பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 18 | Luke 18

The Parable of the Persistent Widow

1δὲ Ἔλεγεν αὐτοῖς παραβολὴν πρὸς τὸ αὐτοὺς δεῖν προσεύχεσθαι πάντοτε καὶ μὴ ἐνκακεῖν

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
1 Then Jesus told them a parable about their need to pray at all times and not lose heart:
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.1

2λέγων ἔν τινι πόλει ἦν τις Κριτής μὴ φοβούμενος τὸν Θεὸν καὶ μὴ ἐντρεπόμενος ἄνθρωπον

2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
2 “In a certain town there was a judge who neither feared God nor respected men.
2 "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

3δὲ ἦν χήρα ἐν ἐκείνῃ τῇ πόλει καὶ ἤρχετο λέγουσα πρὸς αὐτὸν Ἐκδίκησόν με ἀπὸ μου τοῦ ἀντιδίκου

3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.
3 And there was a widow in that town who kept appealing to him, ‘Give me justice against my adversary.’
3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

4Καὶ ἐπὶ χρόνον οὐκ ἤθελεν δὲ μετὰ ταῦτα εἶπεν ἐν ἑαυτῷ Εἰ καὶ οὐ φοβοῦμαι τὸν Θεὸν οὐδὲ ἐντρέπομαι ἄνθρωπον

4 வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
4 For a while he refused, but later he said to himself, ‘Though I neither fear God nor respect men,
4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

5γε διά ταύτην τὴν χήραν τὸ παρέχειν μοι κόπον ἐκδικήσω αὐτήν ἵνα μὴ ὑπωπιάζῃ με εἰς τέλος ἐρχομένη

5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
5 yet because this widow keeps pestering me, I will give her justice. Then she will stop wearing me out with her perpetual requests.’”
5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."2

6δὲ ὁ Κύριος Εἶπεν Ἀκούσατε τί λέγει ὁ τῆς ἀδικίας κριτὴς

6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
6 And the Lord said, “Listen to the words of the unjust judge.
6 பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,

7δὲ οὐ μὴ ὁ Θεὸς ποιήσῃ τὴν ἐκδίκησιν αὐτοῦ τῶν ἐκλεκτῶν τῶν βοώντων αὐτῷ ἡμέρας καὶ νυκτός καὶ μακροθυμεῖ ἐπ’ αὐτοῖς

7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
7 Will not God bring about justice for His elect who cry out to Him day and night? Will He continue to defer their help?
7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?3

8λέγω ὑμῖν ὅτι ποιήσει ἐν τάχει τὴν ἐκδίκησιν αὐτῶν πλὴν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐλθὼν εὑρήσει ἆρα τὴν πίστιν ἐπὶ τῆς γῆς

8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
8 I tell you, He will promptly carry out justice on their behalf. Nevertheless, when the Son of Man comes, will He find faith on earth?”
8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார்.4

The Pharisee and the Tax Collector

9δὲ πρός τινας τοὺς πεποιθότας ἐφ’ ἑαυτοῖς ὅτι εἰσὶν δίκαιοι καὶ ἐξουθενοῦντας τοὺς λοιποὺς καὶ Εἶπεν ταύτην τὴν παραβολὴν

9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
9 To some who trusted in their own righteousness and viewed others with contempt, He also told this parable:
9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:5

10δύο Ἄνθρωποι ἀνέβησαν εἰς τὸ ἱερὸν προσεύξασθαι ὁ εἷς Φαρισαῖος καὶ ὁ ἕτερος τελώνης

10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
10 “Two men went up to the temple to pray. One was a Pharisee and the other a tax collector.
10 "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

11ὁ Φαρισαῖος σταθεὶς ταῦτα «πρὸς ἑαυτὸν» προσηύχετο Ὁ Θεός εὐχαριστῶ σοι ὅτι εἰμὶ οὐκ ὥσπερ οἱ λοιποὶ τῶν ἀνθρώπων ἅρπαγες ἄδικοι μοιχοί ἢ καὶ ὡς οὗτος ὁ τελώνης

11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
11 The Pharisee stood by himself and prayed,a ‘God, I thank You that I am not like the other men—swindlers, evildoers, adulterers—or even like this tax collector.
11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

12νηστεύω δὶς τοῦ σαββάτου ἀποδεκατῶ πάντα ὅσα κτῶμαι

12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
12 I fast twice a week and pay tithes of all that I acquire.’
12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.'

13δὲ Ὁ τελώνης ἑστὼς μακρόθεν οὐκ ἤθελεν οὐδὲ ἐπᾶραι τοὺς ὀφθαλμοὺς εἰς τὸν οὐρανόν ἀλλ’ ἔτυπτεν αὐτοῦ τὸ στῆθος λέγων Ὁ Θεός ἱλάσθητί μοι τῷ ἁμαρτωλῷ

13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
13 But the tax collector stood at a distance, unwilling even to lift up his eyes to heaven. Instead, he beat his breast and said, ‘God, have mercy on me, a sinner!’
13 ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்."

14λέγω ὑμῖν οὗτος παρ’ ἐκεῖνον κατέβη εἰς αὐτοῦ τὸν οἶκον δεδικαιωμένος ὅτι πᾶς ὁ ὑψῶν ἑαυτὸν ταπεινωθήσεται δὲ ὁ ταπεινῶν ἑαυτὸν ὑψωθήσεται

14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
14 I tell you, this man, rather than the Pharisee, went home justified. For everyone who exalts himself will be humbled, but the one who humbles himself will be exalted.”
14 இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.6

Jesus Blesses the Children (Matthew 19:13–15; Mark 10:13–16)

15δὲ Προσέφερον καὶ τὰ βρέφη αὐτῷ ἵνα ἅπτηται αὐτῶν δὲ οἱ μαθηταὶ ἰδόντες ἐπετίμων αὐτοῖς

15 பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
15 Now people were even bringing their babies to Jesus for Him to place His hands on them. And when the disciples saw this, they rebuked those who brought them.
15 குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.

16δὲ Ὁ Ἰησοῦς προσεκαλέσατο αὐτὰ λέγων Ἄφετε τὰ παιδία ἔρχεσθαι πρός με καὶ μὴ κωλύετε αὐτά γὰρ ἡ βασιλεία τοῦ Θεοῦ ἐστὶν τῶν τοιούτων

16 இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது;
16 But Jesus called the children to Him and said, “Let the little children come to Me, and do not hinder them! For the kingdom of God belongs to such as these.
16 ஆனால், இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, "சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.

17ἀμὴν λέγω ὑμῖν ἂν ὃς μὴ δέξηται τὴν βασιλείαν τοῦ Θεοῦ ὡς παιδίον οὐ μὴ εἰσέλθῃ εἰς αὐτήν

17 எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
17 Truly I tell you, anyone who does not receive the kingdom of God like a little child will never enter it.”
17 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சீடர்களிடம் கூறினார்.

The Rich Young Ruler (Matthew 19:16–30; Mark 10:17–31)

18Καὶ τις ἄρχων ἐπηρώτησέν αὐτὸν λέγων ἀγαθέ Διδάσκαλε τί ποιήσας κληρονομήσω αἰώνιον ζωὴν

18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18 Then a certain ruler asked Him, “Good Teacher, what must I do to inherit eternal life?”
18 அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

19Τί λέγεις με ἀγαθόν δὲ ὁ Ἰησοῦς Εἶπεν αὐτῷ οὐδεὶς ἀγαθὸς εἰ μὴ ὁ Θεός εἷς

19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
19 “Why do you call Me good?” Jesus replied. “No one is good except God alone.
19 அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!

20οἶδας τὰς ἐντολὰς Μὴ μοιχεύσῃς Μὴ φονεύσῃς Μὴ κλέψῃς Μὴ ψευδομαρτυρήσῃς Τίμα σου τὸν πατέρα καὶ τὴν μητέρα

20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
20 You know the commandments: ‘Do not commit adultery, do not murder, do not steal, do not bear false witness, honor your father and mother.’”b
20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்ச்சான்று சொல்லாதே. உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.7

21πάντα Ταῦτα ἐφύλαξα ἐκ ‹μου› νεότητος δὲ Ὁ εἶπεν

21 அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
21 “All these I have kept from my youth,” he said.
21 அவர், "இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்" என்றார்.

22δὲ Ἀκούσας ὁ Ἰησοῦς εἶπεν αὐτῷ σοι Ἔτι λείπει ἕν πώλησον πάντα ὅσα ἔχεις καὶ διάδος πτωχοῖς καὶ ἕξεις θησαυρὸν ἐν τοῖς οὐρανοῖς καὶ δεῦρο ἀκολούθει μοι

22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 On hearing this, Jesus told him, “You still lack one thing: Sell everything you own and give to the poor, and you will have treasure in heaven. Then come, follow Me.”
22 இதைக் கேட்ட இயேசு அவரிடம், "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.

23δὲ Ὁ ἀκούσας ταῦτα ἐγενήθη περίλυπος γὰρ ἦν σφόδρα πλούσιος

23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
23 But when the ruler heard this, he became very sad, because he was extremely wealthy.
23 இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார். ஏனெனில், அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.

24δὲ Ἰδὼν αὐτὸν γενόμενον] [περίλυπον ὁ Ἰησοῦς εἶπεν Πῶς δυσκόλως οἱ τὰ ἔχοντες χρήματα εἰσπορεύονται εἰς τὴν βασιλείαν τοῦ Θεοῦ

24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
24 Seeing the man’s sadness,c Jesus said, “How hard it is for the rich to enter the kingdom of God!
24 அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு, "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது எவ்வளவு கடினம்!

25γάρ ἐστιν εὐκοπώτερον κάμηλον εἰσελθεῖν διὰ τρήματος βελόνης ἢ πλούσιον εἰσελθεῖν εἰς τὴν βασιλείαν τοῦ Θεοῦ

25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
25 Indeed, it is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of God.”
25 செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

26δὲ οἱ ἀκούσαντες Εἶπαν τίς Καὶ δύναται σωθῆναι

26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26 Those who heard this asked, “Who then can be saved?”
26 இதைக் கேட்டவர்கள், "பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?" என்று கேட்டார்கள்.

27δὲ Ὁ εἶπεν Τὰ ἀδύνατα παρὰ ἀνθρώποις ἐστιν δυνατὰ παρὰ τῷ Θεῷ

27 அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
27 But Jesus said, “What is impossible with man is possible with God.”
27 இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார்.

28Ἰδοὺ δὲ ὁ Εἶπεν Πέτρος ἡμεῖς ἀφέντες τὰ ἴδια ἠκολουθήσαμέν σοι

28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
28 “Look,” said Peter, “we have left all we hadd to follow You.”
28 பேதுரு அவரிடம், "பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே" என்றார்.

29Ἀμὴν λέγω ὑμῖν δὲ Ὁ εἶπεν αὐτοῖς ὅτι ἐστιν οὐδείς ὃς ἀφῆκεν οἰκίαν ἢ γυναῖκα ἢ ἀδελφοὺς ἢ γονεῖς ἢ τέκνα ἕνεκεν τῆς βασιλείας τοῦ Θεοῦ

29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதாரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்டவன் எவனும்,
29 “Truly I tell you,” Jesus replied, “no one who has left home or wife or brothers or parents or children for the sake of the kingdom of God
29 அதற்கு அவர் அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்8

30ὃς οὐχὶ μὴ ἀπολάβῃ* πολλαπλασίονα ἐν τούτῳ τῷ καιρῷ καὶ ἐν τῷ αἰῶνι τῷ ἐρχομένῳ αἰώνιον ζωὴν

30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
30 will fail to receive many times more in this age—and in the age to come, eternal life.”
30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்" என்றார்.

The Third Prediction of the Passion (Matthew 20:17–19; Mark 10:32–34)

31δὲ Παραλαβὼν τοὺς δώδεκα εἶπεν πρὸς αὐτούς Ἰδοὺ ἀναβαίνομεν εἰς Ἰερουσαλήμ καὶ πάντα διὰ τῶν προφητῶν τὰ γεγραμμένα τῷ Υἱῷ τοῦ ἀνθρώπου τελεσθήσεται

31 பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
31 Then Jesus took the Twelve aside and said to them, “Look, we are going up to Jerusalem, and everything the prophets have written about the Son of Man will be fulfilled.
31 இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம், "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்; மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.

32γὰρ παραδοθήσεται τοῖς ἔθνεσιν καὶ ἐμπαιχθήσεται καὶ ὑβρισθήσεται καὶ ἐμπτυσθήσεται

32 எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
32 He will be delivered over to the Gentiles and will be mocked and insulted and spit upon.
32 அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.

33καὶ μαστιγώσαντες ἀποκτενοῦσιν αὐτόν καὶ τῇ τῇ τρίτῃ ἡμέρᾳ ἀναστήσεται

33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
33 They will flog Him and kill Him, and on the third day He will rise again.”
33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக்கொலை செய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்" என்றார்.

34Καὶ αὐτοὶ συνῆκαν οὐδὲν τούτων καὶ τοῦτο τὸ ῥῆμα ἦν κεκρυμμένον ἀπ’ αὐτῶν καὶ οὐκ ἐγίνωσκον τὰ λεγόμενα

34 இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
34 But the disciples did not understand any of these things. The meaning was hidden from them, and they did not comprehend what He was saying.
34 இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

Jesus Heals a Blind Beggar (Matthew 20:29–34; Mark 10:46–52)

35δὲ Ἐγένετο ἐν αὐτὸν τῷ ἐγγίζειν εἰς Ἰεριχὼ τις τυφλός ἐκάθητο παρὰ τὴν ὁδὸν ἐπαιτῶν

35 பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
35 As Jesus drew near to Jericho, a blind man was sitting beside the road, begging.
35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

36δὲ ἀκούσας ὄχλου διαπορευομένου ἐπυνθάνετο τί εἴη τοῦτο

36 ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
36 When he heard the crowd going by, he asked what was happening.
36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார்.

37Ἰησοῦς ὁ Ναζωραῖος παρέρχεται δὲ Ἀπήγγειλαν αὐτῷ ὅτι

37 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
37 “Jesus of Nazareth is passing by,” they told him.
37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

38Καὶ ἐβόησεν λέγων Ἰησοῦ υἱὲ Δαυίδ ἐλέησόν με

38 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
38 So he called out, “Jesus, Son of David, have mercy on me!”
38 உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார்.

39Καὶ οἱ προάγοντες ἐπετίμων αὐτῷ ἵνα αὐτὸς σιγήσῃ δὲ ἔκραζεν πολλῷ μᾶλλον Υἱὲ Δαυίδ ἐλέησόν με

39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
39 Those who led the way admonished him to be silent, but he cried out all the louder, “Son of David, have mercy on me!”
39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

40δὲ ὁ Ἰησοῦς Σταθεὶς ἐκέλευσεν αὐτὸν ἀχθῆναι πρὸς αὐτόν δὲ αὐτοῦ ἐγγίσαντος ἐπηρώτησεν αὐτόν

40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
40 Jesus stopped and directed that the man be brought to Him. When he had been brought near, Jesus asked him,
40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,

41Τί θέλεις ποιήσω σοι Κύριε δὲ Ὁ εἶπεν ἵνα ἀναβλέψω

41 நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
41 “What do you want Me to do for you?” “Lord,” he said, “let me see again.”
41 "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்" என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.

42Ἀνάβλεψον Καὶ ὁ Ἰησοῦς εἶπεν αὐτῷ σου ἡ πίστις σέσωκέν σε

42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
42 “Receive your sight!” Jesus replied. “Your faith has healed you.”
42 இயேசு அவரிடம், "பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.

43καὶ παραχρῆμα ἀνέβλεψεν καὶ ἠκολούθει αὐτῷ δοξάζων τὸν Θεόν καὶ πᾶς ὁ λαὸς ἰδὼν ἔδωκεν αἶνον τῷ Θεῷ

43 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
43 Immediately he received his sight and followed Jesus, glorifying God. And all the people who saw this gave praise to God.
43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
11 a Or stood and prayed to himself
20 Exodus 20:12–16; Deuteronomy 5:16–20
24 c Literally Seeing that he had become sorrowful ; SBL, NE, and WH Seeing him
28 d Literally left our own ; BYZ and TR left all

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.