பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 42 | Ezekiel 42
Chambers for the Priests
1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.
1 Then the man led me out northward into the outer court, and he brought me to the group of chambers opposite the temple courtyard and the outer wall on the north side.
1 பின்னர், அம்மனிதர் என்னை வடதிசை வழியாய் வெளி முற்றத்திற்கு அழைத்துச் சென்று கோவில் முற்றத்திற்கு எதிரிலும் வடதிசையில் உள்ள வெளிச் சுவருக்கு எதிரிலும் இருந்த அறைகளுக்கு இட்டுச் சென்றார்.
2 நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.
2 The building with the door facing north was a hundred cubits long and fifty cubits wide.a
2 வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.
3 உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.
3 Gallery faced gallery in three levels opposite the twenty cubitsb that belonged to the inner court and opposite the pavement that belonged to the outer court.
3 உள் முற்றத்திற்கு இருபது முழத்திற்கு இரு பக்கமும் இருந்த பகுதியிலும், வெளி முற்றத்தின் நடைமேடைக்கு எதிரில் இருந்த பகுதியிலும் எதிர் எதிரான மேடையிருக்கைகள் மூன்று அடுக்குகளாய் இருந்தன.
4 உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
4 In front of the chambers was an inner walkway ten cubits wide and a hundred cubits long.c Their doors were on the north.
4 அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது. அதன் அகலம் பத்து முழம்; நீளம் நூறு முழம். அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.
5 உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
5 Now the upper chambers were smaller because the galleries took more space from the chambers on the lower and middle floors of the building.
5 மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன. ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும் நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.
6 அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப் பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.
6 For they were arranged in three stories, and unlike the courts, they had no pillars. So the upper chambers were set back further than the lower and middle floors.
6 முற்றங்களில் இருந்தது போல மூன்றாம் தளத்தில் தூண்கள் இல்லை. எனவே கீழ்த்தளம் மற்றும் நடுத்தள அறைகளைவிட அவை இடம் குறைந்தனவாய் இருந்தன.
7 புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
7 An outer wall in front of the chambers was fifty cubits long and ran parallel to the chambers and the outer court.
7 அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது. அது அறைகளின் முன்னால் ஐம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.
8 வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
8 For the chambers on the outer court were fifty cubits long, while those facing the temple were a hundred cubits long.
8 வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஐம்பது முழ நீளமுடையவை; ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ நூறு முழ நீளம் உடையவை.
9 கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
9 And below these chambers was the entrance on the east side as one enters them from the outer court.
9 கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.
10 கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
10 On the south sided along the length of the wall of the outer court were chambers adjoining the courtyard and opposite the building,
10 கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும், வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.
11 அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.
11 with a passageway in front of them, just like the chambers that were on the north. They had the same length and width, with similar exits and dimensions.
11 அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது. இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன. அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும் மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.
12 தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
12 And corresponding to the doors of the chambers that were facing south, there was a door in front of the walkway that was parallel to the wall extending eastward.
12 வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.
13 அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.
13 Then the man said to me, “The north and south chambers facing the temple courtyard are the holy chambers where the priests who approach the LORD will eat the most holy offerings. There they will place the most holy offerings—the grain offerings, the sin offerings, and the guilt offerings—for the place is holy.
13 பின்னர் அம்மனிதர் என்னிடம் சொன்னார்: கோவில் முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு மற்றும் தெற்கு அறைகள் யாவும் தூய அறைகளாகும். அங்கே ஆண்டவரை அணுகிவரும் குருக்கள் உன்னத பலிப்பொருள்களை உண்ணுவர். அவர்கள் அங்கே உன்னத பலிப்பொருள்களான தானியப் படையல், பாவம் போக்கும் பலிப்பொருள்கள், குற்றநீக்கப் பலிப்பொருள்கள் ஆகியவற்றை வைப்பர். ஏனெனில், அது தூய இடமாகும்.
14 ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து உடுத்தியிருந்த ஸ்திரங்களைக் கழற்றி வைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார்.
14 Once the priests have entered the holy area, they must not go out into the outer court until they have left behind the garments in which they minister, for these are holy. They are to put on other clothes before they approach the places that are for the people.”
14 குருக்கள் தூய இடங்களில் நுழைந்தபின் அவர்கள் பணிபுரியப் பயன்படுத்திய திருஉடைகளை அங்கேயே கழற்றி வைக்காமல் அங்கிருந்து வெளியேறக் கூடாது. ஏனெனில், அவை தூயவை. மக்கள் பகுதிக்குப் போகுமுன் அவர்கள் வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
The Outer Measurements
15 அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.
15 Now when the man had finished measuring the interior of the temple area, he led me out by the gate that faced east, and he measured the area all around:
15 கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின், அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து, கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.
16 கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.
16 With a measuring rod he measured the east side to be five hundred cubits long.e
16 அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார். அது ஐந்நூறு கோல்கள் இருந்தது.
17 வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறுகோலாய் அளந்தார்.
17 He measured the north side to be five hundred cubits long.
17 அவர் வடக்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
18 தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
18 He measured the south side to be five hundred cubits long.
18 அவர் தெற்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
19 மேற்றிசைப் பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
19 And he came around and measured the west side to be five hundred cubits long.
19 பின்னர் அவர் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தார். அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
20 நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.
20 So he measured the area on all four sides. It had a wall all around, five hundred cubits long and five hundred cubits wide, to separate the holy from the common.
20 இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார். ஒவ்வொரு புறமும் சுவர் ஐந்நூறு முழம் இருந்தது. அச்சுவர் தூயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.