பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 14 | John 14

In My Father’s House Are Many Rooms

1Μὴ ὑμῶν ἡ καρδία ταρασσέσθω πιστεύετε εἰς τὸν Θεόν πιστεύετε εἰς ἐμὲ καὶ

1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
1 “Do not let your hearts be troubled. You believe in God;a believe in Me as well.
1 மீண்டும் இயேசு, "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

2ἐν μου τοῦ Πατρός τῇ οἰκίᾳ εἰσιν πολλαί μοναὶ δὲ εἰ μή ἂν εἶπον ὑμῖν ὅτι πορεύομαι ἑτοιμάσαι τόπον ὑμῖν

2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
2 In My Father’s house are many rooms. If it were not so, would I have told you that I am going there to prepare a place for you?b
2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், 'உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா?1

3καὶ ἐὰν πορευθῶ καὶ ἑτοιμάσω τόπον ὑμῖν ἔρχομαι πάλιν καὶ παραλήμψομαι ὑμᾶς πρὸς ἐμαυτόν ἵνα ὑμεῖς καὶ ἦτε ὅπου ἐγὼ εἰμὶ

3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
3 And if I go and prepare a place for you, I will come back and welcome you into My presence, so that you also may be where I am.
3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.2

4καὶ οἴδατε τὴν ὁδόν ὅπου ἐγὼ ὑπάγω

4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
4 You know the way to the place where I am going.”c
4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார்.

The Way, the Truth, and the Life

5Κύριε Λέγει Θωμᾶς αὐτῷ οὐκ οἴδαμεν ποῦ ὑπάγεις πῶς δυνάμεθα* ‹εἰδέναι› τὴν ὁδὸν

5 தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
5 “Lord,” said Thomas, “we do not know where You are going, so how can we know the way?”
5 தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.

6‹ὁ› Ἰησοῦς Λέγει αὐτῷ Ἐγώ εἰμι ἡ ὁδὸς καὶ ἡ ἀλήθεια καὶ ἡ ζωή οὐδεὶς ἔρχεται πρὸς τὸν Πατέρα εἰ μὴ δι’ ἐμοῦ

6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
6 Jesus answered, “I am the way and the truth and the life. No one comes to the Father except through Me.
6 இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே.3 என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.4

3 "வழியும் ..... நானே" என்னும் சொற்றொடரை "உண்மைக்கும் வாழ்வுக்கும் வழி நானே" எனவும் மொழிபெயர்க்கலாம்.

4 யோவா 1:4; எபி 10:19,20.

7εἰ ἐγνώκειτέ με καὶ ᾔδειτε› μου τὸν Πατέρα ‹ἂν ἀπ’ ἄρτι γινώσκετε αὐτὸν καὶ ἑωράκατε ‹αὐτόν›

7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
7 If you had known Me, you would know My Father as well. From now on you do know Him and have seen Him.”
7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார்.5

8Φίλιππος Λέγει αὐτῷ Κύριε δεῖξον ἡμῖν τὸν Πατέρα καὶ ἀρκεῖ ἡμῖν

8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
8 Philip said to Him, “Lord, show us the Father, and that will be enough for us.”
8 அப்போது பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார்.

9ὁ Ἰησοῦς Λέγει αὐτῷ Φίλιππε εἰμι μεθ’ ὑμῶν Τοσούτῳ* χρόνῳ* καὶ οὐκ ἔγνωκάς με ὁ ἑωρακὼς ἐμὲ ἑώρακεν τὸν Πατέρα πῶς σὺ λέγεις Δεῖξον ἡμῖν τὸν Πατέρα

9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
9 Jesus replied, “Philip, I have been with you all this time, and still you do not know Me? Anyone who has seen Me has seen the Father. How can you say, ‘Show us the Father’?
9 இயேசு அவரிடம் கூறியது: "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, 'தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்?

10οὐ πιστεύεις ὅτι ἐγὼ ἐν τῷ Πατρὶ καὶ ὁ Πατὴρ ἐστιν ἐν ἐμοί τὰ ῥήματα ἃ ἐγὼ λέγω ὑμῖν οὐ λαλῶ ἀπ’ ἐμαυτοῦ δὲ ὁ Πατὴρ μένων ἐν ἐμοὶ ποιεῖ αὐτοῦ τὰ ἔργα

10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
10 Do you not believe that I am in the Father and the Father is in Me? The words I say to you, I do not speak on My own. Instead, it is the Father dwelling in Me, performing His works.
10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.

11πιστεύετέ μοι ὅτι ἐγὼ ἐν τῷ Πατρὶ καὶ ὁ Πατὴρ ἐν ἐμοί δὲ εἰ μή πιστεύετε διὰ τὰ ἔργα αὐτὰ

11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
11 Believe Me that I am in the Father and the Father is in Me—or at least believe on account of the works themselves.
11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

12Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὁ πιστεύων εἰς ἐμὲ κἀκεῖνος ποιήσει τὰ ἔργα ἃ ἐγὼ ποιῶ ποιήσει καὶ μείζονα τούτων ὅτι ἐγὼ πορεύομαι πρὸς τὸν Πατέρα

12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
12 Truly, truly, I tell you, whoever believes in Me will also do the works that I am doing. He will do even greater things than these, because I am going to the Father.
12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.6

13καὶ τοῦτο ποιήσω ὅ¦τι ἂν αἰτήσητε ἐν τῷ μου ὀνόματί ἵνα ὁ Πατὴρ δοξασθῇ ἐν τῷ Υἱῷ

13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
13 And I will do whatever you ask in My name, so that the Father may be glorified in the Son.
13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.7

14ἐάν αἰτήσητέ με τι ἐν μου τῷ ὀνόματί ἐγὼ ποιήσω

14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
14 If you ask Med for anything in My name, I will do it.
14 நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

Jesus Promises the Holy Spirit (John 16:5–16)

15Ἐὰν ἀγαπᾶτέ με τηρήσετε τὰς ἐμὰς τὰς ἐντολὰς

15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
15 If you love Me, you will keepe My commandments.
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

16Κἀγὼ ἐρωτήσω τὸν Πατέρα καὶ δώσει ὑμῖν ἄλλον Παράκλητον ἵνα ᾖ «μεθ’ ὑμῶν εἰς τὸν αἰῶνα»

16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
16 And I will ask the Father, and He will give you another Advocatef to be with you forever—
16 "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

17τὸ Πνεῦμα τῆς ἀληθείας ὁ κόσμος οὐ δύναται λαβεῖν ὃ ὅτι οὐ θεωρεῖ αὐτὸ οὐδὲ γινώσκει ὑμεῖς γινώσκετε αὐτό ὅτι μένει παρ’ ὑμῖν καὶ ἔσται ἐν ὑμῖν

17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
17 the Spirit of truth. The world cannot receive Him, because it neither sees Him nor knows Him. But you do know Him, for He abides with you and will be in you.g
17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

18Οὐκ ἀφήσω ὑμᾶς ὀρφανούς ἔρχομαι πρὸς ὑμᾶς

18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
18 I will not leave you as orphans; I will come to you.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.8

19ἔτι μικρὸν καὶ ὁ κόσμος θεωρεῖ με οὐκέτι δὲ ὑμεῖς θεωρεῖτέ με ὅτι ἐγὼ ζῶ ὑμεῖς καὶ ζήσετε

19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
19 In a little while the world will see Me no more, but you will see Me. Because I live, you also will live.
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால், நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில், நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.

20ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ ὑμεῖς γνώσεσθε ὅτι ἐγὼ ἐν μου τῷ Πατρί καὶ ὑμεῖς ἐν ἐμοὶ κἀγὼ ἐν ὑμῖν

20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
20 On that day you will know that I am in My Father, and you are in Me, and I am in you.
20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

21ὁ ἔχων μου τὰς ἐντολάς καὶ τηρῶν αὐτὰς ἐκεῖνός ἐστιν ὁ ἀγαπῶν με δὲ ὁ ἀγαπῶν με ἀγαπηθήσεται ὑπὸ μου τοῦ Πατρός κἀγὼ ἀγαπήσω αὐτὸν καὶ ἐμφανίσω ἐμαυτόν αὐτῷ

21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
21 Whoever has My commandments and keeps them is the one who loves Me. The one who loves Me will be loved by My Father, and I will love him and reveal Myself to him.”
21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்."9

22Ἰούδας οὐχ ὁ Ἰσκαριώτης Λέγει αὐτῷ Κύριε καὶ τί γέγονεν ὅτι μέλλεις ἐμφανίζειν σεαυτὸν ἡμῖν καὶ οὐχὶ τῷ κόσμῳ

22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
22 Judas (not Iscariot) asked Him, “Lord, why are You going to reveal Yourself to us and not to the world?”
22 யூதா — இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் — அவரிடம், "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.

23Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτῷ Ἐάν τις ἀγαπᾷ με τηρήσει μου τὸν λόγον καὶ μου ὁ Πατήρ ἀγαπήσει αὐτόν καὶ ἐλευσόμεθα πρὸς αὐτὸν καὶ ποιησόμεθα μονὴν παρ’ αὐτῷ

23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
23 Jesus replied, “If anyone loves Me, he will keep My word. My Father will love him, and We will come to him and make Our home with him.
23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.

24ὁ μὴ ἀγαπῶν με οὐ τηρεῖ μου τοὺς λόγους καὶ ὁ λόγος ὃν ἀκούετε ἔστιν οὐκ ἐμὸς ἀλλὰ τοῦ Πατρός πέμψαντός με

24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
24 Whoever does not love Me does not keep My words. The word that you hear is not My own, but it is from the Father who sent Me.
24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

25Ταῦτα λελάληκα ὑμῖν μένων παρ’ ὑμῖν

25 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
25 All this I have spoken to you while I am still with you.
25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.

26δὲ ὁ Παράκλητος τὸ τὸ Ἅγιον Πνεῦμα ὃ ὁ Πατὴρ πέμψει ἐν τῷ μου ὀνόματί ἐκεῖνος διδάξει ὑμᾶς πάντα καὶ ὑμᾶς ὑπομνήσει πάντα ἃ ἐγώ εἶπον ὑμῖν

26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
26 But the Advocate, the Holy Spirit, whom the Father will send in My name, will teach you all things and will remind you of everything I have told you.
26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.10

Peace I Leave with You

27Εἰρήνην ἀφίημι ὑμῖν τὴν ἐμὴν εἰρήνην δίδωμι ὑμῖν ἐγὼ οὐ δίδωμι ὑμῖν καθὼς ὁ κόσμος δίδωσιν μὴ ὑμῶν ἡ καρδία ταρασσέσθω μηδὲ δειλιάτω

27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
27 Peace I leave with you; My peace I give to you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled; do not be afraid.
27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.11

28ἠκούσατε ὅτι ἐγὼ εἶπον ὑμῖν Ὑπάγω καὶ ἔρχομαι πρὸς ὑμᾶς εἰ ἠγαπᾶτέ με ἄν ἐχάρητε ὅτι πορεύομαι πρὸς τὸν Πατέρα ὅτι ὁ Πατὴρ ἐστιν μείζων μού

28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
28 You heard Me say, ‘I am going away, and I am coming back to you.’ If you loved Me, you would rejoice that I am going to the Father, because the Father is greater than I.
28 'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில், தந்தை என்னைவிடப் பெரியவர்.

29καὶ νῦν εἴρηκα ὑμῖν πρὶν γενέσθαι ἵνα ὅταν γένηται πιστεύσητε

29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
29 And now I have told you before it happens, so that when it does happen, you will believe.
29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.

30λαλήσω μεθ’ ὑμῶν πολλὰ Οὐκέτι γὰρ ὁ ἄρχων τοῦ κόσμου ἔρχεται καὶ ἔχει οὐκ οὐδέν ἐν ἐμοὶ

30 இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
30 I will not speak with you much longer, for the prince of this world is coming, and he has no claim on Me.
30 இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை.

31ἀλλ’ ποιῶ οὕτως καὶ καθὼς ὁ Πατὴρ ἐνετείλατο μοι ἵνα ὁ κόσμος γνῷ ὅτι ἀγαπῶ τὸν Πατέρα Ἐγείρεσθε ἄγωμεν ἐντεῦθεν

31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
31 But I do exactly what the Father has commanded Me, so that the world may know that I love the Father. Get up! Let us go on from here.
31 ஆனால், நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்து கொள்ள வேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.12


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Or Believe in God
2 b Or If it were not so, I would have told you. I am going there to prepare a place for you.
4 c BYZ and TR And where I go you know, and the way you know.
14 d TR does not include Me .
15 e Or If you love Me, keep
16 f Or Comforter  or Helper  or Counselor ; Greek Paraclete ; also in verse 26
17 g WH and is in you

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.