பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 18 | John 18

The Betrayal of Jesus (Matthew 26:47–56; Mark 14:43–52; Luke 22:47–53)

1 Ἰησοῦς εἰπὼν Ταῦτα ἐξῆλθεν σὺν αὐτοῦ τοῖς μαθηταῖς πέραν τοῦ τοῦ* Κέδρων χειμάρρου ὅπου ἦν αὐτὸς καὶ αὐτοῦ οἱ μαθηταὶ εἰσῆλθεν εἰς ὃν κῆπος

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.
1 After Jesus had spoken these words, He went out with His disciples across the Kidron Valley, where they entered a garden.
1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.

2 δὲ Ἰούδας ὁ αὐτὸν παραδιδοὺς καὶ ᾔδει τὸν τόπον ὅτι Ἰησοῦς πολλάκις συνήχθη ἐκεῖ μετὰ αὐτοῦ τῶν μαθητῶν

2 இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
2 Now Judas His betrayer also knew the place, because Jesus had often met there with His disciples.
2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.

3 οὖν ὁ Ἰούδας λαβὼν τὴν σπεῖραν καὶ ὑπηρέτας ἐκ τῶν ἀρχιερέων καὶ ἐκ τῶν Φαρισαίων ἔρχεται ἐκεῖ μετὰ φανῶν καὶ λαμπάδων καὶ ὅπλων

3 யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
3 So Judas brought a band of soldiers and officers from the chief priests and Pharisees. They arrived at the garden carrying lanterns, torches, and weapons.
3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.

4 οὖν Ἰησοῦς εἰδὼς πάντα τὰ ἐρχόμενα ἐπ’ αὐτὸν ἐξῆλθεν καὶ λέγει αὐτοῖς Τίνα ζητεῖτε

4 இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
4 Jesus, knowing all that was coming upon Him, stepped forward and asked them, “Whom are you seeking?”
4 தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

5 Ἰησοῦν τὸν Ναζωραῖον Ἀπεκρίθησαν αὐτῷ Λέγει αὐτοῖς Ἐγώ εἰμι δὲ Ἰούδας ὁ αὐτὸν παραδιδοὺς καὶ Εἱστήκει μετ’ αὐτῶν

5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.
5 “Jesus of Nazareth,” they answered. Jesus said, “I am He.” And Judas His betrayer was standing there with them.
5 அவர்கள் மறுமொழியாக, "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள். இயேசு, "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.

6 οὖν ὡς εἶπεν αὐτοῖς Ἐγώ εἰμι ἀπῆλθον* εἰς τὰ ὀπίσω καὶ ἔπεσαν χαμαί

6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
6 When Jesus said, “I am He,” they drew back and fell to the ground.
6 'நான்தான்' என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

7 οὖν ἐπηρώτησεν αὐτούς Πάλιν Τίνα ζητεῖτε Ἰησοῦν τὸν Ναζωραῖον δὲ Οἱ εἶπαν

7 அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
7 So He asked them again, “Whom are you seeking?” “Jesus of Nazareth,” they answered.
7 "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள்.

8 Εἶπον ὑμῖν ὅτι ἐγώ εἰμι Ἰησοῦς Ἀπεκρίθη οὖν εἰ ζητεῖτε ἐμὲ ἄφετε τούτους ὑπάγειν

8 இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
8 “I told you that I am He,” Jesus replied. “So if you are looking for Me, let these men go.”
8 இயேசு அவர்களைப் பார்த்து, "'நான்தான்' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார்.

9 ἵνα πληρωθῇ ὅτι ὁ λόγος ὃν εἶπεν οὐκ ἀπώλεσα οὐδένα ἐξ αὐτῶν Οὓς δέδωκάς μοι

9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
9 This was to fulfill the word He had spoken: “I have not lost one of those You have given Me.”a
9 "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை" என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.

10 οὖν Σίμων Πέτρος εἵλκυσεν ἔχων μάχαιραν αὐτὴν καὶ ἔπαισεν τὸν δοῦλον τοῦ ἀρχιερέως καὶ ἀπέκοψεν αὐτοῦ τὸ δεξιόν τὸ ὠτάριον δὲ τῷ δούλῳ ὄνομα ἦν Μάλχος

10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
10 Then Simon Peter drew his sword and struck the servant of the high priest, cutting off his right ear. The servant’s name was Malchus.
10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.

11 Βάλε τὴν μάχαιραν εἰς τὴν θήκην οὖν ὁ Ἰησοῦς εἶπεν τῷ Πέτρῳ οὐ μὴ πίω αὐτό τὸ ποτήριον ὃ ὁ Πατήρ δέδωκέν μοι

11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
11 “Put your sword back in its sheath!” Jesus said to Peter. “Shall I not drink the cup the Father has given Me?”
11 இயேசு பேதுருவிடம், "வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?" என்றார்.1

12 οὖν Ἡ σπεῖρα καὶ ὁ χιλίαρχος καὶ οἱ ὑπηρέται τῶν Ἰουδαίων συνέλαβον τὸν Ἰησοῦν καὶ ἔδησαν αὐτὸν

12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
12 Then the band of soldiers, with its commander and the officers of the Jews, arrested Jesus and bound Him.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,

13 καὶ ἤγαγον πρῶτον πρὸς Ἅνναν γὰρ ἦν πενθερὸς τοῦ Καϊάφα ὃς ἦν ἀρχιερεὺς τοῦ ἐκείνου ἐνιαυτοῦ

13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
13 They brought Him first to Annas, who was the father-in-law of Caiaphas, the high priest that year.
13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில், அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.

14 δὲ Καϊάφας ἦν ὁ συμβουλεύσας τοῖς Ἰουδαίοις ὅτι συμφέρει ἕνα ἄνθρωπον ἀποθανεῖν ὑπὲρ τοῦ λαοῦ

14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
14 Caiaphas was the one who had advised the Jews that it would be better if one man died for the people.
14 'இந்தக் கயபாதான், "மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.2

Peter’s First Denial (Matthew 26:69–70; Mark 14:66–68; Luke 22:54–57)

15 δὲ Σίμων Πέτρος καὶ ἄλλος μαθητής Ἠκολούθει τῷ Ἰησοῦ δὲ ὁ ἐκεῖνος μαθητὴς ἦν γνωστὸς τῷ ἀρχιερεῖ καὶ συνεισῆλθεν τῷ Ἰησοῦ εἰς τὴν αὐλὴν τοῦ ἀρχιερέως

15 சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
15 Now Simon Peter and another disciple were following Jesus. Since that disciple was known to the high priest, he also went with Jesus into the courtyard of the high priest.
15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே, இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.

16 δὲ ὁ Πέτρος εἱστήκει ἔξω πρὸς τῇ θύρᾳ οὖν ὁ ὁ ἄλλος μαθητὴς ὁ γνωστὸς τοῦ ἀρχιερέως ἐξῆλθεν καὶ εἶπεν τῇ θυρωρῷ καὶ εἰσήγαγεν τὸν Πέτρον

16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
16 But Peter stood outside at the door. Then the disciple who was known to the high priest went out and spoke to the doorkeeper, and brought Peter in.
16 பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.

17 οὖν ἡ παιδίσκη ἡ θυρωρός Λέγει τῷ Πέτρῳ εἶ Μὴ σὺ καὶ ἐκ τῶν τοῦ τούτου ἀνθρώπου μαθητῶν εἰμί Οὐκ ἐκεῖνος Λέγει

17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.
17 At this, the servant girl watching the door said to Peter, “Aren’t you also one of this man’s disciples?” “I am not,” he answered.
17 வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், "நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?" என்று கேட்டார். பேதுரு, "இல்லை" என்றார்.

18 δὲ ὅτι ἦν ψῦχος οἱ δοῦλοι καὶ οἱ ὑπηρέται Εἱστήκεισαν ἀνθρακιὰν πεποιηκότες καὶ ἐθερμαίνοντο δὲ ὁ Πέτρος ἦν καὶ ἑστὼς μετ’ αὐτῶν καὶ θερμαινόμενος

18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
18 Because it was cold, the servants and officers were standing around a charcoal fire they had made to keep warm. And Peter was also standing with them, warming himself.
18 அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

Jesus before the High Priest (Matthew 26:57–68; Mark 14:53–65; Luke 22:66–71)

19 οὖν Ὁ ἀρχιερεὺς ἠρώτησεν τὸν Ἰησοῦν περὶ αὐτοῦ τῶν μαθητῶν καὶ περὶ αὐτοῦ τῆς διδαχῆς

19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
19 Meanwhile, the high priest questioned Jesus about His disciples and His teaching.
19 தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.

20 Ἐγὼ λελάληκα παρρησίᾳ τῷ κόσμῳ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτῷ ἐγὼ πάντοτε ἐδίδαξα ἐν συναγωγῇ καὶ ἐν τῷ ἱερῷ ὅπου πάντες οἱ Ἰουδαῖοι συνέρχονται καὶ ἐλάλησα οὐδέν ἐν κρυπτῷ

20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
20 “I have spoken openly to the world,” Jesus answered. “I always taught in the synagogues and at the temple, where all the Jews come together. I said nothing in secret.
20 இயேசு அவரைப் பார்த்து, "நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை.3

21 τί ἐρωτᾷς με ἐρώτησον τοὺς ἀκηκοότας τί ἐλάλησα αὐτοῖς ἴδε οὗτοι οἴδασιν ἃ ἐγώ εἶπον

21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
21 Why are you asking Me? Ask those who heard My message. Surely they know what I said.”
21 ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே" என்றார்.

22 δὲ αὐτοῦ εἰπόντος Ταῦτα εἷς τῶν ὑπηρετῶν παρεστηκὼς ἔδωκεν ῥάπισμα τῷ Ἰησοῦ εἰπών Οὕτως ἀποκρίνῃ τῷ ἀρχιερεῖ

22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
22 When Jesus had said this, one of the officers standing nearby slapped Him in the face and said, “Is this how You answer the high priest?”
22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?" என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.4

23 Ἰησοῦς Ἀπεκρίθη αὐτῷ Εἰ ἐλάλησα κακῶς μαρτύρησον περὶ τοῦ κακοῦ δὲ εἰ καλῶς τί δέρεις με

23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
23 Jesus replied, “If I said something wrong, testify as to what was wrong. But if I spoke correctly, why did you strike Me?”
23 இயேசு அவரிடம், "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று கேட்டார்.

24 οὖν ὁ Ἅννας Ἀπέστειλεν αὐτὸν δεδεμένον πρὸς Καϊάφαν τὸν ἀρχιερέα

24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
24 Then Annas sent Him, still bound, to Caiaphas the high priest.
24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.

Peter’s Second and Third Denials (Matthew 26:71–75; Mark 14:69–72; Luke 22:58–62)

25 Σίμων Πέτρος Ἦν δὲ ἑστὼς καὶ θερμαινόμενος οὖν εἶπον αὐτῷ εἶ Μὴ σὺ καὶ ἐκ αὐτοῦ τῶν μαθητῶν ἐκεῖνος Ἠρνήσατο καὶ εἶπεν εἰμί Οὐκ

25 சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
25 Simon Peter was still standing and warming himself. So they asked him, “Aren’t you also one of His disciples?” He denied it and said, “I am not.”
25 சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே" என்று கேட்டனர். அவர் "இல்லை" என்று மறுதலித்தார்.

26 εἷς ἐκ τῶν τοῦ ἀρχιερέως δούλων ὢν συγγενὴς οὗ τὸ ὠτίον Πέτρος ἀπέκοψεν Λέγει Οὐκ ἐγώ εἶδον σε μετ’ αὐτοῦ ἐν τῷ κήπῳ

26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
26 One of the high priest’s servants, a relative of the man whose ear Peter had cut off, asked, “Didn’t I see you with Him in the garden?”
26 தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?" என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.

27 Πέτρος ἠρνήσατο οὖν Πάλιν καὶ εὐθέως ἀλέκτωρ ἐφώνησεν

27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
27 Peter denied it once more, and immediately a rooster crowed.
27 பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.

Jesus before Pilate (Matthew 27:11–14; Luke 23:1–5)

28 οὖν Ἄγουσιν τὸν Ἰησοῦν ἀπὸ τοῦ Καϊάφα εἰς τὸ πραιτώριον δὲ ἦν πρωΐ καὶ αὐτοὶ οὐκ εἰσῆλθον εἰς τὸ πραιτώριον ἵνα μὴ μιανθῶσιν ἀλλὰ φάγωσιν τὸ πάσχα

28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
28 Then they led Jesus away from Caiaphas into the Praetorium. By now it was early morning, and the Jews did not enter the Praetorium, to avoid being defiled and unable to eat the Passover.
28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.

29 οὖν ὁ Πιλᾶτος Ἐξῆλθεν ἔξω πρὸς αὐτοὺς καὶ φησίν Τίνα κατηγορίαν φέρετε ‹κατὰ› τούτου τοῦ ἀνθρώπου

29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
29 So Pilate went out to them and asked, “What accusation are you bringing against this man?”
29 எனவே, பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, "நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?" என்று கேட்டார்.

30 Εἰ οὗτος ἦν μὴ ποιῶν κακὸν Ἀπεκρίθησαν καὶ εἶπαν αὐτῷ ἄν οὐκ παρεδώκαμεν αὐτόν σοι

30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
30 “If He were not a criminal,” they replied, “we would not have handed Him over to you.”
30 அதற்கு அவர்கள், "இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்" என்றார்கள்.

31 Λάβετε αὐτὸν ὑμεῖς καὶ κρίνατε αὐτόν κατὰ ὑμῶν τὸν νόμον οὖν ὁ Πιλᾶτος Εἶπεν αὐτοῖς οὐκ ἔξεστιν Ἡμῖν ἀποκτεῖναι οὐδένα οἱ Ἰουδαῖοι Εἶπον αὐτῷ

31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள் ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
31 “You take Him and judge Him by your own law,” Pilate told them. “We are not permitted to execute anyone,” the Jews replied.
31 பிலாத்து அவர்களிடம், "நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்" என்றார். யூதர்கள் அவரிடம், "சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது" என்றார்கள்.

32 ἵνα πληρωθῇ ὁ λόγος τοῦ Ἰησοῦ ὃν εἶπεν σημαίνων ποίῳ θανάτῳ ἤμελλεν ἀποθνήσκειν

32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
32 This was to fulfill the word that Jesus had spoken to indicate the kind of death He was going to die.b
32 இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்.5

33 οὖν ὁ Πιλᾶτος Εἰσῆλθεν πάλιν εἰς τὸ πραιτώριον καὶ ἐφώνησεν τὸν Ἰησοῦν καὶ εἶπεν αὐτῷ εἶ Σὺ ὁ Βασιλεὺς τῶν Ἰουδαίων

33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
33 Pilate went back into the Praetorium, summoned Jesus, and asked Him, “Are You the King of the Jews?”
33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான்.

34 σὺ λέγεις τοῦτο Ἀπὸ* σεαυτοῦ* Ἰησοῦς Ἀπεκρίθη ἢ ἄλλοι εἶπόν σοι περὶ ἐμοῦ

34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
34 “Are you saying this on your own,” Jesus asked, “or did others tell you about Me?”
34 இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?" என்று கேட்டார்.

35 εἰμι Μήτι ἐγὼ Ἰουδαῖός ὁ Πιλᾶτος Ἀπεκρίθη τὸ σὸν τὸ ἔθνος καὶ οἱ ἀρχιερεῖς παρέδωκάν σε ἐμοί τί ἐποίησας

35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
35 “Am I a Jew?” Pilate replied. “Your own people and chief priests handed You over to me. What have You done?”
35 அதற்கு பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?" என்று கேட்டான்.

36 Ἰησοῦς Ἀπεκρίθη ἡ ἐμὴ Ἡ βασιλεία ἔστιν οὐκ ἐκ τούτου τοῦ κόσμου εἰ ἡ ἐμή ἡ βασιλεία ἦν ἐκ τούτου τοῦ κόσμου ἄν ἐμοὶ οἱ ὑπηρέται «οἱ ἠγωνίζοντο» ἵνα μὴ παραδοθῶ τοῖς Ἰουδαίοις δὲ νῦν ἡ ἐμὴ ἡ βασιλεία ἔστιν οὐκ ἐντεῦθεν

36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
36 Jesus answered, “My kingdom is not of this world; if it were, My servants would fight to prevent My arrest by the Jews. But now My kingdom is not of this realm.”
36 இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல" என்றார்.

37 Οὐκοῦν σύ εἶ βασιλεὺς οὖν ὁ Πιλᾶτος Εἶπεν αὐτῷ Σὺ λέγεις ὅτι ἐγὼ εἰμι βασιλεύς ὁ Ἰησοῦς Ἀπεκρίθη εἰς τοῦτο γεγέννημαι καὶ εἰς τοῦτο ἐλήλυθα εἰς τὸν κόσμον ἵνα μαρτυρήσω τῇ ἀληθείᾳ πᾶς ὁ ὢν ἐκ τῆς ἀληθείας ἀκούει μου τῆς φωνῆς

37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
37 “Then You are a king!” Pilate said. “You say that I am a king,” Jesus answered. “For this reason I was born and have come into the world, to testify to the truth. Everyone who belongs to the truth listens to My voice.”
37 பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார்.6

38 Τί ἐστιν ἀλήθεια ὁ Πιλᾶτος Λέγει αὐτῷ Καὶ εἰπὼν τοῦτο ἐξῆλθεν πάλιν πρὸς τοὺς Ἰουδαίους καὶ λέγει αὐτοῖς Ἐγὼ εὑρίσκω οὐδεμίαν αἰτίαν ἐν αὐτῷ

38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
38 “What is truth?” Pilate asked. And having said this, he went out again to the Jews and told them, “I find no basis for a charge against Him.
38 பிலாத்து அவரிடம், "உண்மையா? அது என்ன?" என்று கேட்டான்.இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே" என்றான்.7

39 δὲ ἔστιν ὑμῖν συνήθεια ἵνα ἀπολύσω ὑμῖν ἕνα ἐν τῷ πάσχα οὖν βούλεσθε ἀπολύσω ὑμῖν τὸν Βασιλέα τῶν Ἰουδαίων

39 பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
39 But it is your custom that I release to you one prisoner at the Passover. So then, do you want me to release to you the King of the Jews?”
39 மேலும், "பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?" என்று கேட்டான்.

40 Μὴ τοῦτον οὖν Ἐκραύγασαν πάλιν λέγοντες ἀλλὰ τὸν Βαραββᾶν δὲ ὁ Βαραββᾶς ἦν λῃστής

40 அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
40 “Not this man,” they shouted, “but Barabbas!” (Now Barabbas was an insurrectionist.)
40 அதற்கு அவர்கள், "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்" என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
9 a See John 6:39 and John 17:12.
32 b See John 12:32–33.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.