பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 9 | John 9

Jesus Heals the Man Born Blind

1Καὶ παράγων εἶδεν ἄνθρωπον τυφλὸν ἐκ γενετῆς

1 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
1 Now as Jesus was passing by, He saw a man blind from birth,
1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.

2καὶ αὐτοῦ οἱ μαθηταὶ ἠρώτησαν αὐτὸν λέγοντες Ῥαββί τίς ἥμαρτεν οὗτος ἢ αὐτοῦ οἱ γονεῖς ἵνα γεννηθῇ τυφλὸς

2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
2 and His disciples asked Him, “Rabbi, who sinned, this man or his parents, that he was born blind?”
2 "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.

3Ἰησοῦς Ἀπεκρίθη Οὔτε οὗτος οὔτε αὐτοῦ οἱ γονεῖς ἥμαρτεν ἀλλ’ ἵνα τὰ ἔργα τοῦ Θεοῦ φανερωθῇ ἐν αὐτῷ

3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
3 Jesus answered, “Neither this man nor his parents sinned, but this happened so that the works of God would be displayed in him.
3 அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.

4ἕως ἐστίν ἡμέρα ἡμᾶς δεῖ ἐργάζεσθαι τὰ ἔργα τοῦ πέμψαντός με νὺξ ἔρχεται ὅτε οὐδεὶς δύναται ἐργάζεσθαι

4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
4 While it is daytime, we must doa the works of Him who sent Me. Night is coming, when no one can work.
4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.

5ὅταν ὦ ἐν τῷ κόσμῳ εἰμι φῶς τοῦ κόσμου

5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
5 While I am in the world, I am the light of the world.”
5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.1

6εἰπὼν Ταῦτα ἔπτυσεν χαμαὶ καὶ ἐποίησεν πηλὸν ἐκ τοῦ πτύσματος καὶ ἐπέχρισεν* τὸν πηλὸν ἐπὶ αὐτοῦ τοὺς ὀφθαλμούς

6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
6 When Jesus had said this, He spit on the ground, made some mud, and applied it to the man’s eyes.
6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,

7καὶ εἶπεν αὐτῷ Ὕπαγε νίψαι εἰς τὴν κολυμβήθραν τοῦ Σιλωάμ ὃ ἑρμηνεύεται Ἀπεσταλμένος οὖν ἀπῆλθεν καὶ ἐνίψατο καὶ ἦλθεν βλέπων

7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.
7 Then He told him, “Go, wash in the Pool of Siloam” (which means “Sent”). So the man went and washed, and came back seeing.
7 "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.2

8οὖν Οἱ γείτονες καὶ οἱ θεωροῦντες τὸ πρότερον αὐτὸν ὅτι ἦν προσαίτης ἔλεγον ἐστιν Οὐχ οὗτός ὁ καθήμενος καὶ προσαιτῶν

8 அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.
8 At this, his neighbors and those who had formerly seen him begging began to ask, “Isn’t this the man who used to sit and beg?”
8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், "இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?" என்று பேசிக்கொண்டனர்.

9Ἄλλοι ἔλεγον ὅτι Οὗτός ἐστιν ἄλλοι ἔλεγον Οὐχί ἀλλὰ ἐστιν ὅμοιος αὐτῷ Ἐκεῖνος ἔλεγεν ὅτι Ἐγώ εἰμι

9 சிலர் அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ நான்தான் அவன் என்றான்.
9 Some claimed that he was, but others said, “No, he just looks like him.” But the man kept saying, “I am the one.”
9 சிலர், "அவரே" என்றனர்; வேறு சிலர் "அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்" என்றனர். ஆனால், பார்வை பெற்றவர், "நான்தான் அவன்" என்றார்.

10Πῶς οὖν σου οἱ ὀφθαλμοί ἠνεῴχθησάν οὖν Ἔλεγον αὐτῷ

10 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
10 “How then were your eyes opened?” they asked.
10 அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று அவரிடம் கேட்டார்கள்.

11ἐκεῖνος Ἀπεκρίθη Ὁ ἄνθρωπος ὁ λεγόμενος Ἰησοῦς ἐποίησεν πηλὸν καὶ ἐπέχρισέν μου τοὺς ὀφθαλμοὺς καὶ εἶπέν μοι ὅτι Ὕπαγε εἰς τὸν Σιλωὰμ καὶ νίψαι οὖν ἀπελθὼν καὶ νιψάμενος ἀνέβλεψα

11 அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.
11 He answered, “The man they call Jesus made some mud and anointed my eyes, and He told me to go to Siloam and wash. So I went and washed and received my sight.”
11 அவர் அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது" என்றார்.

12Ποῦ ἐστιν ἐκεῖνος Καὶ εἶπαν αὐτῷ Οὐκ οἶδα Λέγει

12 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
12 “Where is He?” they asked. “I do not know,” he answered.
12 "அவர் எங்கே?" என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், "எனக்குத் தெரியாது" என்றார்.

The Pharisees Investigate the Healing

13Ἄγουσιν πρὸς τοὺς Φαρισαίους αὐτὸν τόν ποτε τυφλόν

13 குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
13 They brought to the Pharisees the man who had been blind.
13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.

14δὲ ἡμέρᾳ ἐν ᾗ ὁ Ἰησοῦς ἐποίησεν τὸν πηλὸν καὶ ἀνέῳξεν αὐτοῦ τοὺς ὀφθαλμούς ἦν σάββατον

14 இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.
14 Now the day on which Jesus had made the mud and opened his eyes was a Sabbath.
14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.

15οὖν οἱ Φαρισαῖοι καὶ ἠρώτων αὐτὸν πάλιν πῶς ἀνέβλεψεν δὲ Ὁ εἶπεν αὐτοῖς ἐπέθηκέν Πηλὸν ἐπὶ μου τοὺς ὀφθαλμούς καὶ ἐνιψάμην καὶ βλέπω

15 ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
15 So the Pharisees also asked him how he had received his sight. The man answered, “He put mud on my eyes, and I washed, and now I can see.”
15 எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?" என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர் "இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது" என்றார்.

16οὖν τινές ἐκ τῶν Φαρισαίων Ἔλεγον οὗτος ὁ ἄνθρωπος ἔστιν Οὐκ παρὰ Θεοῦ ὅτι οὐ τηρεῖ τὸ σάββατον [δὲ] Ἄλλοι ἔλεγον Πῶς δύναται ἁμαρτωλὸς ἄνθρωπος ποιεῖν τοιαῦτα σημεῖα Καὶ ἦν σχίσμα ἐν αὐτοῖς

16 அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று
16 Because of this, some of the Pharisees said, “This man is not from God, for He does not keep the Sabbath.” But others said, “How can a sinful man perform such signs?” And there was division among them.
16 பரிசேயருள் சிலர், "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர். ஆனால், வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.

17οὖν πάλιν λέγουσιν τῷ τυφλῷ Τί σὺ λέγεις περὶ αὐτοῦ ὅτι σου τοὺς ὀφθαλμούς ἠνέῳξέν ὅτι ἐστίν Προφήτης δὲ Ὁ εἶπεν

17 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
17 So once again they asked the man who had been blind, “What do you say about Him, since it was your eyes He opened?” “He is a prophet,” the man replied.
17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், "உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டனர். "அவர் ஓர் இறைவாக்கினர்" என்றார் பார்வை பெற்றவர்.

18οἱ Ἰουδαῖοι οὖν Οὐκ ἐπίστευσαν περὶ αὐτοῦ ὅτι ἦν τυφλὸς καὶ ἀνέβλεψεν ἕως ὅτου ἐφώνησαν αὐτοῦ τοῦ ἀναβλέψαντος τοὺς γονεῖς

18 அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து,
18 The Jews still did not believe that the man had been blind and had received his sight until they summoned his parents
18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.

19καὶ ἠρώτησαν αὐτοὺς λέγοντες ἐστιν Οὗτός ὑμῶν ὁ υἱὸς ὃν ὑμεῖς λέγετε ὅτι ἐγεννήθη τυφλὸς οὖν πῶς βλέπει ἄρτι

19 அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
19 and asked, “Is this your son, the one you say was born blind? So how is it that he can now see?”
19 "பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?" என்று கேட்டார்கள்.

20οὖν αὐτοῦ οἱ γονεῖς Ἀπεκρίθησαν καὶ εἶπαν Οἴδαμεν ὅτι οὗτός ἐστιν ἡμῶν ὁ υἱὸς καὶ ὅτι ἐγεννήθη τυφλὸς

20 தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
20 His parents answered, “We know he is our son, and we know he was born blind.
20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக, "இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.

21δὲ πῶς βλέπει νῦν οὐκ οἴδαμεν ἢ τίς ἤνοιξεν αὐτοῦ τοὺς ὀφθαλμοὺς ἡμεῖς οὐκ οἴδαμεν ἐρωτήσατε αὐτὸν αὐτὸς ἔχει ἡλικίαν λαλήσει περὶ ἑαυτοῦ

21 இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
21 But how he can now see or who opened his eyes, we do not know. Ask him. He is old enough to speak for himself.”
21 ஆனால், இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.

22αὐτοῦ οἱ γονεῖς εἶπαν Ταῦτα ὅτι ἐφοβοῦντο τοὺς Ἰουδαίους γὰρ οἱ Ἰουδαῖοι ἤδη συνετέθειντο ἵνα ἐάν τις ὁμολογήσῃ αὐτὸν Χριστόν γένηται ἀποσυνάγωγος

22 அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச்சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைப்பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.
22 His parents said this because they were afraid of the Jews. For the Jews had already determined that anyone who confessed Jesus as the Christ would be put out of the synagogue.
22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில், இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.

23διὰ τοῦτο αὐτοῦ οἱ γονεῖς εἶπαν ὅτι ἔχει Ἡλικίαν ἐπερωτήσατε αὐτὸν

23 அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.
23 That was why his parents said, “He is old enough. Ask him.”
23 அதனால் அவருடைய பெற்றோர், "அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.

24οὖν δευτέρου Ἐφώνησαν ἐκ τὸν ἄνθρωπον ὃς ἦν τυφλὸς καὶ εἶπαν αὐτῷ Δὸς δόξαν τῷ Θεῷ ἡμεῖς οἴδαμεν ὅτι οὗτος ὁ ἄνθρωπος ἐστιν ἁμαρτωλός

24 ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
24 So a second time they called for the man who had been blind and said, “Give glory to God! We know that this man is a sinner.”
24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், "உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து.3 இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.

3 "உண்மையை...மாட்சிப்படுத்து" என்னும் சொற்றொடர் ஆணையிடும்போது பயன்படுத்தப்படும் ஒரு வாய்பாடு. "உண்மையையே பேசுவேன் எனக் கடவுள் பெயரால் உறுதிமொழி கூறு" அல்லது "கடவுள்முன் உண்மை பேசு" எனவும் இதை மொழிபெயர்க்கலாம்.

25οὖν ἐκεῖνος Ἀπεκρίθη Εἰ ἐστιν ἁμαρτωλός οὐκ οἶδα ἓν οἶδα ὅτι ὢν τυφλὸς ἄρτι βλέπω

25 அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.
25 He answered, “Whether He is a sinner I do not know. There is one thing I do know: I was blind, but now I see!”
25 பார்வை பெற்றவர் மறுமொழியாக, "அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்" என்றார்.

26Τί ἐποίησέν σοι οὖν Εἶπον* αὐτῷ πῶς ἤνοιξέν σου τοὺς ὀφθαλμούς

26 அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
26 “What did He do to you?” they asked. “How did He open your eyes?”
26 அவர்கள் அவரிடம், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று கேட்டார்கள்.

27Ἀπεκρίθη αὐτοῖς Εἶπον ἤδη ὑμῖν καὶ οὐκ ἠκούσατε τί θέλετε ἀκούειν πάλιν ὑμεῖς καὶ μὴ θέλετε γενέσθαι αὐτοῦ μαθηταὶ

27 அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
27 He replied, “I already told you, and you did not listen. Why do you want to hear it again? Do you also want to become His disciples?”
27 அவர் மறுமொழியாக, "ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?" என்று கேட்டார்.

28Καὶ ἐλοιδόρησαν αὐτὸν καὶ εἶπον* Σὺ εἶ ἐκείνου μαθητὴς δὲ ἡμεῖς ἐσμὲν μαθηταί τοῦ Μωϋσέως

28 அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
28 Then they heaped insults on him and said, “You are His disciple; we are disciples of Moses.
28 அவர்கள் அவரைப் பழித்து, "நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.

29ἡμεῖς οἴδαμεν ὅτι ὁ Θεός λελάληκεν Μωϋσεῖ δὲ οὐκ οἴδαμεν πόθεν τοῦτον ἐστίν

29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.
29 We know that God spoke to Moses, but we do not know where this man is from.”
29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது" என்றார்கள்.

30τούτῳ ἐστιν τὸ θαυμαστόν γὰρ ὁ ἄνθρωπος Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτοῖς Ἐν ὅτι ὑμεῖς οὐκ οἴδατε πόθεν ἐστίν καὶ ἤνοιξέν μου τοὺς ὀφθαλμούς

30 அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.
30 “That is remarkable indeed!” the man said. “You do not know where He is from, and yet He opened my eyes.
30 அதற்கு அவர் "இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!

31οἴδαμεν ὅτι «ὁ Θεὸς» οὐκ ἀκούει ἁμαρτωλῶν ἀλλ’ ἀκούει τούτου ἐάν τις ᾖ θεοσεβὴς καὶ ποιῇ αὐτοῦ τὸ θέλημα

31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
31 We know that God does not listen to sinners, but He does listen to the one who worships Him and does His will.
31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.4

32οὐκ ἐκ τοῦ αἰῶνος ὅτι τις ἠκούσθη ἠνέῳξέν ὀφθαλμοὺς γεγεννημένου τυφλοῦ

32 பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே.
32 Never before has anyone heard of opening the eyes of a man born blind.
32 பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!

33εἰ οὗτος ἦν μὴ παρὰ Θεοῦ ἠδύνατο οὐκ ποιεῖν οὐδέν

33 அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
33 If this man were not from God, He could do no such thing.”
33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார்.

34Ἀπεκρίθησαν καὶ εἶπαν αὐτῷ σὺ ἐγεννήθης Ἐν ὅλος ἁμαρτίαις καὶ σὺ διδάσκεις ἡμᾶς καὶ ἐξέβαλον αὐτὸν ἔξω

34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்
34 They replied, “You were born in utter sin, and you are instructing us?” And they threw him out.
34 அவர்கள் அவரைப் பார்த்து, "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?" என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

Spiritual Blindness

35Ἰησοῦς Ἤκουσεν ὅτι ἐξέβαλον αὐτὸν ἔξω καὶ εὑρὼν αὐτὸν εἶπεν Σὺ πιστεύεις εἰς τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου

35 அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
35 When Jesus heard that they had thrown him out, He found the man and said, “Do you believe in the Son of Man?”b
35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, "மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார்.

36Καὶ τίς ἐστιν Κύριε ἐκεῖνος Ἀπεκρίθη καὶ εἶπεν ἵνα πιστεύσω εἰς αὐτόν

36 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்
36 “Who is He, Sir?” he replied. “Tell me so that I may believe in Him.”
36 அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார்.

37Καὶ ἑώρακας αὐτὸν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτῷ καὶ ἐκεῖνός ἐστιν ὁ λαλῶν μετὰ σοῦ

37 இயேசு அவனை நோக்கி. நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
37 “You have already seen Him,” Jesus answered. “He is the One speaking with you.”
37 இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார்.

38Κύριε Πιστεύω δὲ Ὁ ἔφη καὶ προσεκύνησεν αὐτῷ

38 உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
38 “Lord, I believe,” he said. And he worshiped Jesus.
38 அவர், "ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார்.

39Καὶ ὁ Ἰησοῦς εἶπεν Εἰς κρίμα ἐγὼ ἦλθον εἰς τοῦτον τὸν κόσμον ἵνα οἱ μὴ βλέποντες βλέπωσιν καὶ οἱ βλέποντες γένωνται τυφλοὶ

39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
39 Then Jesus declared, “For judgment I have come into this world, so that the blind may see and those who see may become blind.”c
39 அப்போது இயேசு, "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார்.

40ἐκ τῶν Φαρισαίων οἱ ὄντες μετ’ αὐτοῦ ἤκουσαν ταῦτα καὶ εἶπον* αὐτῷ ἐσμεν Μὴ ἡμεῖς τυφλοί καὶ

40 அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
40 Some of the Pharisees who were with Him heard this, and they asked Him, “Are we blind too?”
40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர்.

41Εἰ ἦτε τυφλοὶ ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς ἂν οὐκ εἴχετε ἁμαρτίαν δὲ νῦν λέγετε ὅτι Βλέπομεν ὑμῶν ἡ ἁμαρτία μένει

41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
41 “If you were blind,” Jesus replied, “you would not be guilty of sin. But since you claim you can see, your guilt remains.”
41 இயேசு அவர்களிடம், "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால், நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே, நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்" என்றார்.5


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
4 a BYZ and TR I must do
35 b BYZ and TR the Son of God
39 c Literally so that those not seeing may see and those seeing may become blind.  Some manuscripts do not include 38 “Lord, I believe.”… 39 Then Jesus declared .

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.