பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Ezekiel  எசேக்கியேல்  יְחֶזְקֵאל

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

எசேக்கியேல் 46 | Ezekiel 46

The Prince’s Offerings

1כֹּֽה־אָמַר֮ אֲדֹנָ֣י יְהוִה֒ שַׁ֜עַר הֶחָצֵ֤ר הַפְּנִימִית֙ הַפֹּנֶ֣ה קָדִ֔ים יִהְיֶ֣ה סָג֔וּר שֵׁ֖שֶׁת יְמֵ֣י הַֽמַּעֲשֶׂ֑ה וּבְי֤וֹם הַשַּׁבָּת֙ יִפָּתֵ֔חַ וּבְי֥וֹם הַחֹ֖דֶשׁ יִפָּתֵֽחַ׃

1 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
1 “This is what the Lord GOD says: ‘The gate of the inner court that faces east must be kept shut during the six days of work, but on the Sabbath day and on the day of the New Moon it shall be opened.
1 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.

2וּבָ֣א הַנָּשִׂ֡יא דֶּרֶךְ֩ אוּלָ֨ם הַשַּׁ֜עַר מִח֗וּץ וְעָמַד֙ עַל־מְזוּזַ֣ת הַשַּׁ֔עַר וְעָשׂ֣וּ הַכֹּהֲנִ֗ים אֶת־עֽוֹלָתוֹ֙ וְאֶת־שְׁלָמָ֔יו וְהִֽשְׁתַּחֲוָ֛ה עַל־מִפְתַּ֥ן הַשַּׁ֖עַר וְיָצָ֑א וְהַשַּׁ֥עַר לֹֽא־יִסָּגֵ֖ר עַד־הָעָֽרֶב׃

2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
2 The prince is to enter from the outside through the portico of the gateway and stand by the gatepost, while the priests sacrifice his burnt offerings and peace offerings. He is to bow in worship at the threshold of the gate and then depart, but the gate must not be shut until evening.
2 தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.

3וְהִשְׁתַּחֲו֣וּ עַם־הָאָ֗רֶץ פֶּ֚תַח הַשַּׁ֣עַר הַה֔וּא בַּשַּׁבָּת֖וֹת וּבֶחֳדָשִׁ֑ים לִפְנֵ֖י יְהוָֽה׃

3 தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.
3 On the Sabbaths and New Moons the people of the land are also to bow in worship before the LORD at the entrance to that gateway.
3 ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும் நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன் நுழை வாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

4וְהָ֣עֹלָ֔ה אֲשֶׁר־יַקְרִ֥ב הַנָּשִׂ֖יא לַֽיהוָ֑ה בְּי֣וֹם הַשַּׁבָּ֗ת שִׁשָּׁ֧ה כְבָשִׂ֛ים תְּמִימִ֖ם וְאַ֥יִל תָּמִֽים׃

4 அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
4 The burnt offering that the prince presents to the LORD on the Sabbath day shall be six unblemished male lambs and an unblemished ram.
4 ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.

5וּמִנְחָה֙ אֵיפָ֣ה לָאַ֔יִל וְלַכְּבָשִׂ֥ים מִנְחָ֖ה מַתַּ֣ת יָד֑וֹ וְשֶׁ֖מֶן הִ֥ין לָאֵיפָֽה׃

5 ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
5 The grain offering with the ram shall be one ephah, and the grain offering with the lambs shall be as much as he is able, along with a hin of oil per ephah.
5 வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல் ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும். ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல் அவன் விரும்பும் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.

6וּבְי֣וֹם הַחֹ֔דֶשׁ פַּ֥ר בֶּן־בָּקָ֖ר תְּמִימִ֑ם וְשֵׁ֧שֶׁת כְּבָשִׂ֛ם וָאַ֖יִל תְּמִימִ֥ם יִהְיֽוּ׃

6 மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையுடைய ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
6 On the day of the New Moon he shall offer a young, unblemished bull, six lambs, and a ram without blemish.
6 அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை, ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும். அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.

7וְאֵיפָ֨ה לַפָּ֜ר וְאֵיפָ֤ה לָאַ֙יִל֙ יַעֲשֶׂ֣ה מִנְחָ֔ה וְלַ֨כְּבָשִׂ֔ים כַּאֲשֶׁ֥ר תַּשִּׂ֖יג יָד֑וֹ וְשֶׁ֖מֶן הִ֥ין לָאֵיפָֽה׃

7 போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
7 He is to provide a grain offering of an ephah with the bull, an ephah with the ram, and as much as he is able with the lambs, along with a hin of oil per ephah.
7 காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும் வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும் ஆட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன் ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.

8וּבְב֖וֹא הַנָּשִׂ֑יא דֶּ֣רֶךְ אוּלָ֤ם הַשַּׁ֙עַר֙ יָב֔וֹא וּבְדַרְכּ֖וֹ יֵצֵֽא׃

8 அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
8 When the prince enters, he shall go in through the portico of the gateway, and he shall go out the same way.
8 தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.

9וּבְב֨וֹא עַם־הָאָ֜רֶץ לִפְנֵ֣י יְהוָה֮ בַּמּֽוֹעֲדִים֒ הַבָּ֡א דֶּרֶךְ־שַׁ֨עַר צָפ֜וֹן לְהִֽשְׁתַּחֲוֺ֗ת יֵצֵא֙ דֶּרֶךְ־שַׁ֣עַר נֶ֔גֶב וְהַבָּא֙ דֶּרֶךְ־שַׁ֣עַר נֶ֔גֶב יֵצֵ֖א דֶּרֶךְ־שַׁ֣עַר צָפ֑וֹנָה לֹ֣א יָשׁ֗וּב דֶּ֤רֶךְ הַשַּׁ֙עַר֙ אֲשֶׁר־בָּ֣א ב֔וֹ כִּ֥י נִכְח֖וֹ יצאו

9 தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
9 When the people of the land come before the LORD at the appointed feasts, whoever enters by the north gate to worship must go out by the south gate, and whoever enters by the south gate must go out by the north gate. No one is to return through the gate by which he entered, but each must go out by the opposite gate.
9 குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.

10וְֽהַנָּשִׂ֑יא בְּתוֹכָ֤ם בְּבוֹאָם֙ יָב֔וֹא וּבְצֵאתָ֖ם יֵצֵֽאוּ׃

10 அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.
10 When the people enter, the prince shall go in with them, and when they leave, he shall leave.
10 தலைவன் மக்களுடன் சேர்ந்து, அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து, அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.

11וּבַחַגִּ֣ים וּבַמּוֹעֲדִ֗ים תִּהְיֶ֤ה הַמִּנְחָה֙ אֵיפָ֤ה לַפָּר֙ וְאֵיפָ֣ה לָאַ֔יִל וְלַכְּבָשִׂ֖ים מַתַּ֣ת יָד֑וֹ וְשֶׁ֖מֶן הִ֥ין לָאֵיפָֽה׃

11 பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.
11 At the festivals and appointed feasts, the grain offering shall be an ephah with a bull, an ephah with a ram, and as much as one is able to give with the lambs, along with a hin of oil per ephah.
11 விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.

12וְכִֽי־יַעֲשֶׂה֩ הַנָּשִׂ֨יא נְדָבָ֜ה עוֹלָ֣ה אֽוֹ־שְׁלָמִים֮ נְדָבָ֣ה לַֽיהוָה֒ וּפָ֣תַֽח ל֗וֹ אֶת הַשַּׁ֙עַר֙ הַפֹּנֶ֣ה קָדִ֔ים וְעָשָׂ֤ה אֶת־עֹֽלָתוֹ֙ וְאֶת־שְׁלָמָ֔יו כַּאֲשֶׁ֥ר יַעֲשֶׂ֖ה בְּי֣וֹם הַשַּׁבָּ֑ת וְיָצָ֛א וְסָגַ֥ר אֶת־הַשַּׁ֖עַר אַחֲרֵ֥י צֵאתֽוֹ׃

12 அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
12 When the prince makes a freewill offering to the LORD, whether a burnt offering or a peace offering, the gate facing east must be opened for him. He is to offer his burnt offering or peace offering just as he does on the Sabbath day. Then he shall go out, and the gate must be closed after he goes out.
12 தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.

13וְכֶ֨בֶשׂ בֶּן־שְׁנָת֜וֹ תָּמִ֗ים תַּעֲשֶׂ֥ה עוֹלָ֛ה לַיּ֖וֹם לַֽיהֹוָ֑ה בַּבֹּ֥קֶר בַּבֹּ֖קֶר תַּעֲשֶׂ֥ה אֹתֽוֹ׃

13 தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.
13 And you shall provide an unblemished year-old lamb as a daily burnt offering to the LORD; you are to offer it every morning.
13 ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும். காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.

14וּמִנְחָה֩ תַעֲשֶׂ֨ה עָלָ֜יו בַּבֹּ֤קֶר בַּבֹּ֙קֶר֙ שִׁשִּׁ֣ית הָֽאֵיפָ֔ה וְשֶׁ֛מֶן שְׁלִישִׁ֥ית הַהִ֖ין לָרֹ֣ס אֶת־הַסֹּ֑לֶת מִנְחָה֙ לַֽיהוָ֔ה חֻקּ֥וֹת עוֹלָ֖ם תָּמִֽיד׃

14 அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
14 You are also to provide with it every morning a grain offering of a sixth of an ephahb with a third of a hin of oilc to moisten the fine flour—a grain offering to the LORD. This is a permanent statute.
14 ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.

15ועשו אֶת־הַכֶּ֧בֶשׂ וְאֶת־הַמִּנְחָ֛ה וְאֶת־הַשֶּׁ֖מֶן בַּבֹּ֣קֶר בַּבֹּ֑קֶר עוֹלַ֖ת תָּמִֽיד׃

15 இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
15 Thus they shall provide the lamb, the grain offering, and the oil every morning as a regular burnt offering.’
15 இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.

16כֹּה־אָמַ֞ר אֲדֹנָ֣י יְהֹוִ֗ה כִּֽי־יִתֵּ֨ן הַנָּשִׂ֤יא מַתָּנָה֙ לְאִ֣ישׁ מִבָּנָ֔יו נַחֲלָת֥וֹ הִ֖יא לְבָנָ֣יו תִּֽהְיֶ֑ה אֲחֻזָּתָ֥ם הִ֖יא בְּנַחֲלָֽה׃

16 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.
16 This is what the Lord GOD says: ‘If the prince gives a gift to any of his sons as an inheritance, it will belong to his descendants. It will become their property by inheritance.
16 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

17וְכִֽי־יִתֵּ֨ן מַתָּנָ֜ה מִנַּחֲלָת֗וֹ לְאַחַד֙ מֵֽעֲבָדָ֔יו וְהָ֤יְתָה לּוֹ֙ עַד־שְׁנַ֣ת הַדְּר֔וֹר וְשָׁבַ֖ת לַנָּשִׂ֑יא אַ֚ךְ נַחֲלָת֔וֹ בָּנָ֖יו לָהֶ֥ם תִּהְיֶֽה׃

17 அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
17 But if he gives a gift from his inheritance to one of his servants, it will belong to that servant until the year of freedom; then it will revert to the prince. His inheritance belongs only to his sons; it shall be theirs.
17 ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது "விடுதலை ஆண்டு" வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.*

18וְלֹא־יִקַּ֨ח הַנָּשִׂ֜יא מִנַּחֲלַ֣ת הָעָ֗ם לְהֽוֹנֹתָם֙ מֵאֲחֻזָּתָ֔ם מֵאֲחֻזָּת֖וֹ יַנְחִ֣ל אֶת־בָּנָ֑יו לְמַ֙עַן֙ אֲשֶׁ֣ר לֹֽא־יָפֻ֣צוּ עַמִּ֔י אִ֖ישׁ מֵאֲחֻזָּתֽוֹ׃

18 அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
18 The prince must not take any of the inheritance of the people by evicting them from their property. He is to provide an inheritance for his sons from his own property, so that none of My people will be displaced from his property.’”
18 தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.

The Courts for Boiling and Baking

19וַיְבִיאֵ֣נִי בַמָּבוֹא֮ אֲשֶׁ֣ר עַל־כֶּ֣תֶף הַשַּׁעַר֒ אֶל־הַלִּשְׁכ֤וֹת הַקֹּ֙דֶשׁ֙ אֶל־הַכֹּ֣הֲנִ֔ים הַפֹּנ֖וֹת צָפ֑וֹנָה וְהִנֵּה־שָׁ֣ם מָק֔וֹם בירכתם יָֽמָּה׃

19 பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
19 Then the man brought me through the entrance at the side of the gate into the holy chambers facing north, which belonged to the priests, and he showed me a place there at the far western end
19 பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்; மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.

20וַיֹּ֣אמֶר אֵלַ֔י זֶ֣ה הַמָּק֗וֹם אֲשֶׁ֤ר יְבַשְּׁלוּ־שָׁם֙ הַכֹּ֣הֲנִ֔ים אֶת־הָאָשָׁ֖ם וְאֶת־הַחַטָּ֑את אֲשֶׁ֤ר יֹאפוּ֙ אֶת־הַמִּנְחָ֔ה לְבִלְתִּ֥י הוֹצִ֛יא אֶל־הֶחָצֵ֥ר הַחִֽיצוֹנָ֖ה לְקַדֵּ֥שׁ אֶת־הָעָֽם׃

20 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
20 and said to me, “This is the place where the priests shall boil the guilt offering and the sin offering, and where they shall bake the grain offering, so that they do not bring them into the outer court and transmit holiness to the people.”
20 அவர் என்னிடம் சொன்னது; குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.

21וַיּוֹצִיאֵ֗נִי אֶל־הֶֽחָצֵר֙ הַחִ֣יצֹנָ֔ה וַיַּ֣עֲבִירֵ֔נִי אֶל־אַרְבַּ֖עַת מִקְצוֹעֵ֣י הֶחָצֵ֑ר וְהִנֵּ֤ה חָצֵר֙ בְּמִקְצֹ֣עַ הֶחָצֵ֔ר חָצֵ֖ר בְּמִקְצֹ֥עַ הֶחָצֵֽר׃

21 பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
21 Then he brought me into the outer court and led me around to its four corners, and I saw a separate court in each of its corners.
21 அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார். நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.

22בְּאַרְבַּ֜עַת מִקְצֹע֤וֹת הֶֽחָצֵר֙ חֲצֵר֣וֹת קְטֻר֔וֹת אַרְבָּעִ֣ים אֹ֔רֶךְ וּשְׁלֹשִׁ֖ים רֹ֑חַב מִדָּ֣ה אַחַ֔ת לְאַרְבַּעְתָּ֖ם מְׄהֻׄקְׄצָׄעֽׄוֹׄתׄ׃

22 பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
22 In the four corners of the outer court there were enclosed courts, each forty cubits long and thirty cubits wide.d Each of the four corner areas had the same dimensions.
22 வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமாய் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.

23וְט֨וּר סָבִ֥יב בָּהֶ֛ם סָבִ֖יב לְאַרְבַּעְתָּ֑ם וּמְבַשְּׁל֣וֹת עָשׂ֔וּי מִתַּ֥חַת הַטִּיר֖וֹת סָבִֽיב׃

23 இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
23 Around the inside of each of the four courts was a row of masonry with ovens built at the base of the walls on all sides.
23 நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.

24וַיֹּ֖אמֶר אֵלָ֑י אֵ֚לֶּה בֵּ֣ית הַֽמְבַשְּׁלִ֔ים אֲשֶׁ֧ר יְבַשְּׁלוּ־שָׁ֛ם מְשָׁרְתֵ֥י הַבַּ֖יִת אֶת־זֶ֥בַח הָעָֽם׃

24 அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.
24 And he said to me, “These are the kitchens where those who minister at the temple will cook the sacrifices offered by the people.”
24 அவர் என்னிடம், "கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச் சமைக்கும் அடுப்புகள் இவையே" என்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Ezekiel Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

Footnotes:
5 a An ephah  is approximately 20 dry quarts or 22 liters (probably about 38.3 pounds or 17.4 kilograms of grain); also in verses 7 and 11.
14 A sixth of an ephah  is approximately 3.3 dry quarts or 3.7 liters (probably about 4.2 pounds or 1.9 kilograms of flour).
14 c Or a third of a hin of olive oil ; that is, approximately 1.3 quarts or 1.2 liters
22 d The enclosed courts were approximately 70 feet long and 52.5 feet wide (21.3 meters long and 16 meters wide).

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.