பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 45 | Ezekiel 45
Consecration of the Land
1 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.
1 “When you divide the land by lot as an inheritance, you are to set aside a portion for the LORD, a holy portion of the land 25,000 cubits long and 20,000 cubits wide.a This entire tract of land will be holy.
1 நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும்.
2 இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.
2 Within this area there is to be a section for the sanctuary 500 cubits square,b with 50 cubitsc around it for open land.
2 அதில் ஐந்நூறு முழச் சதுர நிலம் தூயகத்துக்கென ஒதுக்கப்படும். ஐம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.
3 இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.
3 From this holy portion, you are to measure off a length of 25,000 cubits and a width of 10,000 cubits,d and in it will be the sanctuary, the Most Holy Place.e
3 தூய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்விடத்தில்தான் தூயகமும் திருத்தூயகமும் அமையும்.
4 தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.
4 It will be a holy portion of the land to be used by the priests who minister in the sanctuary, who draw near to minister before the LORD. It will be a place for their houses, as well as a holy area for the sanctuary.
4 அவ்விடமே தூயகத்தில் நின்று ஆண்டவருக்கு முன் பணிபுரிய வரும் குருக்களுக்குரிய தூய நிலப்பகுதியாய் இருக்கும். அது அவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாகவும் கோவிலுக்கான தூய பகுதியாகவும் அமையும்.
5 பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகளிருக்கவேண்டும்.
5 An adjacent area 25,000 cubits long and 10,000 cubits wide shall belong to the Levites who minister in the temple; it will be their possession for towns in which to live.f
5 இருபத்தைந்தாயிர முழ நீளமும், பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதி கோவிலில் பணிபுரியும் லேவியர்களுக்கு உரியதாகும். அவர்களுக்கு இருபது அறைகள் உடைமையாய் இருக்கும்.
6 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தாரனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.
6 As the property of the city, you are to set aside an area 5,000 cubits wide and 25,000 cubits long,g adjacent to the holy district. It will belong to the whole house of Israel.
6 தூய பகுதியை ஒட்டி ஐயாயிர முழ அகலமும் இருபத்தைந்தாயிர முழ நீளமும் கொண்ட ஒரு பகுதியை நகருக்கென ஒதுக்க வேண்டும். அது இஸ்ரயேல் வீட்டார் அனைவர்க்கும் உரியதாய் இருக்கும்.
The Prince’s Portion
7 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்குமுன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல்எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.
7 Now the prince will have the area bordering each side of the area formed by the holy district and the property of the city, extending westward from the western side and eastward from the eastern side, running lengthwise from the western boundary to the eastern boundary and parallel to one of the tribal portions.
7 தூய பகுதிக்கும், நகருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய நிலம் இருக்கும். மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு எல்லை வரைக்கும் கிழக்குப் பகுதியிலிருந்து கிழக்கு எல்லைவரைக்கும் நீண்டு மேற்கிலிருந்து கிழக்காக நீண்டிருக்கும் ஒவ்வொரு குலப்பகுதியின் நிலத்திற்கும் இணையாக இது இருக்க வேண்டும்.
8 இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தக்கதாக விட்டுவிடுவார்களாக.
8 This land will be his possession in Israel. And My princes will no longer oppress My people, but will give the rest of the land to the house of Israel according to their tribes.
8 இந்த நிலமே இஸ்ரயேலின் தலைவனது உடைமையாயிருக்கும். என் தலைவர்கள் இனிமேல் என் மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேல் வீட்டினர் தங்கள் குலத்திற்கேற்றவாறு நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள அனுமதியளிப்பர்.
9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 For this is what the Lord GOD says: ‘Enough, O princes of Israel! Cease your violence and oppression, and do what is just and right. Stop dispossessing My people, declares the Lord GOD.’
9 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலின் தலைவர்களே! நீங்கள் வன்முறையையும் அடக்கு முறையையும் விட்டொழியுங்கள். நீதியையையும் நியாயத்தையும் கடைப்பிடியுங்கள். என் மக்கள் நில உரிமை இழக்கச் செய்வதை நிறுத்துங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
Honest Scales (Deuteronomy 25:13–16; Proverbs 11:1–3)
10 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.
10 You must use honest scales, a just ephah,h and a just bath.i
10 உங்களிடம் சரியான எடைக்கருவிகள் இருக்க வேண்டும். சரியான எடையுடைய மரக்காலும் சரியான அளவுடைய குடமும் உங்களிடம் இருக்க வேண்டும்.123
1 லேவி 19:36.
2 - 'ஏப்பா' என்பது எபிரேய பாடம். திடப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட எடைக்கருவி.
3 - 'பாத்' என்பது எபிரேய பாடம். திரவப்பொருளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவி.
11 மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.
11 The ephah and the bath shall be the same quantity so that the bath will contain a tenth of a homer, and the ephah a tenth of a homer; the homer will be the standard measure for both.j
11 மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். குடம் என்பது கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.4
4 - 'கோமர்' என்பது எபிரேய பாடம்.
12 சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.
12 The shekel will consist of twenty gerahs.k Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels will equal one mina.l
12 செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும், பதினைந்து செக்கேல்களும் இருக்க வேண்டும்.
Offerings and Feasts
13 நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.
13 This is the contribution you are to offer: a sixth of an ephah from each homer of wheat, and a sixth of an ephah from each homer of barley.m
13 நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே; ஒவ்வொரு கலம் அளவு கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும், ஒவ்வொரு கலம் அளவு வாற் கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும கொடுக்க வேண்டும்.
14 அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.
14 The prescribed portion of oil, measured by the bath, is a tenth of a bath from each corn (a cor consists of ten baths or one homer, since ten baths are equivalent to a homer).
14 படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும். ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் பத்திலொரு பகுதியாகும். கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம். ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.5
5 - 'கோமர்' என்பது எபிரேய பாடம். 'கோர்', 'கோமர்' இரண்டும் சம அளவுகள் கொண்டவை. (பத்து குடம் அல்லது நானூறு லிட்டர்).
15 இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
15 And one sheep shall be given from each flock of two hundred from the well-watered pastures of Israel. These are for the grain offerings, burnt offerings, and peace offerings, to make atonement for the people, declares the Lord GOD.
15 இஸ்ரயேலின் வளமான மேய்ச்சல் நிலத்தில் இருநூறு ஆடுகள் உள்ள ஒவ்வொரு மந்தையிலிருந்தும் ஓர் ஆட்டுக்குட்டி எடுக்கப்பட வேண்டும். பாவக் கழுவாய்ப் பலிகளான தானியப் படையலுக்கும், எரிபலிகளுக்கும், நல்லுறவுப் பலிகளுக்கும் அது பயன் படுத்தப்படும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
16 இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள்.
16 All the people of the land must participate in this contribution for the prince in Israel.
16 இஸ்ரயேலின் தலைவனுக்குக் கொடுக்கும் இச்சிறப்புக் காணிக்கையை நாட்டின் மக்கள் யாவரும் கொடுக்க வேண்டும்.
17 இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.
17 And it shall be the prince’s part to provide the burnt offerings, grain offerings, and drink offerings for the feasts, New Moons, and Sabbaths—for all the appointed feasts of the house of Israel. He will provide the sin offerings,o grain offerings, burnt offerings, and peace offerings to make atonement for the house of Israel.
17 இஸ்ரயேலின் திருநாள்களிலும் அமாவாசை நாள்கள், ஓய்வு நாள்கள் மற்றும் இஸ்ரயேலின் எல்லாச் சிறப்புத் திருநாள்களிலும், எரிபலிகளுக்கும் தானியப் படையலுக்கும் நீர்மப் படையல்களுக்கும் வேண்டியவற்றை அளிக்க வேண்டியது தலைவனின் பொறுப்பாகும். அவன் இஸ்ரயேல் வீட்டார் சார்பில் பாவக் கழுவாய் செய்யப் பாவம் போக்கும் பலிகள், தானியப் படையல்கள், எரிபலிகள், நல்லுறவுப் பலிகள் ஆகியவற்றிற்குத் தேவையானவற்றைத் தருவான்.
18 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.
18 This is what the Lord GOD says: ‘On the first day of the first month you are to take a young bull without blemish and purify the sanctuary.
18 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முதல் மாதத்தின் முதல் நாளில் நீங்கள் மாசுமறுவற்ற ஓர் இளங்காளையை மந்தையிலிருந்து எடுத்துத் தூயகத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.
19 பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின வாசல்நிலைகளிலும் பூசக்கடவன்.
19 And the priest is to take some of the blood from the sin offering and put it on the doorposts of the temple, on the four corners of the ledge of the altar, and on the gateposts of the inner court.
19 குரு பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைக் கோவிலின் கதவு நிலைகளிலும், பீடத்து விளிம்பின் நான்கு முனைகளிலும், உள் முற்றத்தின் வாயில் நிலைகளிலும் பூச வேண்டும்.
20 பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.
20 You must do the same thing on the seventh day of the month for anyone who strays unintentionally or in ignorance. In this way you will make atonement for the temple.
20 அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில் இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.
21 முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.
21 On the fourteenth day of the first month you are to observe the Passover, a feast of seven days, during which unleavened bread shall be eaten.
21 முதல் மாதத்தின் பதினான்காம் நாள் உங்களுக்குப் பாஸ்காத் திருநாளாக இருக்கும். அது ஏழு நாள் தொடரும். அந்நாள்களில் நீங்கள் புளியாத அப்பங்களையே உண்ண வேண்டும்.6
22 அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.
22 On that day the prince shall provide a bull as a sin offering for himself and for all the people of the land.
22 அந்த நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவம் போக்கும் பலிக்கென ஒரு காளையைக் கொடுக்க வேண்டும்.
23 ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக.
23 Each day during the seven days of the feast, he shall provide seven bulls and seven rams without blemish as a burnt offering to the LORD, along with a male goat for a sin offering.
23 திருவிழாவின் அந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் ஆண்டவருக்கு எரிபலிக்கென மாசு மறுவற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும், பாவம் போக்கும் பலிக்கென ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொடுக்க வேண்டும்.
24 ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.
24 He shall also provide as a grain offering an ephah for each bull and an ephah for each ram, along with a hin of olive oil for each ephah of grain.p
24 ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும் ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும் ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும்.7
7 - 'கீன்' என்பது எபிரேய பாடம்.
25 ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.
25 During the seven days of the feast that begins on the fifteenth day of the seventh month,q he is to make the same provision for sin offerings, burnt offerings, grain offerings, and oil.’
25 ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் தொடங்கும் திருவிழாவில் ஏழு நாள்களிலும் இவ்வாறே பாவம் போக்கும் பலிப்பொருள்கள், எரிபலிப்பொருள்கள், தானியப் படையல், எண்ணெய்ப் படையல் ஆகியவற்றை அவன் அளிக்க வேண்டும்.8
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a LXX; the holy portion was to be approximately 8.3 miles long and 6.6 miles wide (13.3 kilometers long and 10.7 kilometers wide). Hebrew 25,000 cubits long and 10,000 wide . See also verses 3 and 5 and Ezekiel 48:9.
2 b 500 (long) cubits is approximately 875 feet or 266.7 meters.
2 c 50 (long) cubits is approximately 87.5 feet or 26.7 meters.
3 d The portion was to be approximately 8.3 miles long and 3.3 miles wide (13.3 kilometers long and 5.3 kilometers wide); similarly in verse 5.
3 e Or the Holy of Holies
5 f LXX; Hebrew their possession, twenty chambers
6 g The property of the city was to be approximately 1.7 miles wide and 8.3 miles long (2.7 kilometers wide and 13.3 kilometers long).
10 h An ephah is a dry measure of approximately 20 dry quarts or 22 liters.
10 i A bath was a liquid measure of approximately 5.8 gallons or 22 liters.
11 j A homer was a dry measure of approximately 6.24 bushels or 220 liters; also in verses 13 and 14.
12 k 20 gerahs is equivalent to one shekel (approximately 0.4 ounces or 11.4 grams).
12 l That is, 60 shekels total; elsewhere, the common mina was 50 shekels. Sixty shekels weighed approximately 1.5 pounds or 683.8 grams.
13 m That is, a sixtieth of the harvest of wheat and of barley; a sixth of an ephah was approximately 3.3 dry quarts or 3.7 liters.
14 n That is, one percent of one’s oil; a tenth of a bath was approximately 2.3 quarts or 2.2 liters.
17 o Or purification offerings ; also in verses 19, 22, 23, and 25
24 p Literally a hin of oil for each ephah ; that is, approximately 0.97 gallons or 3.67 liters of oil for each ephah of grain
25 q That is, Sukkot, the autumn feast of pilgrimage to Jerusalem; also translated as the Feast of Booths or the Feast of Shelters and originally called the Feast of Ingathering (see Exodus 23:16 and Exodus 34:22).
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.