பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 11 | John 11

The Death of Lazarus

1 δέ τις Λάζαρος Ἦν ἀσθενῶν ἀπὸ Βηθανίας ἐκ τῆς κώμης Μαρίας καὶ αὐτῆς τῆς ἀδελφῆς Μάρθας

1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.
1 At this time a man named Lazarus was sick. He lived in Bethany, the village of Mary and her sister Martha.
1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.

2 δὲ Μαριὰμ ἧς ὁ ἀδελφὸς Λάζαρος ἠσθένει ἦν ἡ ἀλείψασα τὸν Κύριον μύρῳ καὶ ἐκμάξασα αὐτοῦ τοὺς πόδας ταῖς αὐτῆς θριξὶν

2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்.
2 (Mary, whose brother Lazarus was sick, was to anoint the Lord with perfume and wipe His feeta with her hair.)
2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.1

3 οὖν αἱ ἀδελφαὶ ἀπέστειλαν λέγουσαι πρὸς αὐτὸν Κύριε ἴδε ὃν φιλεῖς ἀσθενεῖ

3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
3 So the sisters sent word to Jesus, “Lord, the one You love is sick.”
3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள்.

4 δὲ ὁ Ἰησοῦς Ἀκούσας εἶπεν Αὕτη ἡ ἀσθένεια ἔστιν οὐκ πρὸς θάνατον ἀλλ’ ὑπὲρ τῆς δόξης τοῦ Θεοῦ ἵνα ὁ Υἱὸς τοῦ Θεοῦ δοξασθῇ δι’ αὐτῆς

4 இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
4 When Jesus heard this, He said, “This sickness will not end in death. No, it is for the glory of God, so that the Son of God may be glorified through it.”
4 அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார்.

5 δὲ ὁ Ἰησοῦς Ἠγάπα τὴν Μάρθαν καὶ αὐτῆς τὴν ἀδελφὴν καὶ τὸν Λάζαρον

5 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
5 Now Jesus loved Martha and her sister and Lazarus.
5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.

6 οὖν ὡς ἤκουσεν ὅτι ἀσθενεῖ τότε μὲν ἔμεινεν ἐν τόπῳ ᾧ ἦν δύο ἡμέρας

6 அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.
6 So on hearing that Lazarus was sick, He stayed where He was for two days,
6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.

7 ἔπειτα μετὰ τοῦτο λέγει τοῖς μαθηταῖς Ἄγωμεν πάλιν εἰς τὴν Ἰουδαίαν

7 அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
7 and then He said to the disciples, “Let us go back to Judea.”
7 பின்னர், தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார்.

8 Ῥαββί οἱ μαθηταί Λέγουσιν αὐτῷ οἱ Ἰουδαῖοι νῦν ἐζήτουν λιθάσαι σε καὶ ὑπάγεις πάλιν ἐκεῖ

8 அதற்குச் சீஷர்கள்; ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
8 “Rabbi,” they replied, “the Jews just tried to stone You, and You are going back there?”
8 அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள்.

9 Ἰησοῦς Ἀπεκρίθη εἰσιν Οὐχὶ δώδεκα ὧραί τῆς ἡμέρας ἐάν τις περιπατῇ ἐν τῇ ἡμέρᾳ οὐ προσκόπτει ὅτι βλέπει τὸ φῶς τούτου τοῦ κόσμου

9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.
9 Jesus answered, “Are there not twelve hours of daylight? If anyone walks in the daytime, he will not stumble, because he sees by the light of this world.
9 இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில், பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.2

10 δέ ἐὰν τις περιπατῇ ἐν τῇ νυκτί προσκόπτει ὅτι ἐν αὐτῷ ἔστιν οὐκ τὸ φῶς

10 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.
10 But if anyone walks at night, he will stumble, because he has no light.”
10 ஆனால், இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் ,அப்போது* ஒளி இல்லை" என்றார்.

11 καὶ μετὰ τοῦτο εἶπεν Ταῦτα λέγει αὐτοῖς ἡμῶν ὁ φίλος Λάζαρος κεκοίμηται ἀλλὰ πορεύομαι ἵνα ἐξυπνίσω αὐτόν

11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
11 After He had said this, He told them, “Our friend Lazarus has fallen asleep, but I am going there to wake him up.”
11 இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார்.

12 οὖν αὐτῷ οἱ μαθηταὶ Εἶπαν Κύριε εἰ κεκοίμηται σωθήσεται

12 அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
12 His disciples replied, “Lord, if he is sleeping, he will get better.”
12 அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர்.

13 δὲ ἐκεῖνοι ἔδοξαν ὅτι λέγει περὶ τῆς κοιμήσεως τοῦ ὕπνου δὲ ὁ Ἰησοῦς εἰρήκει περὶ τοῦ θανάτου αὐτοῦ

13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
13 They thought that Jesus was talking about actual sleep, but He was speaking about the death of Lazarus.
13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.3

14 οὖν ὁ Ἰησοῦς Τότε εἶπεν αὐτοῖς παρρησίᾳ Λάζαρος ἀπέθανεν

14 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;
14 So Jesus told them plainly, “Lazarus is dead,
14 அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்து விட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,

15 καὶ δι’ ὑμᾶς χαίρω ὅτι ἤμην οὐκ ἐκεῖ ἵνα πιστεύσητε ἀλλὰ ἄγωμεν πρὸς αὐτόν

15 நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
15 and for your sake I am glad I was not there, so that you may believe. But let us go to him.”
15 "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில், நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார்.

16 οὖν Θωμᾶς ὁ λεγόμενος Δίδυμος Εἶπεν τοῖς συμμαθηταῖς ἡμεῖς καὶ Ἄγωμεν ἵνα ἀποθάνωμεν μετ’ αὐτοῦ

16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
16 Then Thomas called Didymusb said to his fellow disciples, “Let us also go, so that we may die with Him.”
16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.

Jesus Comforts Martha and Mary

17 οὖν ὁ Ἰησοῦς Ἐλθὼν εὗρεν αὐτὸν ἔχοντα ἤδη τέσσαρας ἡμέρας ἐν τῷ μνημείῳ

17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
17 When Jesus arrived, He found that Lazarus had already spent four days in the tomb.
17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.

18 δὲ ‹ἡ› Βηθανία ἦν ἐγγὺς τῶν Ἱεροσολύμων ὡς δεκαπέντε σταδίων ἀπὸ

18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
18 Now Bethany was near Jerusalem, a little less than two milesc away,
18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்4 தொலையில் இருந்தது.

4 பதினைந்து ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்.

19 δὲ πολλοὶ ἐκ τῶν Ἰουδαίων ἐληλύθεισαν πρὸς τὴν Μάρθαν καὶ Μαριὰμ ἵνα παραμυθήσωνται αὐτὰς περὶ τοῦ ἀδελφοῦ

19 யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
19 and many of the Jews had come to Martha and Mary to console them in the loss of their brother.
19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.

20 οὖν ὡς ἡ Μάρθα ἤκουσεν ὅτι Ἰησοῦς ἔρχεται ὑπήντησεν αὐτῷ δὲ Μαριὰμ ἐκαθέζετο ἐν τῷ οἴκῳ

20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
20 So when Martha heard that Jesus was coming, she went out to meet Him; but Mary stayed at home.
20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

21 οὖν ἡ Μάρθα Εἶπεν πρὸς ‹τὸν› Ἰησοῦν Κύριε εἰ ἦς ὧδε μου ὁ ἀδελφός ἂν οὐκ ἀπέθανεν

21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
21 Martha said to Jesus, “Lord, if You had been here, my brother would not have died.
21 மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

22 [ἀλλὰ] καὶ νῦν οἶδα ὅτι ὁ Θεός δώσει σοι ὅσα ἂν αἰτήσῃ τὸν Θεὸν

22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
22 But even now I know that God will give You whatever You ask of Him.”
22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார்.

23 σου ὁ ἀδελφός Ἀναστήσεται ὁ Ἰησοῦς Λέγει αὐτῇ

23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
23 “Your brother will rise again,” Jesus told her.
23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.

24 ἡ Μάρθα Λέγει αὐτῷ Οἶδα ὅτι ἀναστήσεται ἐν τῇ ἀναστάσει ἐν τῇ ἐσχάτῃ ἡμέρᾳ

24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
24 Martha replied, “I know that he will rise again in the resurrection at the last day.”
24 மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.

25 ὁ Ἰησοῦς Εἶπεν αὐτῇ Ἐγώ εἰμι ἡ ἀνάστασις καὶ ἡ ζωή ὁ πιστεύων εἰς ἐμὲ ζήσεται κἂν ἀποθάνῃ

25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
25 Jesus said to her, “I am the resurrection and the life. Whoever believes in Me will live, even though he dies.
25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

26 καὶ πᾶς ὁ ζῶν καὶ πιστεύων εἰς ἐμὲ οὐ μὴ ἀποθάνῃ εἰς τὸν αἰῶνα πιστεύεις τοῦτο

26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
26 And everyone who lives and believes in Me will never die. Do you believe this?”
26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார்.

27 Ναί Κύριε Λέγει αὐτῷ ἐγὼ πεπίστευκα ὅτι σὺ εἶ ὁ Χριστὸς ὁ Υἱὸς τοῦ Θεοῦ ὁ ἐρχόμενος εἰς τὸν κόσμον

27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
27 “Yes, Lord,” she answered, “I believe that You are the Christ, the Son of God, who was to come into the world.”
27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

28 Καὶ εἰποῦσα τοῦτο ἀπῆλθεν καὶ ἐφώνησεν αὐτῆς τὴν ἀδελφὴν Μαριὰμ λάθρᾳ εἰποῦσα Ὁ Διδάσκαλος πάρεστιν καὶ φωνεῖ σε

28 இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
28 After Martha had said this, she went back and called her sister Mary aside to tell her, “The Teacher is here and is asking for you.”
28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், "போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார்.

29 δὲ ὡς ἤκουσεν ἐκείνη ἠγέρθη* ταχὺ καὶ ἤρχετο πρὸς αὐτόν

29 அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
29 And when Mary heard this, she got up quickly and went to Him.
29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.

30 δὲ ὁ Ἰησοῦς Οὔπω ἐληλύθει εἰς τὴν κώμην ἀλλ’ ἦν ἔτι ἐν τῷ τόπῳ ὅπου ἡ Μάρθα ὑπήντησεν αὐτῷ

30 இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
30 Now Jesus had not yet entered the village, but was still at the place where Martha had met Him.
30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.

31 οὖν οἱ Ἰουδαῖοι οἱ ὄντες ἐν τῇ οἰκίᾳ καὶ παραμυθούμενοι αὐτήν μετ’ αὐτῆς ἰδόντες ταχέως ὅτι τὴν Μαριὰμ ἀνέστη καὶ ἐξῆλθεν ἠκολούθησαν αὐτῇ δόξαντες ὅτι ὑπάγει εἰς τὸ μνημεῖον ἵνα κλαύσῃ ἐκεῖ

31 அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள், கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.
31 When the Jews who were in the house consoling Mary saw how quickly she got up and went out, they followed her, supposing she was going to the tomb to mourn there.
31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

32 οὖν ὡς ἡ Μαριὰμ ἦλθεν ὅπου Ἰησοῦς ἦν ἰδοῦσα αὐτὸν ἔπεσεν πρὸς αὐτοῦ τοὺς πόδας λέγουσα αὐτῷ Κύριε εἰ ἦς ὧδε μου ὁ ἀδελφός ἄν οὐκ ἀπέθανεν

32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
32 When Mary came to Jesus and saw Him, she fell at His feet and said, “Lord, if You had been here, my brother would not have died.”
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார்.

33 οὖν ὡς Ἰησοῦς εἶδεν αὐτὴν κλαίουσαν καὶ τοὺς Ἰουδαίους συνελθόντας αὐτῇ κλαίοντας ἐνεβριμήσατο τῷ πνεύματι καὶ ἑαυτόν ἐτάραξεν

33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
33 When Jesus saw her weeping, and the Jews who had come with her also weeping, He was deeply moved in spiritd and troubled.
33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,

34 Ποῦ τεθείκατε αὐτόν καὶ εἶπεν ἔρχου καὶ ἴδε Κύριε Λέγουσιν αὐτῷ

34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்;
34 “Where have you put him?” He asked. “Come and see, Lord,” they answered.
34 "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.

35 ὁ Ἰησοῦς Ἐδάκρυσεν

35 இயேசு கண்ணீர் விட்டார்.
35 Jesus wept.
35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

36 οὖν οἱ Ἰουδαῖοι Ἔλεγον Ἴδε πῶς ἐφίλει αὐτόν

36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
36 Then the Jews said, “See how He loved him!”
36 அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள்.

37 δὲ Τινὲς ἐξ αὐτῶν εἶπαν ἐδύνατο Οὐκ οὗτος ὁ ἀνοίξας τοὺς ὀφθαλμοὺς τοῦ τυφλοῦ καὶ ποιῆσαι μὴ ἵνα οὗτος ἀποθάνῃ

37 அவர்களில் சிலர் குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
37 But some of them asked, “Could not this man who opened the eyes of the blind also have kept Lazarus from dying?”
37 ஆனால், அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர்.

Jesus Raises Lazarus (Acts 9:36–43)

38 οὖν Ἰησοῦς πάλιν ἐμβριμώμενος ἐν ἑαυτῷ ἔρχεται εἰς τὸ μνημεῖον δὲ ἦν σπήλαιον καὶ λίθος ἐπέκειτο ἐπ’ αὐτῷ

38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
38 Jesus, once again deeply moved, came to the tomb. It was a cave with a stone laid across the entrance.
38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.

39 Ἄρατε τὸν λίθον ὁ Ἰησοῦς λέγει Κύριε ἤδη ὄζει Λέγει αὐτῷ Μάρθα ἡ ἀδελφὴ τοῦ τετελευτηκότος γάρ ἐστιν τεταρταῖος

39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
39 “Take away the stone,” Jesus said. “Lord, by now he stinks,” said Martha, the sister of the dead man. “It has already been four days.”
39 "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார்.

40 ὁ Ἰησοῦς Λέγει αὐτῇ Οὐκ εἶπόν σοι ὅτι ἐὰν πιστεύσῃς ὄψῃ τὴν δόξαν τοῦ Θεοῦ

40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
40 Jesus replied, “Did I not tell you that if you believed, you would see the glory of God?”
40 இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார்.

41 οὖν Ἦραν τὸν λίθον δὲ ὁ Ἰησοῦς ἦρεν τοὺς ὀφθαλμοὺς ἄνω καὶ εἶπεν Πάτερ εὐχαριστῶ σοι ὅτι ἤκουσάς μου

41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
41 So they took away the stone. Then Jesus lifted His eyes upward and said, “Father, I thank You that You have heard Me.
41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

42 δὲ ἐγὼ ᾔδειν ὅτι πάντοτέ ἀκούεις μου ἀλλὰ εἶπον διὰ τὸν ὄχλον τὸν περιεστῶτα ἵνα πιστεύσωσιν ὅτι σύ ἀπέστειλας με

42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
42 I knew that You always hear Me, but I say this for the benefit of the people standing here, so they may believe that You sent Me.”
42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும், நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார்.

43 Καὶ εἰπὼν ταῦτα ἐκραύγασεν μεγάλῃ φωνῇ Λάζαρε δεῦρο ἔξω

43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
43 After Jesus had said this, He called out in a loud voice, “Lazarus, come out!”
43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார்.

44 ὁ τεθνηκὼς ἐξῆλθεν τοὺς τὰς χεῖρας καὶ πόδας δεδεμένος κειρίαις καὶ αὐτοῦ ἡ ὄψις περιεδέδετο σουδαρίῳ Λύσατε αὐτὸν καὶ ἄφετε αὐτὸν ὑπάγειν Ἰησοῦς Λέγει αὐτοῖς ὁ

44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
44 The man who had been dead came out with his hands and feet bound in strips of linen, and his face wrapped in a cloth.e “Unwrap him and let him go,” Jesus told them.
44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

The Plot to Kill Jesus (Matthew 26:1–5; Mark 14:1–2; Luke 22:1–2)

45 οὖν Πολλοὶ ἐκ τῶν Ἰουδαίων οἱ ἐλθόντες πρὸς τὴν Μαριὰμ καὶ θεασάμενοι ἃ* ἐποίησεν ἐπίστευσαν εἰς αὐτόν

45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
45 Therefore many of the Jews who had come to Mary, and had seen what Jesus did, believed in Him.
45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

46 δὲ τινὲς ἐξ αὐτῶν ἀπῆλθον πρὸς τοὺς Φαρισαίους καὶ εἶπαν αὐτοῖς ἃ Ἰησοῦς ἐποίησεν

46 அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
46 But some of them went to the Pharisees and told them what Jesus had done.
46 ஆனால், அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.5

47 οὖν οἱ ἀρχιερεῖς καὶ οἱ Φαρισαῖοι Συνήγαγον συνέδριον καὶ ἔλεγον Τί ποιοῦμεν ὅτι οὗτος ὁ ἄνθρωπος ποιεῖ πολλὰ σημεῖα

47 அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
47 Then the chief priests and Pharisees convened the Sanhedrinf and said, “What are we to do? This man is performing many signs.
47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?

48 ἐὰν ἀφῶμεν αὐτὸν οὕτως πάντες πιστεύσουσιν εἰς αὐτόν καὶ οἱ Ῥωμαῖοι ἐλεύσονται καὶ ἀροῦσιν καὶ ἡμῶν τὸν τόπον καὶ τὸ ἔθνος

48 நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
48 If we let Him go on like this, everyone will believe in Him, and then the Romans will come and take away both our place and our nation.”
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!" என்று பேசிக் கொண்டனர்.

49 δέ τις Εἷς ἐξ αὐτῶν Καϊάφας ὢν ἀρχιερεὺς τοῦ ἐκείνου ἐνιαυτοῦ εἶπεν αὐτοῖς Ὑμεῖς οἴδατε οὐκ οὐδέν

49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
49 But one of them, named Caiaphas, who was high priest that year, said to them, “You know nothing at all!
49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.6

50 οὐδὲ λογίζεσθε ὅτι συμφέρει ὑμῖν ἵνα εἷς ἄνθρωπος ἀποθάνῃ ὑπὲρ τοῦ λαοῦ καὶ τὸ ὅλον ἔθνος μὴ ἀπόληται

50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
50 You do not realize that it is better for you that one man die for the people than that the whole nation perish.”
50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.

51 δὲ οὐκ εἶπεν Τοῦτο ἀφ’ ἑαυτοῦ ἀλλὰ ὢν ἀρχιερεὺς τοῦ ἐκείνου ἐνιαυτοῦ ἐπροφήτευσεν ὅτι Ἰησοῦς ἔμελλεν ἀποθνήσκειν ὑπὲρ τοῦ ἔθνους

51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
51 Caiaphas did not say this on his own. Instead, as high priest that year, he was prophesying that Jesus would die for the nation,
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,

52 καὶ οὐχ μόνον ὑπὲρ τοῦ ἔθνους ἀλλ’ καὶ ἵνα τὰ τὰ διεσκορπισμένα τέκνα τοῦ Θεοῦ συναγάγῃ εἰς ἕν

52 அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
52 and not only for the nation, but also for the scattered children of God, to gather them together into one.
52 தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.

53 οὖν Ἀπ’ ἐκείνης τῆς ἡμέρας ἐβουλεύσαντο ἵνα ἀποκτείνωσιν αὐτόν

53 அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள்.
53 So from that day on they plotted to kill Him.
53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.7

54 οὖν Ὁ Ἰησοῦς οὐκέτι περιεπάτει παρρησίᾳ ἐν τοῖς Ἰουδαίοις ἀλλὰ ἀπῆλθεν ἐκεῖθεν εἰς πόλιν λεγομένην Ἐφραὶμ εἰς τὴν χώραν ἐγγὺς τῆς ἐρήμου ἔμεινεν κἀκεῖ μετὰ τῶν μαθητῶν

54 ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
54 As a result, Jesus no longer went about publicly among the Jews, but He withdrew to a town called Ephraim in an area near the wilderness. And He stayed there with the disciples.
54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.

55 δὲ τὸ τῶν Ἰουδαίων πάσχα Ἦν ἐγγὺς καὶ πολλοὶ ἀνέβησαν ἐκ τῆς χώρας εἰς Ἱεροσόλυμα ἵνα ἁγνίσωσιν ἑαυτούς πρὸ τοῦ πάσχα

55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது, அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
55 Now the Jewish Passover was near, and many people went up from the country to Jerusalem to purify themselves before the Passover.
55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.

56 οὖν ἐζήτουν τὸν Ἰησοῦν καὶ ἔλεγον μετ’ ἀλλήλων ἑστηκότες ἐν τῷ ἱερῷ Τί δοκεῖ ὑμῖν ὅτι μὴ ἔλθῃ εἰς τὴν ἑορτήν οὐ

56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக் கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
56 They kept looking for Jesus and asking one another as they stood in the temple courts,g “What do you think? Will He come to the feast at all?”
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.

57 δὲ οἱ ἀρχιερεῖς καὶ οἱ Φαρισαῖοι δεδώκεισαν ἐντολὰς ἵνα ἐάν τις γνῷ ποῦ ἐστιν μηνύσῃ ὅπως πιάσωσιν αὐτόν

57 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
57 But the chief priests and Pharisees had given orders that anyone who knew where He was must report it, so that they could arrest Him.
57 ஏனெனில், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
2 a Literally was the one having anointed the Lord with fragrant oil and having wiped His feet ; see John 12:3.
16 b Didymus  means the twin .
18 c Greek about fifteen stadia ; that is, approximately 1.72 miles or 2.78 kilometers
33 d Or He was indignant in spirit ; similarly in verse 38
44 e Greek soudariō 
47 f Or the Council 
56 g Literally the temple 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.