பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 13 | John 13

Jesus Washes His Disciples’ Feet

1δὲ Πρὸ τῆς τοῦ πάσχα ἑορτῆς ὁ Ἰησοῦς εἰδὼς ὅτι αὐτοῦ ἡ ὥρα ἦλθεν ἵνα μεταβῇ ἐκ τούτου τοῦ κόσμου πρὸς τὸν Πατέρα ἀγαπήσας τοὺς ἰδίους τοὺς ἐν τῷ κόσμῳ ἠγάπησεν αὐτούς εἰς τέλος

1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
1 It was now just before the Passover Feast, and Jesus knew that His hour had come to leave this world and return to the Father. Having loved His own who were in the world, He loved them to the very end.a
1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

2καὶ δείπνου γινομένου τοῦ διαβόλου ἤδη βεβληκότος εἰς τὴν καρδίαν Ἰούδας Σίμωνος Ἰσκαριώτου ἵνα παραδοῖ αὐτὸν

2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
2 The evening meal was underway, and the devil had already put into the heart of Judas, the son of Simon Iscariot, to betray Jesus.
2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில்,

3εἰδὼς ὅτι ὁ Πατὴρ ἔδωκεν αὐτῷ πάντα εἰς τὰς χεῖρας καὶ ὅτι ἐξῆλθεν ἀπὸ Θεοῦ καὶ ὑπάγει πρὸς τὸν Θεὸν

3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
3 Jesus knew that the Father had delivered all things into His hands, and that He had come from God and was returning to God.
3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,

4ἐγείρεται ἐκ τοῦ δείπνου καὶ τίθησιν τὰ ἱμάτια καὶ λαβὼν διέζωσεν λέντιον ἑαυτόν

4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
4 So He got up from the supper, laid aside His outer garments, and wrapped a towel around His waist.
4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.

5εἶτα βάλλει ὕδωρ εἰς τὸν νιπτῆρα καὶ ἤρξατο νίπτειν τοὺς τῶν μαθητῶν πόδας καὶ ἐκμάσσειν τῷ λεντίῳ ᾧ ἦν διεζωσμένος

5 பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
5 After that, He poured water into a basin and began to wash the disciples’ feet and dry them with the towel that was around Him.
5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

6οὖν Ἔρχεται πρὸς Σίμωνα Πέτρον λέγει αὐτῷ Κύριε σύ νίπτεις μου τοὺς πόδας

6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
6 He came to Simon Peter, who asked Him, “Lord, are You going to wash my feet?”
6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.

7Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτῷ σὺ οὐκ οἶδας ἄρτι Ὃ ἐγὼ ποιῶ δὲ μετὰ ταῦτα γνώσῃ

7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
7 Jesus replied, “You do not realize now what I am doing, but later you will understand.”
7 இயேசு மறுமொழியாக, "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்" என்றார்.

8Οὐ μὴ νίψῃς μου τοὺς πόδας εἰς τὸν αἰῶνα Πέτρος Λέγει αὐτῷ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτῷ Ἐὰν μὴ νίψω σε ἔχεις οὐκ μέρος μετ’ ἐμοῦ

8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
8 “Never shall You wash my feet!” Peter told Him. Jesus answered, “Unless I wash you, you have no part with Me.”
8 பேதுரு அவரிடம், "நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

9Κύριε Σίμων Πέτρος Λέγει αὐτῷ μὴ μόνον μου τοὺς πόδας ἀλλὰ τὰς χεῖρας καὶ τὴν κεφαλήν καὶ

9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
9 “Then, Lord,” Simon Peter replied, “not only my feet, but my hands and my head as well!”
9 அப்போது சீமோன் பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.

10‹ὁ› Ἰησοῦς Λέγει αὐτῷ Ὁ λελουμένος ἔχει οὐκ χρείαν εἰ μὴ νίψασθαι τοὺς πόδας ἀλλ’ ἔστιν ὅλος καθαρὸς καὶ ὑμεῖς ἐστε καθαροί ἀλλ’ οὐχὶ πάντες

10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
10 Jesus told him, “Whoever has already bathed needs only to wash his feet, and he will be completely clean. And you are clean, though not all of you.”
10 இயேசு அவரிடம், "குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும், அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

11γὰρ ᾔδει τὸν παραδιδόντα αὐτόν διὰ τοῦτο εἶπεν ὅτι Οὐχὶ πάντες ἐστε καθαροί

11 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
11 For He knew who would betray Him. That is why He said, “Not all of you are clean.”
11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

12οὖν Ὅτε ἔνιψεν αὐτῶν τοὺς πόδας καὶ ἔλαβεν αὐτοῦ τὰ ἱμάτια καὶ ἀνέπεσεν πάλιν εἶπεν αὐτοῖς Γινώσκετε τί πεποίηκα ὑμῖν

12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
12 When Jesus had washed their feet and put on His outer garments, He reclined with them again and asked, “Do you know what I have done for you?
12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: "நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?

13ὑμεῖς φωνεῖτέ με Ὁ Διδάσκαλος καὶ ὁ Κύριος καὶ καλῶς λέγετε γάρ εἰμὶ

13 நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
13 You call Me Teacher and Lord, and rightly so, because I am.
13 நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.

14οὖν εἰ ἐγὼ ὁ Κύριος καὶ ὁ Διδάσκαλος ἔνιψα ὑμῶν τοὺς πόδας ὑμεῖς καὶ ὀφείλετε νίπτειν τοὺς ἀλλήλων πόδας

14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
14 So if I, your Lord and Teacher, have washed your feet, you also should wash one another’s feet.
14 ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

15γὰρ ἔδωκα ὑμῖν ὑπόδειγμα ἵνα ὑμεῖς καὶ ποιῆτε καθὼς ἐγὼ ἐποίησα ὑμῖν

15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
15 I have set you an example so that you should do as I have done for you.
15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.1

16ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν οὐκ δοῦλος ἔστιν μείζων αὐτοῦ τοῦ κυρίου οὐδὲ ἀπόστολος μείζων τοῦ πέμψαντος αὐτόν

16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
16 Truly, truly, I tell you, no servant is greater than his master,b nor is a messenger greater than the one who sent him.
16 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.2

17εἰ οἴδατε ταῦτα ἐστε μακάριοί ἐὰν ποιῆτε αὐτά

17 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
17 If you know these things, you will be blessed if you do them.
17 இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

Jesus Predicts His Betrayal (Psalm 41:1–13)

18λέγω Οὐ περὶ πάντων ὑμῶν ἐγὼ οἶδα τίνας ἐξελεξάμην ἀλλ’ ἵνα πληρωθῇ ἡ γραφὴ Ὁ τρώγων μου τὸν ἄρτον ἐπῆρεν αὐτοῦ τὴν πτέρναν ἐπ’ ἐμὲ

18 உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
18 I am not speaking about all of you; I know whom I have chosen. But this is to fulfill the Scripture: ‘The one who shares My bread has lifted up his heel against Me.’c
18 உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், 'என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்' என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.3

19λέγω ὑμῖν ἀπ’ ἄρτι πρὸ τοῦ γενέσθαι ἵνα ὅταν γένηται πιστεύσητε* ὅτι ἐγώ εἰμι

19 அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19 I am telling you now before it happens, so that when it comes to pass, you will believe that I am He.
19 அது நிறைவேறும்போது, 'இருக்கிறவர் நானே' என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன்.

20ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ λαμβάνων ἄν τινα πέμψω λαμβάνει ἐμὲ δὲ ὁ λαμβάνων ἐμὲ λαμβάνει τὸν πέμψαντά με

20 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
20 Truly, truly, I tell you, whoever receives the one I send receives Me, and whoever receives Me receives the One who sent Me.”
20 நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."4

21‹ὁ› Ἰησοῦς εἰπὼν Ταῦτα ἐταράχθη τῷ πνεύματι καὶ ἐμαρτύρησεν καὶ εἶπεν Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι εἷς ἐξ ὑμῶν παραδώσει με

21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
21 After Jesus had said this, He became troubled in spirit and testified, “Truly, truly, I tell you, one of you will betray Me.”
21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

22οἱ μαθηταὶ Ἔβλεπον εἰς ἀλλήλους ἀπορούμενοι περὶ τίνος λέγει

22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
22 The disciples looked at one another, perplexed as to which of them He meant.
22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.

23εἷς ἐκ τῶν αὐτοῦ μαθητῶν ὃν ὁ Ἰησοῦς ἠγάπα ἦν ἀνακείμενος ἐν τῷ τοῦ Ἰησοῦ κόλπῳ

23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்
23 One of His disciples, the one whom Jesus loved, was reclining at His side.d 24
23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.

24οὖν Σίμων Πέτρος νεύει τούτῳ ‹πυθέσθαι τίς ἂν εἴη› οὗ λέγει περὶ

24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
24 So Simon Peter motioned to him to ask Jesus which one He was talking about.
24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்" என்றார்.

25[οὖν] ἐκεῖνος ἀναπεσὼν οὕτως ἐπὶ τὸ στῆθος τοῦ Ἰησοῦ λέγει αὐτῷ Κύριε τίς ἐστιν

25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு ஆண்டவரே, அவன் யார் என்றான்.
25 Leaning back against Jesus, he asked, “Lord, who is it?”
25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், "ஆண்டவரே அவன் யார்?" என்று கேட்டார்.

26〈οὖν〉 ὁ Ἰησοῦς Ἀποκρίνεται ἐστιν Ἐκεῖνός ᾧ ἐγὼ καὶ δώσω τὸ ψωμίον βάψω οὖν αὐτῷ βάψας τὸ ψωμίον καὶ λαμβάνει δίδωσιν Ἰούδᾳ Σίμωνος Ἰσκαριώτου

26 இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
26 Jesus answered, “It is the one to whom I give this morsel after I have dipped it.” Then He dipped the morsel and gave it to Judas son of Simon Iscariot.
26 இயேசு மறுமொழியாக, "நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்" எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.

27καὶ μετὰ τὸ ψωμίον τότε ὁ Σατανᾶς εἰσῆλθεν εἰς ἐκεῖνον οὖν ‹ὁ› Ἰησοῦς Λέγει αὐτῷ Ὃ ποιεῖς ποίησον τάχιον

27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
27 And when Judas had taken the morsel, Satan entered into him. Then Jesus said to Judas, “What you are about to do, do quickly.”
27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், "நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" என்றார்.5

28δὲ οὐδεὶς τῶν ἀνακειμένων ἔγνω πρὸς τί εἶπεν τοῦτο αὐτῷ

28 அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.
28 But no one at the table knew why Jesus had said this to him.
28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

29ἐπεὶ Ἰούδας εἶχεν τὸ γλωσσόκομον γὰρ τινὲς ἐδόκουν ὅτι ‹ὁ› Ἰησοῦς λέγει αὐτῷ Ἀγόρασον ὧν ἔχομεν χρείαν εἰς τὴν ἑορτήν ἢ ἵνα δῷ τι τοῖς πτωχοῖς

29 யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
29 Since Judas kept the money bag, some thought that Jesus was telling him to buy what was needed for the feast, or to give something to the poor.
29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.

30οὖν λαβὼν εὐθύς τὸ ψωμίον ἐκεῖνος ἐξῆλθεν δὲ ἦν νύξ

30 அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.
30 As soon as he had received the morsel, Judas went out into the night.
30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.

Love One Another (Romans 12:9–13; 1 John 3:11–24)

31οὖν Ὅτε ἐξῆλθεν Ἰησοῦς λέγει Νῦν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐδοξάσθη καὶ ὁ Θεὸς ἐδοξάσθη ἐν αὐτῷ

31 அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
31 When Judas had gone out, Jesus said, “Now the Son of Man is glorified, and God is glorified in Him.
31 அவன் வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.

32εἰ ὁ Θεὸς ἐδοξάσθη ἐν αὐτῷ ὁ Θεὸς καὶ δοξάσει αὐτὸν ἐν αὑτῷ καὶ δοξάσει αὐτόν εὐθὺς

32 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.
32 If God is glorified in Him,e God will also glorify the Son in Himself—and will glorify Him at once.
32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33Τεκνία εἰμι μεθ’ ὑμῶν ἔτι μικρὸν ζητήσετέ με καὶ καθὼς εἶπον τοῖς Ἰουδαίοις καὶ ἄρτι λέγω ὑμῖν ὅτι Ὅπου ἐγὼ ὑπάγω ὑμεῖς οὐ δύνασθε ἐλθεῖν

33 பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
33 Little children, I am with you only a little while longer. You will look for Me, and as I said to the Jews, so now I say to you: ‘Where I am going, you cannot come.’
33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.6

34καινὴν Ἐντολὴν δίδωμι ὑμῖν ἵνα ἀγαπᾶτε ἀλλήλους καθὼς ἠγάπησα ὑμᾶς ἵνα ὑμεῖς καὶ ἀγαπᾶτε ἀλλήλους

34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
34 A new commandment I give you: Love one another. As I have loved you, so you also must love one another.
34 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.7

35ἐν τούτῳ πάντες γνώσονται ὅτι ἐστε ἐμοὶ μαθηταί ἐὰν ἔχητε ἀγάπην ἐν ἀλλήλοις

35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
35 By this everyone will know that you are My disciples, if you love one another.”
35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.

Jesus Predicts Peter’s Denial (Matthew 26:31–35; Mark 14:27–31; Luke 22:31–38)

36Κύριε ποῦ ὑπάγεις Σίμων Πέτρος Λέγει αὐτῷ Ἰησοῦς Ἀπεκρίθη [αὐτῷ] Ὅπου ὑπάγω οὐ δύνασαί ἀκολουθῆσαι μοι νῦν δὲ ἀκολουθήσεις ὕστερον

36 சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
36 “Lord, where are You going?” Simon Peter asked. Jesus answered, “Where I am going, you cannot follow Me now, but you will follow later.”
36 சீமோன் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, "நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.

37Κύριε ‹ὁ› Λέγει Πέτρος αὐτῷ διὰ τί οὐ δύναμαί ἀκολουθῆσαι σοι ἄρτι θήσω μου τὴν ψυχήν ὑπὲρ σοῦ

37 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
37 “Lord,” said Peter, “why can’t I follow You now? I will lay down my life for You.”
37 பேதுரு அவரிடம், "ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.

38θήσεις σου Τὴν ψυχήν ὑπὲρ ἐμοῦ Ἰησοῦς Ἀποκρίνεται ἀμὴν ἀμὴν λέγω σοι οὐ μὴ ἕως ἀλέκτωρ φωνήσῃ οὗ ἀρνήσῃ με τρίς

38 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
38 “Will you lay down your life for Me?” Jesus replied. “Truly, truly, I tell you, before the rooster crows, you will deny Me three times.
38 இயேசு அவரைப் பார்த்து, "எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.8


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Or He showed them the full extent of His love.
16 b Cited in John 15:20
18 c Psalm 41:9
23 d Greek was reclining in the bosom of Jesus
32 e WH does not include If God is glorified in Him .

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.