பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 5 | John 5

The Pool of Bethesda

1 Μετὰ ταῦτα ἦν ἑορτὴ τῶν Ἰουδαίων καὶ Ἰησοῦς ἀνέβη εἰς Ἱεροσόλυμα

1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
1 Some time later there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem.
1 யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.

2 δὲ Ἔστιν ἐν τοῖς Ἱεροσολύμοις ἐπὶ τῇ προβατικῇ κολυμβήθρα ἔχουσα πέντε στοὰς ἡ Ἑβραϊστὶ ἐπιλεγομένη ‹Βηθεσδά›

2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
2 Now there is in Jerusalem near the Sheep Gate a pool with five covered colonnades, which in Hebrewa is called Bethesda.b
2 எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.

3 ἐν ταύταις κατέκειτο πλῆθος τῶν ἀσθενούντων τυφλῶν χωλῶν ξηρῶν

3 அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
3 On these walkwaysc lay a great number of the sick, the blind, the lame, and the paralyzed.d
3 இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

4 ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
4
4 ஏனெனில், ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.]1

1 அடைப்புக் குறியிலுள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.

5 δέ τις ἄνθρωπος Ἦν ἐκεῖ ἔχων ἐν αὐτοῦ τῇ ἀσθενείᾳ τριάκοντα καὶ ὀκτὼ ἔτη

5 முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
5 One man there had been an invalid for thirty-eight years.
5 முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

6 ὁ Ἰησοῦς ἰδὼν τοῦτον κατακείμενον καὶ γνοὺς ὅτι ἔχει ἤδη πολὺν χρόνον λέγει αὐτῷ Θέλεις γενέσθαι ὑγιὴς

6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
6 When Jesus saw him lying there and realized that he had spent a long time in this condition, He asked him, “Do you want to get well?”
6 இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.

7 Κύριε ὁ ἀσθενῶν Ἀπεκρίθη αὐτῷ ἔχω οὐκ ἄνθρωπον βάλῃ με εἰς τὴν κολυμβήθραν ἵνα ὅταν τὸ ὕδωρ ταραχθῇ δὲ ἐν ᾧ ἐγὼ ἔρχομαι ἄλλος καταβαίνει πρὸ ἐμοῦ

7 அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
7 “Sir,” the invalid replied, “I have no one to help me into the pool when the water is stirred. While I am on my way, someone else goes in before me.”
7 "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.

8 ὁ Ἰησοῦς Λέγει αὐτῷ Ἔγειρε ἆρον σου τὸν κράβαττόν καὶ περιπάτει

8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
8 Then Jesus told him, “Get up, pick up your mat, and walk.”
8 இயேசு அவரிடம், "எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார்.

9 Καὶ εὐθέως ὁ ἄνθρωπος ἐγένετο ὑγιὴς καὶ ἦρεν αὐτοῦ τὸν κράβαττον καὶ περιεπάτει δὲ Ἦν ἐν ἐκείνῃ τῇ σάββατον ἡμέρᾳ

9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
9 Immediately the man was made well, and he picked up his mat and began to walk. Now this happened on the Sabbath day,
9 உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.

10 οὖν οἱ Ἰουδαῖοι ἔλεγον τῷ τεθεραπευμένῳ ἐστιν Σάββατόν καὶ οὐκ ἔξεστίν σοι ἆραι [σου] τὸν κράβαττον

10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
10 so the Jews said to the man who had been healed, “This is the Sabbath! It is unlawful for you to carry your mat.”
10 அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்றார்கள்.2

11 δὲ ὃς ἀπεκρίθη αὐτοῖς Ὁ ποιήσας με ὑγιῆ ἐκεῖνός εἶπεν μοι Ἆρον τὸν σου κράβαττόν καὶ περιπάτει

11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர், உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
11 But he answered, “The man who made me well told me, ‘Pick up your mat and walk.’”
11 அவர் மறுமொழியாக "என்னை நலமாக்கியவரே, 'உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்' என்று என்னிடம் கூறினார்" என்றார்.

12 Τίς ἐστιν ὁ ἄνθρωπος ὁ εἰπών σοι Ἆρον καὶ περιπάτει ‹οὖν› Ἠρώτησαν αὐτόν

12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
12 “Who is this man who told you to pick it up and walk?” they asked.
12 "'படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

13 δὲ Ὁ ἰαθεὶς οὐκ ᾔδει τίς ἐστιν γὰρ ὁ Ἰησοῦς ἐξένευσεν ὄχλου ὄντος ἐν τῷ τόπῳ

13 சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
13 But the man who was healed did not know who it was, for Jesus had slipped away while the crowd was there.
13 ஆனால், நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில், அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.

14 Μετὰ ταῦτα ὁ Ἰησοῦς εὑρίσκει αὐτὸν ἐν τῷ ἱερῷ καὶ εἶπεν αὐτῷ Ἴδε γέγονας ὑγιὴς μηκέτι ἁμάρτανε ἵνα μὴ τι χεῖρόν γένηται σοί

14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
14 Afterward, Jesus found the man at the temple and said to him, “See, you have been made well. Stop sinning, or something worse may happen to you.”
14 பின்னர், இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

15 ὁ ἄνθρωπος ἀπῆλθεν καὶ ἀνήγγειλεν* τοῖς Ἰουδαίοις ὅτι ἐστιν Ἰησοῦς ὁ ποιήσας αὐτὸν ὑγιῆ

15 அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
15 And the man went away and told the Jews that it was Jesus who had made him well.
15 அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

The Father and the Son

16 Καὶ διὰ τοῦτο ὅτι ἐποίει ταῦτα ἐν σαββάτῳ οἱ Ἰουδαῖοι ἐδίωκον τὸν Ἰησοῦν

16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
16 Now because Jesus was doing these things on the Sabbath, the Jews began to persecute Him.
16 ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

17 δὲ [Ἰησοῦς] ὁ ἀπεκρίνατο αὐτοῖς ἕως ἄρτι μου Ὁ Πατήρ ἐργάζεται κἀγὼ ἐργάζομαι

17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
17 But Jesus answered them, “To this very day My Father is at His work, and I too am working.”
17 இயேசு அவர்களிடம், "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.

18 οὖν Διὰ τοῦτο οἱ Ἰουδαῖοι ἐζήτουν μᾶλλον ἀποκτεῖναι αὐτὸν ὅτι οὐ μόνον ἔλυεν τὸ σάββατον ἀλλὰ καὶ ἔλεγεν τὸν Θεόν ἴδιον Πατέρα ποιῶν ἑαυτὸν ἴσον τῷ Θεῷ

18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
18 Because of this, the Jews tried all the harder to kill Him. Not only was He breaking the Sabbath, but He was even calling God His own Father, making Himself equal with God.
18 இவ்வாறு, அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.3

19 οὖν ὁ Ἰησοῦς Ἀπεκρίνατο καὶ ἔλεγεν αὐτοῖς Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ Υἱὸς οὐ δύναται ποιεῖν οὐδὲν ἀφ’ ἑαυτοῦ ἐὰν* μή βλέπῃ τὸν Πατέρα ποιοῦντα τι γὰρ ἃ ἂν ἐκεῖνος ποιῇ ταῦτα ὁ Υἱὸς καὶ ποιεῖ ὁμοίως

19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
19 So Jesus replied, “Truly, truly, I tell you, the Son can do nothing by Himself, unless He sees the Father doing it. For whatever the Father does, the Son also does.
19 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

20 γὰρ ὁ Πατὴρ φιλεῖ τὸν Υἱὸν καὶ δείκνυσιν αὐτῷ πάντα ἃ αὐτὸς ποιεῖ καὶ ἵνα ὑμεῖς θαυμάζητε δείξει αὐτῷ μείζονα ἔργα τούτων

20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
20 The Father loves the Son and shows Him all He does. And to your amazement, He will show Him even greater works than these.
20 தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.

21 γὰρ Ὥσπερ ὁ Πατὴρ ἐγείρει τοὺς νεκροὺς καὶ ζωοποιεῖ οὕτως καὶ ὁ Υἱὸς ζωοποιεῖ οὓς θέλει

21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
21 For just as the Father raises the dead and gives them life, so also the Son gives life to whom He wishes.
21 தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

22 γὰρ ὁ Πατὴρ κρίνει οὐδένα οὐδὲ ἀλλὰ δέδωκεν πᾶσαν τὴν κρίσιν τῷ Υἱῷ

22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
22 Furthermore, the Father judges no one, but has assigned all judgment to the Son,
22 ❮22-23❯தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.4

23 ἵνα πάντες τιμῶσι τὸν Υἱὸν καθὼς τιμῶσι τὸν Πατέρα ὁ μὴ τιμῶν τὸν Υἱὸν οὐ τιμᾷ τὸν Πατέρα τὸν πέμψαντα αὐτόν

23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
23 so that all may honor the Son just as they honor the Father. Whoever does not honor the Son does not honor the Father who sent Him.

24 Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι ὁ ἀκούων μου τὸν λόγον καὶ πιστεύων τῷ πέμψαντί με ἔχει αἰώνιον ζωὴν καὶ οὐκ ἔρχεται εἰς κρίσιν ἀλλὰ μεταβέβηκεν ἐκ τοῦ θανάτου εἰς τὴν ζωήν

24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 Truly, truly, I tell you, whoever hears My word and believes Him who sent Me has eternal life and will not come under judgment. Indeed, he has crossed over from death to life.
24 என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே, சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.5

25 Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι ὥρα ἔρχεται καὶ ἐστιν νῦν ὅτε οἱ νεκροὶ ἀκούσουσιν τῆς φωνῆς τοῦ Υἱοῦ τοῦ Θεοῦ καὶ οἱ ἀκούσαντες ζήσουσιν

25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 Truly, truly, I tell you, the hour is coming and has now come when the dead will hear the voice of the Son of God, and those who hear will live.
25 காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

26 γὰρ ὥσπερ ὁ Πατὴρ ἔχει ζωὴν ἐν ἑαυτῷ οὕτως καὶ ἔδωκεν τῷ Υἱῷ ἔχειν ζωὴν ἐν ἑαυτῷ

26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
26 For as the Father has life in Himself, so also He has granted the Son to have life in Himself.
26 தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

27 καὶ ἔδωκεν αὐτῷ ἐξουσίαν ποιεῖν κρίσιν ὅτι ἐστίν Υἱὸς ἀνθρώπου

27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
27 And He has given Him authority to execute judgment, because He is the Son of Man.
27 அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.6

28 μὴ θαυμάζετε τοῦτο ὅτι ὥρα ἔρχεται ἐν ᾗ πάντες οἱ ἐν τοῖς μνημείοις ἀκούσουσιν αὐτοῦ τῆς φωνῆς

28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
28 Do not be amazed at this, for the hour is coming when all who are in their graves will hear His voice
28 இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு

29 καὶ ἐκπορεύσονται οἱ τὰ ποιήσαντες ἀγαθὰ εἰς ἀνάστασιν ζωῆς ‹δὲ› οἱ τὰ πράξαντες φαῦλα εἰς ἀνάστασιν κρίσεως

29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
29 and come out—those who have done good to the resurrection of life, and those who have done evil to the resurrection of judgment.e
29 வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.7

30 ἐγὼ δύναμαι ποιεῖν Οὐ οὐδέν ἀπ’ ἐμαυτοῦ κρίνω καθὼς ἀκούω καὶ ἡ ἐμὴ ἡ κρίσις ἐστίν δικαία ὅτι οὐ ζητῶ τὸ ἐμὸν τὸ θέλημα ἀλλὰ τὸ θέλημα τοῦ πέμψαντός με

30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
30 I can do nothing by Myself; I judge only as I hear. And My judgment is just, because I do not seek My own will, but the will of Him who sent Me.
30 நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில், என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

Testimonies about Jesus

31 Ἐὰν ἐγὼ μαρτυρῶ περὶ ἐμαυτοῦ μου ἡ μαρτυρία ἔστιν οὐκ ἀληθής

31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
31 If I testify about Myself, My testimony is not valid.
31 "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது.

32 ἐστὶν ἄλλος ὁ μαρτυρῶν περὶ ἐμοῦ καὶ οἶδα ὅτι ἡ μαρτυρία ἣν μαρτυρεῖ περὶ ἐμοῦ ἐστιν ἀληθής

32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
32 There is another who testifies about Me, and I know that His testimony about Me is valid.
32 என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.

33 Ὑμεῖς ἀπεστάλκατε πρὸς Ἰωάννην καὶ μεμαρτύρηκεν τῇ ἀληθείᾳ

33 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
33 You have sent to John, and he has testified to the truth.
33 யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.8

34 δὲ ἐγὼ οὐ λαμβάνω τὴν παρὰ ἀνθρώπου μαρτυρίαν ἀλλὰ λέγω ταῦτα ἵνα ὑμεῖς σωθῆτε

34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
34 Even though I do not accept human testimony, I say these things so that you may be saved.
34 மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.

35 Ἐκεῖνος ἦν ὁ λύχνος ὁ καιόμενος καὶ φαίνων δὲ ὑμεῖς ἠθελήσατε πρὸς ὥραν ἀγαλλιαθῆναι ἐν αὐτοῦ τῷ φωτὶ

35 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
35 John was a lamp that burned and gave light, and you were willing for a season to bask in his light.
35 யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

36 δὲ ἐγὼ ἔχω τὴν μαρτυρίαν μείζω τοῦ Ἰωάννου γὰρ τὰ ἔργα ἃ ὁ Πατὴρ δέδωκέν μοι ἵνα τελειώσω αὐτά τὰ αὐτὰ ἔργα ἃ ποιῶ μαρτυρεῖ περὶ ἐμοῦ ὅτι ὁ Πατήρ ἀπέσταλκεν με

36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
36 But I have testimony more substantial than that of John. For the works that the Father has given Me to accomplish—the very works I am doing—testify about Me that the Father has sent Me.
36 "யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

37 καὶ Πατὴρ ὁ πέμψας με μεμαρτύρηκεν ἐκεῖνος περὶ ἐμοῦ οὔτε πώποτε ἀκηκόατε αὐτοῦ φωνὴν οὔτε ἑωράκατε αὐτοῦ εἶδος

37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
37 And the Father who sent Me has Himself testified about Me. You have never heard His voice nor seen His form,
37 "என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை.9

38 καὶ οὐκ ἔχετε αὐτοῦ τὸν λόγον μένοντα ἐν ὑμῖν ὅτι ὑμεῖς οὐ πιστεύετε τούτῳ ὃν ἐκεῖνος ἀπέστειλεν

38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
38 nor does His word abide in you, because you do not believe the One He sent.
38 அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.

The Witness of Scripture (Luke 16:19–31)

39 Ἐραυνᾶτε τὰς γραφάς ὅτι ὑμεῖς δοκεῖτε ἐν αὐταῖς ἔχειν αἰώνιον ζωὴν καὶ ἐκεῖναί εἰσιν αἱ μαρτυροῦσαι περὶ ἐμοῦ

39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
39 You pore over the Scriptures because you presume that by them you possess eternal life. These are the very words that testify about Me,
39 மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது.

40 καὶ οὐ θέλετε ἐλθεῖν πρός με ἵνα ἔχητε ζωὴν

40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
40 yet you refuse to come to Me to have life.
40 வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

41 οὐ λαμβάνω Δόξαν παρὰ ἀνθρώπων

41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
41 I do not accept glory from men,
41 "மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.10

42 ἀλλὰ ἔγνωκα ὑμᾶς ὅτι οὐκ ἔχετε τὴν ἀγάπην τοῦ Θεοῦ ἐν ἑαυτοῖς

42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
42 but I know you, that you do not have the love of God within you.
42 உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை.11

43 ἐγὼ ἐλήλυθα ἐν μου τοῦ Πατρός τῷ ὀνόματι καὶ οὐ λαμβάνετέ με ἐὰν ἄλλος ἔλθῃ ἐν τῷ ἰδίῳ τῷ ὀνόματι λήμψεσθε ἐκεῖνον

43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
43 I have come in My Father’s name, and you have not received Me; but if someone else comes in his own name, you will receive him.
43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால், என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

44 πῶς δύνασθε ὑμεῖς πιστεῦσαι λαμβάνοντες δόξαν παρὰ ἀλλήλων καὶ οὐ ζητεῖτε τὴν δόξαν τὴν παρὰ τοῦ μόνου Θεοῦ

44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
44 How can you believe if you accept glory from one another, yet do not seek the glory that comes from the only God?
44 கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?12

45 Μὴ δοκεῖτε ὅτι ἐγὼ κατηγορήσω ὑμῶν πρὸς τὸν Πατέρα ὁ ὑμῶν κατηγορῶν ἔστιν Μωϋσῆς εἰς ὃν ὑμεῖς ἠλπίκατε

45 பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
45 Do not think that I will accuse you before the Father. Your accuser is Moses, in whom you have put your hope.
45 தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.13

46 γὰρ εἰ ἐπιστεύετε Μωϋσεῖ ἂν ἐπιστεύετε ἐμοί γὰρ ἐκεῖνος ἔγραψεν περὶ ἐμοῦ

46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
46 If you had believed Moses, you would believe Me, because he wrote about Me.
46 நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில், அவர் என்னைப்பற்றித் தான் எழுதினார்.14

47 δὲ εἰ οὐ πιστεύετε τοῖς ἐκείνου γράμμασιν πῶς πιστεύσετε τοῖς ἐμοῖς ῥήμασιν

47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
47 But since you do not believe what he wrote, how will you believe what I say?”
47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?"


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in