பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 20 | John 20

The Resurrection (Matthew 28:1–10; Mark 16:1–8; Luke 24:1–12)

1 δὲ πρωῒ Τῇ μιᾷ τῶν σαββάτων οὔσης ἔτι σκοτίας Μαρία ἡ Μαγδαληνὴ ἔρχεται εἰς τὸ μνημεῖον καὶ βλέπει τὸν λίθον ἠρμένον ἐκ τοῦ μνημείου

1 வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.
1 Early on the first day of the week,a while it was still dark, Mary Magdalene went to the tomb and saw that the stone had been removed from the entrance.
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

2 οὖν ἔρχεται καὶ τρέχει πρὸς Σίμωνα Πέτρον καὶ πρὸς τὸν ἄλλον μαθητὴν ὃν ὁ Ἰησοῦς ἐφίλει Ἦραν τὸν Κύριον ἐκ τοῦ μνημείου καὶ λέγει αὐτοῖς καὶ οὐκ οἴδαμεν ποῦ ἔθηκαν αὐτόν

2 உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
2 So she came running to Simon Peter and the other disciple, the one whom Jesus loved. “They have taken the Lord out of the tomb,” she said, “and we do not know where they have put Him!”
2 எனவே, அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.

3 οὖν ὁ Πέτρος καὶ ὁ ἄλλος μαθητής Ἐξῆλθεν καὶ ἤρχοντο εἰς τὸ μνημεῖον

3 அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
3 Then Peter and the other disciple set out for the tomb.
3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.

4 δὲ οἱ δύο ἔτρεχον ὁμοῦ καὶ ὁ ἄλλος μαθητὴς προέδραμεν τάχιον τοῦ Πέτρου καὶ ἦλθεν εἰς τὸ μνημεῖον πρῶτος

4 பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
4 The two were running together, but the other disciple outran Peter and reached the tomb first.
4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

5 καὶ παρακύψας βλέπει τὰ ὀθόνια κείμενα μέντοι οὐ εἰσῆλθεν

5 அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
5 He bent down and looked in at the linen cloths lying there, but he did not go in.
5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால், உள்ளே நுழையவில்லை.

6 οὖν Σίμων Πέτρος Ἔρχεται καὶ ἀκολουθῶν αὐτῷ καὶ εἰσῆλθεν εἰς τὸ μνημεῖον καὶ θεωρεῖ τὰ ὀθόνια κείμενα

6 சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
6 Simon Peter arrived just after him. He entered the tomb and saw the linen cloths lying there.
6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,

7 καὶ τὸ σουδάριον ὃ ἦν ἐπὶ αὐτοῦ τῆς κεφαλῆς ἐντετυλιγμένον ἀλλὰ κείμενον εἰς ἕνα τόπον χωρὶς οὐ μετὰ τῶν ὀθονίων

7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
7 The clothb that had been around Jesus’ head was rolled up, lying separate from the linen cloths.
7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.1

8 οὖν τότε ὁ ἄλλος μαθητὴς ὁ ἐλθὼν εἰς τὸ μνημεῖον πρῶτος καὶ εἰσῆλθεν καὶ εἶδεν καὶ ἐπίστευσεν

8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
8 Then the other disciple, who had reached the tomb first, also went in. And he saw and believed.
8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.

9 γὰρ οὐδέπω ᾔδεισαν τὴν γραφὴν ὅτι αὐτὸν δεῖ ἀναστῆναι ἐκ νεκρῶν

9 அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
9 For they still did not understand from the Scripture that Jesus had to rise from the dead.
9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.2

Jesus Appears to Mary Magdalene (Mark 16:9–11)

10 οὖν οἱ μαθηταί Ἀπῆλθον πάλιν πρὸς αὑτοὺς

10 பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
10 Then the disciples returned to their homes.
10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.

11 δὲ Μαρία εἱστήκει ἔξω πρὸς τῷ μνημείῳ κλαίουσα οὖν ὡς ἔκλαιεν παρέκυψεν εἰς τὸ μνημεῖον

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
11 But Mary stood outside the tomb weeping. And as she wept, she bent down to look into the tomb,
11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார்.

12 καὶ θεωρεῖ δύο ἀγγέλους ἐν λευκοῖς καθεζομένους ὅπου τὸ σῶμα τοῦ Ἰησοῦ ἔκειτο ἕνα πρὸς τῇ κεφαλῇ καὶ ἕνα πρὸς τοῖς ποσίν

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
12 and she saw two angels in white sitting where the body of Jesus had lain, one at the head and the other at the feet.
12 அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

13 Γύναι τί κλαίεις Καὶ ἐκεῖνοι λέγουσιν αὐτῇ Ὅτι Ἦραν μου τὸν Κύριόν Λέγει αὐτοῖς καὶ οὐκ οἶδα ποῦ ἔθηκαν αὐτόν

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
13 “Woman, why are you weeping?” they asked. “Because they have taken my Lord away,” she said, “and I do not know where they have put Him.”
13 அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" என்றார்.

14 εἰποῦσα Ταῦτα ἐστράφη εἰς τὰ ὀπίσω καὶ θεωρεῖ τὸν Ἰησοῦν ἑστῶτα καὶ οὐκ ᾔδει ὅτι ἐστιν Ἰησοῦς

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
14 When she had said this, she turned around and saw Jesus standing there; but she did not recognize that it was Jesus.
14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை.3

15 Γύναι τί κλαίεις Ἰησοῦς λέγει αὐτῇ τίνα ζητεῖς δοκοῦσα ὅτι ἐστιν ὁ κηπουρός Ἐκείνη λέγει αὐτῷ Κύριε εἰ σὺ ἐβάστασας αὐτόν εἰπέ μοι ποῦ ἔθηκας αὐτόν κἀγὼ ἀρῶ αὐτὸν

15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
15 “Woman, why are you weeping?” Jesus asked. “Whom are you seeking?” Thinking He was the gardener, she said, “Sir, if you have carried Him off, tell me where you have put Him, and I will get Him.”
15 இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.

16 Ἰησοῦς Λέγει αὐτῇ Μαριάμ ἐκείνη Στραφεῖσα λέγει αὐτῷ Ἑβραϊστί Ραββουνι ὃ λέγεται Διδάσκαλε

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
16 Jesus said to her, “Mary.” She turned and said to Him in Hebrew,c “Rabboni!” (which means “Teacher”).
16 இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள்.

17 Μή ἅπτου μου Ἰησοῦς Λέγει αὐτῇ γὰρ οὔπω ἀναβέβηκα πρὸς τὸν Πατέρα δὲ πορεύου πρὸς καὶ εἰπὲ αὐτοῖς μου τοὺς ἀδελφούς Ἀναβαίνω πρὸς μου τὸν Πατέρα καὶ ὑμῶν Πατέρα καὶ μου Θεόν καὶ ὑμῶν Θεὸν

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
17 “Do not cling to Me,” Jesus said, “for I have not yet ascended to the Father. But go and tell My brothers, ‘I am ascending to My Father and your Father, to My God and your God.’”
17 இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், 'என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்" என்றார்.

18 Μαριὰμ ἡ Μαγδαληνὴ Ἔρχεται ἀγγέλλουσα τοῖς μαθηταῖς ὅτι Ἑώρακα τὸν Κύριον καὶ ταῦτα εἶπεν αὐτῇ

18 மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
18 Mary Magdalene went and announced to the disciples, “I have seen the Lord!” And she told them what He had said to her.
18 மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

Jesus Appears to the Disciples (Luke 24:36–49; 1 John 1:1–4)

19 οὖν Οὔσης τῇ μιᾷ ἡμέρᾳ σαββάτων τῇ ἐκείνῃ ὀψίας ὅπου οἱ μαθηταὶ ἦσαν καὶ τῶν θυρῶν κεκλεισμένων διὰ τὸν φόβον τῶν Ἰουδαίων ὁ Ἰησοῦς ἦλθεν καὶ ἔστη εἰς τὸ μέσον καὶ Εἰρήνη ὑμῖν λέγει αὐτοῖς

19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
19 It was the first day of the week, and that very evening, while the disciples were together with the doors locked for fear of the Jews, Jesus came and stood among them. “Peace be with you!” He said to them.
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.

20 καὶ εἰπὼν τοῦτο ἔδειξεν αὐτοῖς 〈καὶ〉 τὰς χεῖρας καὶ τὴν πλευρὰν οὖν οἱ μαθηταὶ Ἐχάρησαν ἰδόντες τὸν Κύριον

20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
20 After He had said this, He showed them His hands and His side. The disciples rejoiced when they saw the Lord.
20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

21 οὖν πάλιν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Εἰρήνη ὑμῖν καθὼς ὁ Πατήρ ἀπέσταλκέν με κἀγὼ πέμπω ὑμᾶς

21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
21 Again Jesus said to them, “Peace be with you. As the Father has sent Me, so also I am sending you.”
21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.4

22 καὶ εἰπὼν τοῦτο ἐνεφύσησεν καὶ λέγει αὐτοῖς Λάβετε Ἅγιον Πνεῦμα

22 அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
22 When He had said this, He breathed on them and said, “Receive the Holy Spirit.
22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.5

23 ἄν ἀφῆτε τινων τὰς ἁμαρτίας ἀφέωνται αὐτοῖς ἄν κρατῆτε τινων κεκράτηνται

23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
23 If you forgive anyone his sins, they are forgiven; if you withhold forgiveness from anyone, it is withheld.”
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.6

Jesus Appears to Thomas

24 δὲ Θωμᾶς ὁ λεγόμενος Δίδυμος εἷς ἐκ τῶν δώδεκα ἦν οὐκ μετ’ αὐτῶν ὅτε Ἰησοῦς ἦλθεν

24 இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
24 Now Thomas called Didymus,d one of the Twelve, was not with the disciples when Jesus came.
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25 οὖν οἱ ἄλλοι μαθηταί ἔλεγον αὐτῷ Ἑωράκαμεν τὸν Κύριον δὲ Ὁ εἶπεν αὐτοῖς Ἐὰν μὴ ἴδω τὸν τῶν ἥλων τύπον ἐν αὐτοῦ ταῖς χερσὶν καὶ βάλω μου τὸν δάκτυλόν εἰς τὸν τύπον* τῶν ἥλων καὶ βάλω μου τὴν χεῖρα εἰς αὐτοῦ τὴν πλευρὰν οὐ μὴ πιστεύσω

25 மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
25 So the other disciples told him, “We have seen the Lord!” But he replied, “Unless I see the nail marks in His hands, and put my finger where the nails have been, and put my hand into His side, I will never believe.”
25 மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.

26 Καὶ ὀκτὼ ἡμέρας μεθ’ αὐτοῦ οἱ μαθηταὶ ἦσαν πάλιν ἔσω τῶν θυρῶν κεκλεισμένων καὶ Θωμᾶς μετ’ αὐτῶν ὁ Ἰησοῦς ἔρχεται καὶ ἔστη εἰς τὸ μέσον καὶ εἶπεν Εἰρήνη ὑμῖν

26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
26 Eight days later, His disciples were once again inside with the doors locked, and Thomas was with them. Jesus came and stood among them and said, “Peace be with you.”
26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.

27 εἶτα λέγει τῷ Θωμᾷ Φέρε σου τὸν δάκτυλόν ὧδε καὶ ἴδε μου τὰς χεῖράς καὶ φέρε σου τὴν χεῖρά καὶ βάλε εἰς μου τὴν πλευράν καὶ γίνου μὴ ἄπιστος ἀλλὰ πιστός

27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
27 Then Jesus said to Thomas, “Put your finger here and look at My hands. Reach out your hand and put it into My side. Stop doubting and believe.”
27 பின்னர், அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார்.

28 Θωμᾶς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτῷ μου Ὁ Κύριός καὶ μου ὁ Θεός

28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
28 Thomas replied, “My Lord and my God!”
28 தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார்.

29 ὁ Ἰησοῦς Λέγει αὐτῷ Ὅτι ἑώρακάς με πεπίστευκας μακάριοι οἱ μὴ ἰδόντες καὶ πιστεύσαντες

29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
29 Jesus said to him, “Because you have seen Me, you have believed; blessed are those who have not seen and yet have believed.”
29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.7

The Purpose of John’s Book

30 ὁ Ἰησοῦς ἐποίησεν Πολλὰ μὲν οὖν καὶ ἄλλα σημεῖα ἐνώπιον τῶν [αὐτοῦ] μαθητῶν ἃ ἔστιν οὐκ γεγραμμένα ἐν τούτῳ τῷ βιβλίῳ

30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
30 Jesus performed many other signs in the presence of His disciples, which are not written in this book.
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

31 δὲ ταῦτα γέγραπται ἵνα πιστεύητε ὅτι Ἰησοῦς ἐστιν ὁ Χριστὸς ὁ Υἱὸς τοῦ Θεοῦ καὶ ἵνα πιστεύοντες ἔχητε ζωὴν ἐν αὐτοῦ τῷ ὀνόματι

31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
31 But these are written so that you may believee that Jesus is the Christ, the Son of God, and that by believing you may have life in His name.
31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.8


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Literally Now on the first of the Sabbaths, early, 
7 b Greek soudarion 
16 c Or in Aramaic 
24 d Didymus  means the twin .
31 e Or may continue to believe 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.