பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 23 | Ezekiel 23
The Two Adulterous Sisters
1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 Again the word of the LORD came to me, saying,
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.
2 “Son of man, there were two women, daughters of the same mother,
2 "மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.
3 அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.
3 and they played in Egypt, prostituting themselves from their youth. Their breasts were fondled there, and their virgin bosoms caressed.
3 அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4 அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும் அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.
4 The older was named Oholah, and her sister was named Oholibah.b They became Mine and gave birth to sons and daughters. As for their identities, Oholah is Samaria, and Oholibah is Jerusalem.
4 அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா; இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.
5 அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
5 Oholah prostituted herself while she was still Mine. She lusted after her lovers, the Assyrians—warriors
5 ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6 நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
6 clothed in blue, governors and commanders, all desirable young men, horsemen mounted on steeds.
6 அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7 அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
7 She offered sexual favors to all the elite of Assyria. She defiled herself with all the idols of those for whom she lusted.
7 அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்; தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8 தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.
8 She did not give up the prostitution she began in Egypt, when men slept with her in her youth, caressed her virgin bosom, and poured out their lust upon her.
8 எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்; அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்; தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.
9 ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
9 Therefore I delivered her into the hands of her lovers, the Assyrians for whom she lusted.
9 எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.
10 அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தில் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள்.
10 They exposed her nakedness, seized her sons and daughters, and put her to the sword. Thus she became a byword among women, and they executed judgment against her.
10 அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.
11 அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று.
11 Her sister Oholibah saw this, yet in her lust and prostitution she was more depraved than her sister.
11 அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.
12 மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.
12 She too lusted after the Assyrians—governors and commanders, warriors dressed in splendor, horsemen riding on steeds, all desirable young men.
12 அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.
13 அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்.
13 And I saw that she too had defiled herself; both of them had taken the same path.
13 அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.
14 அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள்.
14 But Oholibah carried her prostitution even further. She saw the men portrayed on the wall, images of the Chaldeans,c engraved in vermilion,
14 ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட்டாள். சுவரில் சிவப்பாய்த்தீட்டப்பட்ட கல்தேய நாட்டு ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
15 அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.
15 wearing belts on their waists and flowing turbans on their heads; all of them looked like officers of the Babylonians in Chaldea,d the land of their birth.
15 இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.
16 அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாபதிகளை அனுப்பினாள்.
16 At the sight of them, she lusted for them and sent messengers to them in Chaldea.
16 அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினாள்.
17 அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போன பின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.
17 Then the Babylonians came to her, to the bed of love, and in their lust they defiled her. But after she had been defiled by them, she turned away in disgust.
17 பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத் தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர். அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.
18 இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரித்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.
18 When Oholibah openly prostituted herself and exposed her nakedness, I turned away from her in disgust, just as I had turned away from her sister.
18 அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத் தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்; அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.
19 அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.
19 Yet she multiplied her promiscuity, remembering the days of her youth, when she had prostituted herself in the land of Egypt
19 ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20 கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்.
20 and lusted after their lovers, whose genitals were like those of donkeys and whose emission was like that of stallions.
20 அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.
21 எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
21 So you revisited the indecency of your youth, when the Egyptians caressed your bosom and pressed your young breasts.
21 எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.
Oholibah to Be Plagued
22 ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.
22 Therefore, Oholibah, this is what the Lord GOD says: ‘I will incite your lovers against you, those from whom you turned away in disgust. And I will bring them against you from every side—
22 ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன். இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய். அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.
23 செளந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும் அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர் பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன்.
23 the Babylonians and all the Chaldeans, the men of Pekod, Shoa, and Koa, and all the Assyrians with them—all desirable young men, governors and commanders, officers and men of renown, mounted on horses.
23 பாபிலோனியர் கல்தேயர் யாவரையும், பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும், அசீரியரையும் வரச்செய்வேன். அவர்கள் அழகிய இளைஞராயும் ஆளுநர்களாயும் படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர். அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.
24 அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும் இயந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய் உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.
24 They will come against you with a host of peoples,e with weapons, chariots, and wagons. They will array themselves against you on every side with buckler and shield and helmet. I will delegate judgment to them, and they will punish you according to their own standards.
24 அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர். தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன் பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும் தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய் நாற்புறமும் உன்னைச் சூழ்ந்துகொள்வர். நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.
25 உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
25 And I will set My jealous rage against you, and they will deal with you in fury. They will cut off your noses and ears, and your survivors will fall by the sword. They will seize your sons and daughters, and your remnant will be consumed by fire.
25 நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.
26 அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
26 They will strip off your clothes and take your fine jewelry.
26 மேலும் அவர்கள் உன் ஆடைகளை உரிந்து உன் விலையுயர்ந்த அணிகளை எடுத்துக் கொள்வர்.
27 இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின் உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய்.
27 So I will put an end to your indecency and prostitution, which began in the land of Egypt, and you will not lift your eyes to them or remember Egypt anymore.’
27 இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும் வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய். எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.
28 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
28 For this is what the Lord GOD says: ‘Surely I will deliver you into the hands of those you hate, from whom you turned away in disgust.
28 ஏனெனில் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ யாரை வெறுக்கிறாயோ, யாரிடமிருந்து மனம் கசந்து திரும்பினாயோ அவர்களிடமே உன்னை ஒப்புவிப்பேன்.
29 அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
29 They will treat you with hatred, take all for which you have worked, and leave you naked and bare, so that the shame of your prostitution will be exposed. Your indecency and promiscuity
29 அவர்கள் வெறுப்போடு உன்னை நடத்துவர். நீ உழைத்துப் பெற்றவை அனைத்தையும் கவர்ந்துகொண்டு, உன்னைத் திறந்த மேனியாகவும் வெறுமையாகவும் விட்டுச் செல்வர். உன் வேசித்தனம், காமவெறி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் வெட்கக்கேடு வெளிப்படும்.
30 நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
30 have brought these things upon you, because you have prostituted yourself with the nations and defiled yourself with their idols.
30 நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டால் அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.
31 உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.
31 Because you have followed the path of your sister, I will put her cup into your hand.’
31 உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய்.எனவே, அவள் குடித்த கிண்ணத்தை உன் கையில் தருவேன்.
32 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
32 This is what the Lord GOD says: ‘You will drink your sister’s cup, a cup deep and wide. It will bring scorn and derision, for it holds so much.
32 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்; அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்; நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.
33 சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
33 You will be filled with drunkenness and grief, with a cup of devastation and desolation, the cup of your sister Samaria.
33 குடிவெறியாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்! உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம் துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!
34 நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
34 You will drink it and drain it; you will dash it to pieces, and tear your breasts. For I have spoken,’ declares the Lord GOD.
34 குடிப்பாய்; அதை நீ குடித்து முடிப்பாய்! அதனை உடைத்தெறிவாய் துண்டுகளாய்! உன் மார்புகளைக் கீறிக்கொள்வாய்! நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
35 ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
35 Therefore this is what the Lord GOD says: ‘Because you have forgotten Me and have cast Me behind your back, you must bear the consequences of your indecency and prostitution.’”
35 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ என்னை மறந்து உன்னிடமிருந்து என்னை ஒதுக்கிவிட்டதால், உன் காமவெறி மற்றும் வேசித்தனத்தின் விளைவுகளை நீயே சுமந்துகொள்.
Judgment on Both Sisters
36 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.
36 Then the LORD said to me: “Son of man, will you pass judgment against Oholah and Oholibah? Then declare to them their abominations.
36 ஆண்டவர் எனக்கு மேலும் உரைத்தது: "மானிடா ஒகோலாவையும் ஒகலிபாவையும் தீர்ப்பிடுவாயா? அவ்வாறெனில் அவர்களின் அருவருப்பான செயல்களை எடுத்துக் கூறு.
37 அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.
37 For they have committed adultery, and blood is on their hands. They have committed adultery with their idols. They have even sacrificed their children, whom they bore to Me, in the firef as food for their idols.
37 ஏனெனில் அவர்கள் வேசித்தனம் செய்தனர். அவர்கள் கைகளோ இரத்தக் கறை படிந்தவை. சிலைகளோடு அவர்கள் வேசித்தனம் செய்தனர். எனக்கெனப் பெற்றெடுத்த பிள்ளைகளைச் சிலைகளுக்கு உணவாய்ப் படைத்தனர்.
38 அன்றியும் அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
38 They have also done this to Me: On that very same day, they defiled My sanctuary and profaned My Sabbaths.
38 இதற்கு மேலும் செய்தனர், அதே நேரத்தில் எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி என் ஓய்வுநாள்களை இழிவுபடுத்தினர்.
39 அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
39 On the very day they slaughtered their children for their idols, they entered My sanctuary to profane it. Yes, they did this inside My house.
39 அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர். என் தூயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர். என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
40 இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,
40 Furthermore, you sisters sentg messengers for men who came from afar; and behold, when they arrived, you bathed for them, painted your eyes, and adorned yourself with jewelry.
40 அவர்கள் தொலைவில்வாழ் மனிதருக்காகத் தூதர்களை அனுப்பினர்; அவர்கள் வந்தபோது குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களை அணிந்து கொண்டனர்.
41 சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.
41 You sat on a couch of luxury with a table spread before it, on which you had set My incense and My oil,
41 அழகான மஞ்சத்தில் அமர்ந்து அதன் முன்னால் இருந்த மேசையில் எனக்குரிய நறுமணப்பொருள்களையும் எண்ணெயையும் வைத்தனர்.
42 அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.
42 accompanied by the sound of a carefree crowd. Drunkardsh were brought in from the desert along with men from the rabble, who put bracelets on your wrists and beautiful crowns on your head.
42 களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது. பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள். அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.
43 விபசராங்களில் கிழவியானவளைக்குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன்.
43 Then I said of her who had grown old in adulteries: ‘Now let them use her as a prostitute, for that is all she is!’
43 அப்போது வேசித்தனத்தால் தளர்ந்துபோன ஒருத்தியைக் குறித்து நான் உரைத்தேன்; 'அவர்கள் அவளை வேசியாய் நடத்தட்டும், ஏனெனில் அவள் இப்போது வேசிதான்.'
44 பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.
44 And they slept with her as with a prostitute; they slept with Oholah and Oholibah, those lewd women.
44 விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்: ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.
45 ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும் நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.
45 But righteous men will sentence them to the punishment of those who commit adultery and bloodshed, because they are adulteresses with blood on their hands.
45 ஆனால் நீதிமான்கள் அவர்களுக்கு வேசித்தனத்தில் ஈடுபட்டுக் கொலை செய்த பெண்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பர். ஏனெனில் அவர்கள் வேசிகள்தாம். இரத்தக்கறை அவர்கள் கைகளில் உள்ளது.
46 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
46 This is what the Lord GOD says: ‘Bring a mob against them and consign them to terror and plunder.
46 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை நடுக்கத்திற்கும் கொள்ளைக்கும் உள்ளாக்குமாறு அவர்களுக்கு எதிராய் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டிவா.
47 அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப் போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
47 The mob will stone them and cut them down with their swords. They will kill their sons and daughters and burn down their houses.
47 அக்கூட்டமோ அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டிச் சாய்க்கும். அவர்களின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கொன்று, வீடுகளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
48 இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.
48 So I will put an end to indecency in the land, and all the women will be admonished not to imitate your behavior.
48 இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல் காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.
49 உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
49 They will repay you for your indecency, and you will bear the consequences of your sins of idolatry. Then you will know that I am the Lord GOD.’”
49 நீங்களும் உங்கள் காமவெறி, சிலை வழிபாடு ஆகிய குற்றங்களின் பாவவினையைச் சுமப்பீர்கள். அதன்மூலம் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Oholah means her own tent or she worships at a tent shrine , a metaphor for Samaria as an adulteress with Assyria.
4 b Oholibah means the tent is in her or she is a tent shrine , a metaphor for Jerusalem as an adulterous wife.
14 c That is, the Babylonians
15 d Or Babylonia ; also in verse 16
24 e LXX They will all come against you from the north
37 f Literally passed their children, whom they bore to Me, through the fire
40 g Hebrew they sent
42 h Or Sabeans
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.