பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 1 | Luke 1

Dedication to Theophilus (Acts 1:1–3)

1 Ἐπειδήπερ πολλοὶ ἐπεχείρησαν ἀνατάξασθαι διήγησιν περὶ τῶν πραγμάτων πεπληροφορημένων ἐν ἡμῖν

1 மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
1 Many have undertaken to compose an account of the things that have been fulfilled among us,
1 ❮1-2❯மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.

2 καθὼς οἱ παρέδοσαν ἡμῖν ἀπ’ ἀρχῆς γενόμενοι αὐτόπται καὶ ὑπηρέται τοῦ λόγου

2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
2 just as they were handed down to us by the initial eyewitnesses and servants of the word.

3 παρηκολουθηκότι ἀκριβῶς πᾶσιν ἄνωθεν ἔδοξε κἀμοὶ γράψαι καθεξῆς σοι κράτιστε Θεόφιλε

3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
3 Therefore, having carefully investigated everything from the beginning, it seemed good also to me to write an orderly account for you, most excellent Theophilus,
3 ❮3-4❯அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

4 ἵνα ἐπιγνῷς τὴν ἀσφάλειαν περὶ λόγων ὧν κατηχήθης

4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
4 so that you may know the certainty of the things you have been taught.

Gabriel Foretells John’s Birth

5 ἐν ταῖς ἡμέραις Ἡρῴδου βασιλέως τῆς Ἰουδαίας Ἐγένετο τις ἱερεύς ὀνόματι Ζαχαρίας ἐξ ἐφημερίας Ἀβιά καὶ αὐτῷ γυνὴ καὶ αὐτῆς τὸ ὄνομα Ἐλισάβετ ἐκ τῶν θυγατέρων Ἀαρών

5 யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
5 In the time of Herod king of Judea there was a priest named Zechariah, who belonged to the priestly division of Abijah, and whose wife Elizabeth was a daughter of Aaron.
5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து.1

6 δὲ ἀμφότεροι ἦσαν δίκαιοι ἐναντίον τοῦ Θεοῦ πορευόμενοι ἄμεμπτοι ἐν πάσαις ταῖς ἐντολαῖς καὶ δικαιώμασιν τοῦ Κυρίου

6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
6 Both of them were righteous in the sight of God, walking blamelessly in all the commandments and decrees of the Lord.
6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.

7 καὶ αὐτοῖς ἦν οὐκ τέκνον καθότι ἡ Ἐλισάβετ ἦν στεῖρα καὶ ἦσαν ἀμφότεροι προβεβηκότες ἐν αὐτῶν ταῖς ἡμέραις

7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
7 But they had no children, because Elizabeth was barren, and they were both well along in years.
7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

8 δὲ Ἐγένετο τῆς αὐτοῦ ἐφημερίας ἐν τῇ τάξει ἐν αὐτὸν τῷ ἱερατεύειν ἔναντι τοῦ Θεοῦ

8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
8 One day while Zechariah’s division was on duty and he was serving as priest before God,
8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.

9 ἔλαχε κατὰ τὸ ἔθος τῆς ἱερατείας εἰσελθὼν εἰς τὸν ναὸν τοῦ Κυρίου τοῦ θυμιᾶσαι

9 ஆசாரிய ஊழிய முறைமையின்படி, அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
9 he was chosen by lot, according to the custom of the priesthood, to enter the temple of the Lord and burn incense.
9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.

10 καὶ τῇ ὥρᾳ τοῦ θυμιάματος τὸ πᾶν πλῆθος τοῦ λαοῦ ἦν προσευχόμενον ἔξω

10 தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
10 And at the hour of the incense offering, the whole congregation was praying outside.
10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.

11 δὲ ἄγγελος Κυρίου Ὤφθη αὐτῷ ἑστὼς ἐκ δεξιῶν τοῦ θυσιαστηρίου τοῦ θυμιάματος

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
11 Just then an angel of the Lord appeared to Zechariah, standing at the right side of the altar of incense.
11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.

12 καὶ Ζαχαρίας ἰδών ἐταράχθη καὶ ἐπέπεσεν ἐπ’ αὐτόν φόβος

12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
12 When Zechariah saw him, he was startled and gripped with fear.
12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.

13 δὲ ὁ ἄγγελος Εἶπεν πρὸς αὐτὸν Μὴ φοβοῦ Ζαχαρία διότι σου ἡ δέησίς εἰσηκούσθη καὶ σου ἡ γυνή Ἐλισάβετ γεννήσει σοι υἱόν καὶ καλέσεις αὐτοῦ τὸ ὄνομα Ἰωάννην

13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
13 But the angel said to him, “Do not be afraid, Zechariah, because your prayer has been heard. Your wife Elizabeth will bear you a son, and you are to give him the name John.
13 வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.

14 καὶ ἔσται χαρά καὶ ἀγαλλίασις σοι καὶ πολλοὶ χαρήσονται ἐπὶ αὐτοῦ τῇ γενέσει

14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
14 He will be a joy and delight to you, and many will rejoice at his birth,
14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.

15 γὰρ ἔσται μέγας ἐνώπιον ‹τοῦ› Κυρίου καὶ οὐ μὴ πίῃ οἶνον καὶ σίκερα καὶ πλησθήσεται Ἁγίου Πνεύματος ἔτι ἐκ αὐτοῦ μητρὸς κοιλίας

15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
15 for he will be great in the sight of the Lord. He shall never take wine or strong drink, and he will be filled with the Holy Spirit even from his mother’s womb.
15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.2

16 καὶ πολλοὺς τῶν υἱῶν Ἰσραὴλ ἐπιστρέψει ἐπὶ Κύριον αὐτῶν τὸν Θεὸν

16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
16 Many of the sons of Israel he will turn back to the Lord their God.
16 அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.

17 καὶ αὐτὸς προελεύσεται ἐνώπιον αὐτοῦ ἐν πνεύματι καὶ δυνάμει Ἠλίου ἐπιστρέψαι καρδίας πατέρων ἐπὶ τέκνα καὶ ἀπειθεῖς ἐν φρονήσει δικαίων ἑτοιμάσαι λαὸν κατεσκευασμένον Κυρίῳ

17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
17 And he will go on before the Lord in the spirit and power of Elijah, to turn the hearts of the fathers to their childrena and the disobedient to the wisdom of the righteous—to make ready a people prepared for the Lord.”
17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.3

18 Κατὰ τί γνώσομαι τοῦτο Καὶ Ζαχαρίας εἶπεν πρὸς τὸν ἄγγελον γάρ ἐγὼ εἰμι πρεσβύτης καὶ μου ἡ γυνή προβεβηκυῖα ἐν αὐτῆς ταῖς ἡμέραις

18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
18 “How can I be sure of this?” Zechariah asked the angel. “I am an old man, and my wife is well along in years.”
18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.

19 Ἐγώ εἰμι Γαβριὴλ ἀποκριθεὶς εἶπεν αὐτῷ Καὶ ὁ ἄγγελος ὁ παρεστηκὼς ἐνώπιον τοῦ Θεοῦ καὶ ἀπεστάλην λαλῆσαι πρὸς σὲ καὶ εὐαγγελίσασθαί ταῦτα σοι

19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
19 “I am Gabriel,” replied the angel. “I stand in the presence of God, and I have been sent to speak to you and to bring you this good news.
19 அதற்கு வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.4

20 καὶ ἰδοὺ ἔσῃ σιωπῶν καὶ μὴ δυνάμενος λαλῆσαι ἄχρι ἧς ἡμέρας ταῦτα γένηται ἀνθ’ ὧν οὐκ ἐπίστευσας μου τοῖς λόγοις οἵτινες πληρωθήσονται εἰς αὐτῶν τὸν καιρὸν

20 இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
20 And now you will be silent and unable to speak until the day this comes to pass, because you did not believe my words, which will be fulfilled at their proper time.”
20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால், அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார்.

21 Καὶ ὁ λαὸς ἦν προσδοκῶν τὸν Ζαχαρίαν καὶ ἐθαύμαζον ἐν αὐτόν τῷ χρονίζειν ἐν τῷ ναῷ

21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
21 Meanwhile, the people were waiting for Zechariah and wondering why he took so long in the temple.
21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.

22 δὲ ἐξελθὼν οὐκ ἐδύνατο λαλῆσαι αὐτοῖς καὶ ἐπέγνωσαν ὅτι ἑώρακεν ὀπτασίαν ἐν τῷ ναῷ καὶ αὐτὸς ἦν διανεύων αὐτοῖς καὶ διέμενεν κωφός

22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
22 When he came out and was unable to speak to them, they realized he had seen a vision in the temple. He kept making signs to them but remained speechless.
22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால், அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார்.

23 καὶ ἐγένετο ὡς αἱ ἡμέραι αὐτοῦ τῆς λειτουργίας ἐπλήσθησαν ἀπῆλθεν εἰς αὐτοῦ τὸν οἶκον

23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.
23 And when the days of his service were complete, he returned home.
23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

24 δὲ Μετὰ ταύτας τὰς ἡμέρας αὐτοῦ ἡ γυνὴ Ἐλισάβετ συνέλαβεν καὶ πέντε μῆνας περιέκρυβεν ἑαυτὴν λέγουσα

24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
24 After these days, his wife Elizabeth became pregnant and for five months remained in seclusion. She declared,
24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.

25 ὅτι Κύριος πεποίηκεν Οὕτως μοι ἐν ἡμέραις αἷς ἐπεῖδεν ἀφελεῖν μου ὄνειδός ἐν ἀνθρώποις

25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
25 “The Lord has done this for me. In these days He has shown me favor and taken away my disgrace among the people.”
25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

Gabriel Foretells Jesus’ Birth

26 δὲ Ἐν τῷ τῷ ἕκτῳ μηνὶ τοῦ Θεοῦ ἀπεστάλη ἀπὸ ὁ ἄγγελος Γαβριὴλ εἰς πόλιν τῆς Γαλιλαίας ᾗ ὄνομα Ναζαρὲθ

26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
26 In the sixth month, God sent the angel Gabriel to a town in Galilee called Nazareth,
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

27 πρὸς παρθένον ἐμνηστευμένην ἀνδρὶ ᾧ ὄνομα Ἰωσὴφ ἐξ οἴκου Δαυὶδ καὶ τὸ τῆς παρθένου ὄνομα Μαριάμ

27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
27 to a virgin pledged in marriage to a man named Joseph, who was of the house of David. And the virgin’s name was Mary.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.5

28 καὶ εἰσελθὼν πρὸς αὐτὴν εἶπεν Χαῖρε κεχαριτωμένη ὁ Κύριος μετὰ σοῦ

28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
28 The angel appeared to her and said, “Greetings,b you who are highly favored! The Lord is with you.”c
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே6 வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"7* என்றார்.

6 "அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழி பெயர்ப்பில் உள்ளது.

7 "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.

29 δὲ Ἡ διεταράχθη ἐπὶ τῷ λόγῳ καὶ διελογίζετο ποταπὸς ὁ ἀσπασμὸς οὗτος εἴη

29 அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
29 Mary was greatly troubled at his words and wondered what kind of greeting this might be.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

30 καὶ ὁ ἄγγελος εἶπεν αὐτῇ Μὴ φοβοῦ Μαριάμ γὰρ εὗρες χάριν παρὰ τῷ Θεῷ

30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
30 So the angel told her, “Do not be afraid, Mary, for you have found favor with God.
30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.

31 καὶ ἰδοὺ συλλήμψῃ ἐν γαστρὶ καὶ τέξῃ υἱόν καὶ καλέσεις αὐτοῦ τὸ ὄνομα Ἰησοῦν

31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
31 Behold, you will conceive and give birth to a son, and you are to give Him the name Jesus.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.8

32 οὗτος ἔσται μέγας καὶ κληθήσεται Υἱὸς Ὑψίστου καὶ ὁ Κύριος Θεὸς δώσει αὐτῷ τὸν θρόνον αὐτοῦ τοῦ πατρὸς Δαυὶδ

32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
32 He will be great and will be called the Son of the Most High. The Lord God will give Him the throne of His father David,
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

33 καὶ βασιλεύσει ἐπὶ τὸν οἶκον Ἰακὼβ εἰς τοὺς αἰῶνας καὶ τῆς αὐτοῦ βασιλείας ἔσται οὐκ τέλος

33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
33 and He will reign over the house of Jacob forever. His kingdom will never end!”
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.9

34 δὲ Πῶς τοῦτο ἔσται Μαριὰμ Εἶπεν πρὸς τὸν ἄγγελον ἐπεὶ οὐ γινώσκω ἄνδρα

34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
34 “How can this be,” Mary asked the angel, “since I am a virgin?”
34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.

35 ὁ ἄγγελος Καὶ ἀποκριθεὶς εἶπεν αὐτῇ Ἅγιον Πνεῦμα ἐπελεύσεται ἐπὶ σέ καὶ δύναμις Ὑψίστου ἐπισκιάσει σοι διὸ καὶ τὸ ἅγιον γεννώμενον κληθήσεται Υἱὸς Θεοῦ

35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
35 The angel replied, “The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you. So the Holy One to be bornd will be called the Son of God.
35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

36 ἰδοὺ καὶ Ἐλισάβετ σου ἡ συγγενίς αὐτὴ καὶ συνείληφεν υἱὸν ἐν αὐτῆς γήρει καὶ τῇ καλουμένῃ στείρᾳ οὗτος ἐστὶν αὐτῇ ἕκτος μὴν

36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
36 Look, even Elizabeth your relative has conceived a son in her old age, and she who was called barren is in her sixth month.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.10

37 ὅτι οὐκ ῥῆμα παρὰ τοῦ Θεοῦ πᾶν ἀδυνατήσει

37 தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
37 For no word from God will ever fail.”e
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.

38 Ἰδοὺ ἡ Κυρίου δούλη δὲ Μαριάμ Εἶπεν γένοιτό μοι κατὰ σου τὸ ῥῆμά καὶ ὁ ἄγγελος ἀπῆλθεν ἀπ’ αὐτῆς

38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
38 “I am the Lord’s servant,” Mary answered. “May it happen to me according to your word.” Then the angel left her.
38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

Mary Visits Elizabeth

39 δὲ ἐν ταύταις ταῖς ἡμέραις Μαριὰμ Ἀναστᾶσα ἐπορεύθη μετὰ σπουδῆς εἰς πόλιν εἰς τὴν ὀρεινὴν Ἰούδα

39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
39 In those days Mary got ready and hurried to a town in the hill country of Judah,
39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.

40 καὶ εἰσῆλθεν εἰς τὸν οἶκον Ζαχαρίου καὶ ἠσπάσατο τὴν Ἐλισάβετ

40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
40 where she entered the home of Zechariah and greeted Elizabeth.
40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

41 καὶ ἐγένετο ὡς ἡ Ἐλισάβετ ἤκουσεν τῆς Μαρίας τὸν ἀσπασμὸν τὸ βρέφος ἐσκίρτησεν ἐν αὐτῆς τῇ κοιλίᾳ καὶ ἡ Ἐλισάβετ ἐπλήσθη Ἁγίου Πνεύματος

41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
41 When Elizabeth heard Mary’s greeting, the baby leaped in her womb, and Elizabeth was filled with the Holy Spirit.
41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

42 καὶ μεγάλῃ κραυγῇ ἀνεφώνησεν καὶ εἶπεν Εὐλογημένη σὺ ἐν γυναιξίν καὶ εὐλογημένος ὁ καρπὸς τῆς σου κοιλίας

42 உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
42 In a loud voice she exclaimed, “Blessed are you among women, and blessed is the fruit of your womb!
42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!11

43 καὶ πόθεν μοι τοῦτο ἵνα ἡ μήτηρ τοῦ μου Κυρίου ἔλθῃ πρὸς ἐμέ

43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
43 And why am I so honored, that the mother of my Lord should come to me?
43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

44 γὰρ ἰδοὺ ὡς ἡ φωνὴ τοῦ σου ἀσπασμοῦ ἐγένετο εἰς μου τὰ ὦτά τὸ βρέφος ἐν μου τῇ κοιλίᾳ ἐσκίρτησεν ἐν ἀγαλλιάσει

44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
44 For as soon as the sound of your greeting reached my ears, the baby in my womb leaped for joy.
44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

45 καὶ μακαρία ἡ πιστεύσασα ὅτι Κυρίου τοῖς λελαλημένοις αὐτῇ παρὰ ἔσται τελείωσις

45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.
45 Blessed is she who has believed that the Lord’s word to her will be fulfilled.”
45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.12

Mary’s Song (1 Samuel 2:1–11)

46 Καὶ Μαριάμ εἶπεν μου ἡ ψυχή Μεγαλύνει τὸν Κύριον

46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
46 Then Mary said: “My soul magnifies the Lord,
46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:

47 καὶ μου τὸ πνεῦμά ἠγαλλίασεν ἐπὶ τῷ Θεῷ μου τῷ Σωτῆρί

47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
47 and my spirit rejoices in God my Savior!
47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.151314

48 ὅτι ἐπέβλεψεν ἐπὶ τὴν ταπείνωσιν τῆς αὐτοῦ δούλης ἀπὸ τοῦ νῦν πᾶσαι αἱ γενεαί γὰρ ἰδοὺ με μακαριοῦσίν

48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
48 For He has looked with favor on the humble state of His servant. From now on all generations will call me blessed.
48 ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

49 ὅτι ὁ δυνατός ἐποίησέν μεγάλα μοι καὶ ἅγιον αὐτοῦ τὸ ὄνομα

49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
49 For the Mighty One has done great things for me. Holy is His name.
49 ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

50 καὶ αὐτοῦ τὸ ἔλεος εἰς τοῖς φοβουμένοις αὐτόν γενεὰς καὶ γενεὰς

50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
50 His mercy extends to those who fear Him, from generation to generation.
50 ❮50-53❯அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

51 Ἐποίησεν κράτος ἐν αὐτοῦ βραχίονι διεσκόρπισεν ὑπερηφάνους διανοίᾳ αὐτῶν καρδίας

51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
51 He has performed mighty deeds with His arm; He has scattered those who are proud in the thoughts of their hearts.

52 καθεῖλεν δυνάστας ἀπὸ θρόνων καὶ ὕψωσεν ταπεινούς

52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
52 He has brought down rulers from their thrones, but has exalted the humble.

53 ἐνέπλησεν πεινῶντας ἀγαθῶν καὶ ἐξαπέστειλεν πλουτοῦντας κενούς

53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
53 He has filled the hungry with good things, but has sent the rich away empty.

54 ἀντελάβετο αὐτοῦ παιδὸς Ἰσραὴλ μνησθῆναι ἐλέους

54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
54 He has helped His servant Israel, remembering to be merciful,
54 ❮54-55❯மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".

55 καθὼς ἐλάλησεν πρὸς ἡμῶν τοὺς πατέρας τῷ Ἀβραὰμ καὶ τῷ αὐτοῦ σπέρματι εἰς τὸν αἰῶνα

55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
55 as He promised to our fathers, to Abraham and his descendants forever.”

56 δὲ Μαριὰμ Ἔμεινεν σὺν αὐτῇ ὡς τρεῖς μῆνας καὶ ὑπέστρεψεν εἰς αὐτῆς τὸν οἶκον

56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
56 Mary stayed with Elizabeth for about three months and then returned home.
56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

The Birth of John the Baptist

57 δὲ ὁ χρόνος ἐπλήσθη Τῇ Ἐλισάβετ τοῦ αὐτήν τεκεῖν καὶ ἐγέννησεν υἱόν

57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
57 When the time came for Elizabeth to have her child, she gave birth to a son.
57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

58 καὶ αὐτῆς οἱ περίοικοι καὶ οἱ συγγενεῖς ἤκουσαν ὅτι Κύριος ἐμεγάλυνεν αὐτοῦ μετ’ αὐτῆς τὸ ἔλεος καὶ συνέχαιρον αὐτῇ

58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.
58 Her neighbors and relatives heard that the Lord had shown her great mercy, and they rejoiced with her.
58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

59 ἐν τῇ τῇ ὀγδόῃ ἡμέρᾳ Καὶ ἐγένετο ἦλθον περιτεμεῖν τὸ παιδίον καὶ ἐκάλουν αὐτὸ ἐπὶ τῷ ὀνόματι αὐτοῦ τοῦ πατρὸς Ζαχαρίαν

59 எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
59 On the eighth day, when they came to circumcise the child, they were going to name him after his father Zechariah.
59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

60 καὶ αὐτοῦ ἡ μήτηρ ἀποκριθεῖσα εἶπεν Οὐχί ἀλλὰ κληθήσεται Ἰωάννης

60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.
60 But his mother replied, “No! He shall be called John.”
60 ஆனால், அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.

61 Καὶ εἶπαν πρὸς αὐτὴν ὅτι ἐστιν Οὐδείς ἐκ σου τῆς συγγενείας ὃς καλεῖται τούτῳ τῷ ὀνόματι

61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
61 They said to her, “There is no one among your relatives who bears this name.”
61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,

62 δὲ ἐνένευον τῷ αὐτοῦ πατρὶ τὸ τί ἂν θέλοι καλεῖσθαι αὐτό

62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.
62 So they made signs to his father to find out what he wanted to name the child.
62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

63 Καὶ αἰτήσας πινακίδιον ἔγραψεν λέγων αὐτοῦ ὄνομα ἐστὶν Ἰωάννης καὶ πάντες ἐθαύμασαν

63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
63 Zechariah asked for a tablet and wrote, “His name is John.” And they were all amazed.
63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.

64 δὲ παραχρῆμα αὐτοῦ τὸ στόμα ἀνεῴχθη καὶ αὐτοῦ ἡ γλῶσσα καὶ ἐλάλει εὐλογῶν τὸν Θεόν

64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
64 Immediately Zechariah’s mouth was opened and his tongue was released, and he began to speak, praising God.
64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

65 Καὶ πάντας τοὺς περιοικοῦντας αὐτούς ἐγένετο ἐπὶ φόβος καὶ ἐν ὅλῃ τῇ ὀρεινῇ τῆς Ἰουδαίας διελαλεῖτο πάντα ταῦτα τὰ ῥήματα

65 அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
65 All their neighbors were filled with awe, and people throughout the hill country of Judea were talking about these events.
65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

66 καὶ πάντες οἱ ἀκούσαντες ἔθεντο ἐν αὐτῶν τῇ καρδίᾳ λέγοντες Τί ἄρα τοῦτο τὸ παιδίον ἔσται καὶ γὰρ Κυρίου χεὶρ ἦν μετ’ αὐτοῦ

66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப்பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
66 And all who heard this wondered in their hearts and asked, “What then will this child become?” For the Lord’s hand was with him.
66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

Zechariah’s Song

67 Καὶ αὐτοῦ ὁ πατὴρ Ζαχαρίας ἐπλήσθη Ἁγίου Πνεύματος καὶ ἐπροφήτευσεν λέγων

67 அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
67 Then his father Zechariah was filled with the Holy Spirit and prophesied:
67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு:

68 Εὐλογητὸς Κύριος ὁ Θεὸς τοῦ Ἰσραήλ ὅτι ἐπεσκέψατο καὶ ἐποίησεν λύτρωσιν τῷ αὐτοῦ λαῷ

68 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
68 “Blessed be the Lord, the God of Israel, because He has visited and redeemed His people.
68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

69 καὶ ἤγειρεν κέρας σωτηρίας ἡμῖν ἐν οἴκῳ αὐτοῦ παιδὸς Δαυὶδ

69 அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
69 He has raised up a horn of salvation for us in the house of His servant David,
69 ❮69-70❯தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

70 καθὼς ἐλάλησεν διὰ στόματος αὐτοῦ ἁγίων τῶν προφητῶν ἀπ’ αἰῶνος

70 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
70 as He spoke through His holy prophets, those of ages past,

71 σωτηρίαν ἐξ ἡμῶν ἐχθρῶν καὶ ἐκ χειρὸς πάντων τῶν μισούντων ἡμᾶς

71 உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
71 salvation from our enemies and from the hand of all who hate us,
71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.

72 ποιῆσαι ἔλεος μετὰ ἡμῶν τῶν πατέρων καὶ μνησθῆναι αὐτοῦ ἁγίας διαθήκης

72 அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
72 to show mercy to our fathers and to remember His holy covenant,
72 ❮72-73❯அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

73 ὅρκον ὃν ὤμοσεν πρὸς ἡμῶν τὸν πατέρα Ἀβραὰμ τοῦ δοῦναι ἡμῖν

73 ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
73 the oath He swore to our father Abraham, to grant us

74 ῥυσθέντας ἐκ ἐχθρῶν χειρὸς λατρεύειν αὐτῷ ἀφόβως

74 தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
74 deliverance from hostile hands, that we may serve Him without fear,
74 ❮74-75❯இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

75 ἐν ὁσιότητι καὶ δικαιοσύνῃ ἐνώπιον αὐτοῦ πάσαις ταῖς ἡμέραις ἡμῶν

75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
75 in holiness and righteousness before Him all the days of our lives.

76 Καὶ δέ σὺ παιδίον κληθήσῃ προφήτης Ὑψίστου γὰρ προπορεύσῃ ἐνώπιον Κυρίου ἑτοιμάσαι ὁδοὺς αὐτοῦ

76 நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
76 And you, child, will be called a prophet of the Most High; for you will go on before the Lord to prepare the way for Him,
76 ❮76-77❯குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில், பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.

77 τοῦ δοῦναι τῷ αὐτοῦ λαῷ γνῶσιν σωτηρίας ἐν ἀφέσει αὐτῶν ἁμαρτιῶν

77 நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
77 to give to His people the knowledge of salvation through the forgiveness of their sins,

78 διὰ σπλάγχνα ἐλέους ἡμῶν Θεοῦ ἐν οἷς ἀνατολὴ ἐπισκέψεται ἡμᾶς ἐξ ὕψους

78 அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
78 because of the tender mercy of our God, by which the Dawnf will visit us from on high,
78 ❮78-79❯இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."

79 ἐπιφᾶναι τοῖς καθημένοις ἐν σκότει καὶ σκιᾷ θανάτου τοῦ κατευθῦναι ἡμῶν τοὺς πόδας εἰς ὁδὸν εἰρήνης

79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
79 to shine on those who live in darkness and in the shadow of death, to guide our feet into the path of peace.”

80 δὲ Τὸ παιδίον ηὔξανεν καὶ ἐκραταιοῦτο πνεύματι καὶ ἦν ἐν ταῖς ἐρήμοις ἕως ἡμέρας αὐτοῦ ἀναδείξεως πρὸς τὸν Ἰσραήλ

80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
80 And the child grew and became strong in spirit;g and he lived in the wilderness until the time of his public appearance to Israel.
80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
17 a Malachi 4:5–6
28 b Or Rejoice 
28 c BYZ and TR include Blessed are you among women! 
35 d TR born of you 
37 e Or For nothing will be impossible with God. 
78 f Or the Morning Light  or the Sunrise 
80 g Or in the Spirit 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.