳ ἦσαν τεθεραπευμέναι ἀπὸ πονηρῶν πνευμάτων καὶ ἀσθενειῶν Μαρία ἡ καλουμένη Μαγδαληνή ἀφ’ ἧς ἑπτὰ δαιμόνια ἐξεληλύθει

2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
2 as well as some women who had been healed of evil spirits and infirmities: Mary called Magdalene, from whom seven demons had gone out,
2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்

3καὶ Ἰωάννα γυνὴ Ἡρῴδου ἐπιτρόπου Χουζᾶ καὶ Σουσάννα καὶ πολλαί ἕτεραι αἵτινες διηκόνουν αὐτοῖς ἐκ αὐταῖς τῶν ὑπαρχόντων

3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
3 Joanna the wife of Herod’s household manager Chuza, Susanna, and many others. These women were ministering to thema out of their own means.
3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.1

The Parable of the Sower (Matthew 13:1–23; Mark 4:1–20)

4δὲ πολλοῦ ὄχλου Συνιόντος καὶ τῶν ἐπιπορευομένων πρὸς αὐτὸν κατὰ πόλιν εἶπεν διὰ παραβολῆς

4 சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது. அவர் உவமையாகச் சொன்னது:
4 While a large crowd was gathering and people were coming to Jesus from town after town, He told them this parable:
4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது:

5ὁ σπείρων Ἐξῆλθεν τοῦ σπεῖραι αὐτοῦ τὸν σπόρον καὶ ἐν αὐτὸν τῷ σπείρειν ὃ μὲν ἔπεσεν παρὰ τὴν ὁδόν καὶ κατεπατήθη καὶ τὰ πετεινὰ τοῦ οὐρανοῦ κατέφαγεν αὐτό

5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5 “A farmer went out to sow his seed. And as he was sowing, some seed fell along the path, where it was trampled, and the birds of the air devoured it.
5 "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.

6Καὶ ἕτερον κατέπεσεν ἐπὶ τὴν πέτραν καὶ φυὲν ἐξηράνθη διὰ τὸ ἔχειν μὴ ἰκμάδα

6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
6 Some fell on rocky ground, and when it came up, the seedlings withered because they had no moisture.
6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

7Καὶ ἕτερον ἔπεσεν ἐν μέσῳ τῶν ἀκανθῶν καὶ αἱ ἄκανθαι συμφυεῖσαι ἀπέπνιξαν αὐτό

7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
7 Other seed fell among thorns, which grew up with it and choked the seedlings.
7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.

8Καὶ ἕτερον ἔπεσεν εἰς τὴν τὴν ἀγαθήν γῆν καὶ φυὲν ἐποίησεν καρπὸν ἑκατονταπλασίονα λέγων Ταῦτα ἐφώνει Ὁ ἔχων ὦτα ἀκούειν ἀκουέτω

8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
8 Still other seed fell on good soil, where it sprang up and produced a crop—a hundredfold.” As Jesus said this, He called out, “He who has ears to hear, let him hear.”
8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன." இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.

9δὲ αὐτοῦ οἱ μαθηταὶ Ἐπηρώτων αὐτὸν Τίς αὕτη ἡ παραβολή εἴη

9 அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
9 Then His disciples asked Him what this parable meant.
9 இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.

10δὲ Ὁ εἶπεν γνῶναι τὰ μυστήρια τῆς βασιλείας τοῦ Θεοῦ δέδοται Ὑμῖν δὲ τοῖς λοιποῖς ἐν παραβολαῖς ἵνα Βλέποντες μὴ βλέπωσιν Καὶ ἀκούοντες μὴ συνιῶσιν

10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
10 He replied, “The knowledge of the mysteries of the kingdom of God has been given to you, but to others I speak in parables, so that, ‘though seeing, they may not see; though hearing, they may not understand.’b
10 அதற்கு இயேசு கூறியது: "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே, 'அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை.' "2

11δὲ αὕτη Ἔστιν ἡ παραβολή ὁ σπόρος ἐστὶν ὁ λόγος τοῦ Θεοῦ

11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
11 Now this is the meaning of the parable: The seed is the word of God.
11 "இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.

12δὲ οἱ παρὰ τὴν ὁδόν εἰσιν οἱ ἀκούσαντες εἶτα ὁ διάβολος ἔρχεται καὶ αἴρει τὸν λόγον ἀπὸ αὐτῶν τῆς καρδίας ἵνα μὴ πιστεύσαντες σωθῶσιν

12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
12 The seedsc along the path are those who hear, but the devil comes and takes away the word from their hearts, so that they may not believe and be saved.
12 வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

13δὲ Οἱ ἐπὶ τῆς πέτρας οἳ ὅταν ἀκούσωσιν τὸν λόγον δέχονται μετὰ χαρᾶς καὶ οὗτοι ἔχουσιν οὐκ ῥίζαν οἳ πιστεύουσιν πρὸς καιρὸν καὶ ἐν καιρῷ πειρασμοῦ ἀφίστανται

13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
13 The seeds on rocky ground are those who hear the word and receive it with joy, but they have no root. They believe for a season, but in the time of testing, they fall away.
13 பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.

14δὲ Τὸ πεσόν εἰς τὰς ἀκάνθας οὗτοί εἰσιν οἱ ἀκούσαντες καὶ πορευόμενοι συμπνίγονται ὑπὸ μεριμνῶν καὶ πλούτου καὶ ἡδονῶν τοῦ βίου καὶ οὐ τελεσφοροῦσιν

14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
14 The seeds that fell among the thorns are those who hear, but as they go on their way, they are choked by the worries, riches, and pleasures of this life, and their fruit does not mature.
14 முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

15δὲ Τὸ ἐν τῇ καλῇ γῇ οὗτοί εἰσιν οἵτινες ἐν καλῇ καὶ ἀγαθῇ καρδίᾳ ἀκούσαντες τὸν λόγον κατέχουσιν καὶ ἐν ὑπομονῇ καρποφοροῦσιν

15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
15 But the seeds on good soil are those with a noble and good heart, who hear the word, cling to it, and by persevering produce a crop.
15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

The Lesson of the Lamp (Mark 4:21–25)

16δὲ Οὐδεὶς ἅψας λύχνον καλύπτει αὐτὸν σκεύει ἢ τίθησιν ὑποκάτω κλίνης ἀλλ’ τίθησιν ἐπὶ λυχνίας ἵνα οἱ εἰσπορευόμενοι βλέπωσιν τὸ φῶς

16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
16 No one lights a lamp and covers it with a jar or puts it under a bed. Instead, he sets it on a stand, so those who enter can see the light.
16 "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.3

17γάρ ἐστιν οὐ κρυπτὸν ὃ οὐ γενήσεται φανερὸν οὐδὲ ἀπόκρυφον ὃ οὐ μὴ γνωσθῇ καὶ ἔλθῃ εἰς φανερὸν

17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
17 For there is nothing hidden that will not be disclosed, and nothing concealed that will not be made known and brought to light.
17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.4

18Βλέπετε οὖν πῶς ἀκούετε γὰρ ὃς ἂν ἔχῃ αὐτῷ δοθήσεται καὶ ὃς ἂν μὴ ἔχῃ καὶ ὃ δοκεῖ ἔχειν ἀρθήσεται ἀπ’ αὐτοῦ

18 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
18 Pay attention, therefore, to how you listen. Whoever has will be given more, but whoever does not have, even what he thinks he has will be taken away from him.”
18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்."5

Jesus’ Mother and Brothers (Matthew 12:46–50; Mark 3:31–35)

19δὲ αὐτοῦ ἡ μήτηρ καὶ οἱ ἀδελφοὶ Παρεγένετο πρὸς αὐτὸν καὶ οὐκ ἠδύναντο συντυχεῖν αὐτῷ διὰ τὸν ὄχλον

19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
19 Then Jesus’ mother and brothers came to see Him, but they were unable to reach Him because of the crowd.
19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.

20δὲ ἀπηγγέλη αὐτῷ σου Ἡ μήτηρ καὶ σου οἱ ἀδελφοί ἑστήκασιν ἔξω θέλοντές ἰδεῖν σε

20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
20 He was told, “Your mother and brothers are standing outside, wanting to see You.”
20 "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.

21δὲ Ὁ ἀποκριθεὶς εἶπεν πρὸς αὐτούς μου Μήτηρ καὶ μου ἀδελφοί εἰσιν οὗτοί οἱ ἀκούοντες τὸν λόγον τοῦ Θεοῦ καὶ ποιοῦντες

21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
21 But He replied, “My mother and brothers are those who hear the word of God and carry it out.”
21 அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.6

Jesus Calms the Storm (Psalm 107:1–43; Matthew 8:23–27; Mark 4:35–41)

22δὲ Ἐγένετο ἐν μιᾷ τῶν ἡμερῶν καὶ εἶπεν πρὸς αὐτούς Διέλθωμεν εἰς τὸ πέραν τῆς λίμνης καὶ αὐτὸς ἐνέβη εἰς πλοῖον καὶ αὐτοῦ οἱ μαθηταὶ καὶ ἀνήχθησαν

22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
22 One day Jesus said to His disciples, “Let us cross to the other side of the lake.” So He got into a boat with them and set out.
22 ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.

23δὲ αὐτῶν πλεόντων ἀφύπνωσεν καὶ λαῖλαψ ἀνέμου κατέβη εἰς τὴν λίμνην καὶ συνεπληροῦντο καὶ ἐκινδύνευον

23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
23 As they sailed, He fell asleep, and a windstorm came down on the lake, so that the boat was being swamped, and they were in great danger.
23 படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.

24δὲ Προσελθόντες διήγειραν αὐτὸν λέγοντες Ἐπιστάτα ἐπιστάτα ἀπολλύμεθα δὲ Ὁ διεγερθεὶς ἐπετίμησεν τῷ ἀνέμῳ καὶ τῷ κλύδωνι τοῦ ὕδατος καὶ ἐπαύσαντο καὶ ἐγένετο γαλήνη

24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
24 The disciples went and woke Him, saying, “Master, Master, we are perishing!” Then Jesus got up and rebuked the wind and the raging waters, and they subsided, and all was calm.
24 அவர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று.

25Ποῦ ὑμῶν ἡ πίστις δὲ Εἶπεν αὐτοῖς δὲ Φοβηθέντες ἐθαύμασαν λέγοντες πρὸς ἀλλήλους Τίς ἄρα ἐστιν οὗτός ὅτι ἐπιτάσσει καὶ τοῖς ἀνέμοις καὶ τῷ ὕδατι καὶ ὑπακούουσιν αὐτῷ

25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
25 “Where is your faith?” He asked. Frightened and amazed, they asked one another, “Who is this? He commands even the winds and the water, and they obey Him!”
25 அவர் அவர்களிடம், "உங்கள் நம்பிக்கை எங்கே?" என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், "இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

The Demons and the Pigs (Matthew 8:28–34; Mark 5:1–20)

26Καὶ κατέπλευσαν εἰς τὴν χώραν τῶν Γερασηνῶν ἥτις ἐστὶν ἀντιπέρα τῆς Γαλιλαίας

26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
26 Then they sailed to the region of the Gerasenes,d across the lake from Galilee.
26 அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே இருக்கும் கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள்.

27δὲ αὐτῷ ἐξελθόντι ἐπὶ τὴν γῆν ὑπήντησεν τις ἔχων δαιμόνια ἀνήρ ἐκ τῆς πόλεως καὶ ἱκανῷ χρόνῳ οὐκ ἐνεδύσατο ἱμάτιον καὶ οὐκ ἔμενεν ἐν οἰκίᾳ ἀλλ’ ἐν τοῖς μνήμασιν

27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும் வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
27 When Jesus stepped ashore, He was met by a demon-possessed man from the town. For a long time this man had not worn clothing or lived in a house, but he stayed in the tombs.
27 கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கிவந்தார்.

28δὲ Ἰδὼν τὸν Ἰησοῦν ἀνακράξας προσέπεσεν αὐτῷ καὶ μεγάλῃ φωνῇ εἶπεν Τί σοί καὶ ἐμοὶ Ἰησοῦ Υἱὲ τοῦ τοῦ Ὑψίστου Θεοῦ δέομαί σου μή βασανίσῃς με

28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
28 When the man saw Jesus, he cried out and fell down before Him, shouting in a loud voice, “What do You want with me, Jesus, Son of the Most High God? I beg You not to torture me!”
28 இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து, "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.

29γὰρ παρήγγελλεν τῷ τῷ ἀκαθάρτῳ πνεύματι ἐξελθεῖν ἀπὸ τοῦ ἀνθρώπου γὰρ πολλοῖς χρόνοις συνηρπάκει αὐτόν καὶ ἐδεσμεύετο φυλασσόμενος ἁλύσεσιν καὶ πέδαις καὶ διαρρήσσων τὰ δεσμὰ ἠλαύνετο ὑπὸ* τοῦ δαιμονίου εἰς τὰς ἐρήμους

29 அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
29 For Jesus had commanded the unclean spirit to come out of the man. Many times it had seized him, and though he was bound with chains and shackles, he had broken the chains and been driven by the demon into solitary places.
29 ஏனென்றால், அவரைவிட்டு வெளியேறுமாறு அத்தீய ஆவிக்கு இயேசு கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது. அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தும் அவற்றை உடைத்து எறிந்துவிடுவார். அது மட்டுமல்ல, தீய ஆவி அவரைப் பாலை நிலத்திற்கும் இழுத்துச் செல்லும்.

30Τί ἐστιν σοι ὄνομά δὲ ὁ Ἰησοῦς Ἐπηρώτησεν αὐτὸν Λεγιών Δὲ ὁ εἶπεν ὅτι πολλὰ δαιμόνια εἰσῆλθεν εἰς αὐτόν

30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
30 “What is your name?” Jesus asked. “Legion,” he replied, because many demons had gone into him.
30 இயேசு அவரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க, அவர், "இலேகியோன்" என்றார். ஏனெனில், பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.7

7 இலேகியோன் என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு.

31καὶ παρεκάλουν αὐτὸν ἵνα μὴ ἐπιτάξῃ αὐτοῖς ἀπελθεῖν εἰς τὴν ἄβυσσον

31 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
31 And the demons kept begging Jesus not to order them to go into the Abyss.
31 அவை தங்களைப் பாதாளத்துக்குள் போகப் பணிக்கவேண்டாமென அவரை வேண்டின.

32δὲ ἐκεῖ ἐν τῷ ὄρει ἱκανῶν ἀγέλη χοίρων Ἦν βοσκομένη καὶ παρεκάλεσαν αὐτὸν ἵνα ἐπιτρέψῃ αὐτοῖς εἰσελθεῖν εἰς ἐκείνους καὶ ἐπέτρεψεν αὐτοῖς

32 அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்ளே போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
32 There on the hillside a large herd of pigs was feeding. So the demons begged Jesus to let them enter the pigs, and He gave them permission.
32 அங்கு ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றுக்குள் புகும்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.

33δὲ τὰ δαιμόνια Ἐξελθόντα ἀπὸ τοῦ ἀνθρώπου εἰσῆλθον εἰς τοὺς χοίρους καὶ ἡ ἀγέλη ὥρμησεν κατὰ τοῦ κρημνοῦ εἰς τὴν λίμνην καὶ ἀπεπνίγη

33 அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
33 Then the demons came out of the man and went into the pigs, and the herd rushed down the steep bank into the lake and was drowned.
33 பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

34δὲ οἱ βόσκοντες Ἰδόντες τὸ γεγονὸς ἔφυγον καὶ ἀπήγγειλαν εἰς τὴν πόλιν καὶ εἰς τοὺς ἀγρούς

34 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
34 When those tending the pigs saw what had happened, they ran off and reported this in the town and countryside.
34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.

35δὲ ἐξῆλθον ἰδεῖν τὸ γεγονὸς καὶ ἦλθον πρὸς τὸν Ἰησοῦν καὶ εὗρον τὸν ἄνθρωπον οὗ τὰ δαιμόνια ἐξῆλθεν ἀφ’ καθήμενον παρὰ τοῦ Ἰησοῦ τοὺς πόδας ἱματισμένον καὶ σωφρονοῦντα καὶ ἐφοβήθησαν

35 அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
35 So the people went out to see what had happened. They came to Jesus and found the man whom the demons had left, sitting at Jesus’ feet, clothed and in his right mind; and they were afraid.
35 நடந்தது என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர்; பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.

36δὲ οἱ ἰδόντες ἀπήγγειλαν αὐτοῖς πῶς ὁ δαιμονισθείς ἐσώθη

36 பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்ட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
36 Meanwhile, those who had seen it reported how the demon-possessed man had been healed.
36 நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

37Καὶ ἅπαν τὸ πλῆθος τῆς περιχώρου τῶν Γερασηνῶν ἠρώτησεν αὐτὸν ἀπελθεῖν ἀπ’ αὐτῶν ὅτι μεγάλῳ φόβῳ συνείχοντο δὲ αὐτὸς ἐμβὰς εἰς πλοῖον ὑπέστρεψεν

37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
37 Then all the people of the region of the Gerasenes asked Jesus to depart from them, because great fear had taken hold of them. So He got into the boat and started back.
37 அப்பொழுது கெரசேனரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும் அச்சம் மேலிட்டவர்களாய்த் தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.

38δὲ ὁ ἀνὴρ οὗ τὰ δαιμόνια ἐξεληλύθει ἀφ’ Ἐδεῖτο αὐτοῦ εἶναι σὺν αὐτῷ δὲ ἀπέλυσεν αὐτὸν λέγων

38 பிசாசுகள் நீங்கின மனுஷன் அவருடனே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
38 The man whom the demons had left begged to go with Jesus. But He sent him away, saying,
38 ❮38-39❯அப்போது பேய்கள் நீங்கப்பெற்றவர் தம்மைக் கூட்டிச் செல்லும்படி இயேசுவிடம் மன்றாடினார். அவரோ, "உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்; கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அவரும் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.

39Ὑπόστρεφε εἰς σου τὸν οἶκόν καὶ διηγοῦ ὅσα ὁ Θεός ἐποίησεν σοι καὶ ἀπῆλθεν κηρύσσων ὅλην καθ’ τὴν πόλιν ὅσα ὁ Ἰησοῦς ἐποίησεν αὐτῷ

39 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
39 “Return home and describe how much God has done for you.” So the man went away and proclaimed all over the town how much Jesus had done for him.

The Healing Touch of Jesus (Matthew 9:18–26; Mark 5:21–43)

40δὲ Ἐν τὸν Ἰησοῦν τῷ ὑποστρέφειν ὁ ὄχλος ἀπεδέξατο αὐτὸν γὰρ ἦσαν πάντες προσδοκῶντες αὐτόν

40 இயேசு திரும்பி வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
40 When Jesus returned, the crowd welcomed Him, for they had all been waiting for Him.
40 இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.

41καὶ ἰδοὺ ἀνὴρ ᾧ συναγωγῆς ἄρχων ὄνομα Ἰάϊρος καὶ οὗτος ὑπῆρχεν τῆς ἦλθεν καὶ πεσὼν παρὰ ‹τοῦ› Ἰησοῦ τοὺς πόδας παρεκάλει αὐτὸν εἰσελθεῖν εἰς αὐτοῦ τὸν οἶκον

41 அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து. இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
41 Just then a synagogue leader named Jairus came and fell at Jesus’ feet. He begged Him to come to his house,
41 அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார்.

42ὅτι αὐτῷ ἦν μονογενὴς θυγάτηρ ὡς δώδεκα ἐτῶν καὶ αὐτὴ ἀπέθνῃσκεν δὲ Ἐν αὐτὸν τῷ ὑπάγειν οἱ ὄχλοι συνέπνιγον αὐτόν

42 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
42 because his only daughter, who was about twelve, was dying. As Jesus went with him, the crowds pressed around Him,
42 ஏனெனில், பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது

43καὶ γυνὴ οὖσα ἐν ῥύσει αἵματος ἀπὸ δώδεκα ἐτῶν ἥτις προσαναλώσασα ὅλον τὸν βίον› ‹ἰατροῖς ἀπ’ οὐδενὸς ἴσχυσεν οὐκ θεραπευθῆναι

43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
43 including a woman who had suffered from bleeding for twelve years. She had spent all her money on physicians,e but no one was able to heal her.
43 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44προσελθοῦσα ὄπισθεν ἥψατο τοῦ κρασπέδου αὐτοῦ τοῦ ἱματίου καὶ παραχρῆμα αὐτῆς ἡ ῥύσις τοῦ αἵματος ἔστη

44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
44 She came up behind Jesus and touched the fringe of His cloak, and immediately her bleeding stopped.
44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.

45Τίς ὁ ἁψάμενός μου Καὶ ὁ Ἰησοῦς εἶπεν δὲ πάντων Ἀρνουμένων Ἐπιστάτα εἶπεν ὁ Πέτρος οἱ ὄχλοι συνέχουσίν καὶ ἀποθλίβουσιν σε

45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
45 “Who touched Me?” Jesus asked. But they all denied it. “Master,” said Peterf , “the people are crowding and pressing against You.”
45 "என்னைத் தொட்டவர் யார்?" என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர். பேதுரு, "ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே" என்றார்.

46δὲ Ὁ Ἰησοῦς εἶπεν τις Ἥψατό μού γὰρ ἐγὼ ἔγνων δύναμιν ἐξεληλυθυῖαν ἀπ’ ἐμοῦ

46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
46 But Jesus declared, “Someone touched Me, for I know that power has gone out from Me.”
46 அதற்கு இயேசு, "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.

47δὲ ἡ γυνὴ Ἰδοῦσα ὅτι οὐκ ἔλαθεν ἦλθεν τρέμουσα καὶ προσπεσοῦσα αὐτῷ ἐνώπιον παντὸς τοῦ λαοῦ ἀπήγγειλεν δι’ ἣν αἰτίαν ἥψατο αὐτοῦ καὶ ὡς ἰάθη παραχρῆμα

47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
47 Then the woman, seeing that she could not escape notice, came trembling and fell down before Him. In the presence of all the people, she explained why she had touched Him and how she had immediately been healed.
47 அப்பெண்தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே வந்து அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.

48Θυγάτηρ δὲ Ὁ εἶπεν αὐτῇ σου ἡ πίστις σέσωκέν σε πορεύου εἰς εἰρήνην

48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
48 “Daughter,” said Jesus, “your faith has healed you. Go in peace.”
48 இயேசு அவரிடம், "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

49αὐτοῦ Ἔτι λαλοῦντος τις ἔρχεταί παρὰ τοῦ ἀρχισυναγώγου σου ἡ θυγάτηρ Τέθνηκεν λέγων ὅτι σκύλλε τὸν Διδάσκαλον μηκέτι

49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
49 While He was still speaking, someone arrived from the house of the synagogue leader. “Your daughter is dead,” he told Jairus. “Do not bother the Teacher anymore.”
49 அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஒருவர் வந்து, "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

50δὲ Ὁ Ἰησοῦς ἀκούσας ἀπεκρίθη αὐτῷ Μὴ φοβοῦ μόνον πίστευσον καὶ σωθήσεται

50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
50 But Jesus overheard them and said to Jairus, “Do not be afraid; just believe, and she will be healed.”
50 இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

51δὲ Ἐλθὼν εἰς τὴν οἰκίαν οὐκ ἀφῆκεν τινα εἰσελθεῖν σὺν αὐτῷ εἰ μὴ Πέτρον καὶ Ἰωάννην καὶ Ἰάκωβον καὶ τὸν τῆς παιδὸς πατέρα καὶ τὴν μητέρα

51 அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
51 When He entered the house, He did not allow anyone to go in with Him except Peter, John, James, and the child’s father and mother.
51 வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.

52δὲ πάντες ἔκλαιον καὶ ἐκόπτοντο αὐτήν δὲ ὁ εἶπεν Μὴ κλαίετε γὰρ› ‹οὐ ἀπέθανεν ἀλλὰ καθεύδει

52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
52 Meanwhile, everyone was weeping and mourning for her. But Jesus said, “Stop weeping; she is not dead but asleep.”
52 அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவோ, "அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.

53Καὶ κατεγέλων αὐτοῦ εἰδότες ὅτι ἀπέθανεν

53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
53 And they laughed at Him, knowing that she was dead.
53 அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால் அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.

54δὲ Αὐτὸς κρατήσας αὐτῆς τῆς χειρὸς ἐφώνησεν λέγων Ἡ Παῖς ἔγειρε

54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
54 But Jesus took her by the hand and called out, “Child, get up!”
54 அவர் அவளது கையைப் பிடித்து, "சிறுமியே, எழுந்திடு!" என்று கூப்பிட்டார்.

55καὶ αὐτῆς τὸ πνεῦμα ἐπέστρεψεν καὶ παραχρῆμα ἀνέστη καὶ διέταξεν αὐτῇ δοθῆναι φαγεῖν

55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
55 Her spirit returned, and at once she got up. And He directed that she be given something to eat.
55 உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள்; இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்.

56καὶ αὐτῆς οἱ γονεῖς ἐξέστησαν δὲ ὁ παρήγγειλεν αὐτοῖς εἰπεῖν μηδενὶ τὸ γεγονός

56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
56 Her parents were astounded, but Jesus ordered them not to tell anyone what had happened.
56 அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
3 a TR to Him
10 b Isaiah 6:9 (See also LXX)
12 c Literally the ones ; also in verses 13, 14, and 15
26 d BYZ and TR Gadarenes ; Tischendorf Gergesenes ; also in verse 37
43 e NE and WH do not include She had spent all her money on physicians .
45 f BYZ and TR include and those who were with him .

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.