பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 19 | John 19

The Soldiers Mock Jesus (Isaiah 50:4–11; Matthew 27:27–31; Mark 15:16–20; Luke 22:63–65)

1 οὖν Τότε ὁ Πιλᾶτος ἔλαβεν τὸν Ἰησοῦν καὶ ἐμαστίγωσεν

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
1 Then Pilate took Jesus and had Him flogged.
1 பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.

2 καὶ οἱ στρατιῶται πλέξαντες στέφανον ἐξ ἀκανθῶν ἐπέθηκαν αὐτοῦ τῇ κεφαλῇ καὶ περιέβαλον αὐτόν πορφυροῦν ἱμάτιον

2 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
2 The soldiers twisted together a crown of thorns, set it on His head, and dressed Him in a purple robe.
2 வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.

3 καὶ ἤρχοντο πρὸς αὐτὸν καὶ ἔλεγον Χαῖρε ὁ Βασιλεὺς τῶν Ἰουδαίων καὶ ἐδίδοσαν αὐτῷ ῥαπίσματα

3 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
3 And they went up to Him again and again, saying, “Hail, King of the Jews!” and slapping Him in the face.
3 அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.

4 Καὶ πάλιν ὁ Πιλᾶτος ἐξῆλθεν ἔξω καὶ λέγει αὐτοῖς Ἴδε ἄγω αὐτὸν ἔξω ὑμῖν ἵνα γνῶτε ὅτι εὑρίσκω οὐδεμίαν αἰτίαν ἐν αὐτῷ

4 பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
4 Once again Pilate came out and said to the Jews, “Look, I am bringing Him out to you to let you know that I find no basis for a charge against Him.”
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்றான்.

5 οὖν ὁ Ἰησοῦς ἐξῆλθεν ἔξω φορῶν τὸν στέφανον ἀκάνθινον καὶ τὸ πορφυροῦν ἱμάτιον καὶ λέγει αὐτοῖς Ἰδοὺ ὁ ἄνθρωπος

5 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
5 When Jesus came out wearing the crown of thorns and the purple robe, Pilate said to them, “Here is the man!”
5 இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், "இதோ! மனிதன்"1 என்றான்.

1 "பாருங்கள், இவர்தான் மனிதன்" எனவும் மொழிபெயர்க்கலாம்.

6 οὖν Ὅτε οἱ ἀρχιερεῖς καὶ οἱ ὑπηρέται εἶδον αὐτὸν ἐκραύγασαν λέγοντες Σταύρωσον σταύρωσον Λάβετε αὐτὸν καὶ σταυρώσατε ὑμεῖς ὁ Πιλᾶτος Λέγει αὐτοῖς γὰρ ἐγὼ εὑρίσκω οὐχ αἰτίαν ἐν αὐτῷ

6 பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.
6 As soon as the chief priests and officers saw Him, they shouted, “Crucify Him! Crucify Him!” “You take Him and crucify Him,” Pilate replied, “for I find no basis for a charge against Him.”
6 அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்றான்.

7 Ἡμεῖς ἔχομεν νόμον Ἀπεκρίθησαν αὐτῷ οἱ Ἰουδαῖοι καὶ κατὰ τὸν νόμον ὀφείλει ἀποθανεῖν ὅτι ἐποίησεν ἑαυτὸν Υἱὸν Θεοῦ

7 யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
7 “We have a law,” answered the Jews, “and according to that law He must die, because He declared Himself to be the Son of God.”
7 யூதர்கள் அவரைப் பார்த்து, "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்" என்றனர்.2

8 οὖν Ὅτε ὁ Πιλᾶτος ἤκουσεν τοῦτον τὸν λόγον μᾶλλον ἐφοβήθη

8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
8 When Pilate heard this statement, he was even more afraid,
8 பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.

9 καὶ εἰσῆλθεν πάλιν εἰς τὸ πραιτώριον Πόθεν εἶ σύ καὶ λέγει τῷ Ἰησοῦ δὲ Ὁ Ἰησοῦς οὐκ ἔδωκεν αὐτῷ ἀπόκρισιν

9 மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
9 and he went back into the Praetorium. “Where are You from?” he asked. But Jesus gave no answer.
9 அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், "நீ எங்கிருந்து வந்தவன்?" என்று கேட்டான். ஆனால், இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.

10 οὖν ὁ Πιλᾶτος Λέγει αὐτῷ οὐ λαλεῖς Ἐμοὶ οὐκ οἶδας ὅτι ἔχω ἐξουσίαν ἀπολῦσαί σε καὶ ἔχω ἐξουσίαν σταυρῶσαί σε

10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
10 So Pilate said to Him, “Do You refuse to speak to me? Do You not know that I have authority to release You and authority to crucify You?”
10 அப்போது பிலாத்து, "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?" என்றான்.

11 Ἰησοῦς Ἀπεκρίθη ‹αὐτῷ› εἶχες Οὐκ ἐξουσίαν οὐδεμίαν κατ’ ἐμοῦ εἰ ἦν μὴ δεδομένον σοι ἄνωθεν διὰ τοῦτο ὁ παραδούς μέ σοι ἔχει μείζονα ἁμαρτίαν

11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
11 Jesus answered, “You would have no authority over Me if it were not given to you from above. Therefore the one who handed Me over to you is guilty of greater sin.”
11 இயேசு மறுமொழியாக, "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்" என்றார்.

12 Ἐκ τούτου ὁ Πιλᾶτος ἐζήτει ἀπολῦσαι αὐτόν δὲ οἱ Ἰουδαῖοι ἐκραύγασαν λέγοντες Ἐὰν ἀπολύσῃς τοῦτον εἶ οὐκ φίλος τοῦ Καίσαρος πᾶς ὁ ποιῶν ἑαυτὸν βασιλέα ἀντιλέγει τῷ Καίσαρι

12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
12 From then on, Pilate tried to release Him, but the Jews kept shouting, “If you release this man, you are no friend of Caesar. Anyone who declares himself a king is defying Caesar.”
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால், யூதர்கள், "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி" என்றார்கள்.

13 οὖν Ὁ Πιλᾶτος ἀκούσας τούτων τῶν λόγων ἤγαγεν τὸν Ἰησοῦν ἔξω καὶ ἐκάθισεν ἐπὶ βήματος εἰς τόπον λεγόμενον Λιθόστρωτον δὲ Ἑβραϊστὶ Γαββαθα

13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
13 When Pilate heard these words, he brought Jesus out and sat on the judgment seat at a place called the Stone Pavement, which in Hebrewa is Gabbatha.
13 இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் "கபதா" என்பது பெயர்.

14 δὲ ἦν Παρασκευὴ τοῦ πάσχα ἦν ὡς ἕκτη ὥρα καὶ λέγει τοῖς Ἰουδαίοις Ἴδε ὑμῶν ὁ Βασιλεὺς

14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
14 It was the day of Preparation for the Passover, about the sixth hour.b And Pilate said to the Jews, “Here is your King!”
14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், "இதோ, உங்கள் அரசன்!" என்றான்.

15 οὖν Ἐκραύγασαν Ἆρον Ἐκεῖνοι ἆρον σταύρωσον αὐτόν σταυρώσω ὑμῶν Τὸν Βασιλέα ὁ Πιλᾶτος Λέγει αὐτοῖς ἔχομεν Οὐκ βασιλέα εἰ μὴ Καίσαρα Ἀπεκρίθησαν οἱ ἀρχιερεῖς

15 அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
15 At this, they shouted, “Away with Him! Away with Him! Crucify Him!” “Shall I crucify your King?” Pilate asked. “We have no king but Caesar,” replied the chief priests.
15 அவர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?" என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள்.3

The Crucifixion (Psalm 22:1–31; Matthew 27:32–44; Mark 15:21–32; Luke 23:26–43)

16 οὖν Τότε παρέδωκεν αὐτὸν αὐτοῖς ἵνα σταυρωθῇ οὖν Παρέλαβον τὸν Ἰησοῦν

16 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
16 Then Pilate handed Jesus over to be crucified, and the soldiers took Him away.
16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

17 Καὶ βαστάζων ἑαυτῷ τὸν σταυρὸν ἐξῆλθεν εἰς τὸν λεγόμενον τόπον Κρανίου ὃ Ἑβραϊστὶ λέγεται Γολγοθᾶ

17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
17 Carrying His own cross, He went out to The Place of the Skull, which in Hebrew is called Golgotha.
17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.

18 ὅπου ἐσταύρωσαν αὐτὸν καὶ μετ’ αὐτοῦ δύο ἄλλους ἐντεῦθεν καὶ ἐντεῦθεν δὲ τὸν Ἰησοῦν μέσον

18 அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
18 There they crucified Him, and with Him two others, one on each side, with Jesus in the middle.
18 அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.

19 δὲ ὁ Πιλᾶτος καὶ καὶ Ἔγραψεν τίτλον ἔθηκεν ἐπὶ τοῦ σταυροῦ δὲ ἦν γεγραμμένον ΙΗΣΟΥΣ Ο* ΝΑΖΩΡΑΙΟΣ Ο* ΒΑΣΙΛΕΥΣ ΤΩΝ ΙΟΥΔΑΙΩΝ

19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
19 Pilate also had a notice posted on the cross. It read: JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS.
19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது.

20 οὖν πολλοὶ τῶν Ἰουδαίων ἀνέγνωσαν Τοῦτον τὸν τίτλον ὅτι ὁ τόπος ὅπου ὁ Ἰησοῦς ἐσταυρώθη ἦν ἐγγὺς τῆς πόλεως καὶ ἦν γεγραμμένον Ἑβραϊστί Ῥωμαϊστί Ἑλληνιστί

20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
20 Many of the Jews read this sign, because the place where Jesus was crucified was near the city, and it was written in Hebrew, Latin, and Greek.
20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.4

21 οὖν οἱ ἀρχιερεῖς τῶν Ἰουδαίων ἔλεγον τῷ Πιλάτῳ Μὴ γράφε Ὁ Βασιλεὺς τῶν Ἰουδαίων ἀλλ’ ὅτι ἐκεῖνος εἶπεν εἰμι Βασιλεύς «τῶν Ἰουδαίων»

21 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
21 So the chief priests of the Jews said to Pilate, “Do not write, ‘The King of the Jews,’ but only that He said, ‘I am the King of the Jews.’”
21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், "'யூதரின் அரசன்' என்று எழுத வேண்டாம்; மாறாக, 'யூதரின் அரசன் நான்' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

22 ὁ Πιλᾶτος Ἀπεκρίθη Ὃ γέγραφα γέγραφα

22 பிலாத்து பிரதியுத்தரமாக: நானெழுதினது எழுதினதே என்றான்.
22 Pilate answered, “What I have written, I have written.”
22 பிலாத்து அவர்களைப் பார்த்து, "நான் எழுதியது எழுதியதே" என்றான்.

23 οὖν ὅτε Οἱ στρατιῶται ἐσταύρωσαν τὸν Ἰησοῦν ἔλαβον καὶ ἐποίησαν αὐτοῦ τὰ ἱμάτια τέσσαρα μέρη μέρος ἑκάστῳ στρατιώτῃ καὶ τὸν χιτῶνα δὲ ὁ χιτὼν ἦν ἄραφος ὑφαντὸς ὅλου δι’ ἐκ τῶν ἄνωθεν

23 போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
23 When the soldiers had crucified Jesus, they divided His garments into four parts, one for each soldier, with the tunic remaining. It was seamless, woven in one piece from top to bottom.
23 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.

24 οὖν εἶπαν πρὸς ἀλλήλους Μὴ σχίσωμεν αὐτόν ἀλλὰ λάχωμεν περὶ τίνος ἔσται αὐτοῦ ἵνα πληρωθῇ ἡ γραφὴ ‹ἡ λέγουσα› Διεμερίσαντο μου τὰ ἱμάτιά ἑαυτοῖς καὶ ἔβαλον κλῆρον ἐπὶ μου τὸν ἱματισμόν οὖν ταῦτα Οἱ στρατιῶται μὲν ἐποίησαν

24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
24 So they said to one another, “Let us not tear it. Instead, let us cast lots to see who will get it.” This was to fulfill the Scripture: “They divided My garments among them, and cast lots for My clothing.”c So that is what the soldiers did.
24 எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, "அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்" என்றார்கள். "என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.5

25 παρὰ τῷ σταυρῷ τοῦ Ἰησοῦ Εἱστήκεισαν δὲ αὐτοῦ ἡ μήτηρ καὶ ἡ τῆς αὐτοῦ μητρὸς ἀδελφὴ Μαρία ἡ τοῦ Κλωπᾶ καὶ Μαρία ἡ Μαγδαληνή

25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
25 Near the cross of Jesus stood His mother and her sister, as well as Mary the wife of Clopas and Mary Magdalene.
25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.

26 οὖν Ἰησοῦς ἰδὼν τὴν μητέρα καὶ τὸν μαθητὴν ὃν ἠγάπα παρεστῶτα λέγει τῇ μητρί Γύναι ἴδε σου ὁ υἱός

26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
26 When Jesus saw His mother and the disciple whom He loved standing nearby, He said to His mother, “Woman, here is your son.”
26 இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.

27 εἶτα λέγει τῷ μαθητῇ Ἴδε σου ἡ μήτηρ καὶ ἀπ’ ἐκείνης τῆς ὥρας ὁ μαθητὴς ἔλαβεν αὐτὴν εἰς τὰ ἴδια

27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
27 Then He said to the disciple, “Here is your mother.” So from that hour, this disciple took her into his home.
27 பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

The Death of Jesus (Psalm 22:1–31; Matthew 27:45–56; Mark 15:33–41; Luke 23:44–49)

28 Μετὰ τοῦτο ὁ εἰδὼς ὅτι πάντα ἤδη τετέλεσται ἵνα τελειωθῇ ἡ γραφὴ Ἰησοῦς λέγει Διψῶ

28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
28 After this, knowing that everything had now been accomplished, and to fulfill the Scripture, Jesus said, “I am thirsty.”d
28 இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.6

29 σκεῦος μεστόν ὄξους ἔκειτο οὖν μεστὸν σπόγγον τοῦ ὄξους περιθέντες ὑσσώπῳ προσήνεγκαν αὐτοῦ τῷ στόματι

29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
29 A jar of sour winee was sitting there. So they soaked a sponge in the wine, put it on a stalk of hyssop, and lifted it to His mouth.f
29 அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்

30 οὖν ὅτε Ἰησοῦς ἔλαβεν τὸ ὄξος ὁ εἶπεν Τετέλεσται καὶ κλίνας τὴν κεφαλὴν παρέδωκεν τὸ πνεῦμα

30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
30 When Jesus had received the sour wine, He said, “It is finished.” And bowing His head, He yielded up His spirit.
30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

Jesus’ Side Is Pierced (Zechariah 12:10–14)

31 ἦν Παρασκευὴ γὰρ ἐκείνου ἡμέρα ἦν ἡ μεγάλη τοῦ σαββάτου ἵνα τὰ σώματα μὴ μείνῃ ἐπὶ τοῦ σταυροῦ ἐν τῷ σαββάτῳ οὖν Οἱ Ἰουδαῖοι ἐπεὶ ἠρώτησαν τὸν Πιλᾶτον ἵνα τὰ σκέλη κατεαγῶσιν καὶ αὐτῶν ἀρθῶσιν

31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
31 It was the day of Preparation, and the next day was a High Sabbath. In order that the bodies would not remain on the cross during the Sabbath, the Jews asked Pilate to have the legs broken and the bodies removed.
31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.7

32 οὖν οἱ στρατιῶται ἦλθον καὶ μὲν κατέαξαν τὰ σκέλη τοῦ πρώτου τοῦ συσταυρωθέντος αὐτῷ καὶ τοῦ ἄλλου

32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
32 So the soldiers came and broke the legs of the first man who had been crucified with Jesus, and those of the other.
32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.

33 δὲ ὡς ἐλθόντες ἐπὶ τὸν Ἰησοῦν εἶδον αὐτὸν ἤδη τεθνηκότα οὐ κατέαξαν αὐτοῦ τὰ σκέλη

33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
33 But when they came to Jesus and saw that He was already dead, they did not break His legs.
33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.

34 ἀλλ’ εἷς τῶν στρατιωτῶν ἔνυξεν αὐτοῦ τὴν πλευρὰν λόγχῃ καὶ εὐθὺς αἷμα καὶ ὕδωρ ἐξῆλθεν

34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
34 Instead, one of the soldiers pierced His side with a spear, and immediately blood and water flowed out.
34 ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

35 καὶ ὁ ἑωρακὼς μεμαρτύρηκεν καὶ αὐτοῦ ἡ μαρτυρία ἐστιν ἀληθινὴ καὶ ἐκεῖνος οἶδεν ὅτι λέγει ἀληθῆ ἵνα ὑμεῖς καὶ πιστεύητε

35 அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
35 The one who saw it has testified to this, and his testimony is true. He knows that he is telling the truth, so that you also may believe.
35 இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.

36 γὰρ ταῦτα Ἐγένετο ἵνα ἡ γραφὴ πληρωθῇ οὐ αὐτοῦ Ὀστοῦν συντριβήσεται

36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
36 Now these things happened so that the Scripture would be fulfilled: “Not one of His bones will be broken.”g
36 "எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.8

37 καὶ πάλιν ἑτέρα γραφὴ λέγει Ὄψονται εἰς ὃν ἐξεκέντησαν

37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
37 And, as another Scripture says: “They will look on the One they have pierced.”h
37 மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது.9

The Burial of Jesus (Isaiah 53:9–12; Matthew 27:57–61; Mark 15:42–47; Luke 23:50–56)

38 δὲ Μετὰ ταῦτα Ἰωσὴφ [ὁ] ἀπὸ Ἁριμαθαίας ὢν μαθητὴς τοῦ Ἰησοῦ δὲ κεκρυμμένος διὰ τὸν φόβον τῶν Ἰουδαίων ἠρώτησεν τὸν Πιλᾶτον ἵνα ἄρῃ τὸ σῶμα τοῦ Ἰησοῦ καὶ ὁ Πιλᾶτος ἐπέτρεψεν οὖν ἦλθεν καὶ ἦρεν αὐτοῦ τὸ σῶμα

38 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
38 Afterward, Joseph of Arimathea, who was a disciple of Jesus (but secretly for fear of the Jews), asked Pilate to let him remove the body of Jesus. Pilate gave him permission, so he came and removed His body.
38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.

39 δὲ Νικόδημος ὁ ἐλθὼν τὸ πρῶτον πρὸς αὐτὸν νυκτὸς καὶ ἦλθεν φέρων μίγμα σμύρνης καὶ ἀλόης ὡς ἑκατόν λίτρας

39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
39 Nicodemus, who had previously come to Jesus at night, also brought a mixture of myrrh and aloes, about seventy-five pounds.i
39 முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.10

40 οὖν ἔλαβον τὸ σῶμα τοῦ Ἰησοῦ καὶ ἔδησαν αὐτὸ ὀθονίοις μετὰ τῶν ἀρωμάτων καθὼς ἐστὶν τοῖς Ἰουδαίοις ἐνταφιάζειν ἔθος

40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
40 So they took the body of Jesus and wrapped it in linen cloths with the spices, according to the Jewish burial custom.
40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.

41 δὲ Ἦν κῆπος ἐν τῷ τόπῳ ὅπου ἐσταυρώθη καὶ ἐν τῷ κήπῳ καινόν μνημεῖον ἐν ᾧ οὐδεὶς ἦν οὐδέπω τεθειμένος

41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
41 Now there was a garden in the place where Jesus was crucified, and in the garden a new tomb in which no one had yet been laid.
41 அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.

42 οὖν διὰ τὴν τῶν Ἰουδαίων Παρασκευὴν ὅτι τὸ μνημεῖον ἦν ἐγγὺς ἔθηκαν τὸν Ἰησοῦν ἐκεῖ

42 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
42 And because it was the Jewish day of Preparation and the tomb was nearby, they placed Jesus there.
42 அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
13 a Or in Aramaic ; also in verses 17 and 20
14 b That is, about noon
24 c Psalm 22:18
28 d See Psalm 22:15.
29 e Or A jar of wine vinegar ; similarly in verse 30
29 f See Psalm 69:21.
36 g Psalm 34:20; see also Exodus 12:46 and Numbers 9:12.
37 h Zechariah 12:10
39 i Greek about a hundred litras ; that is, approximately 34 kilograms

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.