பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 16 | Ezekiel 16
Jerusalem’s Unfaithfulness
1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 Again the word of the LORD came to me, saying,
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
2 “Son of man, confront Jerusalem with her abominations
2 மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு.
3 கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
3 and tell her that this is what the Lord GOD says to Jerusalem: Your origin and your birth were in the land of the Canaanites. Your father was an Amorite and your mother a Hittite.
3 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள்.
4 உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.
4 On the day of your birth your cord was not cut, nor were you washed with water for cleansing. You were not rubbed with salt or wrapped in cloths.
4 நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மையாக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவுமில்லை;
5 உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
5 No one cared enough for you to do even one of these things out of compassion for you. Instead, you were thrown out into the open field, because you were despised on the day of your birth.
5 உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்; ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.
6 நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
6 Then I passed by and saw you wallowing in your blood, and as you lay there in your blood I said to you, ‘Live!’ There I said to you, ‘Live!’
6 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, 'வாழ்ந்திடு' என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, 'வாழ்ந்திடு' என்றேன்.
7 உன்னை வயலின் பயிரைபோல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.
7 I made you thrive like a plant of the field. You grew up and matured and became very beautiful. Your breasts were formed and your hair grew, but you were naked and bare.
7 உன்னை வயல் வெளியில் வளரும் பயிர்போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவமெய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது; ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.
8 நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
8 Then I passed by and saw you, and you were indeed old enough for love. So I spread My cloak over you and covered your nakedness. I pledged Myself to you, entered into a covenant with you, and you became Mine, declares the Lord GOD.
8 அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்தமேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9 நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி,
9 Then I bathed you with water, rinsed off your blood, and anointed you with oil.
9 நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன்.
10 சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,
10 I clothed you in embroidered cloth and gave you sandals of fine leather. I wrapped you in fine linen and covered you with silk.
10 பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்.
11 உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
11 I adorned you with jewelry, and I put bracelets on your wrists and a chain around your neck.
11 அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.
12 உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்..
12 I put a ring in your nose, earrings on your ears, and a beautiful crown upon your head.
12 மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்.
13 இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.
13 So you were adorned with gold and silver, and your clothing was made of fine linen, silk, and embroidered cloth. You ate fine flour, honey, and oil. You became very beautiful and rose to be queen.
13 பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய். நார்ப்பட்டும் மெல்லிய துகிலும், பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.
14 உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14 Your fame spread among the nations on account of your beauty, for it was perfect in the splendor I bestowed on you, declares the Lord GOD.
14 உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15 நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
15 But because of your fame, you trusted in your beauty and played the harlot. You lavished your favors on everyone who passed by, and your beauty was theirs for the asking.
15 நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.
16 உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
16 You took some of your garments and made colorful high places for yourself, and on them you prostituted yourself. Such things should not have happened; never should they have occurred!
16 உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி அங்கு வேசித்தனம் செய்தாய். ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை; இனிமேல் நடக்கப் போவதுமில்லை.
17 நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,
17 You also took the fine jewelry of gold and silver I had given you, and you made male idols with which to prostitute yourself.
17 நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்.
18 உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து,
18 You took your embroidered garments to cover them, and you set My oil and incense before them.
18 உன் பூப்பின்னல் ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் போர்த்தி, எனக்குரிய எண்ணெயையும் தூபத்தையும் அவற்றின் முன் எரித்தாய்.
19 நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
19 And you set before them as a pleasing aroma the food I had given you—the fine flour, oil, and honey that I had fed you. That is what happened, declares the Lord GOD.
19 நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய், தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை, நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
20 நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.
20 You even took the sons and daughters you bore to Me and sacrificed them as food to idols. Was your prostitution not enough?
20 நீ எனக்குப் பெற்ற உன் புதல்வர் புதல்வியரை அவற்றுக்குப் பலியிட்டாயே! நீ வேசித்தனம் செய்தது போதாதென்றோ?
21 நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.
21 You slaughtered My children and delivered them up through the fire to idols.
21 என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.
22 நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க்கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
22 And in all your abominations and acts of prostitution, you did not remember the days of your youth when you were naked and bare, wallowing in your own blood.
22 இத்துணை அருவருப்பான செயல்களிலும் நீ வேசித்தனத்திலும் ஈடுபட்டபோது உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய் உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை நீ நினைத்துப் பார்க்கவில்லை.
23 ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புக்களெல்லாம் தவிர,
23 Woe! Woe to you, declares the Lord GOD. And in addition to all your other wickedness,
23 எல்லாத் தீச்செயல்களையும் செய்த உனக்கு ஐயோ கேடு, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
24 நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய்.
24 you built yourself a mound and made yourself a lofty shrine in every public square.
24 நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்; திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.
25 நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
25 At the head of every street you built your lofty shrines and degraded your beauty. With increasing promiscuity, you spread your legs to all who passed by.
25 எல்லாத் தெருக்கோடிகளிலும், உன் தொழுகை மேடுகளை அமைத்தாய். உன் அழகைத் தரக்குறைவாக்கி, வருவோர் போவோர்க்கெல்லாம் உன் உடலைக் கொடுத்து, மிதமிஞ்சிய வேசித்தனம் செய்தாய்.
26 சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய்.
26 You prostituted yourself with your lustful neighbors, the Egyptians, and increased your promiscuity to provoke Me to anger.
26 உன் அண்டை நாட்டவரும் உடல் பெருத்தவருமான எகிப்தியரோடு வேசித்தனம் செய்தாய்; எனக்குச் சினமூட்டுமளவுக்கு மிதமிஞ்சிய விபசாரம் செய்தாய்.
27 ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
27 Therefore I stretched out My hand against you and reduced your portion. I gave you over to the desire of those who hate you, the daughters of the Philistines, who were ashamed of your lewd conduct.
27 ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைப்பேன். உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி, உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின் விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.
28 நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
28 Then you prostituted yourself with the Assyrians, because you were not yet satisfied. Even after that, you were still not satisfied.
28 இன்னும் நிறைவடையாமல் நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய். அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை.
29 நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
29 So you extended your promiscuity to Chaldea,a the land of merchants—but even with this you were not satisfied!
29 ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்; அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.
30 வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
30 How weak-willed is your heart,b declares the Lord GOD, while you do all these things, the acts of a shameless prostitute!
30 வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
31 சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
31 But when you built your mounds at the head of every street and made your lofty shrines in every public square, you were not even like a prostitute, because you scorned payment.
31 ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்; ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்; மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.
32 தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
32 You adulterous wife! You receive strangers instead of your own husband!
32 பிறரின் கணவரை நயக்கும் மனையாள் இவள்! தன் கணவனுக்குப் பதில் அன்னியரையே நாடுகிறாள் இவள்!
33 எல்லா வேசிகளுக்கும் பணையங்கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய்.
33 Men give gifts to all their prostitutes, but you gave gifts to all your lovers. You bribed them to come to you from everywhere for your illicit favors.
33 எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர். நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்! நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக் கையூட்டு அளிக்கின்றாய்.
34 இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
34 So your prostitution is the opposite of that of other women: No one solicited your favors, and you paid a fee instead of receiving one; so you are the very opposite!
34 எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்; நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!
Judgment on Jerusalem
35 ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
35 Therefore, O prostitute, hear the word of the LORD!
35 எனவே, விலைமாதே! ஆண்டவரின் வார்த்தையைக் கேள்.
36 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
36 This is what the Lord GOD says: Because you poured out your wealth and exposed your nakedness in your promiscuity with your lovers and with all your detestable idols, and because of the blood of your children which you gave to them,
36 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீ காமவெறி கொண்டு உன் திறந்த மேனியைக் காட்டி, உன் காதலருடனும், அருவருப்பான உன் சிலைகள் அனைத்துடனும் வேசித்தனம் செய்தாய். இதற்காகவும், உன் பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்ட இரத்தப்பழிக்காகவும்,
37 இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வானத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து,
37 therefore I will surely gather all the lovers with whom you found pleasure, all those you loved and all those you hated. I will gather them against you from all around and expose you before them, and they will see you completely naked.
37 நீ இன்பம் துய்த்த உன் காதலர் அனைவரையும் உனக்கெதிராக நான் ஒன்று திரட்டப்போகிறேன். நீ விரும்பியவர்கள், நீ வெறுத்தவர்கள் அனைவரையும் நாற்றிசையினின்றும் உனக்கெதிராய் ஒன்று சேர்ப்பேன். அவர்கள் முன்னிலையில் உன் ஆடையை உரிந்து போடுவேன். அவர்கள் அனைவரும் உன் திறந்த மேனியைக் காண்பர்.
38 விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
38 And I will sentence you to the punishment of women who commit adultery and those who shed blood; so I will bring upon you the wrath of your bloodshed and jealousy.
38 பிறர் கணவர் நயந்த பெண்டிரையும், இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல், உன்னையும் தீர்ப்பிடுவேன்; என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.
39 உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
39 Then I will deliver you into the hands of your lovers, and they will level your mounds and tear down your lofty shrines. They will strip off your clothes, take your fine jewelry, and leave you naked and bare.
39 பின் உன்னை அவர்களிடம் கையளிப்பேன். அவர்கள் உன் தொழுகைக் கூடங்களைத் தகர்த்து உன் தொழுகை மேடுகளை தரைமட்டமாக்குவர்; உன் ஆடைகளை உரிந்து, உன் அணிகலன்களைப் பிடுங்கிக் கொண்டு, உன்னைத் திறந்தமேனியாயும் வெறுமையாயும் விட்டுவிடுவர்.
40 உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
40 They will bring a mob against you, who will stone you and cut you to pieces with their swords.
40 உனக்கெதிராக மக்களைத் திரண்டெழச் செய்வேன். அவர்கள் உன்னைக் கல்லாலெறிவர்; வாளால் வெட்டிப் போடுவர்.
41 உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
41 Then they will burn down your houses and execute judgment against you in the sight of many women. I will put an end to your prostitution, and you will never again pay your lovers.
41 அத்தோடு, உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பர். பெண்கள் பலர் முன்னிலையில் உனக்குரிய தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவர். நானும் உன் வேசித்தனத்துக்கு முடிவுகட்டுவேன். நீ இனி யாருக்கும் அன்பளிப்பு அளிக்க மாட்டாய்.
42 இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
42 So I will lay to rest My wrath against you, and My jealousy will turn away from you. Then I will be calm and no longer angry.
42 அப்போது, உன்மீது நான் கொண்ட சினம் தணியும்; என் சகிப்புத் தன்மை உன்னை விட்டு அகன்றுவிடும்; இனி நான் அமைதி கொள்வேன்; சினமடையேன்.
43 நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்..
43 Because you did not remember the days of your youth, but enraged Me with all these things, I will surely bring your deeds down upon your own head, declares the Lord GOD. Have you not committed this lewdness on top of all your other abominations?
43 ஏனெனில் உன் இளமையின் நாள்களை நினைக்காமல், இவற்றையெல்லாம் செய்து என்னை வெகுண்டெழச் செய்தாய். எனவேதான் உன் நடத்தையின் விளைவை நான் உன் தலைமேல் சுமத்தினேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். உன் அருவருப்புகளை எல்லாம் செய்தது தவிர, நெறிகேடாகவும், நீ நடந்து கொள்ளவில்லையா?
44 இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.
44 Behold, all who speak in proverbs will quote this proverb about you: ‘Like mother, like daughter.’
44 இதோ! பழமொழி கூறும் யாவரும் 'தாயைப்போல் மகள்' என்னும் பழமொழியை உன்னைக் குறித்தே கூறுவர்.
45 நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
45 You are the daughter of your mother, who despised her husband and children. You are the sister of your sisters, who despised their husbands and children. Your mother was a Hittite and your father an Amorite.
45 தன் கணவனையும் பிள்ளைகளையும் வெறுக்கும் தாயின் மகள் தானே நீ? தங்கள் கணவரையும் பிள்ளைகளையும் வெறுக்கும் பெண்டிரின் சகோதரிதானே நீ? உன் தாய் ஓர் இத்தியள்; உன் தந்தை ஓர் எமோரியன்.
46 உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.
46 Your older sister was Samaria, who lived with her daughters to your north; and your younger sister was Sodom, who lived with her daughters to your south.
46 உனக்கு இடப்பக்கமாகத் தன் புதல்விரோடு வாழ்ந்து வந்த சமாரியா உன் தமக்கை அன்றோ? உன் வலப்புறம் தன் புதல்வியோடு வாழ்ந்து வந்த சோதோம் உன் தங்கை அன்றோ?
47 ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
47 And you not only walked in their ways and practiced their abominations, but soon you were more depraved than they were.
47 அவர்கள் நடந்து கொண்டவாறு நீயும் நடந்து, அவர்கள் செய்த அருவருப்புகளை நீயும் செய்யவில்லையா? அதுமட்டுமன்று; உன் கெட்ட நடத்தையில் நீ அவர்களையும் மிஞ்சி விட்டாய்.
48 நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
48 As surely as I live, declares the Lord GOD, your sister Sodom and her daughters never did as you and your daughters have done.
48 என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயும் உன் புதல்வியரும் செய்துள்ளதை உன் தங்கை சோதோமும் அவள் புதல்வியரும் செய்ததில்லை.
49 இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
49 Now this was the iniquity of your sister Sodom: She and her daughters were arrogant, overfed, and complacent; they did not help the poor and needy.
49 உன் தங்கை சோதோமின் குற்றங்கள் இவையே: இறுமாப்பு, உணவார்வம், சோம்பல், இத்தனையும் அவளிடமும் அவள் புதல்வியரிடமும் இருந்தன. ஏழை, எளியோரின் கைகளை அவள் வலுப்படுத்தவில்லை.
50 அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
50 Thus they were haughty and committed abominations before Me. Therefore I removed them, as you have seen.c
50 இவர்கள் செருக்குடையவராய் என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர். ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன். இதை நீ அறிவாயன்றோ?
51 நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளிலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
51 Furthermore, Samaria did not commit half the sins you did. You have multiplied your abominations beyond theirs, and all the abominations you have committed have made your sisters appear righteous.
51 சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவுகூடச் செய்யவில்லையே. நீயோ இவர்களைவிட மிகுதியாக அருவருப்பானவற்றைச் செய்தாய். நீ செய்த அருவருப்புகள் அனைத்தோடும் ஒப்பிடும்போது உன் சகோதிரிகள் நேர்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள்.
52 இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
52 So now you must bear your disgrace, since you have brought justification for your sisters. For they appear more righteous than you, because your sins were more vile than theirs. So you too must bear your shame and disgrace, since you have made your sisters appear righteous.
52 இப்போது உன் இழிவை நீயே தாங்கிக்கொள். உன் சகோதரிகளை விட மிகுதியாக அருவருப்பான பாவங்களைச் செய்து, அவர்களை உன்னைவிட நேர்மையானவர்கள் ஆக்கிவிட்டாய். உன் சகோதரிகளை நேர்மையானவர்கள் ஆக்கிய அந்த இழிவை நீயே சுமந்து கொள்.
53 நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவில் நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.
53 But I will restore Sodom and her daughters from captivity,d as well as Samaria and her daughters. And I will restore you along with them.
53 நான் சோதோமையும் அவள் புதல்வியரையும் சமாரியாவையும் அவள் புதல்வியரையும் மீண்டும் நன்னிலைக்குக் கொணர்வேன்.
54 அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
54 So you will bear your disgrace and be ashamed of all you did to comfort them.
54 இதனால் நீ செய்த அனைத்திற்காகவும் வெட்கி அவமானத்தைச் சுமப்பாய். அது அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.
55 உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
55 And your sisters, Sodom with her daughters and Samaria with her daughters, will return to their former state. You and your daughters will also return to your former state.
55 உன் சகோதரிகள் சோதோமும் அவள் புதல்வியரும், சமாரியாவும் அவள் புதல்வியரும் தங்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவர். நீயும் உன் புதல்வியரும் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவீர்கள்.
56 உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
56 Did you not treat your sister Sodom as an object of scorn in the day of your pride,
56 நீ செருக்குடன் வாழ்ந்த காலத்தில் உன் தமக்கை சோதோமின் பெயரை உன் வாயினால் உச்சரிக்கக்கூட மாட்டாய்.
57 அதற்குமுன் உன் கெர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
57 before your wickedness was uncovered? Even so, you are now scorned by the daughters of Edome and all those around her, and by the daughters of the Philistines—all those around you who despise you.
57 உன் தீச்செயல் வெளிப்படுவதற்குமுன் நீ அப்படி இருந்தாய். இப்போதோ, சிரியாவின் புதல்வியர், அவளைச் சுற்றி உள்ளோர், உன்னைச் சுற்றி இருக்கும் பெலிஸ்தியப் புதல்வியர் ஆகியோரின் வெறுப்புக்கு நீ ஆளானாய்.
58 உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
58 You will bear the consequences of your lewdness and your abominations, declares the LORD.
58 நீ உன் ஒழுக்கக்கேட்டையும் உன் அருவருப்புகளையும் இப்போது சுமந்து கொண்டிருக்கிறாய். என்கிறார் ஆண்டவர்.
The Covenant Remembered
59 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.
59 For this is what the Lord GOD says: I will deal with you according to your deeds, since you have despised the oath by breaking the covenant.
59 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய், நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.
60 ஆகிலும் உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
60 But I will remember the covenant I made with you in the days of your youth, and I will establish an everlasting covenant with you.
60 ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
61 அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
61 Then you will remember your ways and be ashamed when you receive your older and younger sisters. I will give them to you as daughters, but not because of My covenant with you.
61 உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவென். அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய்.
62 உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய்.
62 So I will establish My covenant with you, and you will know that I am the LORD,
62 உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.
63 நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
63 so that when I make atonement for all you have done, you will remember and be ashamed and never again open your mouth because of your disgrace, declares the Lord GOD.”
63 நீ செய்ததையெல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றையெல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
29 a Or Babylonia
30 b Or How feverish is your heart,
50 c A few Hebrew manuscripts and LXX; MT as I have seen
53 d Or restore the fortunes of Sodom and her daughters
57 e Many Hebrew manuscripts and Syriac; most Hebrew manuscripts, LXX, and Vulgate Aram
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.