பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Ezekiel  எசேக்கியேல்  יְחֶזְקֵאל

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

எசேக்கியேல் 19 | Ezekiel 19

A Lament for the Princes of Israel

1וְאַתָּה֙ שָׂ֣א קִינָ֔ה אֶל־נְשִׂיאֵ֖י יִשְׂרָאֵֽל׃

1 நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
1 “As for you, take up a lament for the princes of Israel
1 "நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,

2וְאָמַרְתָּ֗ מָ֤ה אִמְּךָ֙ לְבִיָּ֔א בֵּ֥ין אֲרָי֖וֹת רָבָ֑צָה בְּת֥וֹךְ כְּפִרִ֖ים רִבְּתָ֥ה גוּרֶֽיהָ׃

2 சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள்.
2 and say: ‘What was your mother? A lioness among the lions! She lay down among the young lions; she reared her cubs.
2 சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.

3וַתַּ֛עַל אֶחָ֥ד מִגֻּרֶ֖יהָ כְּפִ֣יר הָיָ֑ה וַיִּלְמַ֥ד לִטְרָף־טֶ֖רֶף אָדָ֥ם אָכָֽל׃

3 தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
3 She brought up one of her cubs, and he became a young lion. After learning to tear his prey, he devoured men.
3 அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

4וַיִּשְׁמְע֥וּ אֵלָ֛יו גּוֹיִ֖ם בְּשַׁחְתָּ֣ם נִתְפָּ֑שׂ וַיְבִאֻ֥הוּ בַֽחַחִ֖ים אֶל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

4 புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
4 When the nations heard of him, he was trapped in their pit. With hooks they led him away to the land of Egypt.
4 வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்; அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.

5וַתֵּ֙רֶא֙ כִּ֣י נֽוֹחֲלָ֔ה אָבְדָ֖ה תִּקְוָתָ֑הּ וַתִּקַּ֛ח אֶחָ֥ד מִגֻּרֶ֖יהָ כְּפִ֥יר שָׂמָֽתְהוּ׃

5 தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்ற எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
5 When she saw that she had waited in vain, that her hope was lost, she took another of her cubs and made him a young lion.
5 தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்; எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.

6וַיִּתְהַלֵּ֥ךְ בְּתוֹךְ־אֲרָי֖וֹת כְּפִ֣יר הָיָ֑ה וַיִּלְמַ֥ד לִטְרָף־טֶ֖רֶף אָדָ֥ם אָכָֽל׃

6 அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
6 He prowled among the lions, and became a young lion. After learning to tear his prey, he devoured men.
6 அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

7וַיֵּ֙דַע֙ אַלְמְנוֹתָ֔יו וְעָרֵיהֶ֖ם הֶחֱרִ֑יב וַתֵּ֤שַׁם אֶ֙רֶץ֙ וּמְלֹאָ֔הּ מִקּ֖וֹל שַׁאֲגָתֽוֹ׃

7 அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.
7 He broke down their strongholds and devastated their cities. The land and everything in it shuddered at the sound of his roaring.
7 அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று; அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.

8וַיִּתְּנ֨וּ עָלָ֥יו גּוֹיִ֛ם סָבִ֖יב מִמְּדִינ֑וֹת וַֽיִּפְרְשׂ֥וּ עָלָ֛יו רִשְׁתָּ֖ם בְּשַׁחְתָּ֥ם נִתְפָּֽשׂ׃

8 அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
8 Then the nations set out against him from the provinces on every side. They spread their net over him; he was trapped in their pit.
8 அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்; தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.

9וַֽיִּתְּנֻ֤הוּ בַסּוּגַר֙ בַּֽחַחִ֔ים וַיְבִאֻ֖הוּ אֶל־מֶ֣לֶךְ בָּבֶ֑ל יְבִאֻ֙הוּ֙ בַּמְּצֹד֔וֹת לְמַ֗עַן לֹא־יִשָּׁמַ֥ע קוֹל֛וֹ ע֖וֹד אֶל־הָרֵ֥י יִשְׂרָאֵֽל׃

9 அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதை பாபிலோனின் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
9 With hooks they caged him and brought him to the king of Babylon. They brought him into captivity so that his roar was heard no longer on the mountains of Israel.
9 அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.

10אִמְּךָ֥ כַגֶּ֛פֶן בְּדָמְךָ֖ עַל־מַ֣יִם שְׁתוּלָ֑ה פֹּֽרִיָּה֙ וַֽעֲנֵפָ֔ה הָיְתָ֖ה מִמַּ֥יִם רַבִּֽים׃

10 நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.
10 Your mother was like a vine in your vineyard,b planted by the water; it was fruitful and full of branches because of the abundant waters.
10 திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்; மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.

11וַיִּֽהְיוּ־לָ֞הּ מַטּ֣וֹת עֹ֗ז אֶל־שִׁבְטֵי֙ מֹֽשְׁלִ֔ים וַתִּגְבַּ֥הּ קֽוֹמָת֖וֹ עַל־בֵּ֣ין עֲבֹתִ֑ים וַיֵּרָ֣א בְגָבְה֔וֹ בְּרֹ֖ב דָּלִיֹּתָֽיו׃

11 ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று.
11 It had strong branches, fit for a ruler’s scepter. It towered high above the thick branches, conspicuous for its height and for its dense foliage.
11 அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.

12וַתֻּתַּ֤שׁ בְּחֵמָה֙ לָאָ֣רֶץ הֻשְׁלָ֔כָה וְר֥וּחַ הַקָּדִ֖ים הוֹבִ֣ישׁ פִּרְיָ֑הּ הִתְפָּרְק֧וּ וְיָבֵ֛שׁוּ מַטֵּ֥ה עֻזָּ֖הּ אֵ֥שׁ אֲכָלָֽתְהוּ׃

12 ஆனாலும் அது சீக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.
12 But it was uprooted in fury, cast down to the ground, and the east wind dried up its fruit. Its strong branches were stripped off and they withered; the fire consumed them.
12 ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது; அதன் கனி உதிர்ந்து போயிற்று; தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று.

13וְעַתָּ֖ה שְׁתוּלָ֣ה בַמִּדְבָּ֑ר בְּאֶ֖רֶץ צִיָּ֥ה וְצָמָֽא׃

13 இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
13 Now it is planted in the wilderness, in a dry and thirsty land.
13 இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.

14וַתֵּצֵ֨א אֵ֜שׁ מִמַּטֵּ֤ה בַדֶּ֙יהָ֙ פִּרְיָ֣הּ אָכָ֔לָה וְלֹא־הָ֥יָה בָ֛הּ מַטֵּה־עֹ֖ז שֵׁ֣בֶט לִמְשׁ֑וֹל קִ֥ינָה הִ֖יא וַתְּהִ֥י לְקִינָֽה׃

14 அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றான்.
14 Fire has gone out from its main branch and devoured its fruit; on it no strong branch remains fit for a ruler’s scepter.’ This is a lament and shall be used as a lament.”
14 அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்; இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Ezekiel Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

Footnotes:
7 a Or He knew their widows  or He seized their widows
10 b Some Hebrew manuscripts; most Hebrew manuscripts in your bloodline

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.