பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 16 | Luke 16

The Parable of the Shrewd Manager

1 δὲ καὶ Ἔλεγεν πρὸς τοὺς μαθητάς ἦν τις πλούσιος Ἄνθρωπός ὃς εἶχεν οἰκονόμον καὶ διεβλήθη αὐτῷ ὡς οὗτος διασκορπίζων αὐτοῦ τὰ ὑπάρχοντα

1 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
1 Jesus also said to His disciples, “There was a rich man whose manager was accused of wasting his possessions.
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.

2 καὶ φωνήσας αὐτὸν εἶπεν αὐτῷ Τί τοῦτο ἀκούω περὶ σοῦ ἀπόδος τὸν λόγον τῆς σου οἰκονομίας γὰρ δύνῃ οὐ οἰκονομεῖν ἔτι

2 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
2 So he called him in to ask, ‘What is this I hear about you? Turn in an account of your management, for you cannot be manager any longer.’
2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, 'உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார்.

3 δὲ ὁ οἰκονόμος Εἶπεν ἐν ἑαυτῷ Τί ποιήσω ὅτι μου ὁ κύριός ἀφαιρεῖται ἀπ’ ἐμοῦ τὴν οἰκονομίαν οὐκ ἰσχύω σκάπτειν αἰσχύνομαι ἐπαιτεῖν

3 அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
3 The manager said to himself, ‘What shall I do, now that my master is taking away my position? I am too weak to dig and too ashamed to beg.
3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.

4 ἔγνων τί ποιήσω ἵνα ὅταν μετασταθῶ ἐκ τῆς οἰκονομίας δέξωνταί με εἰς ἑαυτῶν τοὺς οἴκους

4 உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
4 I know what I will do, so that after my removal from management, people will welcome me into their homes.’
4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

5 Καὶ προσκαλεσάμενος ἕκαστον ἕνα ἑαυτοῦ τοῦ κυρίου τῶν χρεοφειλετῶν Πόσον ὀφείλεις τῷ μου κυρίῳ ἔλεγεν τῷ πρώτῳ

5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
5 And he called in each one of his master’s debtors. ‘How much do you owe my master?’ he asked the first.
5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார்.

6 Ἑκατὸν βάτους ἐλαίου δὲ Ὁ εἶπεν Δέξαι σου τὰ γράμματα δὲ Ὁ εἶπεν αὐτῷ καὶ καθίσας ταχέως γράψον πεντήκοντα

6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
6 ‘A hundred measures of olive oil,’a he answered. ‘Take your bill,’ said the manager. ‘Sit down quickly, and write fifty.’
6 அதற்கு அவர், 'நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார்.

7 Ἔπειτα εἶπεν ἑτέρῳ δὲ πόσον Σὺ ὀφείλεις Ἑκατὸν κόρους σίτου δὲ Ὁ εἶπεν Δέξαι σου τὰ γράμματα καὶ γράψον ὀγδοήκοντα Λέγει αὐτῷ

7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
7 Then he asked another, ‘And how much do you owe?’ ‘A hundred measures of wheat,’b he replied. ‘Take your bill and write eighty,’ he told him.
7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை1 கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.

1 "நூறு கோரோசு" என்பது கிரேக்க பாடம்.

8 Καὶ ὁ κύριος ἐπῄνεσεν τὸν τῆς ἀδικίας οἰκονόμον ὅτι ἐποίησεν φρονίμως ὅτι οἱ υἱοὶ τούτου τοῦ αἰῶνος εἰσιν φρονιμώτεροι εἰς τὴν ἑαυτῶν τὴν γενεὰν ὑπὲρ τοὺς υἱοὺς τοῦ φωτὸς

8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
8 The master commended the dishonest manager because he had acted shrewdly. For the sons of this age are more shrewd in dealing with their own kind than are the sons of light.
8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

9 Καὶ ἐγὼ λέγω ὑμῖν ἐκ τοῦ τῆς ἀδικίας μαμωνᾶ ποιήσατε φίλους ἑαυτοῖς ἵνα ὅταν ἐκλίπῃ δέξωνται ὑμᾶς εἰς τὰς αἰωνίους σκηνάς

9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
9 I tell you, use worldly wealth to make friends for yourselves, so that when it is gone, they will welcome you into eternal dwellings.
9 "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

10 Ὁ πιστὸς ἐν ἐλαχίστῳ ἐστιν καὶ πιστός ἐν πολλῷ καὶ ὁ ἄδικος ἐν ἐλαχίστῳ ἐστιν καὶ ἄδικός ἐν πολλῷ

10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
10 Whoever is faithful with very little will also be faithful with much, and whoever is dishonest with very little will also be dishonest with much.
10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

11 οὖν εἰ οὐκ ἐγένεσθε πιστοὶ ἐν ἀδίκῳ τῷ μαμωνᾷ τίς πιστεύσει ὑμῖν τὸ ἀληθινὸν

11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
11 So if you have not been faithful with worldly wealth, who will entrust you with true riches?
11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

12 καὶ εἰ οὐκ ἐγένεσθε πιστοὶ ἐν τῷ ἀλλοτρίῳ τίς δώσει ὑμῖν τὸ ὑμέτερον*

12 வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
12 And if you have not been faithful with the belongings of another, who will give you belongings of your own?
12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

13 Οὐδεὶς οἰκέτης δύναται δουλεύειν δυσὶ κυρίοις γὰρ ἢ μισήσει τὸν ἕνα καὶ ἀγαπήσει τὸν ἕτερον ἢ ἀνθέξεται ἑνὸς καὶ καταφρονήσει τοῦ ἑτέρου οὐ δύνασθε δουλεύειν Θεῷ καὶ μαμωνᾷ

13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
13 No servant can serve two masters. Either he will hate the one and love the other, or he will be devoted to the one and despise the other. You cannot serve both God and money.”
13 "எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது."2

The Law and the Prophets

14 δὲ οἱ Φαρισαῖοι ὑπάρχοντες φιλάργυροι Ἤκουον πάντα ταῦτα καὶ ἐξεμυκτήριζον αὐτόν

14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
14 The Pharisees, who were lovers of money, heard all of this and were scoffing at Jesus.
14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.

15 καὶ εἶπεν αὐτοῖς Ὑμεῖς ἐστε οἱ δικαιοῦντες ἑαυτοὺς ἐνώπιον τῶν ἀνθρώπων δὲ ὁ Θεὸς γινώσκει ὑμῶν τὰς καρδίας ὅτι τὸ ὑψηλὸν ἐν ἀνθρώποις βδέλυγμα ἐνώπιον τοῦ Θεοῦ

15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
15 So He said to them, “You are the ones who justify yourselves before men, but God knows your hearts. For what is prized among men is detestable before God.
15 அவர் அவர்களிடம் கூறியது: "நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.

16 Ὁ νόμος καὶ οἱ προφῆται μέχρι Ἰωάννου ἀπὸ τότε ἡ βασιλεία τοῦ Θεοῦ εὐαγγελίζεται καὶ πᾶς βιάζεται εἰς αὐτὴν

16 நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
16 The Law and the Prophets were proclaimed until John. Since that time, the gospel of the kingdom of God is being preached, and everyone is forcing his way into it.c
16 திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.3

17 δέ ἐστιν εὐκοπώτερον τὸν οὐρανὸν καὶ τὴν γῆν παρελθεῖν ἢ μίαν κεραίαν πεσεῖν τοῦ νόμου

17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
17 But it is easier for heaven and earth to pass away than for a single stroke of a pen to drop out of the Law.
17 திருச்சட்டத்திலுள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதைவிட விண்ணும் மண்ணும் ஒழிவது எளிதாகும்.4

18 Πᾶς ὁ ἀπολύων αὐτοῦ τὴν γυναῖκα καὶ γαμῶν ἑτέραν μοιχεύει καὶ ὁ γαμῶν ἀπολελυμένην ἀπὸ ἀνδρὸς μοιχεύει

18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.
18 Anyone who divorces his wife and marries another woman commits adultery, and he who marries a divorced woman commits adultery.
18 தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.5

The Rich Man and Lazarus (John 5:39–47)

19 δέ ἦν τις πλούσιος Ἄνθρωπος καὶ ἐνεδιδύσκετο πορφύραν καὶ βύσσον εὐφραινόμενος καθ’ ἡμέραν λαμπρῶς

19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
19 Now there was a rich man dressed in purple and fine linen, who lived each day in joyous splendor.
19 "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

20 δέ τις πτωχὸς ὀνόματι Λάζαρος ἐβέβλητο πρὸς αὐτοῦ τὸν πυλῶνα εἱλκωμένος

20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
20 And a beggar named Lazarus lay at his gate, covered with sores
20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

21 καὶ ἐπιθυμῶν χορτασθῆναι ἀπὸ τῶν πιπτόντων ἀπὸ τῆς τοῦ πλουσίου τραπέζης ἀλλὰ καὶ οἱ κύνες ἐρχόμενοι ἐπέλειχον αὐτοῦ τὰ ἕλκη

21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
21 and longing to be fed with the crumbs that fell from the rich man’s table. Even the dogs came and licked his sores.
21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

22 δὲ Ἐγένετο τὸν πτωχὸν ἀποθανεῖν καὶ αὐτὸν ἀπενεχθῆναι ὑπὸ τῶν ἀγγέλων εἰς τὸν Ἀβραάμ κόλπον δὲ ὁ πλούσιος καὶ ἀπέθανεν καὶ ἐτάφη

22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
22 One day the beggar died and was carried by the angels to Abraham’s side.d And the rich man also died and was buried.
22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

23 καὶ ἐν τῷ ᾅδῃ ὑπάρχων ἐν βασάνοις ἐπάρας αὐτοῦ τοὺς ὀφθαλμοὺς ὁρᾷ Ἀβραὰμ ἀπὸ μακρόθεν καὶ Λάζαρον ἐν αὐτοῦ τοῖς κόλποις

23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
23 In Hades, where he was in torment, he looked up and saw Abraham from afar, with Lazarus by his side.
23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

24 Καὶ αὐτὸς φωνήσας εἶπεν Πάτερ Ἀβραάμ ἐλέησόν με καὶ πέμψον Λάζαρον ἵνα βάψῃ τὸ ἄκρον τοῦ αὐτοῦ δακτύλου ὕδατος καὶ καταψύξῃ μου τὴν γλῶσσάν ὅτι ὀδυνῶμαι ἐν ταύτῃ τῇ φλογὶ

24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
24 So he cried out, ‘Father Abraham, have mercy on me and send Lazarus to dip the tip of his finger in water and cool my tongue. For I am in agony in this fire.’
24 அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில், இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார்.

25 δὲ Ἀβραάμ Εἶπεν Τέκνον μνήσθητι ὅτι ἐν σου τῇ ζωῇ ἀπέλαβες σου ἀγαθά τὰ καὶ Λάζαρος ὁμοίως τὰ κακά δὲ νῦν παρακαλεῖται ὧδε δὲ σὺ ὀδυνᾶσαι

25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
25 But Abraham answered, ‘Child, remember that during your lifetime you received your good things, while Lazarus received bad things. But now he is comforted here, while you are in agony.
25 அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.6

26 καὶ ἐν πᾶσι τούτοις μέγα χάσμα ἐστήρικται μεταξὺ ἡμῶν καὶ ὑμῶν ὅπως οἱ θέλοντες μὴ δύνωνται διαβῆναι ἔνθεν πρὸς ὑμᾶς μηδὲ διαπερῶσιν ἐκεῖθεν πρὸς ἡμᾶς

26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.
26 And besides all this, a great chasm has been fixed between us and you, so that even those who wish cannot cross from here to you, nor can anyone cross from there to us.’
26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால், இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார்.

27 οὖν Ἐρωτῶ σε πάτερ δέ Εἶπεν ἵνα πέμψῃς αὐτὸν εἰς μου τοῦ πατρός τὸν οἶκον

27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
27 ‘Then I beg you, father,’ he said, ‘send Lazarus to my father’s house,
27 "அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

28 γὰρ ἔχω πέντε ἀδελφούς ὅπως διαμαρτύρηται αὐτοῖς ἵνα αὐτοὶ μὴ καὶ ἔλθωσιν εἰς τοῦτον τὸν τόπον τῆς βασάνου

28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
28 for I have five brothers. Let him warn them, so that they will not also end up in this place of torment.’
28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார்.

29 δὲ Ἀβραάμ Λέγει Ἔχουσι Μωϋσέα καὶ τοὺς προφήτας ἀκουσάτωσαν αὐτῶν

29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
29 But Abraham replied, ‘They have Moses and the prophets; let your brothers listen to them.’
29 அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.7

30 Οὐχί πάτερ Ἀβραάμ δὲ Ὁ εἶπεν ἀλλ’ ἐάν τις πορευθῇ πρὸς αὐτοὺς ἀπὸ νεκρῶν μετανοήσουσιν

30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
30 ‘No, father Abraham,’ he said, ‘but if someone is sent to them from the dead, they will repent.’
30 அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார்.

31 δὲ Εἶπεν αὐτῷ Εἰ οὐκ ἀκούουσιν Μωϋσέως καὶ τῶν προφητῶν οὐδ’* πεισθήσονται ἐάν τις ἀναστῇ ἐκ νεκρῶν

31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.
31 Then Abraham said to him, ‘If they do not listen to Moses and the prophets, they will not be persuaded even if someone rises from the dead.’”
31 ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."8


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
6 a Greek ‘A hundred baths of oil’ ; that is, approximately 870 gallons or 3,300 liters
7 b Greek ‘A hundred cors of wheat’ ; that is, approximately 1,000 bushels or 35,000 liters (probably about 30 tons or 27 metric tons of wheat)
16 c Or everyone is urged to enter into it 
22 d Greek into Abraham’s bosom ; similarly in verse 23

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.