பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 38 | Ezekiel 38
A Prophecy against Gog
1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 And the word of the LORD came to me, saying,
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
2 “Son of man, set your face against Gog of the land of Magog, the chief prince of Meshech and Tubal.a Prophesy against him
2 மானிடா! மெசேக்கு மற்றும் தூபால் இனத்தவர்களின் தலைவனும் மாகோகு நாட்டினனுமான கோகு என்பவனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு எதிராக இறைவாக்குரை.*
* திவெ 20:8.
3 சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.
3 and declare that this is what the Lord GOD says: Behold, I am against you, O Gog, chief prince of Meshech and Tubal.b
3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.
4 நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.
4 I will turn you around, put hooks in your jaws, and bring you out with all your army—your horses, your horsemen in full armor, and a great company armed with shields and bucklers, all brandishing their swords.
4 நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி, முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும், குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன் கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன்.
5 அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.
5 Persia, Cush,c and Put will accompany them, all with shields and helmets,
5 அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.
6 கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.
6 as well as Gomer with all its troops, and Beth-togarmah from the far north with all its troops—the many nations with you.
6 கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும், தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும் — உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.
7 நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.
7 Get ready; prepare yourself, you and all your company gathered around you; you will be their guard.
7 நீ தயாராயிரு; உன்னுடன் சேர்ந்திருக்கும் கூட்டத்தினரையும் தயாராய் இருக்கச் சொல். நீ அவர்களுக்குத் தலைமை தாங்குவாய்.
8 அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,
8 After a long time you will be summoned. In the latter years you will enter a land that has recovered from war, whose people were gathered from many nations to the mountains of Israel, which had long been desolate. They had been brought out from the nations, and all now dwell securely.
8 பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய். வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த, இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை, வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய். வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.
9 பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.
9 You and all your troops, and many peoples with you will go up, advancing like a thunderstorm; you will be like a cloud covering the land.
9 நீ புயல்போல் முன்னேறி, மேகம்போல் நாட்டை மூடுவாய். நீயும் உன்னுடனுள்ள அனைத்து படைகளும் உன்னுடனுள்ள பல மக்களினங்களும் இவ்வாறு செய்வீர்கள்.
10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,
10 This is what the Lord GOD says: On that day, thoughts will arise in your mind, and you will devise an evil plan.
10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.
11 உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,
11 You will say, ‘I will go up against a land of unwalled villages; I will come against a tranquil people who dwell securely, all of them living without walls or bars or gates—
11 நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன். அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன். அவர்களுக்கு அரண் இல்லை; அடைக்கும் தாழ் இல்லை; வாயில் கதவும் இல்லை.
12 நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
12 in order to seize the spoil and carry off the plunder, to turn a hand against the desolate places now inhabited and against a people gathered from the nations, who have acquired livestock and possessions and who live at the center of the land.’
12 எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.
13 சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.
13 Sheba and Dedan and the merchants of Tarshish with all its villagesd will ask, ‘Have you come to capture the plunder? Have you assembled your hordes to carry away loot, to make off with silver and gold, to take cattle and goods, to seize great spoil?’
13 சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும், தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம் "உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ, பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ, பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு, கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு, மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ?" எனக் கேட்பார்கள்.
14 ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?
14 Therefore prophesy, son of man, and tell Gog that this is what the Lord GOD says: On that day when My people Israel are dwelling securely, will you not take notice of this?e
14 எனவே, மானிடா! நீ இறைவாக்குரைத்துக் கோகுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்கள் இஸ்ரயேலர் பாதுகாப்பாய் வாழும் நாளை நீ அறிவாயோ?
15 அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.
15 And you will come from your place out of the far north—you and many peoples with you, all riding horses—a mighty horde, a huge army.
15 தொலை வடக்குப் பகுதிகளிலிருந்து நீ உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களுடன் வருவாய். நீங்கள் யாவரும் குதிரையில் ஏறிய பெரிய வலிய படைகளாய் வருவீர்கள்.
16 நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
16 You will advance against My people Israel like a cloud covering the land. It will happen in the latter days, O Gog, that I will bring you against My land, so that the nations may know Me when I show Myself holy in you before their eyes.
16 நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு, நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய். கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன். நான் மக்களினங்களின் கண்முன்னே என்னை உன் வழியாய்த் தூயவர் என வெளிப்படுத்தும்போது அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.
17 உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
17 This is what the Lord GOD says: Are you the one of whom I have spoken in former days through My servants, the prophets of Israel, who in those times prophesied for years that I would bring you against them?
17 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய் எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே! அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க் கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.
18 இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
18 Now on that day when Gog comes against the land of Israel, declares the Lord GOD, My wrath will flare up.
18 அந்நாளில் நடப்பது இதுவே: கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
19 அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி,
19 In My zeal and fiery rage I proclaim that on that day there will be a great earthquake in the land of Israel.
19 என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.
20 என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
20 The fish of the sea, the birds of the air, the beasts of the field, every creature that crawls upon the ground, and all mankind on the face of the earth will tremble at My presence. The mountains will be thrown down, the cliffs will collapse, and every wall will fall to the ground.
20 கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்; முகடுகள் சாயும்; எல்லா அரண்களும் மண்ணில் விழும்.
21 என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.
21 And I will summon a sword against Gog on all My mountains, declares the Lord GOD, and every man’s sword will be against his brother.
21 நான் கோகுக்கு எதிராய் என் எல்லா மலைகளிலும் வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.
22 கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.
22 I will execute judgment upon him with plague and bloodshed. I will pour out torrents of rain, hailstones, fire, and sulfur on him and on his troops and on the many nations with him.
22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.
23 இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
23 I will magnify and sanctify Myself, and will reveal Myself in the sight of many nations. Then they will know that I am the LORD.
23 இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிப் பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or of Magog, the prince of Rosh, Meshech, and Tubal
3 b Or Gog, the prince of Rosh, Meshech, and Tubal
5 c That is, the upper Nile region
13 d Or young lions
14 e LXX will you not rouse yourself?
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.