பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Ezekiel  எசேக்கியேல்  יְחֶזְקֵאל

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

எசேக்கியேல் 30 | Ezekiel 30

A Lament for Egypt

1וַיְהִ֥י דְבַר־יְהוָ֖ה אֵלַ֥י לֵאמֹֽר׃

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 Again the word of the LORD came to me, saying,
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2בֶּן־אָדָ֕ם הִנָּבֵא֙ וְאָ֣מַרְתָּ֔ כֹּ֥ה אָמַ֖ר אֲדֹנָ֣י יְהוִ֑ה הֵילִ֖ילוּ הָ֥הּ לַיּֽוֹם׃

2 மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
2 “Son of man, prophesy and declare that this is what the Lord GOD says: Wail, ‘Alas for that day!’
2 "மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:'ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது' என்று அலறுங்கள்;

3כִּֽי־קָר֣וֹב י֔וֹם וְקָר֥וֹב י֖וֹם לַֽיהוָ֑ה י֣וֹם עָנָ֔ן עֵ֥ת גּוֹיִ֖ם יִֽהְיֶֽה׃

3 நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.
3 For the day is near, the Day of the LORD is near. It will be a day of clouds, a time of doom for the nations.a
3 ஏனெனில், அருகில் உள்ளது அந்த நாள்; ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது; அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.

4וּבָאָ֥ה חֶ֙רֶב֙ בְּמִצְרַ֔יִם וְהָיְתָ֤ה חַלְחָלָה֙ בְּכ֔וּשׁ בִּנְפֹ֥ל חָלָ֖ל בְּמִצְרָ֑יִם וְלָקְח֣וּ הֲמוֹנָ֔הּ וְנֶהֶרְס֖וּ יְסוֹדֹתֶֽיהָ׃

4 பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.
4 A sword will come against Egypt, and there will be anguish in Cushb when the slain fall in Egypt, its wealth is taken away, and its foundations are torn down.
4 எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்; கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்; எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்; அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.

5כּ֣וּשׁ וּפ֤וּט וְלוּד֙ וְכָל־הָעֶ֣רֶב וְכ֔וּב וּבְנֵ֖י אֶ֣רֶץ הַבְּרִ֑ית אִתָּ֖ם בַּחֶ֥רֶב יִפֹּֽלוּ׃

5 எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
5 Cush, Put, and Lud,c and all the various peoples, as well as Libya and the men of the covenant land, will fall with Egypt by the sword.
5 எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.

6כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה וְנָֽפְלוּ֙ סֹמְכֵ֣י מִצְרַ֔יִם וְיָרַ֖ד גְּא֣וֹן עֻזָּ֑הּ מִמִּגְדֹּ֣ל סְוֵנֵ֗ה בַּחֶ֙רֶב֙ יִפְּלוּ־בָ֔הּ נְאֻ֖ם אֲדֹנָ֥י יְהוִֽה׃

6 எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
6 For this is what the LORD says: The allies of Egypt will fall, and her proud strength will collapse. From Migdol to Syened they will fall by the sword within her, declares the Lord GOD.
6 ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்; அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்; மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

7וְנָשַׁ֕מּוּ בְּת֖וֹךְ אֲרָצ֣וֹת נְשַׁמּ֑וֹת וְעָרָ֕יו בְּתוֹךְ־עָרִ֥ים נַחֲרָב֖וֹת תִּֽהְיֶֽינָה׃

7 பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
7 They will be desolate among desolate lands, and their cities will lie among ruined cities.
7 அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்; அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.

8וְיָדְע֖וּ כִּֽי־אֲנִ֣י יְהוָ֑ה בְּתִתִּי־אֵ֣שׁ בְּמִצְרַ֔יִם וְנִשְׁבְּר֖וּ כָּל־עֹזְרֶֽיהָ׃

8 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
8 Then they will know that I am the LORD when I set fire to Egypt and all her helpers are shattered.
8 நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது 'நானே ஆண்டவர்'என்பதை அறிந்து கொள்வர்.

9בַּיּ֣וֹם הַה֗וּא יֵצְא֨וּ מַלְאָכִ֤ים מִלְּפָנַי֙ בַּצִּ֔ים לְהַחֲרִ֖יד אֶת־כּ֣וּשׁ בֶּ֑טַח וְהָיְתָ֨ה חַלְחָלָ֤ה בָהֶם֙ בְּי֣וֹם מִצְרַ֔יִם כִּ֥י הִנֵּ֖ה בָּאָֽה׃

9 நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
9 On that day messengers will go out from Me in ships to frighten Cush out of complacency. Anguish will come upon them on the day of Egypt’s doom.e For it is indeed coming.
9 அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்; எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்; ஏனெனில், அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.

10כֹּ֥ה אָמַ֖ר אֲדֹנָ֣י יְהוִ֑ה וְהִשְׁבַּתִּי֙ אֶת־הֲמ֣וֹן מִצְרַ֔יִם בְּיַ֖ד נְבוּכַדְרֶאצַּ֥ר מֶלֶךְ־בָּבֶֽל׃

10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
10 This is what the Lord GOD says: I will put an end to the hordes of Egypt by the hand of Nebuchadnezzar king of Babylon.
10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.

11ה֠וּא וְעַמּ֤וֹ אִתּוֹ֙ עָרִיצֵ֣י גוֹיִ֔ם מֽוּבָאִ֖ים לְשַׁחֵ֣ת הָאָ֑רֶץ וְהֵרִ֤יקוּ חַרְבוֹתָם֙ עַל־מִצְרַ֔יִם וּמָלְא֥וּ אֶת־הָאָ֖רֶץ חָלָֽל׃

11 இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
11 He and his people with him, the most ruthless of the nations, will be brought in to destroy the land. They will draw their swords against Egypt and fill the land with the slain.
11 மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்; எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.

12וְנָתַתִּ֤י יְאֹרִים֙ חָֽרָבָ֔ה וּמָכַרְתִּ֥י אֶת־הָאָ֖רֶץ בְּיַד־רָעִ֑ים וַהֲשִׁמֹּתִ֞י אֶ֤רֶץ וּמְלֹאָהּ֙ בְּיַד־זָרִ֔ים אֲנִ֥י יְהוָ֖ה דִּבַּֽרְתִּי׃

12 அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
12 I will make the streams dry up and sell the land to the wicked. By the hands of foreigners I will bring desolation upon the land and everything in it. I, the LORD, have spoken.
12 ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அந்நியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.

13כֹּֽה־אָמַ֞ר אֲדֹנָ֣י יְהוִ֗ה וְהַאֲבַדְתִּ֨י גִלּוּלִ֜ים וְהִשְׁבַּתִּ֤י אֱלִילִים֙ מִנֹּ֔ף וְנָשִׂ֥יא מֵאֶֽרֶץ־מִצְרַ֖יִם לֹ֣א יִֽהְיֶה־ע֑וֹד וְנָתַתִּ֥י יִרְאָ֖ה בְּאֶ֥רֶץ מִצְרָֽיִם׃

13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
13 This is what the Lord GOD says: I will destroy the idols and put an end to the images in Memphis.f There will no longer be a prince in Egypt, and I will instill fear in that land.
13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் சிலைகளை அழிப்பேன்; நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்; எகிப்தில் இனி மன்னன் இரான்; நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.

14וַהֲשִׁמֹּתִי֙ אֶת־פַּתְר֔וֹס וְנָתַ֥תִּי אֵ֖שׁ בְּצֹ֑עַן וְעָשִׂ֥יתִי שְׁפָטִ֖ים בְּנֹֽא׃

14 பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
14 I will lay waste Pathros, set fire to Zoan, and execute judgment on Thebes.g
14 பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்; சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்; நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.

15וְשָׁפַכְתִּ֣י חֲמָתִ֔י עַל־סִ֖ין מָע֣וֹז מִצְרָ֑יִם וְהִכְרַתִּ֖י אֶת־הֲמ֥וֹן נֹֽא׃

15 எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோபட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
15 I will pour out My wrath on Pelusium,h the stronghold of Egypt, and cut off the crowds of Thebes.
15 எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்; நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.

16וְנָתַ֤תִּי אֵשׁ֙ בְּמִצְרַ֔יִם ח֤וּל תחיל סִ֔ין וְנֹ֖א תִּהְיֶ֣ה לְהִבָּקֵ֑עַ וְנֹ֖ף צָרֵ֥י יוֹמָֽם׃

16 எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
16 I will set fire to Egypt, Pelusium will writhe in anguish, Thebes will be split open, and Memphis will face daily distress.
16 எகிப்துக்கு நெருப்பிடுவேன்; சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்; புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்; தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.

17בַּח֥וּרֵי אָ֛וֶן וּפִי־בֶ֖סֶת בַּחֶ֣רֶב יִפֹּ֑לוּ וְהֵ֖נָּה בַּשְּׁבִ֥י תֵלַֽכְנָה׃

17 ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
17 The young men of On and Pi-besethi will fall by the sword, and those cities will go into captivity.
17 ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்; அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.

18וּבִֽתְחַפְנְחֵס֙ חָשַׂ֣ךְ הַיּ֔וֹם בְּשִׁבְרִי־שָׁם֙ אֶת־מֹט֣וֹת מִצְרַ֔יִם וְנִשְׁבַּת־בָּ֖הּ גְּא֣וֹן עֻזָּ֑הּ הִ֚יא עָנָ֣ן יְכַסֶּ֔נָּה וּבְנוֹתֶ֖יהָ בַּשְּׁבִ֥י תֵלַֽכְנָה׃

18 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
18 The day will be darkened in Tahpanhes when I break the yoke of Egypt and her proud strength comes to an end. A cloud will cover her, and her daughters will go into captivity.
18 எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரில் பகல் இரவாகும்; இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்; மேகங்களால் அது மூடப்படும்; சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.

19וְעָשִׂ֥יתִי שְׁפָטִ֖ים בְּמִצְרָ֑יִם וְיָדְע֖וּ כִּֽי־אֲנִ֥י יְהוָֽה׃

19 இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
19 So I will execute judgment on Egypt, and they will know that I am the LORD.”
19 இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து கொள்வர்.

Pharaoh’s Power Broken

20וַיְהִ֗י בְּאַחַ֤ת עֶשְׂרֵה֙ שָׁנָ֔ה בָּֽרִאשׁ֖וֹן בְּשִׁבְעָ֣ה לַחֹ֑דֶשׁ הָיָ֥ה דְבַר־יְהוָ֖ה אֵלַ֥י לֵאמֹֽר׃

20 பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
20 In the eleventh year, on the seventh day of the first month, the word of the LORD came to me, saying,
20 பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

21בֶּן־אָדָ֕ם אֶת־זְר֛וֹעַ פַּרְעֹ֥ה מֶֽלֶךְ־מִצְרַ֖יִם שָׁבָ֑רְתִּי וְהִנֵּ֣ה לֹֽא־חֻ֠בְּשָׁה לָתֵ֨ת רְפֻא֜וֹת לָשׂ֥וּם חִתּ֛וּל לְחָבְשָׁ֥הּ לְחָזְקָ֖הּ לִתְפֹּ֥שׂ בֶּחָֽרֶב׃

21 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.
21 “Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt. See, it has not been bound up for healing, or splinted for strength to hold the sword.
21 "மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.

22לָכֵ֞ן כֹּה־אָמַ֣ר ׀ אֲדֹנָ֣י יְהֹוִ֗ה הִנְנִי֙ אֶל־פַּרְעֹ֣ה מֶֽלֶךְ־מִצְרַ֔יִם וְשָֽׁבַרְתִּי֙ אֶת־זְרֹ֣עֹתָ֔יו אֶת־הַחֲזָקָ֖ה וְאֶת־הַנִּשְׁבָּ֑רֶת וְהִפַּלְתִּ֥י אֶת־הַחֶ֖רֶב מִיָּדֽוֹ׃

22 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,
22 Therefore this is what the Lord GOD says: Behold, I am against Pharaoh king of Egypt. I will break his arms, both the strong one and the one already broken, and will make the sword fall from his hand.
22 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும் — நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும் — முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.

23וַהֲפִצוֹתִ֥י אֶת־מִצְרַ֖יִם בַּגּוֹיִ֑ם וְזֵרִיתִ֖ם בָּאֲרָצֽוֹת׃

23 எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
23 I will disperse the Egyptians among the nations and scatter them throughout the lands.
23 மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.

24וְחִזַּקְתִּ֗י אֶת־זְרֹעוֹת֙ מֶ֣לֶךְ בָּבֶ֔ל וְנָתַתִּ֥י אֶת־חַרְבִּ֖י בְּיָד֑וֹ וְשָׁבַרְתִּי֙ אֶת־זְרֹע֣וֹת פַּרְעֹ֔ה וְנָאַ֛ק נַאֲק֥וֹת חָלָ֖ל לְפָנָֽיו׃

24 பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
24 I will strengthen the arms of Babylon’s king and place My sword in his hand, but I will break the arms of Pharaoh, who will groan before him like a mortally wounded man.
24 பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.

25וְהַחֲזַקְתִּ֗י אֶת־זְרֹעוֹת֙ מֶ֣לֶךְ בָּבֶ֔ל וּזְרֹע֥וֹת פַּרְעֹ֖ה תִּפֹּ֑לְנָה וְֽיָדְע֞וּ כִּֽי־אֲנִ֣י יְהוָ֗ה בְּתִתִּ֤י חַרְבִּי֙ בְּיַ֣ד מֶֽלֶךְ־בָּבֶ֔ל וְנָטָ֥ה אוֹתָ֖הּ אֶל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

25 பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
25 I will strengthen the arms of Babylon’s king, but Pharaoh’s arms will fall limp. Then they will know that I am the LORD, when I place My sword in the hand of Babylon’s king, and he wields it against the land of Egypt.
25 நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

26וַהֲפִצוֹתִ֤י אֶת־מִצְרַ֙יִם֙ בַּגּוֹיִ֔ם וְזֵרִיתִ֥י אוֹתָ֖ם בָּאֲרָצ֑וֹת וְיָדְע֖וּ כִּֽי־אֲנִ֥י יְהוָֽה׃

26 நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
26 I will disperse the Egyptians among the nations and scatter them throughout the lands. Then they will know that I am the LORD.”
26 எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்."


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Ezekiel Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48

Footnotes:
a Hebrew does not include of doom .
4 b That is, the upper Nile region; also in verses 5 and 9
5 c Or Lydia
d That is, Aswan; see Isaiah 49:12
9 e Hebrew the day of Egypt
13 f LXX; Hebrew Noph ; also in verse 16
14 g Hebrew No ; also in verses 15 and 16
15 h Hebrew Sin ; also in verse 16
17 i That is, Heliopolis and Bubastis , as in LXX; Hebrew Aven and Pi-beseth

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.