பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 40 | Ezekiel 40
The Man with a Measuring Rod (Zechariah 2:1–5)
1 நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.
1 In the twenty-fifth year of our exile, at the beginning of the year, on the tenth day of the month—in the fourteenth year after Jerusalem had been struck down—on that very day the hand of the LORD was upon me, and He took me there.
1 எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் மாதத்தின் பத்தாம் நாளில், எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில், ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது. அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
2 தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.
2 In visions of God He took me to the land of Israel and set me on a very high mountain, on whose southern slope was a structure that resembled a city.
2 கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன.1
1 திவெ 21:10.
3 அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.
3 So He took me there, and I saw a man whose appearance was like bronze. He was standing in the gateway with a linen cord and a measuring rod in his hand.
3 அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது. அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று கொண்டிருந்தார்.2
4 அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
4 “Son of man,” he said to me, “look with your eyes, hear with your ears, and pay attention to everything I am going to show you, for that is why you have been brought here. Report to the house of Israel everything you see.”
4 அந்த மனிதர் என்னை நோக்கி, "மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை. ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய். நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாரக்குத் தெரிவி" என்றார்.
The East Gate
5 இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
5 And I saw a wall surrounding the temple area. Now the length of the measuring rod in the man’s hand was six long cubitsa (each measuring a cubit and a handbreadth), and he measured the wall to be one rod thick and one rod high.
5 கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடை நீளமும் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல்.3
3 :20 =1 அர 6:1-38; 2 குறி 3:1-9.
6 பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.
6 Then he came to the gate facing east and climbed its steps. He measured the threshold of the gate to be one rod deep.b
6 பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.
7 ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.
7 Each gate chamber was one rod long and one rod wide, and there were five cubitsc between the gate chambers. The inner threshold of the gate by the portico facing inward was one rod deep.
7 பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.
8 வாசலின் மண்டபத்தையும் ஒரு உள்ளே கோலளவாக அளந்தார்.
8 Then he measured the portico of the gateway inside;d
8 பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.
9 பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
9 it was eight cubits deep,e and its jambs were two cubits thick.f And the portico of the gateway faced the temple.
9 பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்; இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.
10 கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
10 There were three gate chambers on each side of the east gate, each with the same measurements, and the gateposts on either side also had the same measurements.
10 கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.
11 பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
11 And he measured the width of the gateway entrance to be ten cubits,g and its length was thirteen cubits.h
11 பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12 அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
12 In front of each gate chamber was a wall one cubit high, and the gate chambers were six cubits square.
12 ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.
13 பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்துமுழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.
13 Then he measured the gateway from the roof of one gate chamber to the roof of the opposite one; the distance was twenty-five cubitsi from doorway to doorway.
13 பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சிலிருந்து நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார். ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது. இடைப்பட்ட தூரம் இருபத்தைந்து முழம்.
14 தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
14 Next he measured the gateposts to be sixty cubits high.j The gateway extended around to the gatepost of the courtyard.
14 அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.
15 பிரவேச வாசலின் முகப்புத்துவக்கி உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
15 And the distance from the entrance of the gateway to the far end of its inner portico was fifty cubits.k
15 வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம்.
16 வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.
16 The gate chambers and their side pillarsl had beveled windows all around the inside of the gateway. The porticos also had windows all around on the inside. Each side pillar was decorated with palm trees.
16 அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும் குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன. புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன. சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன. புடைநிலைகளில் பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.
The Outer Court
17 பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.
17 Then he brought me into the outer court, and there were chambers and a pavement laid out all around the court. Thirty chambers faced the pavement,
17 பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன.
18 வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.
18 which flanked the gateways and corresponded to the length of the gates; this was the lower pavement.
18 வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும் ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதுவே கீழ்த்தள நடைமேடை.
19 பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.
19 Then he measured the distance from the front of the lower gateway to the outside of the inner court; it was a hundred cubitsm on the east side as well as on the north.
19 பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார். அது கிழக்கேயும் வடக்கேயும் நூறு முழம் இருந்தது.
The North Gate
20 வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
20 He also measured the length and width of the gateway of the outer court facing north.
20 பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார்.
21 அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
21 Its three gate chambers on each side, its side pillars, and its portico all had the same measurements as the first gate: fifty cubits long and twenty-five cubits wide.
21 ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும், புடைநிலைகளும் புகுமுக மண்டபமும் முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதாவது ஐம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம்.
22 அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.
22 Its windows, portico, and palm trees had the same measurements as those of the gate facing east. Seven steps led up to it, with its portico opposite them.
22 அதன் பலகணிகள், புகுமுக மண்டபம், பேரீச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின் அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன. அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது.
23 வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
23 There was a gate to the inner court facing the north gate, just as there was on the east. He measured the distance from gateway to gateway to be a hundred cubits.
23 கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது.
The South Gate
24 பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்த அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.
24 Then he led me to the south side, and I saw a gateway facing south. He measured its side pillars and portico, and they had the same measurements as the others.
24 பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்; அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.
25 அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
25 Both the gateway and its portico had windows all around, like the other windows. It was fifty cubits long and twenty-five cubits wide.
25 அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.
26 அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின்மண்டபங்களும் இருந்தது, அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.
26 Seven steps led up to it, and its portico was opposite them; it had palm trees on its side pillars, one on each side.
26 அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது. அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
27 உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
27 The inner court also had a gate facing south, and he measured the distance from gateway to gateway toward the south to be a hundred cubits.
27 உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது நூறு முழ நீளம் இருந்தது.
The Gates of the Inner Court
28 பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
28 Next he brought me into the inner court through the south gate, and he measured the south gate; it had the same measurements as the others.
28 பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.
29 அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
29 Its gate chambers, side pillars, and portico had the same measurements as the others. Both the gateway and its portico had windows all around; it was fifty cubits long and twenty-five cubits wide.
29 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.
30 இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது;
30 (The porticoes around the inner court were twenty-five cubits long and five cubits deep.n)
30 சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
31 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
31 Its portico faced the outer court, and its side pillars were decorated with palm trees. Eight steps led up to it.
31 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
32 பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
32 And he brought me to the inner court on the east side, and he measured the gateway; it had the same measurements as the others.
32 பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.
33 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
33 Its gate chambers, side pillars, and portico had the same measurements as the others. Both the gateway and its portico had windows all around. It was fifty cubits long and twenty-five cubits wide.
33 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும் மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன. அவற்றின் நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.
34 Its portico faced the outer court, and its side pillars were decorated with palm trees on each side. Eight steps led up to it.
34 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
35 பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
35 Then he brought me to the north gate and measured it. It had the same measurements as the others,
35 பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.
36 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
36 as did its gate chambers, side pillars, and portico. It also had windows all around. It was fifty cubits long and twenty-five cubits wide.
36 அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் இருந்தன.
37 அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப் புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.
37 Its portico faced the outer court, and its side pillars were decorated with palm trees on each side. Eight steps led up to it.
37 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
Eight Tables for Sacrifices
38 அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.
38 There was a chamber with a doorway by the porticop in each of the inner gateways. There the burnt offering was to be washed.
38 ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில் வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது. அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர்.
39 வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரண பலியையும் செலுத்துவார்கள்.
39 Inside the portico of the gateway were two tables on each side, on which the burnt offerings, sin offerings, and guilt offerings were to be slaughtered.
39 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்வோரு பக்கமும் இரு மேசைகள் இருந்தன. அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி, குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும்.
40 வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும் வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டுபீடங்களும் இருந்தது.
40 Outside, as one goes up to the entrance of the north gateway, there were two tables on one side and two more tables on the other side of the gate’s portico.
40 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில் இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன.
41 வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.
41 So there were four tables inside the gateway and four outside—eight tables in all—on which the sacrifices were to be slaughtered.
41 இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.
42 தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
42 There were also four tables of dressed stone for the burnt offering, each a cubit and a half long, a cubit and a half wide, and a cubit high.q On these were placed the utensils used to slaughter the burnt offerings and the other sacrifices.
42 செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.
43 நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
43 The double-pronged hooks,r each a handbreadth long,s were fastened all around the inside of the room, and the flesh of the offering was to be placed on the tables.
43 சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
Chambers for Ministry
44 உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
44 Outside the inner gate, within the inner court, were two chambers,t one beside the north gate and facing south, and another beside the south gateu and facing north.
44 உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில் இசைக்குழு அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது. இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.
45 பின்பு அவர் என்னை நோக்கி: தென் திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
45 Then the man said to me: “The chamber that faces south is for the priests who keep charge of the temple,
45 அவர் என்னிடம், "தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.
46 வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.
46 and the chamber that faces north is for the priests who keep charge of the altar. These are the sons of Zadok, the only Levites who may approach the LORD to minister before Him.”
46 வடக்கு நோக்கி இருக்கும் அறை பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது. இவர்கள் சாதோக்கின் மக்கள். லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய அவரருகில் செல்லலாம்" என்றார்.
The Inner Court
47 அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
47 Next he measured the court. It was square, a hundred cubits long and a hundred cubits wide. And the altar was in front of the temple.
47 பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.
48 பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்றுமுழமும் அந்தப்புறம் மூன்றுமுழமுமாயிருந்தது.
48 Then he brought me to the portico of the temple and measured the side pillars of the portico to be five cubits on each side. The width of the gateway was fourteen cubits and its sidewalls were three cubits on either side.v
48 அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து, அதன் புடைநிலைகளை அளந்தார். அது ஒரு பக்கம் ஐந்து முழமும் மறுபக்கம் ஐந்து முழமும் இருந்தது. வாயிலின் அகலம் பதினான்கு முழம்; அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.
49 மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
49 The portico was twenty cubits widew and twelve cubits deep,x and ten steps led up to it.y There were columns by the side pillars, one on each side.
49 புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
5 a 6 long cubits , the length of the reed used for measuring, is approximately 10.5 feet or 3.2 meters; similarly in verses 6, 7, and 12. The long cubit of about 21 inches or 53.3 centimeters is the basic unit of length throughout Ezekiel 40 to 48.
6 b Hebrew one reed deep, even one threshold, one reed deep.
7 c 5 (long) cubits is approximately 8.75 feet or 2.7 meters; also in verses 30 and 48.
8 d Literally the portico of the gateway inside, one rod
9 e 8 (long) cubits is approximately 14 feet or 4.3 meters.
9 f 2 (long) cubits is approximately 3.5 feet or 1.1 meters.
11 g 10 (long) cubits is approximately 17.5 feet or 5.3 meters.
11 h 13 (long) cubits is approximately 22.75 feet or 6.9 meters.
13 i 25 (long) cubits is approximately 43.75 feet or 13.3 meters; also in verses 21, 25, 29, 30, 33, and 36.
14 j 60 (long) cubits is approximately 105 feet or 32 meters.
15 k 50 (long) cubits is approximately 87.5 feet or 26.7 meters; also in verses 21, 25, 29, 33, and 36.
16 l Or gateposts or jambs or projecting walls ; here and throughout Ezekiel 40 and 41.
19 m 100 (long) cubits is approximately 175 feet or 53.3 meters; also in verses 23, 27, and 47.
30 n The porticoes were approximately 43.75 feet long and 8.75 feet deep (13.3 meters long and 2.7 meters deep).
37 o LXX and Vulgate (see also verses 26, 31, and 34); Hebrew jambs or dividing wall
38 p Hebrew at the jambs
42 q The tables were approximately 2.6 feet in length and width, and 1.75 feet high (79.2 centimeters in length and width, and 53.3 centimeters high).
43 r Or shelves
43 s A handbreadth is approximately 2.9 inches or 7.4 centimeters long.
44 t LXX; Hebrew within the inner court were chambers for the singers
44 u LXX; Hebrew the east gateway
48 v LXX; the gateway was approximately 24.5 feet or 7.5 meters wide, with sidewalls approximately 5.25 feet or 1.6 meters wide on either side. Hebrew The width of the gateway was three cubits on either side.
49 w 20 (long) cubits is approximately 35 feet or 10.7 meters.
49 x LXX; 12 (long) cubits is approximately 21 feet or 6.4 meters; Hebrew eleven cubits deep ; that is, approximately 19.25 feet or 5.9 meters.
49 y LXX; Hebrew and steps led up to it
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.